புதன், 11 ஜூன், 2014

தனுர்வேதம் (Dhanur Vedam)

ராதே கிருஷ்ணா 12-06-2014தனுர்வேதம் (Dhanur Vedam)

From the album: Timeline Photos
By Jeyananthan Durai
தனுர்வேதம் (Dhanur Vedam)

யுத்த முறைகள், ஆயுதங்கள்,பற்றிய நூல். யஜூர் வேதத்தின் ஒரு பகுதி என மதுசூதன சரஸ்வதி என்பவர் தனது "ப்ரஸ்தானபேத" என்ற நூலில் எழுதியுள்ளார்;. தனுர்வேத ஸம்ஹிதை என்ற நூல் உள்ளது. அக்னி புராணம் கூறுகிறது:- நான்கு பிரிவுகள் கொண்டது ஸேனை- குதிரை படை, தேர்படை,யானை படை, காலாட்படை;; ஆயுதங்கள் ஐந்து வகைபடும்;;
1. யந்திரமுக்த- யந்திரத்தின் உதவியால் அம்பு, குண்டு எறிதல்.
2. பானிமுக்த;; கைகளால் அம்பு எறிதல்
3.முக்த ஸந்தாரித;; ஈட்டி, வேல் போன்றவைகளை எறிதல்.
4.அமுக்த;; கத்தி வாள் பயிற்சி.
5.பாஹூயுத்தம்;; மல் யுத்தம், கைகளால் யுத்தம் செய்வது. இவைகளை தவிர " அஸ்திரம்"(மந்திர சக்தியால் இயங்குவது), "ஸஸ்திரம்" (கைகளால்), மாயா, ரிஜூ என பல பிரிவுகள் உண்டு.
க்ஷத்திரியர்கள், வைசியர்கள் சண்டை பயிற்சி பெறலாம். மற்றவர்கள் அறியலாம். யுத்தம் செய்யக் கூடாது. ஒன்பது வகையாக நின்று யுத்தம் செய்யவேண்டும் அவைகள்--சமபாத, வைசாக, மண்டல, ஆலித, ப்ரத்யாலித, ஜட,தண்டாயுத, விகட,ஸ்வஸ்திக;; அதே போல் வில்லில் நாணேற்றி, எவ்வாறு விடுவது என்பதை பற்றி விரிவாக உள்ளது. அம்பு விடும் முன் ஒரு கண்ணால் மூடி, முஷ்டியில் கண்முன் இலக்கை மூடி, மறுபடியும் பார்த்தால் நிச்சியம் வெற்றியே.. அம்புகளை உடனுக்குடன் விடவேண்டும். இம்முறைக்கு "உபச்சேத" என்பர். வாள், கேடயம் இவைகளை உபயோகிக்கும் பல முறைகள் உள்ளன:- ப்ரணதா. உபப்ரந்தா, ஆவித்த, ஆப்லுத, விப்லுத, ஸ்ருத, ஸம்பாத, சமுதீர்ண,ஸ்வேதபாத, ஆகுல, ஸவ்யோதூத, ஸாவ்யதூத, தக்ஷிணோதூத,தக்ஷிண வதூத, அனாலக்ஸித,விஸ்போட, கராள, இந்திரமஹாசக, விகராள, நிபாத, விபீஷண,பயநாக,சமக்ரபாத, அர்த்தபாத, த்ருதீயாம்ச,பாத,அர்த்தவாரிஜ, வாரிஜ, ப்ரத்யாலித, அலித, வராஹ, லலித, கயிறுகள் உபயோகிக்கும் முறைகள்:- பராவ்ருத்த, அபராவ்ருத்த, கிரஹித, லகுகிரஹித,ஊர்தவக்ஷிப்த, அதப்க்ஷித, ஸந்தாரித, ஸ்யேனபாத, கஜபாத, க்ரஹாக்ரஹ்ய;; இவை தவிர வேறு ஐந்து முறைகளும் உண்டு;;அவை- ரிஜூ, ஆயுத, விசால, திர்யக, ப்ரமித;;
ஆயுதங்கள் உபயோகிக்கும் முறைகள்; 1.சக்கரம் வைத்த ஆயுதங்கள்--ஸேதன, பேதன, பாதன, ப்ரமன, ஸயன, விகர்தன;
2.கதைகள்(Mace) உபயோகித்தல்--த்ருஷ்டி,பார்ஸ்வ, ரிஜூபாக்க்ஷ, இஷ்டப்ராப்த;;
3.சூலம் உபயோகிக்கும் முறை--ஆஸ்போதன, ஸோலன, பேதன, த்ராஸன, ஆந்தோலன, ஆகத;;
4. கதைகளில் மற்ற முறைகள்-- கோமூத்ர,ஆகத, ப்ரபூத, கமலாசன, தட, ஊர்தவகாத்ர, வாமன்மித, தக்ஷிணமித, ஆவ்ருத்த, ப்ராவ்ருத்த, பாதோதூத, அவப்லுத, ஹம்ஸமருத;;
5.கோடாலி முறைகள்-கராள, அவ்காத, தம்ஸ, உபப்லுத, க்ஷிதப ஹஸ்த, ஸ்தித, சூன்ய;;
6. குண்டு எறிதல்-- தாபன, சேதன, ஸுர்நான, ப்லவன, கடான;;
7. பிண்டிபால-- ஸம்ஸ்ராந்த,விஸ்ராந்த, கோலிஸர்க, ஸுதூர்தர;;
8. வஜ்ராயுதம்--அந்திய, மத்திய, பராவ்ருத, நிதேசந்த;;
9. ஸின்ன கத்தி(Churi)-- ஹரன, சேதன, காடான, பேதன, ம்ரும்க்ஷண, பாடன, ஸ்போடன;;
10. இரும்பு கயிறு-- த்ராசன, ரக்ஷண, பவோத்தரண,ஆயுத்த, காடன;;
11.சிலம்பம்--ஸந்த்யாக, அவதம்ஸ,ஹஸ்தவஹ்ஸ்த, ஆலிந, ஏகஹஸ்த, அவஹஸ்த, த்விஹஸ்த, பாஹுபாச, உத்கதா,உரோகத, விமான, பாதாதி,விபாதீக, பராக, தாரக, தண்ட, ஆகுல, கஜாக்ரந்தா, கர்ப்பக்ரந்தா;; (அக்னி புரா--249--252). சண்டை போடும் முறைகள்:- சந்த்யாக, அவதம்ச, வராஹோத்தூதக, ஹஸ்தவஹஸ்த, ஆலீன, ஏகஹஸ்த, அவஹஸ்த, த்விஹஸ்த,
பாஹூபாசா, க்டிரேசிதிக, உத்கத, உரோகதா, லலாதகத, புஜவிதமன, கரோதூத, விமான, பாதாதி,விபாதீக, காத்ரஸம்ஸ்லேசன, சாந்த, காத்ரவிப்ரவ்ய, ஊர்தப்ரஹர, காத, கோமூத்ர, ஸவ்ய, பக்ஷீன, பாரக, தாரக, தண்ட, ஆகுல, கபரிபந்த, த்ரியகபந்த, அபாமார்க, பீமவேக, சுதர்சன, ஸிம்ஹக்ராந்த, கஜக்ராந்த, கர்பக்ராந்த;;(அக்னி புரா--249-252);; மஹாபாரதத்தில் தனுர்வேதம்:- ஸரத்வான் என்ற முனிவரே இதை நன்கு அறிந்தவர். அவர் க்ருபருக்கு அருளியவர்.(ஆதி--129)
பரசுராமர் துரோணருக்கு அருளீனார். அக்னிவேசர் அகஸ்தியரிடம் கற்றார்.(ஆதி--133); தனுர்வேதம் பத்து அங்கங்கள், நான்கு சரணங்கள் கொண்டது. கந்தனே இதன் கடவுள்சால்ய--6,41,44)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக