வெள்ளி, 13 ஜூன், 2014

பட்டுப்புடவையை பராமரிக்க வழிகள்

ராதே கிருஷ்ணா 14-06-2014


பட்டுப்புடவையை பராமரிக்க வழிகள்





From the album: Timeline Photos
By Maalaimalar தமிழ்
பட்டுப்புடவையை பராமரிக்க வழிகள்

* பட்டுசேலை பொதுவாக பெண்கள் அனைவரும் விரும்பும் ஒன்று. அதிக விலை கொடுத்து வாங்ககூடிய பட்டுசேலையை கவனமாக பராமரிக்க வேண்டும். அணிந்த பின்பு நிழலில் காற்றாட 2-3 மணி நேரம் உலர விட்டு பின்னர் கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்க வேண்டும்.

* எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் போடக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீரில் விட்டு அலசினாலே போதுமானது.

* ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5 முதல்10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டும்.

* பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு வைக்க வேண்டும்.

* அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி அல்லது பேப்பர் விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.

* பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.

* பட்டுப்புடவையை கட்டும் போது தான் அயன் செய்ய வேண்டும். அயன் செய்து வைக்கக்கூடாது.

* 3 மாதத்திற்கு ஒரு முறை பட்டுப்புடவையை எடுத்து மாற்றி மடித்து வைக்க வேண்டும்.






































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக