வெள்ளி, 6 ஜூன், 2014

பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு; பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!

  ராதே கிருஷ்ணா 07-06-2014




பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு; பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!

From the album: Timeline Photos
By Mannargudi Sitaraman Srinivasan
பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு; பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!

அன்பர்களோடு உரையாடி கொண்டிருந்தார்கள் பெரியவாள். சகஜமாக பேசி கொண்டிருந்த பெரியவா, ஒரு சந்தர்பத்தில், சட்டென்று பேச்சை நிறுத்தி கொண்டார்கள்; உடனே, எழுந்து நின்றார்கள்.. "நான் மட்டும் வெளியே போய்விட்டு வருகிறேன்,. யாரும் என்னுடன் வரவேண்டாம்" என்று சொல்லிவிட்டு, வாயிலை நோக்கி நடந்து வெளியே போய்விட்டார்கள்.

எல்லோருக்கும் திகைப்பு; உள்ளுக்குள் அச்சம். "பெரியவா தனியே போகிறார்களே?" என்று கவலை.

கொஞ்ச நேரம் கழித்து பெரியவா வந்ததும் தான், எல்லோரும் நிம்மதியாக மூச்சு விட்டார்கள். என்றாலும், "எங்கே போய்விடு வந்தார்கள்?" என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அடங்கவில்லை.

பெரியவாள் அவர்களை வெகு நேரம் தவிக்கவிடவில்லை.

"எங்கே போனேன்னு எல்லோரும் கவலைப்பட்டேள், இல்லையா... ஒரு கொலைகாரன் என்னை பார்க்க வந்து கொண்டிருந்தான். அவன் மடத்துக்குள்ளே வந்தால், அவனுடன் கூடவே மகாபாவமும் உள்ளே வந்து ஒட்டிக்கொள்ளும்.

"ஆனா, என்னிடம் நல்ல எண்ணத்தோட தான் வந்தான். நான் அவன் வருத்தத்தை போக்குவேன்னு நம்பிண்டு வந்தான். அப்படிப்பட்டவனுக்கு ஆறுதல் சொல்வது ஏன் கடமை.

"அவனை மடத்துக்குள்ளே விடவும் கூடாது. ஆறுதலும் சொல்லணும்! அதனால் நானே வெளியே போய் பேசிவிட்டு வந்தேன். அவனை தனியே அழைத்துக்கொண்டு போய், அவனுக்கும் சங்கடம் கொடுக்காமல், தனியே பேசி ஆறுதல் கூறிவிட்டு வந்தேன்..."

பக்தன் பகவானை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தால், பகவான் பக்தனை நோக்கி பத்து அடிகள் எடுத்து வைப்பார்கள் என்பார்கள். ஆனால் பெரியவாளோ ஒரு பாவி, மனம் திருந்தி, தன்னை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தாலும், தான் நூறு அடிகள் அடுத்து வைத்து, தன் கடாச்சத்தினாலேயே அவனை கழுவி விட்டு வருவார்கள் - அடியார்களை ஆட்கொள்வதற்கு.

பகவான் நடந்து வருவார் - என்பது வழக்காறு;
பெரியவாள் நடந்து சென்றார் - என்பது வரலாறு!




















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக