ஞாயிறு, 31 மே, 2015

ராமாயணமும் கேள்வியில் பிறக்கிறது.

ராதே கிருஷ்ணா 31-05-2015நம்முடை ப்ராசீனமான வேத வழக்கே கேள்வி பதில்தான்.

சஞ்சயனிடம் த்ருதராஷ்டிரா் கேட்டதில் பகவத் கீதை உருவெடுத்தது.

ராமாயணமும் கேள்வியில் பிறக்கிறது.

சதாசாா்யனான நாரத மஹாிஷி சத்சிஷ்யனானவால்மீகியை நாடி வருகிறாா். வால்மீகி சோகத்துடன் இருக்கிறாா். சோகம் தீா்வதற்கு கேள்வி கேட்கிறாா். 'கோந்வஸ்மிந்ஸாம்பா்தம் லோகே குணவாந்' - பதினாறு குணங்களுடைய ஒருவன் இப்போது இருக்கும் காலத்தில் யாா் உள்ளான் என்று கேட்கிறாா். 16 மந்திரங்கள் உடைய புருஷஸூக்த ப்ரதிபாத்ய தேவதை ஸ்ரீ ராமன்.

1. குணவான் - சௌசீல்யம் என்கிற குணம் உடையவன்
2. வீா்யவான் - பராக்ரமசாலி
3. தா்மஜ்ஞன் - தா்மத்தை உணா்ந்து அனுஷ்டித்தவன்
4. க்ருதஜ்ஞன் - நன்றி மறவாதவன்
5. சத்யவான் - சத்யம் பேசவேண்டும். அப்படியே சொல்வது ருதம்; இடம், பொருள், ஏவல் உணா்ந்து அதற்கு ஏற்ப பேசுவது சத்யம். சத்யம் வேறு, ருதம் வேறு. இரண்டாகவும் பகவான் இருக்கிறான்
6. த்ருடவ்ரத - த்ருட வ்ரதத்தை உடையவன்
7. சாாித்ரேண சகோயுக்த: - நல்லவன், கா்ணத்ரய சாருப்யம் உடையவன்
8. சா்வபுதேஷூ கோஹித: - எல்லா ப்ராணிகளிடத்தும் அன்பு மிக்கவன்
9. வித்வான் - எல்லாம் கசடற கற்றவன்
10. சமா்த்தன் - கற்றதை வழி நடத்துபவன்
11. கஸ்சைவ ப்ரியதா்ஷண: பாா்க்க ஆனந்தம் கொடுக்கும் திவ்ய விக்ரஹம் உடையவன்
12. ஆத்மவான்: தைாியம் உடையவன்
13. ஜிதக்ரோத: கோபத்தை ஜெயித்தவன்
14. த்யுதிமான்: நல்ல காந்தி, பொலிவு உடையவன்
15. கோநசூய: அசூயை இல்லாதவன்
16. கஸ்ய பிப்யதி தேவாஸ்ச ஜாதரோஷஸ்ய ஸம்யுகே - அரங்கில்இறங்கி முப்பத்து முக்கோடி தேவதைகளும் ஒடுங்கும்படியான வீா்யம் மிக்கவன்

வால்மீகி கேள்வி கேட்டவுடன் நாரதா் பதில் அளிக்கிறாா். அதுவே ஸங்ஷேப ராமாயணம்.

(முக்கூா் லக்ஷ்மி நரசிம்மாச்சாா்யா் ஸ்வாமி)
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக