வியாழன், 7 ஆகஸ்ட், 2014

கர்மவினையும் இறைபயனும்

ராதே கிருஷ்ணா 07-08-2014


கர்மவினையும் இறைபயனும்


From the album: Timeline Photos
By தமிழ் தந்த சித்தர்கள்
கர்மவினையும் இறைபயனும்

வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்கள் எல்லாம் முற்பிறவியில் நாம் செய்த வினையின் விளைவே என்று தொன்று தொட்டு ஒரு நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருந்து வருகிறது. மறு பிறவியை நம்ப மறுப்பவர்களும் உண்டு. மறுபிறவி குறித்த சில உண்மைச் சம்பவங்கள் மேலை நாட்டில் கூட நடந்ததுண்டு. இவையெல்லாம் அறிவியலுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள்.

உலகில் எந்தப் பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. முன் வினைப் பயனால் விளைந்த கஷ்டங்களுக்குத் தீர்வு உண்டா? உண்டு என்று பல மகான்கள் கூறியிருக்கிறார்கள். ஸ்ரீ அன்னையும் முன் வினை பற்றி நிறைய பேசியிருக்கிறார். நாம் எல்லாருமே கர்மச் சங்கிலியில் கட்டுண்டவர்கள் என்று அவர் கூறுகிறார். ஆனால் நமது முயற்சியால் அதை மாற்ற முடியும் என்றும் சொல்லு கிறார். அவர் சொல்வதைப் பார்ப்போம். "".........இந்தியாவில் இதைக் கர்மா என்று சொல்லுகிறார்கள். நம்மை நெறிப்பதுபோல் அழுத்தும் இந்த இன்னல் ஒழித்துத் தள்ளப்பட வேண்டிய விஷயம்.''

ஒரே ஒரு தரம் வேண்டுகோள் விடுத்தால் போதும், ஒரே ஒரு தரம் தெய்வ அருளுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டால் போதும், பிறகு ஒரே வீச்சில் அனைத்தையும் துடைத்து எறிந்து விடலாம். அதற்கு ஒரு பெரும் துணிவும் அளவற்ற பொறுமையும் தேவைப்படுகிறது.

ஆமாம், தெய்வ அருள், கர்மாவை முற்றிலும் எதிர்த்துச் செயல் புரியும். அது வெய்யிலில் வைத்த வெண்ணெய் உருகுவது போல் கர்மாவை அழித்து விடுகிறது.

.....கரவில்லாத, நேர்மையான ஆர்வம் இருக்குமாயின், தீவிரமான பிரார்த்தனை இருக்குமாயின் அனைத்தையும் மாற்றவல்ல ஓர் அரும்பொருளை உனக்குள் கொண்டு வரமுடியும். உண்மையாகவே அது அனைத்தையும் மாற்றி விடும். ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், நீ புரிந்து கொள்வதற்கு அது உதவும்.

ஒரு கூரை மேலிருந்து ஒரு கல் அல்லது ஓர் ஓடு விழுகிறது; யாரோ ஒருவன் இடையில் வருகிறான். அவன் உடனே கையை நீட்டி அது விழுவதைத் தடுக்கிறான். ஆக, அவன் அந்தக் கல்லின் போக்கை மாற்றிவிட்டான். ஒரு நியதி கல்லை விழச் செய்தது. மற்றொரு நியதி அந்தக் கல் ஒருவனின் தலையில் விழாமல் கையில் விழச் செய்தது. கல் விழுந்தது, ஓர் உணர்வற்ற நிகழ்வு. கை தடுத்ததோ ஓர் உணர்வுள்ள செயல். இப்படித்தான் பிரபஞ்ச நியதியில் தெய்வ அருள் இடை புகுந்து தடுத்தாட் கொள்ளுகிறது.

ஒருவன் தான் செய்த பிழையையே திரும்பத் திரும்பச் செய்துகொண்டிருப் பானானால் அதை நேர் செய்யவே முடியாது. ஏனென்றால் அவன் அதற்கு மீண்டும் மீண்டும் புத்துயிரளித்துக் கொண்டே இருக்கிறான். ஒருவன் ஒரு தவறு செய்தால், பெரியதாயினும் சிறியதாயினும் அதனுடைய பின் விளைவுகள் அவன் வாழ்க்கையைப் பாதிக்கும். கர்மா என்பது இதுதான். இது களையப்படவேண்டியது. தெய்வீக அருளை நோக்கி அவனுடைய மனம் திரும்பு மானால் அந்த அருள் எல்லாப் பின் விளைவு களையும், கர்ம பந்தங்களையும் அறுத்தெறிந்து விடும். ஆனால் அவன் திரும்பவும் அந்தத் தவறைச் செய்யக்கூடாது. இனி ஸ்ரீ அரவிந்தர் சொல்வதைப் பார்ப்போம்:

வினா: விதி என்பதற்கு என்ன விளக்கம் அளிப்பீர்கள்?

இந்தியக் கருத்தின்படி விதி என்பது கர்மா. அதாவது, வினைப் பயன். நமது செயல்களின் மூலம் நாமே விதியை உருவாக்குகிறோம். நம்மால் உருவாக்கப் பட்ட விதி நம்மையே கட்டிப் போடுகிறது. நாம் விதைத்த வினையின் பயனை இந்தப் பிறவியிலோ அல்லது மறு பிறவியிலோ அனுபவித்தே ஆக வேண்டும்.

வினா: நமது கடந்த காலச் செயல்கள் எப்படிவேண்டுமானாலும் இருக்கட்டும்; இப்போது நாம் நமது வருங்கால விதியை நிர்ணயிக்கச் சங்கல்பம் செய்யலாமல்லவா?

நிச்சயமாக, நாம் தான் நமது வருங்கால விதியை உருவாக்கிக்கொண்டி ருக்கிறோம். கடந்த கால வினைப் பயனை அனுபவித் தவாறே எதிர்கால விதியை உருவாக்கிக் கொண்டிருக் கிறோம். நமது சங்கல்பத்திற்கும் செயலுக்கும் அது தான் ஓர் அர்த்தத்தைக் கொடுக்கிறது.

வினா: நமது கடந்த காலக் கர்மா பலனுக்கு நாம் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டுமா?

நமது நிகழ்காலச் சங்கல்பத்தினாலும் செயலாலும் கடந்த காலக் கர்மாவை மாற்ற முடியாது என்பதில்லை. எனினும் சில கர்மாக்கள் உண்டு. உத்கட கர்மா எனப்படும் கொடிய வினைப் பயனை மாற்றுவது கடினம். இத்தகைய விதியை - ஆன்மீக உயர்நிலையை அடைந்தவர்களால் மாற்ற முடியும். ஆன்மீக நிலையை அடையும்போது பிரபஞ்சமளாவிய தெய்வ சங்கல்பத்துடன் ஒன்றிவிடும் திறன் வருகிறது. தான் படைத்தவற்றை மாற்றும் ஆற்றல், அந்தச் சங்கல்பத்திற்கு உண்டு. கர்மத்தின் குறுகிய, இறுகிய தன்மையைத் தளர்த்தி, விரிவான சுதந்திரத்தை அதனால் ஏற்படுத்த முடியும். எனவே கர்மாவோ சோதிடமோ மாற்ற முடியாத விஷயங்கள் அல்ல''ஆக, மனிதன் தன்னுடைய நலனைக் கருதியேனும் பிறருக்குத் தீங்கிழைக்காமலும் கொடுஞ்செயல்கள் செய்யாமலும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.


































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக