ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சந்திர கிரகணம் அன்று என்னன்ன செய்யலாம் - செய்யக்கூடாது என்பது பற்றிய முழுவிபரம்

ராதே கிருஷ்ணா 06-10-2014

4 hrs · 

From the album: Timeline Photos
By Swarnagiri Vasan
அடுத்த வாரம் வர இருக்கும் சந்திர கிரகணம் அன்று என்னன்ன செய்யலாம் - செய்யக்கூடாது என்பது பற்றிய முழுவிபரம் { சாஸ்த்திர ரீதியான உண்மையான தகவல் } கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்திக்கொள்ளவும். சாந்தி செய்யக்கூடிய நக்ஷத்திர அன்பர்களுக்கு சாந்தி எப்படி செய்துகொள்ள வேண்டும் என்பது பற்றிய பதிவு அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.

கேள்வி 1. சந்திர-சூர்ய க்ரஹணத்தின்போது என்ன செய்ய வேண்டும்? என்ன என்ன செய்யக்கூடாது?

பதில் – ஸூர்ய-சந்திரக்ரஹணம் நிகழும் நேரத்தில் எந்த செயல்களை செய்யலாம்? எவற்றை செய்யக்கூடாது? என்று ஒரு சில ஆராய்ச்சியாளர்களும், பாமர்ர்களும் கூறுவதை நாம் கேட்பதற்கு முன்பாக யோகிகளான நமது மஹரிஷிகள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

ஸ்லோகம் – க்ரஸ்தமாநே ரவௌ ஸ்நாயாத், முஸ்யமானே நிசாகர:
ஸூர்யேந்து க்ரஹணம் யாவத், தாவத் குர்யாத் ஜபாதி கம்

பொருள் – சந்திர-ஸூர்ய க்ரஹணங்கள் நிகழும் நேரத்தில் நமது உடலிலும் மற்றும் சுற்றுப்புறங்களிலும் ஸூர்ய சந்திர்ர்களின் கொடிய கிரஹணங்களால் ஒரு சில தோஷங்கள் ஏற்படுகின்றன என்றும். இவைகள் நமக்கு நீண்ட நோய்களை வரவழைக்கலாம் என்பதால், க்ரஹணம் துவங்கியவுடனே ஜாதி,மதமின்றி ஆண்கள்-பெண்கள் குழந்தைகள் முதியோர் முதலிய அனைவரும் {பிறப்பு-இறப்பு-மாத்த்தீட்டு காப்பவர்களும் கூட} கட்டாயம் {நதியில்} ஸ்னானம் செய்யவேண்டும் என்றும். க்ரஹணம் முடிந்தபிறகு மறுபடியும் ஒருமுறை ஸ்னானம் செய்ய வேண்டும் என்றும் கூறுகின்றன சாஸ்த்திரங்கள். மேலும் ஒவ்வொருவரும்

• க்ரஹணம் துவங்கும்நேரம் முதல் க்ரஹணம் முடியும் நேரம்வரையில் படுத்து உறங்க்க்கூடாது.

• க்ரஹண சமயத்தில் நமது வயிற்றில் உள்ள உணவுகள் நமக்கு நோயை வரவழைக்கும் என்பதால் க்ரஹணம் துவங்குவதற்கு சில நேரங்கள் முன்பு முதல் க்ரஹணம் முடியும் வரை எதையும் சாப்பிடக்கூடாது.

• க்ரஹணத்தின் போது மல-ஜலம் விஸர்ஜனம் செய்யக்கொடாது.

• க்ரஹணகாலத்தில் மற்றவர்களுடன் காரணமின்றி பேசக்கூடாது.

• க்ரஹணம் ஆரம்பம் முதல் க்ரஹணம் முடியும் வரையில் தெய்வ ஸம்பந்தமாக ஸ்தோத்திர பாராயணங்கள் {உபதேசம் பெற்றுக்கொண்ட} மந்திர ஜபங்கள்,

ஏழைகளுக்கு தானங்கள்,பித்ரு தர்பணம் முதலியவற்றை செய்யலாம்.

• க்ரஹண காலத்தில் மந்திர ஜபம் செய்வதால் ஜப மந்திரத்திற்கு பல மடங்கு பலமடையும் என்று சாஸ்த்திரம் சொல்கிறது.

கேள்வி 2. க்ரஹணத்தின் போது வெந்நீரில் ஸ்னானம் செய்யலாமா? காவேரி போன்ற நதியில்தான் செய்ய வேண்டுமா?

பதில் - க்ரஹணம் நிகழும் போது அனைவரும் கட்டாயம் ஸ்னானம் செய்யவேண்டும். செய்யாவிடில் தோஷம் உண்டு. முறைப்படி ஸ்னானம் செய்வதால் நன்மையுண்டு என்றாலும் ஸ்னானம் செய்யும் இட்த்தாலும், முறையாலும் பலன்கள் மாறுபடுகின்றன.

ஸ்லோகம் – சீதம் உஷ்ணோதகாத் புண்யம், அபாரக்யம் பரோத காத்.
பூமிஷ்டம் உத் த்ருதாத் புண்யம், தத: ப்ரஸ்ரவனோதகம்
ததோபி ஸாரஸம் புண்யம், தத: நதீ ஜலம்
ததஸ்தீர்த்த நதீ கங்கா, புண்யா புண்யஸ்த்தோம்புதி:

• வென்னீரை விட குளிர்ந்த நீரால் ஸ்னானம் செய்வதும்,
• அதிலும் மற்றவரால் கொண்டுவரப்பட்ட ஜலத்தால் ஸ்னானம் செய்வதும்,
• அதைவிட பூமியிலேயே இருக்கும் கிணறு முதலிய ஜலத்தால் ஸ்னானம் செய்வதும்,
• அதைவிட ஏரி குட்டை முதலிய நீர் நிலைகளில் ஸ்னானம் செய்வதும்,
• அதைவிட காவேரி போன்ற புண்ய நதிகளில் ஸ்னானம் செய்வதும்,
• அதைவிட புண்ய க்ஷேத்ரத்திலுள்ள நதியில் ஸ்னானம் செய்வதும்,
• அதைவிட தூய்மையான கங்கையில் ஸ்னானம் செய்வதும்

மென்மேலும் அதிக புண்யத்தை தரும். ஆகவே சக்தியுள்ளவர்கள் இவற்றில் சூழ்நிலைக்குத் தக்கவாறு கட்டாயம் ஸ்னானம் செய்ய வேண்டும். சென்னை போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் சமுத்திரத்துக்கு சென்று ஸ்னானம் செய்யலாம். அங்கு அனைத்து நதிகளும் சங்கமிப்பதால் அனைத்து நதிகளுலும் ஸ்னானம் செய்த பலன் நமக்கு கிடைக்கும்.

கேள்வி 3. க்ரஹணத்தின் போது எவ்வளவு நேரத்திற்கு முன்புவரை சாப்பிடலாம்? நோயாளிகளுக்கு விதிவிலக்கு உண்டா?

பதில் – சூர்ய-சந்திர க்ரஹணம் தொடங்கும் நேரத்துக்கு நான்கு யா{ஜா}மம் {12.மணி நேரம்} முன்பாகவும், சந்திர க்ரஹணம் தொடங்கும் நேரத்திற்கு மூன்று யா{ஜா}மம் {9.மணி நேரம்} முன்பாகவும் எந்த உணவையும் சாப்பிடக்கூடாது என்பது பொதுவிதி. இருப்பினும்

பால வ்ர்த்த ஆதுர விஷயே து ஸார்த்த ப்ரஹராத்மகோ
முஹூர்த்த த்ரயாத்மகோ வா வேத:

என்ற வாக்கியத்தின்படி குழந்தைகள், முதியோர்கள், வியாதியுள்ளவர்கள், கர்ப்பிணிப்பெண்கள் ஆகியவர்கள் விஷயத்தில் ஒன்றரை ப்ரஹரம் {ஜாமம்}வரை மூன்று முஹூர்த்தம் வரை அதாவது பதினொன்றே கால் நாழிகை முன்பு வரை.

அதாவது க்ரஹணம் தொடங்குவதற்கு நான்கரை மணி நேரம் முன்புவரை திரவப்பொருளாக சாப்பிடலாம் என்கிறது சாஸ்த்திரம். ஆனால் சக்தியுள்ளவர்கள் முன்சொன்ன விதிமுறையை அனுஸரிப்பதே உத்தமம்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக