புதன், 20 ஆகஸ்ட், 2014

கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!

ராதே கிருஷ்ணா 21-08-2014


கட்டுரை படைப்பு ---அஷோக்குமார்





From the album: Timeline Photos
By tamilagam360.com
கட்டுரை படைப்பு ---அஷோக்குமார்
---------------------------------------------------------------------------
கொஞ்சம் அவசரப்பட்டுதான் சுதந்திரம் வாங்கிவிட்டோம்!!
இன்னுமொரு 50 வருடங்கள் கழித்து வாங்கியிருக்கலாம்...
அதற்குள் நாடுமுழுவதும் உள்ள அத்தனை நதிகளையும் இணைத்துவிட்டிருப்பான்
அந்த வெள்ளைக்காரன்,
நாம்தான் கூவத்தை கூட தூர்வாறாத கூமுட்டைகளாயிற்றே!
நாடு முழுவதும் எப்போதோ
bullet rail வந்திருக்கும்,
நாம் இப்போது தான் மீட்டர் கேஜ்களை broad gauge களாக மாற்ற போராடிக்கொண்டு இருக்கிறோம்!
ஊட்டி ரயில்பாதையை எப்போதோ இருவழிபாதையாக மாற்றியிருப்பான் அந்த வெள்ளைக்காரன்,
நாம் இன்னும் தண்டவாளத்தில் சரிந்த மண்ணை வாறுவதற்கு டென்டர் விட்டுக் கொண்டிருக்கிறோம்!
நாடு முழுவதும் வெள்ளைக்காரனால் கட்டப்பட்ட ஆயிரக்கணக் கட்டிடங்களும் பாலங்களும் அணைகளும் அப்படியே இருக்க முந்தாநாள் கட்டிய Airport கட்டிடம் பத்துமுறை விழுந்துவிட்டது!
நாட்டிற்கு வருமானத்தை தரும் சேதுசமுத்திர திட்டத்தை நாற்பது வருடங்களுக்கு முன்னாலேயே நிறைவேற்றி இருப்பான் வெள்ளைக்காரன்!
பணம்பிடுங்கும் பச்சோந்தி கல்விநிறுவனங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விமுறை வந்திருக்கும்!
நாம் இன்னும் சமச்சீர் கல்விக்கும், இடஒதுக்கீட்டுக்கும் போராடிக்கொண்டு இருக்கிறோம்!
வெள்ளைக்காரனால் அடிமைப்பட்ட அத்தனை நாடுகளும் இன்று உச்சத்தில் இருக்க நம் நாடு மட்டும் பாதுகாப்பின்றி
வயிற்று பசிக்கும் வாழ்க்கை பசிக்கும் மக்களை பலிகொடுத்துக் கொண்டிருக்கிறது,
அடித்து வாங்க சக்தியில்லாமல் அழுதுவாங்கிய சுதந்திரம் என்பதால் ஆளாளுக்கு விளையாடி அக்கறையின்றி தூக்கி எறிந்துகொண்டு இருக்கிறோம்!
மண்ணுக்கு மட்டுமே சுதந்திரம் வாங்கினோம் மக்களுக்கு வாங்க தவறிவிட்டோம் !
120 கோடி மக்கள் தொகையில்
70 கோடி வறுமைக்கு கீழ்!
பெருமையாய் சொல்லிக்கொள்கிறோம்
70 ஆண்டுகளை நெருங்கிவிட்டோம் என்று!
இன்றுவரை பிளாட்பாரங்கள் நடக்க பயன்படுவதில்லை
நம் நாட்டு ஏழைகள்
அங்கு குடியேறி இருப்பதால்!
எப்படி குத்திக்கொள்ளமுடியும் கொடியை, ஒவ்வொரு முறை குத்தும்போதும் இடறி நெஞ்சுக்குள் குத்துகிறது!
நம்நாட்டு பெண்களை கூட்டம் கூடி கற்பழிக்கும் வரை,
நம்நாட்டு குழந்தைகள் தெருவில் நின்று பிச்சைகேட்கும் வரை,
நம்நாட்டு பெண்சிசுக்கள் கள்ளிப்பாலில் சாகும்வரை
நமக்கெல்லாம் அருகதையில்லை
சுதந்திர நாடென்று சொல்லிக்கொள்ள!
ஆண்டுக்கு இரண்டு நாட்களிலும், அண்டை நாட்டு கிரிக்கெட்டிலும் மட்டும் நாட்டுப்பற்று உயிர்வாழும்
என்றால் நாமதற்கு அடிமைப்பட்டே இருந்திருக்கலாம் நல்ல காலம் வரும்வரை!
வெள்ளைக்காரன் கொடுமைக்காரன், கொடுங்கோலன் ராட்ஷசன்,அடிமைப்படுத்தினான் என்கிறோம்,
ஆனால் நாம் என்ன செய்துகொண்டிருக்கிறோம் ஜாதியை காட்டி ஒருபுறம், பெண்ணென்று கேவலப்படுத்தி ஒருபுறம், ஏழை என்று வஞ்சித்து ஒருபுறம், அதிகாரத்தை காட்டி ஒருபுறம் என்று அடிமைபடுத்திக்கொண்டு தான் இருக் கிறோம்! உண்மையில் அடிமைப்படபடுத்துவதில் நாம் நூறு வெள்ளைக்காரனுக்கு சமம்! அவன் நாட்டை ஆள அடிமைப்படுத்தினான்
நாம் சுதந்திரம் வாங்கி அதை செய்துகொண்டு இருக்கிறோம்! நாம் நிம்மதியாக சந்தோஷமாக
சுதந்திரமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பது பெரும்பான்மையாவர்களின் கருத்தாக இருக்கும்!
பீகார், ஒரிசா, உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட், போன்ற மாநிலங்களில் அடிமைப்பட்டு வாழும் மக்களுக்கு தெரியும் சுதந்திரம் என்றால் என்னவென்று!
நாடுமுழுவதும் இருக்கும் கோடிக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தெரியும் சுதந்திரம் என்றால் என்னவென்று!
சராசரி குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் தெரியும் சுதந்திரம் என்றால் என்னவென்று!
பரமசிவன் கழுத்தில் உட்கார்ந்து இருப்பவர்களுக்கு நாடு சந்தோஷமாகத்தான் தெரியும், கொஞ்சம் சிட்டுக்குருவியாய் இருந்து பாருங்கள்
கழுகு ஒருபுறம்,
காக்கை ஒருபுறம்,
பருந்து ஒருபுறம்,
பாம்பு ஒருபுறம் என்று பயந்து பயந்தே வாழவேண்டி இருக்கும்!
அந்த வாழ்க்கையை தான் 70 கோடி மக்களும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்!
அவர்களுக்கும் விரைவில் சுதந்திரம் கிடைக்கவேண்டுகிறேன்!

நேயர்களே உங்களின் பொண்ணான கருத்துக்களை CoMmEnT செய்யவும்....

நீங்கள் அறிந்ததை மற்றவர்கள் அறிந்திட மறவாமல் ShArE செய்யவும்..

இதுபோன்ற தகவல்களை உடனுக்குடன் அறிந்திட LiKe செய்யவும் எமது பக்கத்தை ➨ ➨https://www.facebook.com/tamilagam360




































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக