ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

KANCHI ACHARYA

ராதே கிருஷ்ணா 10-08-2015

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ஸர்வ ஸக்தி ஸ்வருபா தினம் (18 தரம்) உம்மை நமஸ்கரிப்பேன்
1.ஸாந்தியின் வடிவு ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ர்வ ஸக்தி ஸர்வேஸ்வர ஸ்வருபா நமஸ்காரம்
2.ஸ்ரத்தை வடிவான ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ர்வ ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
3.காந்தியின் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா காமாக்ஷி ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
4.லக்ஷ்மியின் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா லலிதாம்பா ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
5.வ்ருத்தியின் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா வ்ருத்தாம்பா ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
6.ஸ்ம்ருதியின் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா ஸ்கந்த மாதா ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
7.தயையின் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா தர்மாம்பா ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
8.துஷ்டியின் வடிவான ஸர்வ ஸக்தி ஸ்வருபா துக்க ஹந்த்ரே நமஸ்காரம்
9.மாத்ரு வடிவான ஸ்ரீ மஹா பெரியவா மஹாதேவி ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
10.மயக்கம் அகற்றிடுவாய் ஸ்ரீ மஹா பெரியவா மாஹேசி ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
11.அகந்தையை ஒழித்திடுவாய் ஸ்ரீ மஹா பெரியவா புவனேசி ஸக்தி ஸ்வருபா நமஸ்காரம்
12.ஸ்ரீ மஹா பெரியவா தேவியே புவனேஸ்வரி ஸக்தி ஸ்வருபா தினம் உம்மை நமஸ்கரிப்பேன்
13.ஸ்ரீ மஹா பெரியவா ஸர்வ ஸக்தி ஸ்வருபா தீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய் தினம் உம்மை நமஸ்கரிப்பேன்
14.பிறவிப் பிணி தீர்ப்பாய் ஸ்ரீ மஹா பெரியவா ப்ரம்ஹ ஸக்தி ஸ்வருபா! தினம் உம்மை நமஸ்கரிப்பேன்
15.என் துன்பத்தை துடைத்திடவே ஸ்ரீ மஹா பெரியவா தீப துர்க்கை ஸக்தி ஸ்வருபியாய் வந்திடு தினம் உம்மை நமஸ்கரிப்பேன்
16.ஸ்ரீ மஹா பெரியவா துர்க்காம்பிகை ஸக்தி ஸ்வருபா துன்பத்தை விலக்கிடு தினம் உம்மை நமஸ்கரிப்பேன்
17.ஸ்ரீ மஹா பெரியவா ஸர்வ ஸக்தி ஸ்வருபா அஷ்டமா ஸித்திகளை அடியேனுக்கு அருளிடு தினம் உம்மை நமஸ்கரிப்பேன்
18.ஓம் மஹாலெக்ஷ்மி புத்ராய வித்மஹே
ஜகத்மஹானுபாவாய தீமஹி
தந்நோ ஸர்வ ஸ்வருபா ப்ரசோதயாத்! தினம் உம்மை நமஸ்கரிப்பேன்.
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ஸர்வ ஸக்தி ஸ்வருபா தினம் (18 தரம்) உம்மை நமஸ்கரிப்பேன்


50 வர்ஷங்களுக்கு முன் நடந்த அருமையான ஸம்பவம்.

ஒரு ஐப்பஸி மாஸம், ஸ்ரீமடத்தில் மகா பெரியவா பக்தர்களுடன் ஏதோ பேசிக்கொண்டும், விஜாரித்துக்கொண்டும் தரிசனம் குடுத்துக் கொண்டிருந்தார். மகா பெரியவாளுக்கு முன் மூங்கில் தட்டுகளிலும், தாம்பாளங்களிலும் அநேகவிதமான பழங்கள் கொட்டிக் கிடந்தன.

அந்தக் கூட்டத்தில், ஒரு மூன்று வயஸுப் பெண்குழந்தை ஸந்தோஷமாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. பெண் குழந்தைகளுக்கு எத்தனைதான் விதவிதமாக குட்டையான கவுன், ஸ்கர்ட் என்று போட்டாலும், தழைய தழைய பாவாடை கட்டிக் கொண்டிருக்கும் குழந்தைகளிடம், ஏனோ ஒருவித தெய்வீகக்களை, தானாகவே வந்துவிடும். அன்று அந்தக் குழந்தையும், பட்டுப் பாவாடை கட்டிக் கொண்டு பார்க்க அழகாக இருந்தது.

மகா பெரியவா அந்தக் குழந்தையை அருகில் அழைத்தார். ஓடிப் போய் மகா பெரியவாளிடம், "என்ன உம்மாச்சி தாத்தா?..." என்று மழலையில் கேட்டது.

தன் முன்னால் இருந்த தட்டுக்களை அதனிடம் காட்டி, "இந்தா....இதுலேந்து ஒனக்கு என்ன பழம் வேணுமோ, அதை நீயே ஒன்னோட குஞ்சுக்கையால எடுத்துக்கோ" என்றதும், அந்தக் குட்டிக்கு படு குஷியாகி விட்டது! ஒவ்வொரு தட்டாக inspect பண்ண ஆரம்பித்தது. அன்னாஸி, ஆப்பிள், ஆரஞ்சு, த்ராக்ஷை, வாழைப்பழம் எல்லாம் கொட்டிக் கிடந்தது.

குழந்தை இல்லையா? குழந்தை மாதிரிதானே கேட்கும்? இதுவும் கேட்டது.........அங்கே இல்லாத பழத்தை!

"உம்மாச்சி தாத்தா....நேக்கு மாம்பழம் வேணும்...காணுமே!..."

மாம்பழம் எங்கிருந்து வரும்? மாவடு ஸீஸன் கூட ஆரம்பிக்கவில்லை!
"மாம்பழம் இல்லியா?...." கொஞ்சநேரம் மௌனமாக இருந்தார். பிறகு வேதபுரி மாமாவைக் கூப்பிட்டு, "வேதபுரி! உள்ள போய், மேட்டூர் ஸ்வாமிகிட்ட எதாவுது மாம்பழ வத்தல் மாதிரி இருக்கா பாரு!...." என்று சொல்லிவிட்டு, கண்ணை மூடிக்கொண்டு த்யானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

ஸரியாக அந்த ஸமயத்தில், கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஆந்த்ராவிலிருந்து ரெண்டு பேர் ஆளுக்கொரு பழத்தட்டுடன் வந்தார்கள். மகா பெரியவா முன் பழத்தட்டை கீழே வைத்துவிட்டு, நமஸ்காரம் பண்ணினார்கள்.

குழந்தை அவர்கள் வைத்த தட்டைப் பார்த்தது.

"உம்மாச்சி தாத்தா....மாம்பழம்!..."
அழகாக குண்டு குண்டு மாம்பழங்கள் மேலாக இருந்தது. பெரியவா கண்களைத் திறந்தார். அந்தக் குழந்தையிடம் மாம்பழத்தைக் காட்டி, "எடுத்துக்கோ!..." என்றதும், அழகாக ஒரே ஒரு மாம்பழத்தை இரண்டு கைகளிலும் தூக்க முடியாமல் தூக்கி எடுத்துக் கொண்டது. முகமெல்லாம் ஒரே ஸந்தோஷம்.

வேதபுரி மாமா திரும்பி வந்து மகா பெரியவாளிடம் " அங்க ஒண்ணுமே இல்ல...." என்று சொல்லிவிட்டு குழந்தையின் பக்கம் திரும்பியவர், அதன் கைகளில் உள்ள குண்டு மாம்பழத்தைப் பார்த்ததும் திகைத்துப் போனார்.

"ஏண்டா ! மாம்பழம் எப்படி வந்துது?..."
தெரியாதவர் போல் மகா பெரியவா அதிஸயமாகக் கேட்டதும், தெரிந்தே, மிக அழகான பதிலை வேதபுரி மாமா சொன்னார்......

"பெரியவா நெனச்சேள்! பழம் வந்துது!..." என்றார் கண்களில் கண்ணீரோடு !!!

மாம்பழம் கொண்டு வந்த ஆந்த்ராக்காரர்கள் அதன்பின் அங்கே காணப்படவில்லை !!!

பிக்ஷாவந்தனம்- மகா பெரியவாளுக்கு அசாத்திய கோபம்

அன்றைய தினம் பிக்ஷாவந்தனம் செய்வதற்காக வந்திருந்த பெரிய மனிதரைக் கண்டதும் மகா பெரியவாளுக்கு அசாத்திய கோபம் வந்து விட்டது. அருகிலிருந்த தொண்டர்களிடம். "இன்னிக்கு இவர் பிக்ஷையா?" என்று கேட்டார்கள். "ஆமாம்..." "பெற்ற தாயார் - தகப்பனாரை நல்லபடியா சம்ரட்சிக்க முடியாதவாளெல்லாம் எதற்காக பிக்ஷாவந்தனம் செய்யணும்? வட்டிக்கு மேல் வட்டி வாங்கி ஏழைகளைக் கொடுமைப்படுத்துபவர் பிக்ஷை வேண்டாம்..." என்று சத்தமாகக் கூறிவிட்டு மகா பெரியவாள் உள்ளே போய்விட்டார்கள். சுற்றமும் நட்பும் புடைசூழ வந்திருந்த செல்வந்தருக்கு அவமானமாகப் போய்விட்டது. நெஞ்சு வெறும் சூன்யமாகி விட்டது. மெல்ல நடந்து அந்த இடத்திலிருந்து வெளியே வந்து, வேறோர் இடத்தில் தரையில் உட்கார்ந்துவிட்டார். மகா பெரியவா கோபம் விநாடிப் போது தான். மானேஜரிடம் சொல்லி, அந்த பிக்ஷாவந்தனக்காரரை குடும்பத்தோடு வரச் செய்து, வந்தனம் செய்யச் சொல்லி ஏற்றுக் கொண்டார்கள். பூஜை பிக்ஷை எல்லாம் முடிந்த பிறகு அந்த அன்பருக்குப் பிரசாதம் கொடுக்க வேண்டிய நேரம். அவர் வந்து தத்தளிக்கும் மனத்துடன் உட்கார்ந்தார். மகா பெரியவா அவரிடம் கிருஹஸ்த தர்மத்தை விளக்கமாக உபதேசித்தார்கள்; "குழந்தைகள்,பசுமாடுகள், வேலைக்காரர்கள்,ஏழைகள், வறுமையிலுள்ள உறவினர்கள் எல்லோரையும் பிரியத்துடன் காப்பாற்றுவதுதான் முக்கியமான கடமை." பணக்காரர் ஆனந்த பாஷ்பத்துடன் கேட்டுக்கொண்டு மனத்தில் பதிய வைத்துக் கொண்டார். மகா பெரியவா அவருக்கு ஒரு சால்வை போர்த்தி பிரசாதம் அனுக்ரகித்தார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக