வியாழன், 13 ஆகஸ்ட், 2015

தர்ப்பண மந்திரங்கள் ஆவாஹனம் முழு அர்த்தம் பொழிப்புரை

ராதே கிருஷ்ணா 14-08-2015
Sri Vishnu Padam, Gaya.
_________________________________

பிள்ளைகள் பெற்றோர் விஷயத்தில் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள்:-

1) ஜீவிதோ வாக்யகரணாத் - ஜீவன் உள்ள வரை அவர்கள் சொல்வதை கேட்டு நடைத்தல்.

2) ப்ரத்யப்தம் பூரி போஜனாத் - ஆப்தீகத்தை ஸ்ரத்தையோடு சாஸ்த்ரங்களில் கூறியது போல் ஆசரித்து, அந்த சமயத்தில் ஏனைய பேர்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்தல்.

3) கயாயாம் பிண்டதானேன - தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கயையில் பித்ருக்களை உத்தேசித்து பிண்டதானம் செய்தல்.

த்ரிபி: புத்ரஸ்ய புத்ரதா - இந்த மூன்றையும் ஆசரிப்பவன் யோக்யமான புத்திரனாகிறான் என்று விதிக்கப்பபட்டுள்ளது.

இதில் முதலாவது, அவரவர்களின் ப்ரவ்ருத்தியினால் சாத்தியமாகும்.

மூன்றாவது, எப்பொழுதோ ஒரு முறை செய்யத் தகுந்தது.

மத்தியில் சொல்லப்பட்ட ஆப்தீகம் வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டியது.

தர்ப்பண மந்திரங்கள் ஆவாஹனம் முழு அர்த்தம் பொழிப்புரைஆவாஹனம் -எழூந்தருளச் செய்தல் .
பித்ருக்களே !மிகவும் நல்லவர்களா நீங்கள் ,எங்களுக்கு சந்ததியையும் ,செல்வத்தையும் , நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்த்தளிதுக்கொண்டு ,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் .
இந்த கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் .
ஆசனம் ,- இருக்கை.

Tharppanam Image credit Agastiyar,org.
தரப்பையே !நீ , ஒரு போது என்னால் சேகரிக்கப் பட்டாய்.
உன்னைப் பித்ருக்க்ளுக்காகப் பரப்புகிறேன்.
நீ அவர்களுக்குப் பஞ்சு போல் மித மிருதுவான ஆசனமாக இரு.
அருள் சுரக்கும் எண்கள் பித்ரு ,பிதாமஹ ப்ரபிதாமஹர்கள் தங்களுடைய பரிவாரங்களுடன் இங்கு
எழுந்தருளட்டும் .
( இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் இது ஆசனம் .
அவர்களை எல்லா வித உபசாரங்களுடன் பூஜிக்கின்றேன் .)
தர்ப்பணம் .
சோம யாகம் செய்த சிறந்த பித்ருக்களைப் போலவே , நடுத்தரத்தினரும் கடைப்ப்பட்டவரும் கூட உஅயிர்ந்த கதியை அடையட்டும் .
நம்மிடம் கோபமற்றவர்களாய் அவர்கள் நாம் செய்யும் நற் கர்மாவை உணர்ந்து ,நமது பிராணனை ரக்க்ஷித்து ,நாம் அழைக்கும்போது வந்து , நம்மைக் காத்தருளவேண்டும்.
இன்ன கோத்திரனரும் இன்ன பெயருள்ளவரும் , வாசு ரூபியான எங்கள் தந்தையை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .
அங்கீரசர் ,அதர்வணர் ,பிருஹுக்கள் என்று பெயருள்ள நமது பித்ருக்கள் புதிது புதிதான வகையில் அருள் புரிபவர்கள் .
சோம யாகம் செய்தவர்கள் .
பூஜித்தர்க்குரிய அவர்களுடய எந்த சிறந்த வழியில் சென்றதோ , அதையே நாமும் பின் பற்றி ,மங்களகரமான நல்ல மனது உடையவர்கள் ஆவோம் .
இன்ன கோத்திரத்தினரும் …தர்ப்பணம் செய்கின்றேன்.
அக்னிச்வாத்தர்கள் என்பவர்களும் ,சோம யாகம் செய்தவர்களுமான நமது பித்ருக்கள் தேவ மார்க்கமாக இந்து எழுந்தருளட்டும் .
இங்கு நாம் செய்யும் ஆராதனையில் சந்தோஷமடயட்டும் .
நம்மைக் காப்பாற்றட்டும் .
இன்ன ……… .
பிதா மகர்
ஜலங்களே ,எல்லாவற்றிலும் உள்ள சாரத்தை நீங்கள் உங்களிடம் கொண்டிருகிறீர்கள் .
ஆகையால் அம்ரிதமாகவும் ,நெய்யாகவும் , பாலாகவும் ,மதுவாகவும் பானகமாகவும் பரிணமித்து (எது வேண்டுமோ ,அதுவாய் நின்று நீங்கள் ) எங்கள் பித்ருக்களை திருப்தி செய்வீர்களாக .
இன்ன கோத்திர ‘.. எனது பிதா மகரை நமஸ்கரித்து ..தர்ப்பணம் செய்கிறேன்
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்ருக்களுக்கு ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன் .
ஸ்வதா என்னும் சொல்லால் திருப்தி அடையும் பித்த மகர்களுக்கும் ,ப்ரபிதா மகர்களுக்கும் ஸ்வதா எனக்கூறி நமஸ்கரிக்கின்றேன் .
இன்ன ……
எந்த பித்ருக்கள் இவ்வுலகில் இருக்கின்ரார்களோ , எவர்கள் இங்கு இல்லையோ , இவர்களை நாங்கள் அறிவோமோ ,இவர்களை அறிய
மாட்டோமோ , அவர்களை எல்லாம் அக்னி பகவானே, நீர் அனைத்தையும் அறியும் ஜாதவேதஸ் ஆதல்லல் அறிவீர் .அவர்களுக்குரிய
இதை அவகளிடம் சேர்த்து அருள்வீர் .
அதனால் அவர்கள் சந்தோஷமடயட்டும் .
இன்ன ……
ப்ரபிதா மகர்.
.
காற்று இனிமையாக வீசட்டும் .
நதிகள் இனிமையைப் பெருக்கிக் கொண்டு ஓடட்டும் .
செடி கொடிகள் இனிமை அளிப்பவையாக இருக்கட்டும் .
இன்ன …….ப்ரபிதா மகரை நமஸ்கரிக்கின்றேன்.
இரவும் காலையும் இனிமையாக இருக்கட்டும் .
பூமியின் புழுதியும் இன்பந் தருவதாய் இருக்கட்டும்..
நமது தந்தை போனற ஆகாயம் இன்பமளிக்கட்டும் .
இன்ன……
வன விருக்ஷங்கள் இன்பம் நிறைந்தவகளாக இருக்கட்டும் .
சூரியன் இன்பந் தரட்டும்..
பசுக்கள் மத்ரமான பாலைத் தரட்டும்.
இன்ன …
தாயார்.
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபிணியும் ஆகிய எனது தாயை நமஸ்கரித்து
அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன்.( மூன்று முறை )
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ருத்ர ரூபிணியும் ஆகிய எனது மாதா மகியை
நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் . (மூன்று முறை)
.
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும்,ஆதித்ய ரூபிணியும் ஆகிய எனது ப்ரபிதா மகியை நமஸ்கரித்து அவருக்குத் தர்ப்பணம் செய்கின்றேன் .(மூன்று முறை)
தாய் வழித் தாத்தா,கொள்ளுத் தாத்தா பாட்டி கொள்ளுப்பாட்டி வகை .
இன்ன கோத்திரத்தினரும் இன்ன… பெயருள்ளவரும் வசு ரூபியும் ஆகிய எங்கள் மாதா மகருக்கு தர்ப்பணம்
செய்கின்றேன்..( மூன்று தடவை )
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகருக்கு தர்ப்பணம் .( மூன்று தடவை )
ஆதித்ய ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகருக்குத் தர்ப்பணம் ..( மூன்று தடவை )
வசு ரூபியாகிய எண்கள் மாதா மகிக்கு தர்ப்பணம் ( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் பிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).
ருத்ர ரூபியாகிய எங்கள் தாயின் ப்ரபிதா மகிக்குத் தர்ப்பணம் .( மூன்று தடவை ).
அன்னரசமாகவும் அம்ருதமாகவும் ,நெய்யாகவும்,பாலாகவும், தேனாகவும் பானகம் ஆகவும் பரிணமித்து , எது வேண்டுமோ அதுவாய் நின்று நநீங்கள் எனது பித்ருக்களைத் திருப்தி செய்வீர்களாக !
பித்ருக்களே,
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள்.
திருப்தி அடையுங்கள். .
பூணூல் வலம்.
தேவதைகளுக்கும் பித்ருக்களுக்கும் அவ்வாறே மகா யோகிகளுக்கும் நமஸ்காரம் .
ஸ்வதா என்னும் பெயர் கொண்டு விளங்கும் பர தேவதைக்கு எப்போதும் மீண்டும் மீண்டும் நமஸ்காரம் .
( மூன்று முறை )
அபிவாதனம் , நமஸ்காரம் .
பூணல் இடம்.
பித்ருக்களே !
மிகவும் நல்லவர்களான நீங்கள் எங்களுக்கு சந்ததியையும்,செல்வத்தையும் நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்திது அளித்துக்கொண்டு கம்பிரமாக சிறந்த ஆகாய மார்க்க்கத்தில் எழுந்து அருளுங்கள் .
இந்த கூர்ச்சத்தில் இருந்து இரண்டு வர்க்க பித்ருக்களையும் அவரவர்களுடைய இருப்பிடங்களுக்கு எழுந்து அருளப் பிரார்த்திக்கிறேன் .
பவித்ரத்தை வலது காதில் வைத்துக்கொண்டு ,உபவீதியாக ,ஆசமனம் செய்து , பவித்ரத்தை போட்டுக் கொண்டு பூணூலை இடமாக்கவும் .
எவர்களுக்கு தாயோ தந்தையோ ச்நேகிதரோ தாயாதிகளோ பந்துக்களோ இல்லையோ அவர்களெல்லாம் நான் என் தரப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும் .
கூர்ச்சததைப் பிரித்து நுனி வழியாக தர்ப்பணம் செய்யவும் .
பவித்ரம் பிரிக்கவும் .
பூணூல் வலம் .
ஆசமனம்.
பின்பு பிரம்ம யக்யம் செய்க.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக