சனி, 25 ஏப்ரல், 2015

"விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான கூடமாகி விட்டது!"

ராதே கிருஷ்ணா 26-04-2015
"விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும்
தியான கூடமாகி விட்டது!"
கட்டுரையாளர்-ரா.கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
ஸ்ரீசரணர்கள் காஞ்சி வியாஸச்ராந்தலேயேச்வரர்
ஆலயத்தில் தரிசனம் கொடுத்து வந்த காலம்.
ஒருநாள் உணர்ச்சிப் பெருக்கை உடலெல்லாம் தேக்கிய
ஓர் ஆந்திர தம்பதி ஒரு பெண் குழந்தையுடன் வந்தார்கள்.
தம்பதியில் ஸதியாக இருந்த பெண்மணி புகழ்பெற்ற
பத்திரிகையாளரான 'ஆந்திரப்ரபா' ஆசிரியரும்,
காந்திஜியிடம்'நெருக்கம்'என்று சொல்லுமளவுக்குப் பழக்கம்
கொண்டவருமான நீலம் ராஜு வேங்கடசேஷய்யாவின்
மகளார்.. தேர்ந்த காந்தியவாதியாக இருந்த நீலம் ராஜு
பின்னாளில் பெரியவாளின்பரம பக்தரானார். அவர் குடும்பம்
முழுதும் பெரியவாள் பக்தியில் மூழ்கித் திளைத்தது.
அன்று அந்த அம்மணியும் அவரது பதியும் திருச்சந்நிதியில்
தங்கள் உணர்ச்சியை,அதற்குக் காரணமான நிகழ்ச்சியை
உரையாக்கிக் கொட்டினர்.
அவர்கள் வசித்தது லண்டனில். அங்கிருந்து அவர்கள்
வேறேதோ தேசத்திற்குப் பறந்து கொண்டிருந்தபோது
விமானத்தில் பெரியதொரு கோளாறு ஏற்பட்டது.
'ஸேஃப் லாண்டிங்'குக்கு வாய்ப்பேயில்லை என்பது போன்ற
ஆபத்து நிலை என்று விமான ஓட்டிகள் அறிவித்து விட்டனர்.
பிரயாணிகளின் மனநிலையைச் சொல்ல வேண்டுமா?.
இத் தம்பதியின் மனம் பெரியவாளிடந்தான் ஓடி, அதைக்
கெட்டியாகக் கட்டிப் பிடித்து ஆபத்து நிவாரணம் கோரியது.
அவர்களுக்கு மஹானின் காப்பில் இருந்த நம்பிக்கையுறுதி
காரணமாக, அஞ்சிக் கொண்டிருந்த மற்ற பயணிகளுக்கும்,
தங்களது இந்திய தேசத்திலுள்ள 'ஸேஜ் ஆஃப் காஞ்சி'யைத்
தெய்வத்தின் அவதாரமாகவே வர்ணித்து,ஆபத்பாந்தவரான
அவரை வேண்டினால் விபத்து ஓடிப் போய்விடும் என்று
தைரியமூட்டினர்.
உயிராபத்து என்றால் உய்வுக்கு எதைத்தான் பிடித்துக் கொள்ள
மாட்டார்கள்? விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும்
தியான கூடமாகி விட்டது!
சிறிதுபோதில் அதுவரை விமான இயக்குனர்களின் முயற்சிகளுக்கு வளைந்து கொடுக்காத கருவிகள் அதிசயமாக ஒத்துழைக்கலாயின!
'மிராகிள்' என்று அவர்கள் வியக்குமாறு விபத்து விலகி விமானம் சொஸ்தமாக நிலத்தில் இறங்கியது!
சக பயணிகள் யாவரும் தம்பதியரைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்தினர்.தம்பதியர் பெரியவாளுக்குக் கடிதம் எழுதினாலோ,அல்லது அடுத்தமுறை அவரைக் காணும் போதோ தங்கள் எல்லாருடைய இதயபூர்வமான நன்றி நமஸ்காரங்களை அவருக்குத் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர்.
தம்பதியோ உடனே இந்தியாவுக்குப் பறந்துவிட வேண்டும்;
உயிர் காத்த மனித தெய்வத்துக்குப் பாத பூஜை செய்ய வேண்டும்;அப்புறந்தான் உணவருந்த வேண்டுமென்று பிரதிக்ஞை செய்து கொண்டனர்.
(தொடரும்)
(இதனுடைய ஸ்வாரஸ்ய நிகழ்வு நாளை தொடரும்)
— with Jambunathan Iyer.
Like · Comment · 
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா கவசம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா நவமணி மாலை
நவமணி மாலை போன்று நன்கமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா கவசத்தை நாள்தோறும் காலை, மாலை ஒன்பது தடவைகள் அன்பர்கள் ஓதிவரின் எவ்விடத்திலும் என் நேரத்திலும் எதனாலும் எவ்வித இடையூறும் நேராவண்ணம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட நாதர் மஹா பெரியவா முன்னின்று காத்து முழு அனுக்ரஹம் புரிவார் என்பது திண்ணம்.
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட மஹா பெரியவா திருக்கவசம் யான் பாடக் கார்மேனி ஐங்கரனே காப்பு
1. திருவளரும் காஞ்சி வாழ் ஸ்ரீ காமகோடி
நாதனவர் சிரசைக் காக்க
அருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா அமலனவர்
நெற்றியினை அமர்ந்து காக்க
பொருள் வளரும் ஸ்ரீ மஹா பெரியவா புனிதரவர்
வதனமதைப் பொலிந்து காக்க
தெருள்வளரும் ஸ்ரீ மஹா பெரியவா தேவரவர்
கண்ணிரண்டும் தினமும் காக்க
2. புவியிறைஞ்சும் ஸ்ரீ மஹா பெரியவா புருவங்கள்
இரண்டினையும் புகழ்ந்து காக்க
செவியிரண்டும் ஸ்ரீ மஹா பெரியவா பக்த சேவகர்தான்
எந்நாளும் சேர்ந்து காக்க
தவமுனிவர் ஸ்ரீ மஹா பெரியவா என்
தலைமயிரைத் தழைந்து காக்க
நவமணியார் ஸ்ரீ மஹா பெரியவா என்
நாசியினை நயந்து காக்க
3. கண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா என் தெய்வமவர்
இருகன்னம் கனிந்து காக்க
விண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா விமலரவர்
கண்டமதை விரைந்து காக்க
பண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா பரமரவர்
தோளிரண்டும் பரிந்து காக்க
மண்கண்ட ஸ்ரீ மஹா பெரியவா மாதவர் என்
மார்பகத்தை மகிழ்ந்து காக்க
4. தூயசுடர் வடிவான ஸ்ரீ மஹா பெரியவா அண்ணல்
வலதுகரம் துணிந்து காக்க
நேயமுறும் ஸ்ரீ மஹா பெரியவா நவநீதரவர்
இடதுகரம் நிதமும் காக்க
ஆயமறை முடிவான ஸ்ரீ மஹா பெரியவர்
மணிவயிற்றை அறிந்து காக்க
தேயமெலாம் துதிசெய்யும் ஸ்ரீ மஹா பெரியவா வள்ளல்
இடுப்பதனைத் தெரிந்து காக்க
5. குரு ஸ்ரீ மஹா பெரியவா பகவனவர் கரவிரல்கள்
ஈரைந்தும் குழைந்து காக்க
உரு வோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா உத்தமர் என்
பற்களினை உவந்து காக்க
கருவோங்கும் ஸ்ரீ மஹா பெரியவா என்
வளர்நாவை களித்துக் காக்க
பெருமானாம் ஸ்ரீ மஹா பெரியவா போதனென்றன்
நெஞ்சமதைப் பெரிதும் காக்க
6. கனிவுமிகு ஸ்ரீ மஹா பெரியவா கடவுளவர்
குறியதை எக்காலும் காக்க
இனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா இறையவர் என்
வலக்காலை இனிது காக்க
தனிமைமிகு ஸ்ரீ மஹா பெரியவா பதியவர் என்
இடக்காலைத் தாவிக் காக்க
பனி இருள்தீர் ஸ்ரீ மஹா பெரியவா என்
பாதவிரல் பத்தும் காக்க
7. இருதொடையும் ஸ்ரீ மஹா பெரியவா ஈசரவர்
எஞ்ஞான்றும் இறங்கிக் காக்க
திருமுதுகைப் பிடரியினை ஸ்ரீ மஹா பெரியவா
வானவர்தான் சிறந்து காக்க
தருமதுரை ஸ்ரீ மஹா பெரியவா என் வாயும்
இதழ் இரண்டும் தவழ்ந்து காக்க
அருநிதியாம் ஸ்ரீ மஹா பெரியவா ஆண்டவர் என்
அங்கமெலாம் அழகாய்க் காக்க
8. கரியவிழி படைத்தநமன் வருங்காலம்
ஸ்ரீ மஹா பெரியவா கடிதிற் காக்க
பெரியபகை வஞ்சகர்கள் எதிர்த்திடுங்கால்
ஸ்ரீ மஹா பெரியவா பேணிக் காக்க
அரியகொடும் பிணிபூதம் அணுகிடுங்கால்
ஸ்ரீ மஹா பெரியவா அமைந்து காக்க
உரியவிஷப் பூச்சிகளால் இடரின்றி
ஸ்ரீ மஹா பெரியவா உடனே காக்க
9. எத்திக்கும் எப்போதும் எவ்விடத்தும்
ஸ்ரீ மஹா பெரியவா என்னைக் காக்க
பக்தியுடன் பணிபுரியும் வேலையெல்லாம்
ஸ்ரீ மஹா பெரியவா காக்க
முத்திநலங் கொடுத்தென்னை ஸ்ரீ மஹா பெரியவா
ஸ்ரீ சிவனவன் முன்னே காக்க
சித்தியெல்லாம் தந்தென்னைச் காஞ்சி சேர்
ஸ்ரீ மஹா பெரியவா சித்தர் காக்க.
ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா மூல மந்திரம்
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர !ஜெய ஜெய சங்கர!
ஓம் ஸ்ரீ காஞ்சி சங்கர! ஓம் ஸ்ரீ காமகோடி சங்கர! ஜெய ஜெய சங்கர!
Composed and Presented by:
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாசன்
Dr.Krishnamoorthi Balasubramanian
122nd Maha Periyava Jayanthi Samarpanam
KANCHI ACHARYAS, PERIYAVA THUNAI
THE MAHAN OF THIS MILLINEUM
Please Share this to one and all
This will give (Mental,Moral&Physical) strengthஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவாள் கவசம்
மஹா பெரியவா என்றே மலர்தலை உலகு போற்றும்
மறையோன் என் சிரசைக் காக்க
மங்கலத் திலகம் துலங்க மணி நெற்றி தன்னை ஞான 
மாதவன் காக்க காக்க
ஆசிகள் நல்கும் மோன தேசிகன் நாசி காக்க
பேசிடும் பேச்சு எல்லாம் பெரியவாள் என்றிருக்க
வாசிசேர் வாயை ,பல்லை வடிவுரு நாவை என்றும்
வரமருள் குருவே காக்க
ஹர ஹர என்றே தீமை ஓட்டிடும் கருணை யாளன்
தரமுற விளங்க செவியைத் தயவுடன் நயந்தே காக்க
அண்டத்தை அறத்தில் ஓங்க அருநெறி காட்டும் தேவன்
கண்டத்தை கனிவுறக் காக்க
காருண்ய மூர்த்தி காக்க ததியுறு மத்தாய்க் கலங்கும்
தகைவிலா நெஞ்சந் தன்னை மதியணி சடையோன் சற்றும்
மறுவிலாது விளங்கக் காக்க வழியிலா மாந்தர்க் கெல்லாம்
வழியினைக் காட்டும் பரமன் பிழையிலாச் செயல்கள் செய்தே
பீடுற கரங்கள் காக்க கருப்பைவாழ் உயிர்க்கு உள்ளும்
காக்கின்ற காஞ்சி நாதன் வெறுப்புறு நோய்கள் அண்டா
விளங்குற வயிற்றைக் காக்க படிப்புரு கல்வி யாளோன்
இடுப்பினை என்றும் காக்க கெடுப்புறு சிந்தை யாலே
கீழ்ச்செயல் செய்யா வண்ணம் தடுத்தென்றும் காக்கும் உரவோன்
கால்கள் இரண்டும் காக்க. மிடியொளிர் காமம் என்னும்
மேவிடும் நோய்கள் எல்லாம் அடியனின் சிந்தை உடலை
அண்டாது அரனவன் காக்க தொடியொளிர் ஸ்ரீ காமாட்சி
தூவடிவான குரு என் தொடர் வாழ்நாள் அனைத்தும்
காக்க தூமலர்ப் பாதம் தொழுதேன்
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
காஞ்சி ஸ்ரீ மாமுனியின் கவசமாம் இதனைக் கற்போர்
கடுவினைப் பிறவி நோயை கணத்திலே போக்கி இன்பக்
காவிலே நிலைப்பார் திண்ணம்.

மகா பெரியவா பூஜித்த சந்திரமௌலீஸ்வரரை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றவர் !
படத்தில் காணப்படுபவர் பெயர் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகள். வயது 92. சுமார் 20 ஆண்டுகளுக்கு (1944 - 1965) மேல் காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யும் பாக்கியம் பெற்றவர். அது தவிர காசி காமகோடீஸ்வரர், ஜொன்னவாடா காமாக்ஷி அம்மன் ஆகியோருக்கும் பூஜைகள் செய்தவர்.
மகா பெரியவா பாத யாத்திரை செல்லும்போது அவர் பூஜை செய்த சந்திரமௌலீஸ்வரரை உடன் சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றவர். மேலும் பெரியவா ஸ்ரீ மடத்தில் செய்த கோ-பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட பலவற்றுக்கு உதவியாக இருந்தவர். மடத்தின் சார்பாக நடைபெற்ற சஹஸ்ர சண்டி ஹோமம் உள்ளிட்ட பல ஹோமங்களில் கலந்துகொள்ளும் பாக்கியம் பெற்றவர். இப்படி எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.
நம் ரைட்மந்த்ரா.காம் தளத்தின் விசேஷ சந்திப்பிற்காக இன்று மாலை காஞ்சிபுரம் பங்காரம்மன் தோட்டத்தில் உள்ள இவரது இல்லத்திற்கு சென்றிருந்தோம். இவரது சேவைக்காக மகா பெரியவா கொடுத்த இல்லமாம் அது.
மகா பெரியவாவுடனான பல அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகள். அவை ஒவ்வொன்றாக RightMantra.comதளத்தின் 'குருதரிசனம்' தொடரில் வரவிருக்கிறது.
வீட்டை நாம் புகைப்படமெடுத்த நேரம், ரெட்டை கன்றுக்குட்டிகள் வர, அற்புதமான புகைப்படம் ஒன்று கிடைத்தது.
நண்பர் முகலிவாக்கம் Venkat Subramaniam அவர்களின் உறவினர் இவர். சந்திப்புக்கு ஏற்பாடு செய்ததும் அவர் தான்.
இன்று மாலை சாஸ்திரிகளுடன் பெரியவா குறித்து பேசிக்கொண்டிருந்தபோது சரியாக நமது வாராந்திர பிரார்த்தனை கிளப் நேரம் வந்தது. (Sunday Evening 5.30 pm) அதை பற்றி இவரிடம் எடுத்துக்கூறி, இந்த வார பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்தவர்களுக்கு நாங்கள் பிரார்த்தித்ததோடு நேபாள பூகம்பத்தில் உயிரிழந்தோருக்காகவும் பிரார்த்தனை செய்தோம். பூகம்பத்தில் உயிர்நீத்த அனைவரது ஆன்மாவும் மகா பெரியவா அருளால் சாந்தியடைந்து சிவபதத்தில் நிலைபெறும் என்று ஆசி கூறியருளினார்.
திரு.சந்திரமௌலி சாஸ்திரிகள் மட்டுமல்லாது அவரது குடும்பத்தினர் அனைவரும் நம்மிடம் மிகவும் அன்னியோன்யமாக பழகி, சந்திப்பை மறக்க முடியாததாக்கிவிட்டனர். அனைவருக்கும் நம் நெஞ்சார்ந்த நன்றி.


"நா இருக்கேன்" என்று கூறி ஏற்றெடுத்தாய் என்னை நீரும்
பூர்வஜென்ம புண்ணியமது உன்னைக் கண்டது,
உன்னுன் அருகில் இருந்தது,,,
அது போனஜென்ம வாசனையில் என் அருகில் வந்தது....
கண்ணிரண்டில் காந்தரேகை மிளிர நின்றது - அது
காலகாலமாய் என்னை இழுத்துக்கொண்டு வந்தது
புன்சிரிப்பில் யாகத்தீயை காட்டி நின்றது .
பாலினில் நெய்போல் பரந்துள ஆன்மாவை
ஆலின் அடியில் விளக்கிய ஈசனே
ஞாலம் நலம்பெற சங்கர மூர்தியாய்
ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகரம் என்ற பெயரைக்கொண்டது.
"ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய." . என்னை...
அன்பு வழியில் வாழ வைத்து ஆற்றல் எல்லாம் பெருகச் செய்து
ஆசிகளை நமக்கு தரும் அற்புத மந்திரம் -அது
நல்லதையே நினைக்கச் செய்து நல்லதையே நடத்தித் தந்து
நல்லவராய் நம்மை மாற்றும் அறிய மந்திரம்
உச்சரிக்க உச்சரிக்க உயர்வளிக்கும் மந்திரம் - அது
செப்பிவிட செப்பிவிட காப்பாகும் மந்திரம்
ஏற்றிவிட மனதில் ஏற்றிவிட ஏற்றம் தரும் மந்திரம்
ஜெபித்திட நாளும் ஜெபித்திட ஜெயம் தரும் மந்திரம்
ஜெபிப்போம் நாளும்...
ஓம் நமோ பகவதே காமகோடி சந்த்ரசேகராய
சித்தம் உன்னிடம் நிலைத்திடவே
நித்தம் உனை நாம் ஸ்மரித்திடவே
நெஞ்சமும் நினைவும் நீயே
கொஞ்சமும் குறையாத அருளும் நீயே
வஞ்சமின்றி சுரக்கும் அன்பும் நீயே
கெஞ்சுகிறேன் அருள் பாலி அன்புத் தெய்வமே.
அந்தமும் ஆதியும் இல்லாதவனே
பந்தங்கள் அறுத்திடுவாய் காமகோடி தெய்வமே
சிந்தனையும் செயலும் நீயே என் குருவே
வந்தனை செய்கிறேன் வரமருள் பகவானே.
தித்திக்கும் உன் நாமம் என்றும் செப்பிடுவேன்
எத்திக்கு நோக்கினும் நின்னையே கண்டிடுவேன்
வந்திக்கும் கரங்களைக் காத்திடுவாய் இறைஞ்சுகிறேன்
சந்திரசேகரனை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
சன்னதி வந்ததும் தாய் உன்னைக் கண்டதும்
எனை மறந்து கண்களிலே கண்ணீரின் வெளிப்பாடு..
குருவாய் அருளும் தவமே!
யோகமும் ஞானமும் அருளிடும் தவமே!
குருவாய் உள்ளோர் குவலயம் காக்க அருளாய்
மலர்ந்து அருளிடும் மாதவமே!
ஞானஅம்பிகை ஞானமூர்த்தியும்
நாதனின் ஈசனாய் நாதேஸ்வரனுள்
ஞானமாய் இருந்தே அருளிடும் மாதவமே!
பெற்றதவத்தால் பேரோளி அருளே போற்றி!
இடர்இருள் நீக்கி அருள்ஒளிதவமே போற்றி!
பிறவிதோறும் பேரருள் பாதம் இத்தூசு பணிந்திட அருளினை போற்றி!
இந்நாதனின் சித்தருள் அருளே குருவடி பணிந்தோம்!
தேவா! என் வெற்றியின் அர்த்தம் நீதானே
ஆரத்தி எடுப்போம் ஸ்ரீ மஹா பெரியவா உமக்கே!
கைவிட்டு விடுவாயோ என்றேன்?
எனை கைவிட்டு விடுவாயோ? என்றேன்.
கையின் மேல் அடித்து கைவிடேன் என்றாய்!
மயல் கொண்டு உமது மலரடி வணங்குவேன்!
கோரிக்கை ஒன்றுமில்லை காணிக்கை என்னிடமில்லை
முழுமனதாய் உம் பாதம் சரணடைந்தேன்
"நா இருக்கேன்" என்று கூறி ஏற்றெடுத்தாய் என்னை நீரும்
உம் நிழலில் மற்றொரு பூவாய் நானும் அமர்ந்தேன்!
குருர் ப்ரஹ்மா குருர் விஷ்ணு : குருர் தேவோ மஹேச்வர :|
குருஸ் ஸாக்ஷ£த் பரப்ரஹ்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம :||
யஸ்யைவ கருணாலேச: ஸ்ருஷ்டிஸ்தித்யந்தகாரணம் ||
தம் வந்தே கருணாகாரம் சந்த்ரசேகரதேசிகம் ||
ஓம் அந்தேவாசி-ஜன-ஸன்மார்க-தாயினே நம:
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சந்த்ர-சேகரேந்த்ர-ஸரஸ்வதி-யதீந்த்ராய நமோ நம:
போற்றித் துதிசெய தோத்திர நூல்களும்
உற்ற துணையாகும் வேதாந்த நூல்களும்
ஏற்றம் மிகுநூல் பிரபஞ்ச சாரமும்
நூற்றுக் கொடுத்தவர் வாழி.
வாழிய சங்கரர் வாழி யவர்போதம்
வாழி குருநாதர் கட்டிய பீடம்
வாழி ஜகத்குரு சந்திர சேகரர்
வாழிய அன்பவர் பால்.
ஸ்ரீ மஹா ஸ்வாமிகளை சரணாகதி அடைந்தோர்க்கு
அருள் மழை பொழிந்த ஸ்ரீ மஹாமுனிவர் தாள் பணிவோம்!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர! ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர!ஹரஹரசங்கர !ஜெயஜெயசங்கர!
Courtesy: Indumathy Iyer(PERIYAVA THUNAI)
The Lyrics used in this post are derived from Mrs.Indumathy Iyer with Paramacharya’s Blessings to her family.


ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவா தாலாட்டு
காமகோடி தெய்வமே கற்பகமே தாலேலோ
சாமிநாத னாய்ப்பிறந்த சற்குருவே தாலேலோ
மஹாலக்ஷ்மி அம்மாளின் மைந்தரே தாலேலோ
புகழ்மிகு சுப்ரமணியர் புதல்வரே தாலேலோ
செந்தமிழ் நாட்டுச் செல்வரே தாலேலோ
சந்த்ர சேகரேந்த்ர சரஸ்வதியே தாலேலோ
மாடெல்லாம் வதைபடாது மீட்டவரே தாலேலோ
நாடெல்லாம் கால்நோக நடந்தவரே தாலேலோ
காவித் துணியிலும் கதருடுத்தீர் தாலேலோ
கோவில் திருப்பணிக்குக் கொடையளித்தீர் தாலேலோ
பாவை நூல்களைப் பரப்பினீர் தாலேலோ
சேவைக்கே உடலெடுத்த சிவப்பழமே தாலேலோ
பிடியரிசி தானம் புரியென்றீர் தாலேலோ
படித்த பண்டிதர்க்குப் பரிசளித்தீர் தாலேலோ
இராம ஜயமென்று எழுதுவித்தீர் தாலேலோ
வரதட்சி ணைபெறலை ஒழியென்றீர் தாலேலோ
மாற்றாரும் போற்றும் மஹானே தாலேலோ
நூற்றாண்டு கண்டவரே நிர்மலரே தாலேலோ
ஒருபிடி அவலில் வாழ்ந்தவரே தாலேலோ
குருமணியே காஞ்சியுறை கண்மணியே தாலேலோகருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக