புதன், 1 ஏப்ரல், 2015

இது ஹிந்து தேசம்

ராதே கிருஷ்ணா 02-04-2015
....நண்பர்களே! பெரியாரின் முகத்திரையைக் கிழிக்கும் தொடர் "இவரா பெரியார்?" என்ற எனது தொடர் இன்று முதல் தொடங்குகிறது......... {இவரா பெரியார்?}...{பாகம் -1}.............ஈ.வெ.ராமசாமியைப் பற்றி யாரவது விமர்சித்துப் பேசினால் உடனே அதை எதிர்த்து அறியாமையில் சிக்கியிருக்கும் சுய சிந்தனையற்ற ஒரு ஆட்டு மந்தைக்கூட்டம் அடிக்கடி கூறுவது என்ன தெரியுமா? " தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேற்றத்துக்கு பெரியார்தான் காரணம், அவர் இல்லையென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் முன்னேறியே இருக்க முடியாது.உங்களுக்கு கிடைத்து இருக்கும் அனைத்து உரிமைகளும் அய்யா அவர்கள் சிந்திய வியர்வையில் விளைந்த பூ தான்" – என்று கூறி தாழ்த்தப்பட்டவர்களை மட்டம் தட்டுகிறார்கள்..................ஆனால் உண்மை என்ன தெரியுமா? பெரியார் ஈவெரா தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அவரது வாழ்நாளில் ஒரு போராட்டம் கூட செய்ததில்லை என்பது உங்களுக்கு தெரியுமா?............(1924 இல் கேரளாவில் நடைபெற்ற வைக்கம் போராட்டம் என்பது பெரியாரின் போராட்டம் அல்ல .அது காங்கிரஸ்-காந்தி நடத்திய போராட்டம். அதில் கலந்துகொண்டார் என்பதை தாழ்த்தப்பட்டோருக்காக போராடினார் என்று மிகைப் படுத்தினார்கள் .மேலும் வைக்கம் போராட்டம் என்பது தாழ்த்தப்பட்டோருக்கான போராட்டம் அல்ல.ஈழவர்-சானார்-புலையர் இடையிலான போராட்டம்....அப்படி அவர் தலைமையேற்று போராட்டம் நடத்தியது உண்மையானால் தமிழ்நாட்டில் ஏன் வைக்கம் போன்ற ஒரு போராட்டம் நடத்தவில்லை?தாழ்த்தப்பட்ட மக்களுக்காக பெரியார் ஏன் தமிழ்நாட்டில் ஒரு போராட்டமும் நடத்தவில்லை?.....என்ற உண்மையை சிந்தித்துப்பாருங்கள் நண்பர்களே! ...இதே கேள்வியை தந்திடிவி பேட்டியில் வீரமணியிடம் பாண்டே கேட்டபோது அவரால் சரியான பதில் சொல்ல இயலவில்லை என்பதை பேட்டியை பார்த்தவர்கள் உணர்ந்திருப்பார்கள். )............நண்பர்களே! உண்மையான வரலாறு சொல்வது என்ன தெரியுமா?
தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன .அவர்களில் சிலர் பெயர்கள் கொடுக் கப் பட்டுள்ளது. (இவர்கள் பெரியாரின் திராவிடர் கழகத்தினரால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட தலைவர்கள்.தாழ்த்தப்பட்ட சமூகத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி பல உரிமைகளை பெற்றுத் தந்த "தலித்"தலைவர்கள்)
1. பண்டிதர் க. அயோத்திதாசர் (1845-1914)
2. இரட்டைமலை சீனிவாசன் (1860-1945)
3. எம்.சி.ராஜா (1883-1945)
4.பேராசிரியர் என்.சிவராஜ் (1892-1964)
5. பி.எம்.மதுரைப்பிள்ளை (1858-1913)
6. டி.ஜான்ரத்தினம் (1846-1942)
7. பி.வி.சுப்பிரமணியம் (1859-1936)
8.வி.ஜி.வாசுதேவப்பிள்ளை (1878-1938)
9.வி.தர்மலிங்கம்பிள்ளை (1874-1944)
10.ம.பழனிச்சாமி (1870-1941)
11.சுவாமி தேசிகானந்தா (1877-1949)
12.ஆர்.வீரையன் (1886-1938)
13.வி.ஐ.முனுசாமிப்பிள்ளை (1899-1955)
14.எம்.சி.மதுரைப்பிள்ளை (1880-1935)
15.ஜி.அப்பாதுரையார் (1890-1962)
16.சுவாமி சகஜானந்தர் (1891-1958)
17.பி.எம்.வேலாயுதபாணி (1896-1962)
18. பி.பரமேஸ்வரன் (1909-1957)
19.எம்.கிருஷ்ணசாமி (1917-1973)
20. அகில இந்திய அளவில் புரட்சியாளர் அம்பேத்கர் ஆற்றிய பணி அளவிட முடியாத்து.
– இதுபோன்ற தாழ்த்தப்பட்ட தலைவர்களின் அயராத உழைப்பினாலும் போராட்டங்களாலும்தான் தாழ்த்தப்பட்ட மக்கள் இன்று முன்னேறியிருக்கின்றார்கள்.
இதுமட்டுமல்ல தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் நடத்திய பத்திரிகைகள் :
சூரியோதயம் (1869)
பஞ்சமன் (1871)
சுகிர்தவசனி (1877)
திராவிடமித்திரன் (1885)
திராவிட பாண்டியன் (1885)
பூலோக வியாசன் (1900)
தமிழன் (1907)
ஆதிதிராவிட மித்திரன் (1907)
ஆன்றோர்மித்திரன் (1910)
மகாவிகட தூதன் (1886)
பறையன் (1893)
விகடதூதன் (1897)
இல்லற ஒழுக்கம் (1899)
மதராஸ் டெம்ப்ரன்ஸ்
ஹெரால்ட் (1899)
தமிழன் (கோலார்) (1926)
சாம்பவகுலமித்திரன் (1930)
ஆதிதிராவிட மித்திரன் (சென்னை) (1939)
புத்துயிர் (1940)
இதுபோன்ற எண்ணற்ற பத்திரிகைகள், மாநாடுகள், போராட்டங்கள், கூட்டங்கள் வாயிலாக தாழ்த்தப்பட்டோர் இன்று அனுபவிக்கும் உரிமைகளை பெற்றுத் தந்தனர்.
ஆனால் இன்று திராவிடர் கழகம், தாழ்த்தப்பட்டவர்களின் தலைவர்கள் போராடிப் பெற்றுத் தந்த உரிமைகளையெல்லாம் பெரியார் பெற்றுத் தந்த்துபோல பேசுவது, எழுதுவது யாரை ஏமாற்ற?
தாழ்த்தப்பட்ட தலைவர்களாலேயே தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள் பெறப்பட்டன என்பதை இருட்டடிப்பு செய்யும் திராவிடர் கழகத்தினர்
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெரியார் என்னென்ன போராட்டங்களை நடத்தினார் என்ற கேள்விக்கு பதில் கூறமாட்டார்கள் ஏன் தெரியுமா? அவர் அப்படி ஒரு போராட்டமும் செய்ததில்லை என்பதே உண்மை. பெரியார் வேசிகளின் வீட்டில் சல்லாபம் செய்த காலத்திலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராடியவர்கள் மேலே கூறப்பட்டுள்ள தாழ்த்தப்பட்ட தலைவர்கள்தான் என்பதே உண்மையான வரலாறு.....பெரியாரின் காம விளையாட்டுக்கள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.....(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக