வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.

 ராதே கிருஷ்ணா 08-08-2014அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.

From group: Velukkudi Sri Krishnan Fan Club
அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில் வெங்கட்டாம்பேட்டை, குறிஞ்சிப்பாடி கடலூர்.

இங்குள்ள ஸ்ரீராமனின் சயனக் கோலம். ஆதிசேஷன்மீது ஸ்ரீராமன் படுத்திருக்க, கால்பகுதியில் சீதை இருக்க, புறப்பட யத்தனிக்கும் தோரணையில் அனுமனும் உள்ளது அற்புதமான காட்சி, இந்த சந்நிதி வேணுகோபால சுவாமி சந்நிதிக்கு வடக்கே அமைந்துள்ளது.

இந்த ஆலயம் மிகவும் பழுதடைந்திருந்தது. கருவறை, அர்த்த மண்டபம், மகாமண்டபம், தாயார் சந்நதி, ஆண்டாள் சந்நதி, பள்ளிகொண்ட பெரு மாள் சந்நதி, ஆழ்வார்கள் சந்நதி போன்றவையெல்லாம் எப்பொழுதும் விழலாம் என்கிற நிலையில் இருந்தது. ஜெர்மனியில் வாழும் பிரதிஷ்டா கலா நிதி சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கர குருக்கள் சுவாமி என்ற தமிழரின் பேருதவியோடு மிகவும் சிறப்பாக திருப்பணி செய்யப்பட்டு 2.2.2009ல் குடமுழுக்கு நடைபெற்றது. சுவாமிஜியின் அரிய தொண்டானது மக்களாலும் பக்தர்களாலும் நிர்வாகத்தினராலும் இன்றுவரை பெரிதும் போற்றப்படுகிறது. இப்போது இந்த அற்புதக் கோயிலில் ராஜகோபுரம் சீரமைக்கப்படவும் மதில் சுவர்கள் கட்டப்படவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாஸ்கர குருக்கள் சுவாமியின் முயற்சிக்கு பல ரும் பல திக்கிலிருந்தும் ஆதரவுக் கரம் நீட்டுகிறார்கள். விரைவில் இத்திருப்பணிகளும் நிறைவுபெற்று ஆலயம் முழுமை பெறும் என்பது வேணுகோ பால சுவாமியின் சித்தமாக இருக்கிறது!

எந்த ஏக்கத்தையும் நியாயமான விருப்பத்தையும் தன்னை வந்து தரிசிப்போருக்கு எளிதாக நிறைவேற்றிவிடுவதும் வேணுகோபால சுவாமியின் சித்தம் தான்! கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ளது, வேங்கடாம்பேட்டை. குறிஞ்சிப்பாடி நகருக்கு வடக்கே 5 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது. ஆலயத் தொடர்புக்கு: 9865325781 - See more at:http://http.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=1450&cat=3#sthash.yRnE1CfY.dpuf


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக