செவ்வாய், 24 ஜூன், 2014

அம்பாள் பாடல்

ராதே கிருஷ்ணா 24-06-2014

அம்பாள் பாடல்

நீ இரங்காயெனில் புகல் ஏது ? அம்பா !!
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (அம்பா நீ)
அனுபல்லவி:
தாய் இரங்காவிடில் சேய் உயிர் வாழுமோ ?!!
ஸகல உலகிற்கும் நீ தாய் அல்லவோ !!!
சரணம்:
பாற்கடலில் உதித்த திருமணியே ! - ஸௌ
பாக்யலக்ஷ்மி, என்னை கடைக்கணியே !!
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் - மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் (அம்பா நீ)
கவிஞர்: ப்ரஹ்மஸ்ரீ பாபநாசம் சிவன்
ராகம்: அடாணா
தாளம்: ஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக