திங்கள், 27 ஏப்ரல், 2015

ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.

ராதே கிருஷ்ணா 27-04-2015








ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.
23. சுவாமி எங்கும் இருக்கிறார். அவரை ஒரு கல்லில்
வைப்பானேன் என்று கேட்கலாம். எங்கும் அவர் இருப்பதாகச் சொல்லுகிறோமாயினும் எங்கும் அவர் இருக்கின்றார் என்ற நினைவு மனதில் இல்லை. சுவாமி எங்கும் இருக்கிறார் என்ற எண்ணம் இருந்துவிடின் பொய் சொல்லுவானா? கெட்ட காரியம் செய்வானா? எங்கும் அவர் இருப்பது உண்மையே, அவர் இருப்பது மாத்திரம் நமக்குப் போதாது. அவருடைய அருளைப்பெற வேண்டும்.
24. சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய ஆலயம் அவசியமாக இருக்கிறது.
(வளரும்)


ஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.
37. ‘வேதத்தில் ஸ்வாமியைப் பற்றிச் சொல்லும்போது’ எதற்கு மேல ஒன்றுங் கிடையாது அது தான் ஸ்வாமி. எதற்குக் கீழே ஒன்றுங் கிடையாதோ அது தான் ஸ்வாமி. மிகப் பெரியனவற்றுக் கெல்லாம் பெரிது ஸ்வாமி மிகச் சிறிய அணுவுக்கெல்லாம் அணுவானது ஸ்வாமி என்று வருகிறது. ஸ்வாமி என்பவர் மிகச்சிறியனவற்றுக்கெல்லாம் சிறியதாய் இருப்பவர் என்றால் என்ன அர்த்தம்? அவர்தாம் எல்லாமாய் இருக்கிறார். அதனால் அவரைத் தவிர வேறு ஒன்று இல்லாத நிலை வந்துவிடுகிறது. சின்னதும்
அவர்தான், பெரிதும் அவர்தான், சின்னதைக் காட்டிலும்
சின்னதாக, பெரியதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறவர் பட்டகட்டையாக ஸ்தாணுவாக-இருக்கிறார். அப்படி உட்கார்ந்திருப்பவர் காரியமே இல்லாமல் சாந்தமாக உட்கார்ந்திருப்பவர், ஆனந்தமாக உட்கார்ந்திருப்பவர் தக்ஷிணாமூர்த்தி.
38. சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே
பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய(வடகிழக்கு)
திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலைவேறு தூக்கிக்கொண்டு நிற்பார். அவரை எப்பொழுதும் நாம் இருதயத்தில் தியானம் பண்ணிப்பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்த தாண்டவ மூர்த்தியின் ஸ்வரூபம்
மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான் சித்தியாகி விட்டது என்று சொல்வது.
(வளரும்)





ஸ்ரீசங்கர-ஸ்தாபிதாதிம-பீடாசார்ய-வர்ய-ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர-ஸரஸ்வதீ-ஸ்வாமி காயத்ரீ மந்திரம்

ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||

ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே, சார்வ பௌமாய தீமஹி,
தன்னோ ஸ்ரீ ஜகத்குரு ப்ரசோதயாத் ||
ஸ்ரீசங்கர-ஸ்தாபிதாதிம-பீடாசார்ய-வர்ய-ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர-ஸரஸ்வதீ-ஸ்வாமி
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா மூல மந்திரம்
"ஓம் நமோ பகவதே காமகோடி ஸ்ரீ சந்த்ரசேகராய!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா காயத்ரீ மந்திரம்& மூல மந்திரத்தை நாள்தோறும் காலை, மாலை 27 தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.

சந்த்ர சேக ரேந்த்ர சத்குரு - அவர்
சரணம் நமக்குக் கற்பகத் தரு
காம கோடி பீடமதை அலங்க ரித்தவர்
பாமரரும் பாசமுடன் போற்றும் பெரியவர் (நமது சந்த்ர)
கும்பகோண மடத்தில் பட்டம் கட்டிக்கொண்டவர்
நம்பிவந்த பக்தர்களை நாளும் காப்பவர்
அன்பர்க்கவர் வழங்குவது அருட்கடாக்ஷமே-அது
இன்பவாழ்வு மட்டுமன்றி ஈயும் மோக்ஷமே(நமது சந்த்ர)
தென்னாடு கொண்ட நடுநாடுடைத்த விழுப்புரத்தேயுதித்த வேத விழுப்பொருளாம் எண்குணத்தோன் எம் ஆச்சார்யன் தாள் போற்றி போற்றி!!
நமஸ்தே நமஸ்தே நமஸ்தே சசி சேகரா!
குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை!
 — with Mannargudi Sitaraman Srinivasan.





ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி பரம பாவன சரித நாமாவளி
ஓம் ஜய-வர்ஷே பூஜ்யஸ்ரீ-கோவிந்த-குலே க்ருதாவதாராய நம:

ஓம் த்வாதசே க்ருத-யதீ-வேஷாய நம:

ஓம் விம்சே தபஸ்-ஆர்த-வபுர்-தராய நம:

ஓம் பஞ்ச-விம்சே வேதாந்த-விஜ்ஞான-ஸுதிஸ்சிதார்த்தாய நம:

ஓம் த்ரிம்சே ஸ்வாத்ம-பீயூஷ-ரஸாஸ்வாதன-சீலாய நம:

ஓம் சத்வாரிம்சே மணிகர்ணிகா-மக்ன-பரிவ்ராஜகாய நம:

ஓம் பஞ்சாசே பூத-வ்ருந்தை: ஸெவித-பூஜ்ய-சரண-யுதாய நம:

ஓம் பஞ்ச-பஞ்சரசே காமகோடே யோக லிங்கார்சன-மக்ன-மானஸாய நம:

ஓம் ஷஷ்டிதமே தர்மேந்த்ரிவனே தத்த-சித்தாய நம:

ஓம் பஞ்ச-ஷஷ்டிதமே காமாக்ஷீ-பதாம்போஜ-ஸேவனோல்லஸித மானஸாய நம:

ஓம் ஸப்ததிதமே ஸ்ரீசன்ர-மந்திர-நிர்மாண-வபட்வாசார்யாய நம:

ஓம் அசிந்தமே உத்தர-சிதம்பர-நிர்மாண-தூரீக்ருத-கலங்க-பாங்காய நம:

ஓம் பஞ்சசிதமே நிஜ-பாவன-பதாம்போஜ-பவித்ரீ-க்ருத-பூமண்டலாய நம:

ஓம் நவதிதமே புராண-ஸுந்தர-மந்திர-பரிரக்ஷித-ஸஹஸ்ர-சந்த்ரதர்சினே நம:

ஓம் சதாயுஷே ஜாஜ்வல்யமானாகண்ட-ரூபே திரோபூத-சிவாய-கேவளாய நம:

ஓம் ஸ்ரீசங்கர-ஸ்தாபிதாதிம-பீடாசார்ய-வர்ய-ஸ்ரீசந்த்ரசேகரேந்த்ர-
ஸரஸ்வதீ-ஸ்வாமினே நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்!!

ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே, சார்வ பௌமாய தீமஹி,
தன்னோ ஸ்ரீ ஜகத்குரு ப்ரசோதயாத் ||
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே, சார்வ பௌமாய தீமஹி,
தன்னோ ஸ்ரீ ஜகத்குரு ப்ரசோதயாத் ||












உன்னதமான குணம் வர வேண்டுமானால் ‘கொஞ்சம் பொறுங்கள்’ காலம் தான் பதில் சொல்ல வேண்டும்- காஞ்சி ஸ்ரீ மஹாப்பெரியவா

ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பரும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்தபொழுது அந்த மஹான் இரண்டு வெளிநாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர் தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை.
அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே தெரியாது. நான் மிகவும் பொறுமை இழந்துவிட்டேன். வழக்கம்போல் அப்பொழுதே மாலை 5 மணியாகி விட்டது. பெரியவாள் தரிசனத்தை முடித்துக்கொண்டு ஸ்ரீகாமாட்சி கோவிலுக்கு போய்விட்டு பிறகு பஸ் பிடித்து திரும்ப வேண்டும். என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை.
அப்பொழுது அங்கு வந்த ப்ரம்மஸ்ரீ வேதபுரி சாஸ்திரிகளை சந்தித்துப் பேசினேன். ஸ்ரீவேதபுரி சாஸ்திரிகள் கடந்த 60 ஆண்டுகளாக மஹாபெரியவாளிடம் சேவை செய்து வருபவர். அவருக்கு பெரியவாளைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாது. அவரை மஹாபெரியவாள் ஸ்ரீமடத்தில் உள்ள அனைவரையும் அவருடைய பெயரைச் சொல்லி கூப்பிடக் கூடாது. அவரை ப்ரம்மஸ்ரீ என்றுதான் அழைக்க வேண்டும் என்று அன்புக் கட்டளை போட்டிருந்தார்கள்.
‘இப்படி வருகின்ற வெளிநாட்டுக்காரர்களை பெரியவாள் வேறு ஒரு நேரத்தில் அழைத்து பேசக் கூடாதா? என்னைப் போன்றவர்கள் கிட்டத்தட்ட ஒரு மணியாக காத்துக் கொண்டிருக்கிறோமே! எப்பொழுது நாங்கள் ஊர் திரும்புவது’ என்று அவரிடம் நான் குறைபட்டுக் கொண்டிருந்தேன். ப்ரம்மஸ்ரீ அவர்கள் என்னை பார்த்து ‘நீங்கள் ஒரு மணி நேரமாகத்தானே வெயிட் பண்ணுகிறீர்கள். அந்த இரண்டு வெளிநாட்டு பெண்களும் பெரியவாளிடம் பேச கடந்த மூன்று நாட்களாக காத்துக் கொண்டிருந்துவிட்டு இன்றுதான் அதுவும் இப்பொழுதுதான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்’ என்றார்கள்.
‘அவர்கள் யார்? அவர்கள் ஏன் இவ்வளவு நாட்களாக காத்திருக்கிறார்கள்? ஸ்ரீமடத்தில் நீங்கள் அவர்களுக்கு மஹாபெரியவாளின் தரிசனத்திற்கு ஏன் ஏற்பாடுகள் செய்யவில்லை’ என்று கேள்விமேல் கேள்வி கேட்டேன். அதற்கு அவர் நிதானமாக சொன்ன விஷயம் இதுதான். அவர்கள் இருவரும் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்தவர்கள். அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் நம்முடைய வேதசாஸ்திரம் மற்றும் வேதாந்தம் பற்றி படித்து டாக்டர் பட்டம் (Ph.D) பெற்றிருக்கிறார்கள். அவர்கள் படித்தது போதுமா இல்லை இன்னும் படிக்க வேண்டுமா என்ற சந்தேகத்தை அவர்களுடைய பேராசிரியரிடம் அங்கு கேட்டார்களாம். அதற்கு அந்த அமெரிக்கர் இவர்களை தமிழ்நாட்டில் உள்ள காஞ்சிப் பெரியவரை சந்தித்து உங்கள் சந்தேகங்களை தெரிந்து கொள்ளுங்கள். அவர் ஒருவரால்தான் உங்கள் சந்தேகங்களை தீர்க்க முடியும் என்று இங்கு அனுப்பிவிட்டாராம்.
அவர்கள் 3 நாட்களுக்கு முன்னால் அவர்களுடைய இந்த பெரிய சந்தேகத்தை மஹாபெரியவாளிடம் கேட்டார்களாம். அந்த மஹான் அதற்கு அவர்களை கூர்ந்து பார்த்து “Just Wait” (கொஞ்சம் பொறுங்கள்) என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிட்டாராம். பிறகு அந்த இரண்டு ஜெர்மனியப் பெண்களும் பெரியவாளின் அருகில் உள்ள மேடையில் உட்கார்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம். மஹாபெரியவாளோ அந்த திக்குகூட திரும்பவே இல்லையாம்.
வெகுநேரம் கழித்தும் பெரியவாள் அவர்களை அழைக்கவே இல்லையாம். ஸ்ரீமடத்தில் இருந்தவர்கள் அந்த பெண்களை சந்தித்து ‘நாங்கள் வேண்டுமானால் ஸ்வாமிகளிடம் போய் ஞாபக படுத்துகிறோம். ஒருவேளை அவர் மறந்து விட்டார்களோ தெரியவில்லை’ என்று கேட்டார்களாம்.
“No, No” என்ற அந்த இரு பெண்களும் படபடப்போடு துடித்தார்களாம். தயவுசெய்து அந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள். எங்களை எப்பொழுது கூப்பிட வேண்டும் என்று அவருக்குத் தெரியும். “His Holiness is a great Saint“ (அந்த மஹாப்பெரியவாள் ஒரு புனிதமான, பெரிய சன்யாசி) அவராக எங்களை அழைக்கும் வரையில் நாங்கள் இங்கேயே தங்கி தியானம் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறிவிட்டு கடந்த மூன்று நாட்களாக ஸ்ரீமடத்திலேயே தங்கி பழம்-பால் மட்டும் சாப்பிட்டுவிட்டு தியானமே செய்து கொண்டிருந்தார்கள். இப்பொழுதுதான் மஹாப்பெரியவாள் அவர்களை அழைத்துவரச் செய்து போதனைகள் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு மணிக்குள் இப்படி சலித்துக் கொள்கிறீர்களே, அவர்கள் ஒரு சிறிய குறையைகூடச் சொல்லாமல் எவ்வளவு பொறுமையாக இருந்தார்கள் தெரியுமா என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு போய்விட்டார்கள். யாரோ என்னை ஓங்கி சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. இவ்வளவு வருஷங்களாக மஹாப்பெரியவாளுடன் இருந்துவிட்டு இப்படி கேவலமாக நடந்து கொண்டேனே என்று என்னை நானே நொந்துகொண்டேன். அந்த ஈஸ்வரனை புரிந்துகொள்ள நான் இன்னும் எவ்வளவு ஜென்மம் எடுக்க வேண்டுமோ தெரியவில்லையே என்று ஸ்தம்பித்து நின்றுவிட்டேன்.
அப்பொழுது மஹாப்பெரியவாள் சட்டென்று எங்கள் பக்கம் வந்து தரிசனம் தந்தார்கள். அந்த மஹானை தரிசித்து நான் செய்த தவறுக்காக அவரிடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு அவசரமாக அந்த இடத்தைவிட்டு நகர்ந்து அந்த இரண்டு ஜெர்மனிய பெண்களை சந்தித்து பேசினேன். அப்பொழுது அவர்கள் இருவர் கண்களிலும் கண்ணீர் தாரைதாரையாக வழிந்து கொண்டிருந்தது. மஹாப்பெரியவாள் அவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்த பொழுதே அவர்கள் கண்களில் கண்ணீர் வழிந்ததை நாங்கள் பார்த்தோம்.
‘தயவுசெய்து மன்னியுங்கள். நீங்கள் இருவரும் வந்த காரணத்தை நாங்கள் அறிந்துகொண்டோம். நீங்கள் என்ன கேட்டீர்கள், அந்த மஹாஸ்வாமிகள் என்ன கூறினார்? உங்கள் சந்தேகங்கள் எல்லாம் தீர்ந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கொஞ்சநேரம் பேசவேயில்லை. அவர்கள் இந்த உலகத்திற்கு வருவதற்கே கொஞ்சம் நேரமாகிவிட்டது.
‘ஐயா! நாங்கள் இப்பொழுது ஆனந்த வெள்ளத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறோம். எப்படி எங்கள் சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள முடியும் என்று தெரியவில்லை. அந்த மஹா ஸ்வாமிகளை உணரத்தான் முடியுமே தவிர அவற்றை வார்த்தைகளால் வர்ணிக்க எங்களுக்கு தெரியவில்லை. இந்த ஸ்வாமிகளை சந்திக்காமல் இவ்வளவு நாட்களை வீணே கழித்து விட்டோமே என்று வருத்தப்படுகிறோம்.
நாங்கள் இத்தனை வருடங்கள் வேதாந்தங்களைப் பற்றியும் சாஸ்திரங்களைப் பற்றியும் ஆராய்ச்சிகள் செய்து வந்தோம். ஆனால் இன்றுதான் எங்கள் ஜென்மா ஆனந்தம் அடைந்தது. இங்கே வருவதற்கு முன்னால், இந்த மஹானை தரிசித்து அருளுரை பெறுவதற்கு முன்னால் நாங்கள் இருவரும் எல்லாவற்றையும் படித்து முடித்து விட்டோம் என்று நினைத்திருந்தோம். ஆனால் இந்த பெரியவாளை தரிசித்த பிறகு நாங்கள் இன்னும் எங்கள் படிப்பை ஆரம்பிக்கவேயில்லை என்ற முடிவிற்கு வந்துவிட்டோம்.
(Before meeting His Holiness Sankaracharriar, we thought that we finished reading everthing. But after this meeting with His Holiness, we have come to a conclusion that we have not yet started the subject at all. He is really very great) என்று அனுபவித்து சொன்னார்கள்.
நம் ஸ்வாமிகளைப் பற்றி அன்னிய நாட்டவர்கள் சொன்னால்தான் நமக்கே அந்தப் பெரியவாளின் அருமையே புரிகிறது. அந்த வெளிநாட்டு பெண்களுக்கு இருந்த பொறுமை நம்மவர்களுக்க வருமா? நிச்சயமாக எனக்கு வராது. தாங்கள் இதுவரை கற்றதெல்லாம் ஒன்றும் இல்லை என்று தன்னை தாழ்த்திக்கொண்டு சொல்லக்கூடிய பக்குவம் நமக்கு வருமா? அல்லது அவர்களை போல் மூன்று நாட்கள் காத்திருந்து அதுவும் மஹாப்பெரியவாளின் உத்திரவு வரும்வரை நாம் காத்து கொண்டிருப்போமா?
ஆகவே என்னைவிட மஹாப்பெரியவாளை அந்த வெளிநாட்டவர்கள் அதிகமாக உணர்ந்திருக்கிறார்கள். அதுவும் அவர்களின் முதல் சந்திப்பிலேயே! நமக்கும் அப்படி ஒரு உன்னதமான குணம் வர வேண்டுமானால் ‘கொஞ்சம் பொறுங்கள்’ காலம்தான் பதில் சொல்ல வேண்டும்." -

“உலகில் எடுத்தது சத்தி முதலா உலகில் எடுத்தது சத்தி வடிவாய்
உலகில் எடுத்தது சத்தி குணமாய் உலகில் எடுத்த சதாசிவன் தானே
இது தான் என் ஞாபகத்தில் உதித்தது.
ஆம்! மஹாப்பெரியவா சத்தி குணமாய் எடுத்த சதாசிவன் தானே!
இன்று தான் எங்கள் ஜென்மா ஆனந்தம் அடைந்தது”
விலங்கெனும் மனம் கொண்டு உழலுகிறேன்
விளக்கென ஒளி தந்து காவாயோ?
வழியும் கண்ணீர் துடைக்க வர வேண்டும்
தொழுதென்றும் உனைப் பணியும் வரம் வேண்டும்
மழுவினை ஏந்துகின்ற மன்னனுடன் வந்துமழையென உன்னருளைத் தர வேண்டும்!
.நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே மற்றவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பதே உத்தமமான குணம். நம்முடைய புத்தி,ஆற்றல் இரண்டையும் உலக நன்மைக்காக மட்டும் பயன்படுத்த வேண்டும்.
உலகம் கண்டு ஆனந்தம் அடைந்த மஹான் காஞ்சி மஹா பெரியவா!
 — with Mannargudi Sitaraman Srinivasan.








யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

காஞ்சிப் பெரியவாள் நிகழ்த்திய அற்புதம் பற்றி இடுகை ஒன்றை பதிவர் பால ஹனுமான் வெளியிட்டுள்ளார். அதை இங்கு மீண்டும் இடுகிறேன், அவரது அனுமதியை ஆண்டிசிபேட் செய்து.

இப்போது ஓவர் டு பால்ஹனுமான்
தேனம்பாக்கத்தில் பெரியவா தங்கியிருக்கிறதுன்னு தீர்மானம் ஆன உடனே, அவர் அங்கே வாசம் பண்றதுக்கு ஓரளவுதான் வசதி செஞ்சு கொடுக்க முடிஞ்சுது. ஆனா, பெரியவா அதைப்பத்தியெல்லாம் கவலைப்படலே! அவர் வசதி பத்தியெல்லாம் என்னிக்கும் லட்சியம் பண்ணினதே இல்லே!’ என்று தொடர்ந்தார் சங்கர பக்த ஜன சபா செயலர் ஜி.வைத்தியநாதன்.”ஒரு முறை, சாயங்கால வேளையில பெரிசா பட்டாசெல்லாம் வெடிக்கிற சத்தம் கேட்டுது். பெரியவா உடனே, ‘என்ன, பட்டாசு சத்தம் எல்லாம் பலமா கேட்கிறது? எங்கே பட்டாசு வெடிச்சுக் கொண்டாடறா? எந்தக் கோயில்ல இருந்து ஊர்வலம் கிளம்பறது?’ன்னு எங்களிடம் விசாரிச்சார்.

‘காஞ்சி காமாட்சி அம்மன் திருவீதி உலா முடிஞ்சு, திரும்பி வந்துண்டிருக்கா. அதைத்தான் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடி, சம்பிரதாயமா நடத்திண்டிருக்கா!” என்று நாங்கள் விசாரிச்சுத் தெரிந்துகொண்ட சேதியைப் பெரியவாகிட்டே சொன்னோம்.
அதைக் கேட்டதும் பெரியவாளுக்கு இருப்பே கொள்ளலே. அம்பாள் காமாட்சியை எப்படியாவது தரிசனம் பண்ணணும் என்கிற ஆசை அவருக்கு வந்துவிட்டது. பெரியவா நடந்து காஞ்சிபுரம் போய்ச் சேர்றதுக்குள்ளே, திருவீதியுலா முடிஞ்சு, அம்பாள் திரும்பியிருப்பாள். இதைப் பெரியவாளிடம் தெரிவிச்சோம். ‘அதனால நாம இனிமே நடந்து போய்ப் பிரயோசனம் இல்லையே, பெரியவா!’ என்று நாங்கள் சொன்னது அவருக்குக் கேட்க கஷ்டமாக இருந்தது.

அன்னிக்கு எப்படியாவது அம்பாள் காமாட்சியை தரிசனம் பண்ணிவிடுவது என்று தீர்மானமாக இருந்தா பெரியவா. காஞ்சிபுரம் போய்ச் சேர்வதற்குள் ஊர்வலம் முடிஞ்சுடும் என்பதை அவர் பொருட்படுத்தலே. ரொம்பவும் பிடிவாதமா இருந்தார். மடத்து சிஷ்யர்கள் எத்தனை சொல்லியும் அவர் கேட்கிற மாதிரி இல்லே. போய்த்தான் தீருவது என்று நிச்சயம் பண்ணிவிட்ட மாதிரி இருந்தது.

பெரியவா வெளியிலே வந்து நின்ன உடனே கிளம்பிடலே. விநாயகர் சந்நிதிக்குப் போனார். அவர் பிள்ளையாரிடம் காதருகில் போய் என்னமோ ரகசியம் பேசுகிற மாதிரி இருந்தது. புறப்படறதுக்கு முன்னால் கணேசரிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறாராக்கும் என்று நினைத்தோம்.

விநாயகரிடம் அனுமதி வாங்கியவர், மளமள என்று காஞ்சியை நோக்கி நடக்கஆரம்பித்துவிட்டார். சிப்பந்திகள் சிலர் அவர் கூடவே தொடர்ந்து ஓடினார்கள். பெரியவா நடையே ஓட்டம் மாதிரிதான் இருக்கும். அந்த வேகத்துக்கு சாதாரணமாக யாராலும் ஈடுகொடுக்க முடியாது!
காஞ்சியை அடைந்தபோது, எல்லோருக்கும் ஆச்சரியம்!

அம்பாள் காமாட்சி இடத்தை விட்டு அசையாமல், உண்மையைச் சொல்லப் போனால் ஓர் அங்குலம் கூட நகராமல், அப்படியே அங்கேயே இருந்தாள். பெரியவா வந்து தரிசனம் பண்ணும் வரை அம்பாள் காத்துக்கொண்டிருந்த மாதிரி இருந்தது.

மடத்து சிஷ்யர்களுக்கு ஆச்சரியம் தாங்கலே. எதனால அம்பாள் ஊர்வலம் நகராம அப்படியே நின்றுவிட்டது என்று விசாரித்தார்கள். கோயிலில் பூஜை செய்யறவர் உடனே முன்னால் வந்து, ‘வெடிகள் வெடிச்சு முடிஞ்சதும், ஊர்வலத்துக்குத் தலைமை தாங்கற மாதிரி நிற்கிற யானை, என்ன பண்ணியும் இந்த இடத்தைவிட்டு ஒரு இன்ச் கூட அசையலே. அதை அதட்டி மிரட்டி விரட்டப் பார்த்தால் கோபத்தைக் காண்பிச்சுது. எதுவும் இசகு பிசகா நடந்துடக் கூடாதேன்னு சும்மா இருந்துட்டோம். ஆனா, ஊர்வலம் நகராம அப்படியே இருக்கிறபோது யானையும் சாதுவா சும்மா இருந்ததுதான் எங்களுக்கு ஆச்சரியம்! இது என்னடா, இந்த யானை இப்படி விநோதமா நடந்துக்கிறதேன்னு ஒரேயடியா குழம்பிப் போயிருந்தோம்’னு சொன்னார்.

ஆனா பெரியவா வந்து, காமாட்சி அம்பாளை தரிசனம் பண்ணி முடிஞ்சதும்,அவருக்குச் சொல்ல முடியாத திருப்தி. சந்தோஷமா இருந்தார். யானைகிட்டே போய், செல்லமா அதைத் தட்டிக்கொடுத்தார். உடனே யானை, ஏதோ அவரோட உத்தரவுக்குக் காத்திருந்த மாதிரி மேலே நடக்கத் தொடங்கியது!

தேனம்பாக்கத்தில் புறப்படுகிறபோது விநாயகர் காதில் பெரியவா என்னவோ சொன்னாரே… அதன் அர்த்தம் இப்போதான் புரிஞ்சுது! அன்னிக்குப் பெரியவா அடைஞ்ச சந்தோஷத்தைவிட, எங்களுக்குக் கிடைச்ச திருப்தியும் பாக்கியமும் இருக்கே, அது என்னைக்கும் மறக்கவே முடியாது!
காஞ்சி காமகோடி மஹா பெரியவா திருவடிகள் சரணம்!







ஆச்சார்யன் யார்?- பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

மூன்று இலக்கணங்கள் உள்ளவன் தான் “ஆச்சாரியன்” என்று வைத்தார்கள்.
ஒன்று: சாஸ்த்ர சித்தாந்தத்தை நன்றாக தெரிந்து கொண்டிருக்க வேண்டும்.
இரண்டு: தெரிந்ததை வாழ்க்கையில் நடத்திக் காட்டும் ஆச்சார சீலராக இருக்க வேண்டும்.
மூன்று: இப்படித் தனக்குத் தெரிந்து கடைப்பிடிக்கும் சாஸ்த்ரத்தைப் பிறருக்கு கற்றுக்கொடுத்து அவர்களையும் நெறியாக வாழ்க்கையில் நிலை நாட்ட வேண்டும்.
மாணாக்கன் சுத்தனாகவும் புரிந்து கொள்ளும் சக்தியுள்ளவனாகவும் இருக்க வேண்டும்.
சொல்லிக்கொடுப்பதை நன்றாக புரிந்து ஏற்றுக்கொள்வதே 'க்ரஹண சக்தி'.
அப்புறம் அதை மறக்காமல் புத்தியில் இருத்திக் கொள்வதே 'தாரணசக்தி'.









ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிஷ்வரர் ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர சேகரேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்துதி.

இந்த ஸ்லோகமானது நமது காஞ்சி காமகோடி பீடாதிபதி புது பெரியவாளான ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளியதாகும்.
1. அபாரகருணா ஸிந்தும்
ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீசந்த்ரசேகர குரும்
ப்ரணமாமி முதாந்வஹம்

2. குருவார ஸபாத்வாரா
சாஸ்தா ஸம்ரக்ஷணம் க்ருதம்
அநூராதா ஸபாத்வாரா
வேத ஸம்ரக்ஷணம் க்ருதம்

3. மார்கசீர்ஷ மாஸவரே
ஸ்தோத்ரபாட ப்ரசாரணம்
வேதபாஷ்ய ப்ரசாரார்த்தம்
ரத்நோத்ஸவ நிதி: க்ருத:

4. கர்மகாண்ட ப்ரசாரார்த்தம்
வேததர்மஸபா க்ருதா
வேதாந்தார்த்த ப்ரசாரார்த்தம்
வித்யாரண்ய நிதி: க்ருத:

5. சிலாலேக ப்ரசாரார்த்தம்
உட்டங்கித நிதி: க்ருத:
கோப்ராஹ்மண ஹிதார்த்தாய
வேதரக்ஷண கோநிதி:

6. கோசாலா பாடசாலா ச
குருபிஸ் தத்ர நிர்மிதே
பாலிகாநாம் விவாஹார்த்தம்
கந்யாதன நிதி: க்ருத:

7. தேவார்ச்சகாநாம் ஸாஹ்யார்த்தம்
கச்சிமூதூர் நிதி: க்ருத:
பாலாவ்ருத்தாதுராணாம் ச
வ்யவஸ்த்தா பரிபாலனே

8. அநாதப்ரேத ஸம்ஸ்காராத்
அச்வமேத பலம் லபேத்
இதி வாக்யாநுஸாரேண
வ்யவஸ்த்தா தத்ர கல்பிதா

9. யத்ர ஸ்ரீ பகவத்பாதை:
க்ஷேத்ர பர்யடனம் க்ருதம்
தத்ர தேஷாம் சிலாமூர்த்திம்
ப்ரதிஷ்ட்டாப்ய சுபம் க்ருதம்

10. பக்தவாஜிசாபி ஸித்த்யர்த்தம்
நாம தாரக லேகனம்
ராஜதம் ச ரதம் க்ருத்வா
காமாக்ஷ்யா: பரிவாஹணம்

11. காமாக்ஷ்யம்பா விமாநஸ்ய
ஸ்வர்ணபத்ரைஸ் ஸமாவ்ருதி:
ததைவோத்ஸவ காமாக்ஷயா:
ஸ்வர்ணவர்ம பரிஷ்க்ருதி:

12. லலிதாநாம ஸாஹஸ்ர
ஸ்வர்ணமாலா விராஜதே
ஸ்ரீதேவ்யா: பர்வகாலேஷு
ஸுவர்ண ரத சாஸனம்

13. சிதம்பர நடேசஸ்ய
சுவைடூர்ய கிரீடகம்
கரே-அபயப்ரதே பாதே
குஞ்சிதே ரத்னபூஷணம்

14. முஷ்டி தண்டுல தானேன
தரித்ராணாம் ச போஜனம்
ருக்ணாலயே பகவத:
ப்ரஸாத விநியோஜநம்

15. லோகக்ஷேம ஹிதார்த்தாய
குருபிர் பஹுதத் க்ருதாம்
ஸ்மரன் தத்வந்தனம் குர்வன்
ஜன்ம ஸாபல்யமாப்னுயாத்.



2 hrs ·
பெரியவாளுடன் இருந்து, அவருக்குக் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்ற பட்டாபி சார், உண்மைச் சம்பவம் ஒன்றை நினைவுகூர்ந்தார்…

அதுவொரு மார்கழி மாசம். கும்பகோணத்தில் என் தகப்பனாருக்குச் சிராத்தம் பண்ணிட்டு, பக்கத்துல 12 கி.மீட்டர் தொலைவுல இருக்கிற கோவிந்தபுரத்துக்குப் போனேன். அங்கே, காமகோடி பீடத்தின் ஆச்சார்யரான ஸ்ரீபோதேந்திராளின் அதிஷ்டானம் இருக்கு.
‘ராம ராம’ன்னு சொல்லியபடியே, அந்த அதிஷ்டானத்தை 108 தடவை பிரதட்சிணம் பண்ணினேன். அங்கே, ராம நாமத்தை ஜெபித்தால், ஸித்தி கிடைக்கும்னு சொல்லுவா.
அதிஷ்டானத்திலேருந்து எதிரொலி மாதிரி, ‘ராம்… ராம்’னு குரல் கேட்கும். ரொம்ப விசேஷம். அதுக்காகவே நான் அங்கே அடிக்கடி போவேன்.
இப்படித்தான் 94-ஆம் வருஷம், ஜனவரி 2-ஆம் தேதி… அங்கே தியானத்திலே உட்கார்ந்திருந்தேன். அப்ப, அதிஷ்டானத்திலேருந்து திடீர்னு ஒரு குரல் கேட்டாப்ல இருந்தது எனக்கு. ‘ஏய், இனிமே என்னை நீ இதேமாதிரிதான்டா பாக்கணும்’னு சொல்லித்து அந்தக் குரல். அது, பெரியவா ளோட குரல் மாதிரியே இருந்துது.
அப்படியே அதிர்ந்து போயிட்டேன் நான். சாதாரணமா அதிஷ்டானத்துல, ‘ராம்… ராம்’னுதானே குரல் கேக்கும்! இதென்ன விசித்திரமா இருக்குன்னு தோணித்து எனக்கு. ‘இதேமாதிரிதான்டா பாக்கணும் என்னை’னு பெரியவா சொல்றாளே… அப்படின்னா, ஸித்தியான மாதிரிதான் பார்க்கணுமா, பெரியவாளை?!’
யோசிக்கும்போதே தலை சுத்தித்து எனக்கு. மனசு ஒடிஞ்சு, நொந்து போயிட்டேன்
சாப்பிடத் தோணலை. கண்ணை மூடிண்டு சித்த நேரம் தூங்கினா தேவலைன்னு பட்டுது. படுத்தா தூக்கம் வரலை. மனசுல இதே கேள்வி குடைஞ்சு, ஹிம்ஸை பண்ணிண்டிருந்தா எங்கேர்ந்து தூக்கம் வரும்? பேசாம பஸ் பிடிச்சுக் கும்பகோணம் வந்துட்டேன். உடனே காஞ்சிபுரம் போய்ப் பெரியவாளைத் தரிசிக்கணும்னு தோணித்து.
”என்ன அவசரம்… ரெண்டு நாள் இருந்துட்டுத்தான் போயேன்! ஏன் பித்துப் பிடிச்சாப்பல இருக்கே? வீட்ல ரெண்டு நாள் அமைதியா படுத்து ரெஸ்ட் எடுத்தா, எல்லாம் சரியாப் போயிடும்!”னு அம்மா சொன்னாள். சரின்னு, நானும் ரெண்டு நாள் கழிச்சுதான் காஞ்சிபுரம் போனேன். பெரியவரைப் பார்த்து, வழக்கம்போல் சேவைகள் பண்ணிண்டிருந்தேன்.
அதன்பிறகு, சில நாள் கழிச்சு… அதாவது 94-ஆம் வருஷம், 8-ஆம் தேதி மகா பெரியவா ஸித்தியாயிட்டா!
அன்னிக்கு, அதிஷ்டானத்துல பெரியவா சொன்னது நிஜமாயிட்டுது. பெரியவா ளைத் தவிர, வேற யாராலேயாவது இத்தனை தீர்க்கமா சொல்லமுடியுமா? தெரியலை.
அப்புறம்… எனக்கு மூணு, நாலு மாசத்துக்கு சுய நினைவே இல்லை. அப்படியே பெரியவாளோட நினைப் புலயே ஆழ்ந்துபோயிட்டேன். ‘பெரியவா முகத்தை இனி பார்க்க முடியாதே’ன்னு மனசு தவியாய்த் தவிச்சுது. சமாதானம் ஆகவே இல்லை. எப்படி ஆகும்?!
பெரியவா சொன்னதை எல்லாம் நினைச்சு நினைச்சுப் பார்த்தேன். ஒரு தடவை கி.வா.ஜ. சொன்னது ஞாபகத்துக்கு வந்தது…
தர்மத்துக்காக வாழ்ந்தவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்தோம். இன்னொருத்தரைப் பார்க்க முடியலே! நாம பார்க்காதது ஸ்ரீராமரை; பார்த்தது, மகா பெரியவாளை! சந்நியாச தர்மம், யதி தர்மப்படி வாழ்ந்து ஸித்தி அடைஞ்சவர் மகா பெரியவர். அரச தர்மத்துக்குன்னு வாழ்ந்தவர் ஸ்ரீராமர்”னு சொல்லிட்டு, ”ஆத்ம பூஜை பண்ணினவா ரெண்டு பேர். ஒருத்தரைப் பார்த்திருக்கோம். இன்னொருத்தரைப் பார்த்ததில்லே. யார் சொல்லுங்கோ?” என்று கேட்டார் கி.வா.ஜ. தொடர்ந்து, அவரே பதிலும் சொன்னார்…
”ஒருத்தர் ஆஞ்சநேயர். ஆத்ம லிங்கம் பண்ணி, தானே பூஜை பண்ணினார். இது ராமேஸ்வரத்தில் இருக்கு. ஆத்ம பூஜை பண்ணின மகா பெரியவாளை இப்போ பார்க்கறோம். ஆத்மாவை உயர்த்திண்டவா எத்தனை பேர்? இவர் ஒருத்தர்தான்! அவர் தனக்குத்தானே பூஜை பண்ணிண்டார். அதை நாம எல்லோரும் பார்த்து ஆனந்தப்பட்டோம்!”
எத்தனை சத்தியமான வார்த்தை!
பெரியவா ஸித்தி ஆயிட்டானு சொன்னேன் இல்லியா? பெரியவாளுக்கு 90-லிருந்தே உடம்பு படுத்திண்டு இருந்தது; க்ஷீணமாயிண்டு இருந்தது. ஒரு தடவை, ஸ்மரணையே தப்பிப் போச்சு. எல்லாரும் ரொம்பக் கவலைப்பட்டா.
ராஜீவ் காந்தி அப்போ பிரதமரா இருந்தார். அவருக்கு விஷயம் தெரிஞ்சு, அவரோட ஏற்பாட்டுல, ‘டோட்டல் பாடி ஸ்கேனர்’ கொண்டு வந்து பெரியவாளைத் தீவிரமா பரிசோதனை பண்ணிப் பார்த்தா. பெரிய பெரிய எக்ஸ்பர்ட்ஸ் எல்லாம் வந்து சோதனை பண்ணினா.
ஒரு ஸ்டேஜ்ல, ஞானிகளுக்குத் தங்களோட சரீர ஸ்மரணை (தேக பாவம்) பரிபூர்ணமா விட்டுப் போயிடும்னு சொல்லுவா. யோக மார்க்கத்துக்குப் போயிடுவா. சுவாசத்தைக் கட்டுப்படுத்திண்டு இருப்பா. பெரியவாளும் அதே நிலையிலதான் இருந்தார். இது எனக்குப் புரிஞ்சுது. ஆனா, எதுவும் சொல்லாம, என்னை அடக்கிண்டு இருந்தேன்.
யோக நிலையில இருந்த பெரியவாளைப் பார்த்தேன். எந்தவித சரீர அவஸ்தையும் அவருக்கு இருக்கவே இல்லே! படுக்கைப் புண்ணுனு சொல்வாளே, அது மாதிரி எல்லாம் அவருக்குக் கிடையவே கிடையாது. ரோஸ் கலர்ல, தாமரை புஷ்பம் மாதிரிதான் அவரோட உடம்பு இருந்துது.
விஸர்ஜன துர்வாசனை எதுவுமே அவரிடம் இல்லை. காம- க்ரோதாதிகளுக்கு உட்பட்டவாளுக்குதான் அந்த மாதிரி துர்வாசனை எல்லாம் வரும்.
பெரியவாளுக்கு உடம்பு வேர்க்கவே வேர்க்காது, தெரியுமோ? மே மாசத்துல, ‘மேனா’ல படுத்துண்டு, படுதாவைப் போட்டுண்டிருப்பார்! அப்பவும்கூட அவருக்கு வேர்க்காது. நானே பிரத்யட்சமா பார்த்திருக்கேன்.
ஸித்தியாகிறதுக்கு முன்னால, பெரியவா என்னைக் கூப்பிட்டார். ”நான் படுத்துக்கப் போறேன். நீ என்ன பண்ணப் போறே?”ன்னு கேட்டார்.
”நான் என்ன பண்ணணும்னு எனக்குத் தெரியலையே! பெரியவாதான் சொல்லணும்”னு அழுதுட்டேன்.
பெரியவா என்னைக் கருணையோடு பார்த்தார். ”கவலைப்படாதே! என் ஸ்மரணை உன்னைக் காப்பாத்தும்! சஹஸ்ர காயத்ரி சொல்லு. கங்கையிலே ஸ்நானம் பண்ணிட்டு, கங்கைக் கரையிலே உட்கார்ந்து சொல்லு. அது போறும்!”னார்.
அந்தப் பிரபுவோட ஸ்மரணையிலே என்னோட காலத்தைக் கழிச்சிண்டிருக்கேன். அதுவும் அவரோட அனுக்கிரஹம்தான்.
ஆனா, அன்னிக்குக் கோவிந்தபுரம் அதிஷ்டானத்துல அவர் குரல் கேட்டுதே… அதை மட்டும் என்னால மறக்கவே முடியலே. நான் மனசு சஞ்சலப்பட்டு எதுவும் செஞ்சுடப்படாதுன்னு என்னைத் தயார் பண்ணத்தான் அன்னிக்கு அவர் சொல்லியிருப்பார்ங்கறதுல எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லே!” – சொல்லி நிறுத்திய பட்டாபி சார், பெரியவாளின் நினைவுகளில் குலுங்கிக் குலுங்கி அழத் துவங்கினார்.
Jaya Jaya Shankara, Hara Hara Shankara!







கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு -மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு- (காஞ்சி மாமுனி மஹா பெரியவா)

“இறைவன் கொடுப்பதிலும் அர்த்தம் உண்டு. கொடுக்க மறுப்பதிலும் அர்த்தம் உண்டு” என்று கூறுவார்கள். நாம் வருந்தி வருந்தி கேட்பது நமக்கு நன்மை தருமா என்பதை நாம் அறியமாட்டோம். அவன் ஒருவனே அறிவான். எனவே நமது அபிலாஷைகளை அவன் பாதார விந்தங்களில் சமர்பித்துவிட்டு நமது கடமையை நாம் செய்துவரவேண்டும். குருவருளும் அப்படித்தான். குரு கொடுத்தால் நூறு நன்மை. மறுத்தால் இருநூறு நன்மை. கீழ்கண்ட சம்பவமும் உணர்த்துவது அதைத் தான்.
மகான்கள் மறுப்பதிலும் அனுக்கிரகம் உண்டு!
ஒரு குக்கிராமத்தில் முகாமிட்டிருந்த மஹானை தரிசிக்க ஒரு மிராசுதாரும் அவரது உதவியாளரும் வந்திருந்தனர். வந்த பக்தர்கள் அனைவரிடமும் அன்பொழுக பேசி அருள் செய்யும் கருணைத் தெய்வம் காஞ்சி மாமுனி, அன்று வித்தியாசமாக உடன் வந்த உதவியாளரிடம் மட்டுமே கொள்ளைப் பேச்சு பேசினார்.
அழைத்து வந்த எஜமானரை ஒரு வார்த்தை கூட விசாரிக்கவில்லை. இது மிராசுதாருக்கு வருத்தமாக இருந்தது. காரணமும் புரியவில்லை. தன்னிடம் பேசாமல் இருக்குமளவிற்கு தான் தவறு செய்ததாகவும் தெரியவில்லை. எனினும் யார் காரணம் கேட்க முடியும்? வருத்தம் வாட்டவே விடைபெற்றுச் சென்றார்.
முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ரயில் நிலையம் தள்ளி இருந்ததால், மடத்து வண்டியில் அவர்களை கொண்டு விடும்படி உடனிருந்த தொண்டருக்கு உத்தரவிட்டார் ஞான மாலை. ரயில் நிலையம் சென்று வழியனுப்பிவிட்டு வந்த தொடரை அழைத்து, “வண்டியில் போகும்போது மிராசுதார் என்ன பேசினார்? தன்னைப் பற்றி என்ன சொன்னார்?” என்று கேட்க, “அவர் ரொம்ப குறைப்பட்டுக்கொண்டார். பெரியவா அவரிடம் பேசாதது அவருக்கு ரொம்ப வருத்தமாய் இருந்ததாம். வழியெல்லாம் பெரியவாளை பற்றியே பேசிக்கொண்டிருந்தார். எப்பொழுதும் தன்னிடம் அன்பாய் பேசும் பெரியவா இன்று பேசாத காரணம் புரியவில்லை என்று அதே சிந்தனையில் இருந்தார்.” என்று கூறினார் தொண்டர்.
உடனே ஞானக்கடல், “எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” சொல்லிவிட்டு நகர்ந்தது ஞான மலை.
மறுநாள் மாலை தந்தி வந்தது. அதில் மிராசுதார் இறைவனடி சேர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிர்ச்சி அடைந்த மடத்து சிப்பந்திகள் மேலும் பிரமிக்கும்படி பெரியவா சொன்னார்: “நான் அவனோட நேத்திக்கு பேசாததன் காரணம் கடைசியா அவனுக்கு என் நினைவாகவே இருக்கட்டும்னு தான். நான் பேசாததாலேயே அவன் என் நினைவாகவே இருந்தான்.” என்று கூறிய பிறகு தான் அவர்களுக்கு புரிந்தது “எல்லாம் முடிஞ்சி போச்சி. போனப்புறம் பேச என்ன இருக்கு?” என்று பெரியவா கூறியதன் அர்த்தம்.
பகவான் கீதையில் “கடைசி நேரத்தில் தன நினைவாகவே இருந்து உயிர் பிரிந்தால் தன்னையே வந்து அடைவதாக” சொல்கிறார் அல்லவா? அதனால் தான், தன் பக்தன் கடைசியில் தன நினைவாகவே இருந்து தன்னையே அடைந்து பிறவிப் பெருங்கடலை தாண்டட்டும் என்று அருள் செய்தார் போலும் நம் கீதாசார்யரான பெரியவா. பிறக்கும் போதும், வாழும்போதும், இறக்கும்போதும் எப்பொழுதும் அருள் செய்யும் கருணைக் கடல் நம் காஞ்சி மாமுனிவர்.


ஸ்ரீ சந்திரசேகரேந்திர சத்குரு அட்க்ஷரப்பாமாலை
அன்பின் வடிவமான சங்கரன்
அத்வைத பேரொளி ஞான சங்கரன்
அம்மை அப்பனான அருங்குரு சங்கரன்
ஆனந்த குருவான காஞ்சி சங்கரன்
இம்மையும் மறுமையும் காக்கும் சங்கரன்
ஈசனோடு ஆடிடும் இணையடி சங்கரன்
உன்னத நிலைகொள் உத்தம சங்கரன்
ஊழ்வினை நீக்கிடும் ஊர்தவ சங்கரன்
எந்தனை ஆளும் எழில்மிகு சங்கரன்
ஏற்றமும் அருளிடும் ஏகாந்த சங்கரன்
ஐம்புலன் அடக்கியே ஆண்டிடும் சங்கரன்
ஒப்புயர்வில்லா ஒளிர்மிகு சங்கரன்
ஓதிடும் வேதத்தின் உட்பொருள் சங்கரன்
ஒளவைபோல் அருள்மொழி உணர்த்தும் சங்கரன்
கண்ணனின் இமைபோல் காக்கும் சங்கரன்
காந்தமாய் கவர்ந்தனை ஈர்க்கும் சங்கரன்
கிள்ளை எனைஏற்று மகிழும் சங்கரன்
கீர்த்தனைகள் பாடி துதித்திடும் சங்கரன்
குறைகளை போக்கிடும் கொற்றவன் சங்கரன்
கூட்டின் மெய்ப்பொருள் உணர்த்தும் சங்கரன்
கேடில் விழிச்செல்வமாம் ஞான சங்கரன்
கைகொண்டு அணைத்தனை காக்கும் சங்கரன்
கொன்றை மலர்தனை சூடும் சங்கரன்
கோபுர கலசமாய் திகழும் சங்கரன்
கௌதமர் போற்றிடும் கருணா சங்கரன்
சந்திர பிறைகொள் சுந்தர சங்கரன்
சாந்த சொரூபமாய் வாழும் சங்கரன்
சிறுமை மதியினை மாற்றும் சங்கரன்
சீலமும் ஞானமும் உணர்த்திடும் சங்கரன்
சுந்தரன் போற்றிடும் பித்தன் சங்கரன்
சூழ்ந்த இருளகற்றும் மாய சங்கரன்
செல்வமும் வளமையும் அருளும் சங்கரன்
சேர்ந்த மெய்பொருள் உணர்த்தும் சங்கரன்
சைவத்திருமுறை போற்றும் சங்கரன்
சொல்லும் பொருளும் காக்கும் சங்கரன்
சோர்விலா மனத்திடை வாழும் சங்கரன்
சௌந்தர்ய லகரியை அருளிய சங்கரன்
ஞமலியின் எந்தனை சேர்த்த சங்கரன்
ஞானத்தின் வடிவான சத்குரு சங்கரன்
தத்துவ நெறிதனை அளிக்கும் சங்கரன்
தாயாய் பாசமும் பொழிந்திடும் சங்கரன்
திக்கெட்டும் புகழ்கொள் ஜகத்குரு சங்கரன்
தீஞ்சுவை அமுதென சொற்சுவை சங்கரன்
துன்ப இன்னல்கள் அகற்றும் சங்கரன்
தூயவர் மனத்தினில் அமர்ந்திடும் சங்கரன்
தென்திசை அமர்ந்திட்ட குருவடி சங்கரன்
தேனினும் இனிய நல்வாய்மொழி சங்கரன்
தொண்டர்தம் அன்பிலே மகிழும் சங்கரன்
தோடுடை செவியனாய் ஆடும் சங்கரன்
நடமாடும் தெய்வமாம் காஞ்சி சங்கரன்
நானிலத்தில் தர்மமதை காக்கும் சங்கரன்
நிறைமதி அழகென நிறைந்த சங்கரன்
நீக்கமற எங்கும் நிறைந்த சங்கரன்
நுண்ணுயிர் அனைத்தும் காக்கும் சங்கரன்
நூலரிவில் மெய்ஞான சங்கரன்
நெஞ்சமதில் வஞ்சகத்தை அகற்றும் சங்கரன்
நேசமும் காட்டும் தாய்மை சங்கரன்
நொடிப்பொழுதில் எமை காக்கும் சங்கரன்
நோய் நொடி தீர்க்கும் மருத்துவ சங்கரன்
ஜோதி வடிவமான ஜோதி சங்கரன்
பண்பினைக் காக்கும் பரமசிவ சங்கரன்
பாமரரை அறிஞராய் மாற்றும் சங்கரன்
பிள்ளாயினி மொழி கேட்டு மகிழ்ந்த சங்கரன்
புண்ணிய சீலனாய் வாழும் சங்கரன்
பூமியில் தர்மத்தை ஊன்றிய சங்கரன்
பெற்ற தாய்போல் நமை பேணும் சங்கரன்
பேரின்ப நிலைகாட்டும் மோட்க்ஷ சங்கரன்
பைங்கிளி அம்மையின் பால சங்கரன்
பொற்பதம் தூக்கியே ஆடும் சங்கரன்
போற்றிடும் பாமாலை ஏற்கும் சங்கரன்
மகிமை காட்டியே மகிழ்விக்கும் சங்கரன்
மரவுரிதரித்த மாமுனி சங்கரன்
மாந்தர் குறைதீர்க்கும் மங்கள சங்கரன்
மின்னிடும் ஒளிபோல் மேனிகொள் சங்கரன்
மீட்டிடும் வீணையின் நாத சங்கரன்
முப்பிறப்பு வினைதனை அகற்றும் சங்கரன்
மூன்றாம் பிறை அணி சூடும் சங்கரன்
மென்மையாய் அருள்மொழி விழையும் சங்கரன்
மேன்மைகொள் வாழ்வையே அளிக்கும் சங்கரன்
மைந்தனாய் எனைஏற்று மகிழும் சங்கரன்
மோகம் அழித்து மெய்ஞானம் கொள் சங்கரன்
மௌனம் காக்கும் மாதவ சங்கரன்
யஜுர்வேத சாரமாய் விளங்கும் சங்கரன்
யாவர்க்கும் குருவான மூர்த்தி சங்கரன்
ரம்யமாய் மனதினில் உலவும் சங்கரன்
ராப்பகல் இல்லா உலகை ரட்ஷிக்கும் சங்கரன்
ரீங்கார நாதத்தில் லயிக்கும் சங்கரன்
ருத்திராக்ஷ மாலைதனை அணியும் சங்கரன்
ரூபமில்லா தத்துவத்தின் உருவ சங்கரன்
ரோகம் நீக்கி உயிர்காக்கும் சங்கரன்
ரௌத்திரம் தவிர்த்து அன்பு நாட்டிடும் சங்கரன்
லலிதாம்பிகை அருள்பால சங்கரன்
லாவண்யமாய் மனதை ஈர்க்கும் சங்கரன்
லிங்க வடிவமாய் அருளும் சங்கரன்
லீலாவிநோதனாய் லீலைகொள் சங்கரன்
வள்ளலாய் அருள்கரம் காட்டும் சங்கரன்
வானவர் போற்றும் தேவ சங்கரன்
வில்வ மாலைதனை ஏற்கும் சங்கரன்
வெண்திருநீரணியும் சிவகுரு சங்கரன்
வேள்விகள் காத்திடும் வேத சங்கரன்
வையகம் போற்றிடும் காஞ்சி சங்கரன்
அனைத்துமாய் தோன்றியே அருளும் சங்கரன்
ஆருயிர்க்கெல்லாம் தாய்மை சங்கரன்
விண்ணும் மண்ணுமாய் விளங்கும் சங்கரன்
சந்திர வடிவம் கொள் சுந்தர சங்கரன்
அறுபத்தெட்டாம் பீட ஆனந்த சங்கரன்
காமாட்சி பதம் பணியும் காமகோடி சங்கரன்
காமகோடி பீடத்தை ஆளும் சங்கரன்
ஏன் அகத்தில் அமர்ந்தனை காக்கும் சங்கரன்
அடியேன் அட்க்ஷரப்பாமாலையை ஏற்று அருளும் சங்கரன்
அன்னபூர்ணாஷ்டகம் அருளிய சங்கரன்
கனகதாரா ஸ்தோத்திரம் உரைத்திட்ட சங்கரன்
பிடிஅரிசி தர்மத்தை காட்டிய சங்கரன்
திருப்பாவை திருவெம்பாவை திருகொளாருபதிகம்
உரைத்திட வகை செய்த சங்கரன்
அபார கருணா சிந்தும் ஞானதம் சாந்தரூபிணம்
ஸ்ரீ சந்திர சேகர குரும் பிரணதாத்மி விபாகரம்
ஸ்ரீ பாத குரும் சங்கரம் போற்றி போற்றி
சர்வக்யன் சர்வவியாபி மகாபெரியவா போற்றி போற்றி
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர
திருச்சிற்றம்பலம்







மஹா பெரியவா கும்பகோணத்திலிருந்து திருமால்பூர் நோக்கி தனது விஜயத்தை பரிவாரங்கள் புடைசூழ தொடருகிறார். பல மைல்களைக் கடக்க வேண்டும்.

மடத்துச் சாமான்கள் எல்லாம் மாட்டு வண்டிகளில் ஏற்றப்பட்ட பின், மடத்து ஊழியர்களும் பக்தர்களும் மகானைப் பின் தொடர்ந்து நடந்து வந்தார்கள். வண்டியில் பூட்டப்பட்ட ஒரு மாடு காலில் அடிபட்டு நொண்டியபடி நடந்தது....

அந்த மாட்டை விரட்ட வேண்டாம் என மகான் கட்டளையிட, மெதுவாகவே நடந்துசென்றார்கள். பக்தர்களில் ஒருவராக மஹாபெரியவாளின் பரமபக்தரான முடி கொண்டான் சாஸ்திரிகளும் நடந்து சென்றார்.

அவரால் வெயிலில் நடக்கமுடியவில்லை. மிகவும் சிரமத்துடன் நடந்தார். மெதுவாக அருகில் இருந்த பக்தரிடம் சங்கடத்துடன் கேட்கிறார், “திருமால்பூர் இன்னும் எத்தனை தூரம்?” இது இயலாமையால் எழுந்த கேள்வி.

“என்ன சொல்கிறார்” மகான் கேட்கிறார். இவர் சொன்னதை அவரிடம் சொல்ல முடியுமா? கேட்டதை மறைத்து விடுகிறார்கள். முடி கொண்டான் என்ன கேட்டார், அவரது இப்போதைய நிலை என்ன என்று மகானுக்குத் தெரியாதா?

அடுத்த நிமிடம் அவர் வானத்தை நோக்கி தனது கருணை நிறைந்த பார்வையை செலுத்துகிறார். உக்ரமா சூட்டை வீசிக் கொண்டிருந்த சூரியன், கறுத்த மேகங்களால் மறைக்கப்படுகிறார். வெயில் மறையவே சூடு தணிந்தது.

வெகு தூரத்தில் இருந்த திருமால்பூரை அவர்கள் அடையும் வரை அந்த மேகங்கள் குடை பிடித்தபடி, எல்லோர் சிரமத்தையும் போக்கி விட்டது.
 — with Pandimani Pandimani.

















































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக