செவ்வாய், 7 அக்டோபர், 2014

லோகத்தவர் தரிசித்த சம காலத்திய மஹான்கள் :

ராதே கிருஷ்ணா 08-10-2014Hinduism added 3 new photos.
லோகத்தவர் தரிசித்த சம காலத்திய மஹான்கள் : 

Status Update
By Hinduism
லோகத்தவர் தரிசித்த சம காலத்திய மஹான்கள் :
மஹா பெரியவா, பகவான் ஸ்ரீ ரமணர், மஹான் ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்.
இம் மாதிரி மஹான்கள் அவதாரம் நிகழ இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? என்று எதிர்பார்த்த லோகத்தவருக்கு, தம்மை அணுகிய பல்லாயிரக்கணக்கான மக்களை உணர வைத்த பெருமை இம் மகானுக்குண்டு.
தம்மை உணர வைக்க, அவரது எளிமை ஒன்றே போதுமானதாக இருந்தது.
புதிதாக வந்திருக்கும் பலரும் அவரை யாரோ ஒரு சாதாரணர் என்றே எண்ணுவர்.
அவரது அருமை, பெருமை தெரிந்தவர்களோ இம் மகானின் பார்வை எப்போதும் தம் மேல் படும், தமது கர்ம வினை அகலும் என்று காத்திருப்பர்.
தான் என்ற அகந்தை மிகுந்தவர்களையும், ஆணவம் பிடித்த தீயவர்களையும் மகான் புறக்கணித்தார்.
உண்மையான பக்தியும், அன்பும் உள்ளவர்களின் ஆன்ம முன்னேற்றத்திற்கு உதவினார். தன் வாழ்நாள் முழுவதும் பல்வேறு அற்புதங்கள் புரிந்து பலரது கர்மவினைகள் அகல மகான் காரணமாக இருந்தார்.
ஸ்ரீகுருப்யோ நம:
அவர் ஒரு
மேதா தபஸ்வி, மஹான், தீர்க்கதரிசி,
ஆதர்ச ஸன்யாஸி, மடாதிபதி, மனிதாபிமானி,
தேசபக்தர், எளிமைவிரும்பி, படாடோபமில்லாதவர்,
ஆடம்பரமில்லாதவர், குழந்தைமனம், கோபத்தை வெளிகாட்டாத கருணைமனம், காருண்யதெய்வம், நடமாடும்கோயில், ஸங்கீதமேதை, ஸாகியத்கர்த்தா, வேதரக்ஷகர், அன்னதாதா, அன்பைத்தந்தவர், நடைக்கு அஞ்சாதவர், நாடறிந்தயோகி, நல்லதைச்சொன்னவர், அல்லதை விலக்கியவர், தர்மரக்ஷகர், தர்மபோதகர்,
சான்றோர்போற்றிய ஸநாதனர், நாஸ்திகரே போற்றும் நல்லவர், அன்னியர்போற்றும் தகைமையர், ஆன்றவிந்தடங்கிய சான்றோர் -
யார் ?? இன்னும் தெரியவில்லையா?
நம் கண் கண்ட நடமாடும் தெய்வம், தெய்வத்தின் குரல் ஒலி, நாடு போற்றும் நல்லவர் நமது காஞ்சி ஸ்ரீ மஹாபெரியவாதான்.
நாம் தினம் தினம் வணங்கும் தெய்வம். அவர்கள் காலத்தில் நாம் ஜனனம் எடுத்து, அவர்களை தரிசிக்கும் பேறுபெற்று, அவர்கள் அருள்கொடுத்த அருமைகளை அறிந்து, அவர் வாழ்ந்த காலத்தில் உடன் நாமும் இன்புற்று வாழ்கிறோம்.
அவர்களைப் பற்றிய அற்புதங்களைக் கேட்டு மெய்சிலிர்த்து வாழ்கிறோம் என்றால் நாம் பாக்யசாலிகள்தானே!
இம் மாதரி மஹான்கள் அவதாரம் நிகழ இன்னும் எத்தனை காலம் ஆகுமோ? யார் அறிவார்? அவர்கள் காலத்தில் வாழ்ந்தோமே!
இதனைப்படிக்கும் அன்பர்களுக்கும் இவ்வுணர்ச்சி ஏற்படுமானால் இந்த எழுத்து ஸபலமாகிறது. இதுவும் அவர்கள் திருவருளே!
இத்தகைய உத்தமராம் நமது மஹாபெரியவர், தெய்வத்தை வணங்கி நமது நமஸ்காரங்களை செய்வோமாக.
ஐயா! நாம் எத்தனை பாக்யசாலிகள் தெரியுமா?
சிந்தையில் நித்தம் சங்கரனை நிறுத்தி
சஞ்சலமில்லாமல் சகலதும் அடக்கி
நெஞ்சினிலே அவன் நாமம் நித்தமும் வளர்த்த
அஞ்சுதல் இல்லா அமர வாழ்வு தந்திடுவான்
கொஞ்சும் தமிழாலே கொள்ளை வார்த்தை மலராலே
நெஞ்ச நிறைவோடு அந்த சங்கரனைப் போற்ற
பஞ்சமில்லா வாழ்வும் வஞ்சமில்லா மனமும்
தஞ்சமும் தான் தந்து - வழி வரும் துன்பம் எல்லாம்
பஞ்சாய் பறந்திடவே பொன்னருளும் தருவான்
காஞ்சி மஹாஸ்வாமி அடைக்கலங்கொள் எனை நீயே!!
கோடானு கோடி பக்தர் உன்னை வேண்டுகின்றார் நிதமும்
வீடு தேடி வந்து எமக்கு உதவுகின்றாய் நீயும்
ஓடுகின்ற எம் பாதம் வலித்துவிடும் என்று
நாதன் நீ எமக்காக ஓடுகின்றாய் நிதமும்
பாடி பாடி உன் நாமம் நிதம் உரைப்பதல்லாமல்
வேறெதுவும் எமக்கில்லை வாழுகின்ற வாழ்வில்
தேடி வந்து என்னை தாங்கி நிற்கும் தயாபரனே!!
நாடியதெல்லாம் நவின்றிட நீ அருள்வாயே!
செடியாய வல்வினைகள் தீர்க்கும் நீ நடமாடும் தெய்வம்
நெடியானே காஞ்சி மஹாஸ்வாமி நின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உம் பவளவாய்க் காண்பேனே
நின்னருளாம் கதியின்றி மற்றோன்றில்லேன்
நெடுங்காலம் பிழை செய்த நிலை கழிந்தேன்
உன்னருளுக் கினிதான நிலை உகந்தேன்
உன் சரணே சரண் என்னும் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்ற நிலை எனக்குத் தீர்த்து
வானவர்தம் வாட்சி தர வரித்தேன் உன்னை
இன்னருளால் இனி எனக்கோர் பரமேற்றாமல்
காஞ்சி மஹாஸ்வாமி அடைக்கலங்கொள் எனை நீயே
காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்தது . நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது . அது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை நாம் பார்த்தது இல்லை; நாம் நாராயணனைப் பார்த்தது இல்லை .தேவை இல்லை;
மகான்களைத் தொழுவோம்; மனத் தெளிவு பெறுவோம்.
உலகம் உய்ய துறவு கொண்ட ஸ்ரீ ஸ்ரீ சந்த்ர சேகரா சங்கரா ….
ஸ்ரீ சந்த்ர சேகரா சங்கரா ஜெய சங்கரா.. ஜெய ஜெய சங்கரா
தண்டம் ஏந்திய தாண்டவா! ஸ்ரீ ஜகத்குரு சந்த்ர சேகரா ….
குருவாய் அருவாய் வரும் ஸ்ரீ நடராஜ ரூபனே சந்த்ர சேகரா
உன் திருவாய் மலர்வாய் நீ …. லோக சாந்தனே சந்த்ர சேகரா
ஸ்ரீ சந்த்ர சேகரா சங்கரா…ஜெய சங்கரா…ஜெய ஜெய சங்கரா
ஸ்ரீ ஜகத்குரு சங்கரா.. ஜெய சங்கரா .. ஜெய ஜெய சங்கரா
எம் உயிரெலாம் உருகுதே உமது புகழ் பாடவே ஸ்ரீ சந்த்ர சேகரா …
எம் மனமெலாம் மருகுதே உமது முகம் காணவே ஸ்ரீ சந்த்ர சேகரா.
நாம் நம் காஞ்சி மஹாஸ்வாமி குருவை அடைந்து விட்டோம்.
மஹா பெரியவா தாஸன்
Dr.Krishnamoorthi Balasubramanian
SRI MAHA SWAMI 121ST JAYANTHI SAMARPANAM.
HINDUISM,KANCHI ACHARYAS,HINDUISM THE REALITY

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக