திங்கள், 20 ஏப்ரல், 2015

"ஷெல்லி-யின் அத்வைதம்+த்வைத ரஸம்" , காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியுங்கள்.

ராதே கிருஷ்ணா 21-04-2015
"ஷெல்லி-யின் அத்வைதம்+த்வைத ரஸம்"
(STAIN & SHINE)
(பெரியவாளின் அற்புத விளக்கம்)
கட்டுரை-ரா.கணபதி.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
பன்மொழி இலக்கியங்களிலும் அவர் 'படு'
அவரது சூக்ஷ்ம ராஸிக்யம் அலாதி.
ஷேக்ஸ்பியர்,மில்டன்,வாட்ஸ்வர்த்,டென்னிஸன்
போன்ற எல்லா பெரிய ஆங்கிலக் கவிகளும் பல
இடங்களில் நாம் அதிசயக்கும்படி வேதாந்தக்
கருத்துக்களையும்,அநுபவங்களையும் கூறியிருப்பது
குறித்து அவரது சந்நிதியில் உரையாடல் நடந்தது.
சிருங்காரக் கவியாகவே எண்ணப்படும் கீட்ஸும் கூட
அத்வைதம் கூறியிருப்பதற்கு உதாரணம் காட்டினேன்.
அப்போது ஸ்ரீசரணர், "கீட்ஸையும்,ஷெல்லியையும்
sensual poets-னு மட்டம் தட்டப்படாது; sensuous-னே
நகாஸ் பண்ணி ஒசத்தி வெக்கணும்னு சொல்றதுண்டு
இல்லியா..? கீட்ஸுக்கு உதாரணம் காட்டினே,
ஷெல்லியிலே அத்வைதம் எங்கேயாவது வரதா?"என்றார்.
யோசித்தேன், சரிவர நினைவு வரவில்லை.
'கீட்ஸுக்காக அவன் பாடின "எலிஜி" (இரங்கற்பா)யிலேயே!'
என்று அவர் தூண்டிக் கொடுத்தார்.
அப்படியும் ஏனோ ஞாபகத்தில் தோன்றவில்லை.
உச்சரிப்புச் சுத்தத்துடன் ஸ்ரீசரணரே திறந்த மடையாக,
சுவைத்துச் சுவைத்துச் சொல்லிப் போனார்.
" THE ONE REMAINS, THE MANY CHANGE
..
,,,HEAVEN'S LIGHT FOREVER SHINES,EARTH'S SHADOWS FLY
..LIFE LIKE A DOME OF MANY-COLOURED GLASS
..STAINS THE WHITE RADIANCE OF ETERNITY"
"இதைவிட ஏகமா இருக்கிற ப்ரஹ்மத்தையும், த்வைத
ப்ரபஞ்சமா வேஷம் போடற மாயையையும் வர்ணிக்க என்ன
இருக்கு?" என்று உளமாறச் சிலாகித்துச் சொன்னார்.
சிறிது மௌன சிந்தனைக்குப்பின் அந்தக் கவியையும்
விஞ்சும் கவியுள்ளத்துடன் த்வைத ரஸங்களிலும் இன்புற்று
"MANY COLOURED GLAS அந்த WHITE RADIANCE-ஐ STAIN-ம் பண்றது.
ஆனா அத்தனை கலரா SHINE பண்றதும் அதே
WHITE RADIANCE-தானே!" என்றார்.

காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியுங்கள்.
அந்த மனிதர் ஒரு எழுத்தாளர். பிரபலமான பத்திரிகை ஆசிரியராக இருந்து பிறகு தானே ஒரு பிரசித்தி பெற்ற மற்றொரு பத்திரிகை, அதற்குப்பிறகு மற்றொன்று என்றெல்லாம் புதிதாக தொடங்கிய அனைத்து பத்திரிகைகளும் விரும்பிப் படிக்கப்பட்ட காலம்.
வெளிநாட்டு பயண கட்டுரைகள் எழுதி பெயர் பெற்றவர். அவர் இப்படி பல நாடுகளுக்கு பறந்து ஆங்காங்குபார்த்தவர்கள், பார்த்தவைகள், பார்க்க வேண்டியவைகள் பற்றியெல்லாம் ரசிகர்கள் மகிழ ருசிகரமாக எழுதுபவர். ஒரு விஷயம் குறிப்பாக சொல்லவேண்டியிருக்கிறது.
அவர் காஞ்சி மகா பெரியவா பரம பக்தர். அந்த நடமாடும் தெய்வத்தை முக்காலும் வணங்குபவர். எங்கு சென்றாலும் மகாபெரியவா படம் இல்லாமல் செல்ல மாட்டார். தினமும் அந்த படத்தை எடுத்து வைத்துக்கொண்டு மனசார பூஜை பண்ணி வணங்கிவிட்டு தான் மற்றைய வேலைகள்.
ஒரு தடவை உலகபயணத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ள நாட்டில் ஒரு முடுக்கு நகரத்தில் அவர் தங்கி ந்த ஊரைப்பற்றி விவரங்கள் சேகரிக்க முயன்றார். அவரது நண்பர் ஒரு ஆங்கிலேயர் அங்கு அப்போது இருந்ததால் அந்த ஊருக்கு சென்றிருந்தார்.
இவர் வந்து அங்கு தங்கியிருக்க வேண்டிய வசதிகள் செய்து கொடுத்த நண்பர் தன உறவினர் அந்த ஊர் வெள்ளைக்காரர் ஒருவர் வீட்டில் சில நாள் தங்க ஏற்பாடு செய்தார். எழுத்தாளரும் அங்கு சென்றார். அவருக்கு தனி அறை . அதில் அவர் தங்கியிருந்தபோது ஒரு நாள் காலை அந்த ரெண்டு வெள்ளைக்காரர்களும் எழுத்தாளரைச் சந்திக்க அவர் அறைக்கு வந்தனர். அப்போது காலை வேளை . எழுத்தாளர் மகாபெரியவர் படத்தை மேசையில் வைத்து வணங்கிக்கொண்டிருந்தார்.
வீட்டின் சொந்தக்காரர் கண்களில் அந்த மஹா பெரியவர் படம் பட்டதும் அவருக்கு ஏதோ ஆச்சர்யம்
"படத்தில் இருப்பவர் யார்?"
"அவர் நான் வணங்கும் தெய்வம்"
'' நீங்கள் எந்த மதத்தினர்?
''இந்துக்கள்''
''இந்து கடவுள்கள் நிறைய கைகள், தலைகள், ஏதோ ஒரு பட்சி அல்லது மிருகத்தின் மேல் -- இப்படி தான் எனக்கு அறிமுகம். இந்த கடவுள் யாரோ ஒரு கிழவராக இருக்கிறாரே''
''நீங்கள் சொல்வது வாஸ்தவம். இவர் நம்மைப்போல் இந்த உலகில் மனிதனாக இருப்பவர். மிக எளிமையானவர்
''ரிஷிகள் என்று இவரைத்தான் சொல்வார்களோ உங்கள் ஊரில்?''
''இவர் ஒரு சக்தி வாய்ந்த தெய்வம், ரிஷியும் கூட''
"சக்தி வாய்ந்த தெய்வமா அவர்? நாம் நினைத்தது நடக்குமா? என்று ஆங்கிலேயர்ஒரு ஆவலாகவினவினார்
"நாம் உண்மையாக வேண்டிக் கொண்டால், நிச்சயம் நாம் நினைத்தது நடக்கும்.அந்த கருணைக்கடல் அதை நிறைவேற்றி வைப்பார்.
எழுத்தாளர் அளவு கடந்த பக்திமான் ஆச்சே . அவர் குரலில் இருந்த அழுத்தம் சொன்னதோரணை,அவர் குரலில்
ஒலித்த பக்தி, ஆங்கிலேயரை நம்பச் செய்தது.
''நானும் அவரை வேண்டிக்கொண்டு என் முறையீட்டை சொன்னால் உதவுவாரா"? வீட்டுக்கார வெள்ளைக்காரர் குரலில் ஏக்கம் தொனித்தது.
''வித்தியாசமின்றி நம்பிக்கையோடு யார் வேண்டினாலும் குறை நிவர்த்தி செய்வார்''
"என் மகன் எங்கோ போய்விட்டான்...சில மாதங்கள் ஆகிவிட்டது. அவனைப் பிரிந்து என்மனைவி ஓயாமல் அழுது கொண்டு இருக்கிறாள். அதனால்தான் ஒருநம்பிக்கையோடு உங்களிடம் கேட்டேன்.
"எங்கள் குருவான காஞ்சி மகானை நீங்கள் மனமுருகி பிரார்த்தியுங்கள்..உங்களுக்கு அவரதுஅருள் நிச்சயம் கிட்டும்.
டப் பென்று அந்த வெள்ளைக்காரர் சிலைபோல் அங்கேயே அந்த இடத்திலேயே மகா பெரியவா படத்தின் முன்பு அமர்ந்து கொண்டார். கண்கள் மூடியிருந்தது. கைகளை சேர்த்து கட்டிக்கொண்டிருந்தார். நேரம் நழுவியது. நிசப்தம். சுமார் அரை மணி நேரத்திற்கு பிறகு கண்களை திறந்தார்.
''என்னவோ தெரியவில்லை, என் மனம் இப்போது லேசாகி விட்டது. இந்த மனித தெய்வத்தின் படத்தின் முன் மனமுருகி வேண்டி எனக்கு அருள் புரியும்படி வேண்டிக்கொண்டேன்''
சில மணி நேரம் அந்த அறையில் மகா பெரியவா பற்றிய விஷயங்கள் பற்றி வெகு ஆர்வமாக அவர் பக்தியோடு கேட்டுக்கொண்டிருந்தார். அவரைப்பற்றி நிறைய தெரிந்து கொள்ளவேண்டும் என்று புத்தகங்கள் தேவை என்று கேட்டுக்கொண்டிருன்கார். ஒருமுறை இந்த வருவேன் அவரைப்பார்க்கவேண்டும் என்றார்.
அப்போது தான் அவரது வீட்டு போன் ஒலித்தது. ஆங்கிலேயர் போய் போனை எடுத்தார்.
''யார் பேசுவது ?''
''என்ன அப்பா என் குரல் மறந்து போய் விட்டீர்களா"" -- காணமல் போன அவர் பையன்.
போனில் வந்த செய்தி அவருக்கு அளவு கடந்த வியப்பை அளித்தது. காணாமற்போன அவரதுமகன்தான் பேசினான், தான் எங்கேயோ போயிருந்ததாகவும், இப்போது ஊருக்குவந்துவிட்டதாகவும்,உடனே வீட்டுக்கு வருவதாகவும் தகவல் சொன்னான்.
அந்த ஆங்கிலேயருக்கு மெய் சிலிர்த்தது.காஞ்சி மகானை வணங்கியபடியே, எழுத்தாளரை இருக கட்டிக்கொண்டார்.
கண்களில் நீர் பனிக்க "எங்கள் தெய்வம்...இவர்தான்....இந்த உருவில்தான் தெய்வத்தைப்பார்ப்போம்" என்று கடல் கடந்து
எங்கேயோ இருந்த ஆங்கிலேய தம்பதிகள் ஆனந்த அனுபவத்தில் உருகி நின்றார்கள்.
மணியன் உங்களுக்கு நன்றி என்று அந்த தம்பதிகள் மனமுவந்து சொன்னார்கள். ஆம் அந்த எழுத்தாளர் மணியன் தான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக