திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வேதத்திற்காக ஒரு பண்டிகை ! - உங்களுக்குத் தெரியுமா ? உபாகர்மாவும் (ஆவணியாவிட்டம்), வேதமும்.

ராதே கிருஷ்ணா 04-08-2014வேதத்திற்காக ஒரு பண்டிகை ! - உங்களுக்குத் தெரியுமா ?
உபாகர்மாவும் (ஆவணியாவிட்டம்), வேதமும்.


From the album: Timeline Photos
By Sarma Sastrigal
வேதத்திற்காக ஒரு பண்டிகை ! - உங்களுக்குத் தெரியுமா ?
உபாகர்மாவும் (ஆவணியாவிட்டம்), வேதமும்.

ப்ராசீனமான நமது சம்ப்ரதாயத்தில் பல பண்டிகைகள், விழாக்கள் உண்டு. ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது என்பதை நாம் அறிந்ததே.

அதுமாதிரி வேதத்திற்காக ஒரு பண்டிகை, உண்டு என்றால் அது இந்த பண்டிகைதான். ஆவணியாவிட்டம் வேறு எதை உத்தேசித்தும் கொண்டாடப்படுவதில்லை.

ஆனால் இக்காலகட்டத்தில் நம்மில் எத்தனை பேர் ஆவணியாவிட்டத்தன்று இந்த பண்டிகை வேதத்தை உத்தேசித்துதான் கொண்டாடப்படுகின்றது என நினைக்கின்றோம். சந்தேகம்தான்.

சரி, உபாகர்மாவின் முக்கியத்துவத்தை பற்றி சுருக்கமாக இப்போது இங்கே பார்ப்போம்.

பொதுவாக ஆவணி மாதத்தில் அவிட்ட நக்ஷத்திரத்தில் இந்த பண்டிகை வருவதால் இதற்கு ஆவணி அவிட்டம் என்று ஒரு பெயர் வந்திருக்கலாம். ச்ரவண மாதத்தில் வருவதால் இதற்கு ‘ச்ரவணம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஆனால் உபாகர்மா என்பதுதான் இதன் உண்மையான பெயர்.

உபாகர்மா என்ற வார்த்தைக்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது வேதாரம்பம்.

*ச்ராவண்யாம் பெளர்ணமாஸ்யாம் அத்யாயம் உபாக்ருத்ய மாஸ ப்ரதோஷே ந அதீயீத, தேஷ்யாம் பெளர்ணமாஸ்யாம் ரோஹின்யாம் வா விரமேத்” என்று ஆபஸ்தம்பர் கூறுகிறார்.

இந்த வாக்யத்தின் முதல் பகுதியின் அர்த்தம் என்னவென்றால் ஆடி அமாவாஸ்யைக்கு பிறகு வரும் பெளர்ணமி அன்று முதல் ச்ராவணமானால் ப்ரஹ்மச்சாரிக்கும், மற்ற க்ரஹஸ்தர்களுக்கும் இந்த நாள் வேதாரம்பம் ஆகும்.

மேலும் வேதத்திற்கு யாதயாம தோஷம் வருகின்றதாம். அதாவது ‘பழையது’ என சொல்லுகிறோம் அல்லவா அது மாதிரி. இந்த தோஷம் நீங்கவும் உபாகர்மா செய்யப்படுகின்றது.

மேலும், இதில் ப்ரஹ்மாவும் சம்பந்தப்பட்டுள்ளார். அதை சற்று இப்போ பார்ப்போமா..

வேதத்தை ரிஷிகள் இயற்றவில்லை. நமக்கு தெரிந்ததே. ஸர்வஞ்னான ஸர்வேஸ்வரன் ஸங்கல்பம் செய்து கொண்டதாக வேதமே கூறுகின்றது.

இதோ, அதற்கான வாக்யம்:

“ஸோ காமாயத! பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி !”

ஈஸ்வரனின் அறிவான அந்த வேதத்தை அவர் முதல் முதலில் ப்ரஹ்மாவிற்கு உபதேசித்தார். உபதேசம் செய்தார் என்னும்போது வாயால் உபதேசித்ததாக நினைக்க வேண்டாம். ஸங்கல்பத்தினாலேயே உபதேசித்தார். ப்ரஹ்மாவிற்கு பிறகு ப்ரஜாபதிகள் ‘சந்தை’ சொல்லி, ‘திருவை’ சொல்லி வேதத்தை வரப்படுத்தினார்கள். ப்ரஹ்மா உபதேசம் பெற்ற நாள் இன்றுதான். ஆதலால் இது வேதத்தின் ‘ஆண்டு விழாவாகவும்’ (Anniversary) எடுத்துகொள்ளலாம்.

( இதைப் பற்றி ஏற்கனவே எனது ‘வேதமும் பண்பாடும்’ புஸ்தகத்தில் ‘வேத ப்ரபாவம்’ என்கின்ற அத்யாயத்தில் குறிப்பிட்டுள்ளேன்)

உபநயனம் ஆன மாத்திரத்திலேயே ப்ரஹ்மச்சாரிக்கு வேதம் கற்க யோக்யதை வருவதில்லை. முதல் உபகர்மா (தலை ஆவணியாவிட்டம்) ஆன பிறகுதான் வேதம் கற்க யோக்யதை வருகின்றது.

சரி, மீண்டும் விஷயத்திற்கு வருவோம்.

வேதத்தை கற்றவர்கள், வேதாத்யயனம் செய்தவர்கள், உபாகர்மா செய்து வேதம் சொன்னால்தான் வேதத்திற்கு மஹிமை உண்டு என சாஸ்திரம் சொல்லுகின்றது.

’ நாம்தான் வேத அத்யயனம் செய்யவில்லையே ....’ என்று சிலர் யோசிக்கலாம். நியாயம்தன். வேதாத்யயனம் செய்யாமலிருக்கலாம். ஆனால் உபாகர்மா அனுஷ்டித்துதான் ஆகவேண்டும். எப்படி என்று பார்ப்போம்.

நித்யப்படி நாம் செய்யும் சந்தியாவந்தனத்தில் வரும் மந்திரங்கள், மேலும் காயத்ரி மந்திரம், பூஜை புனஸ்காரங்களில வரும் மந்திரங்கள், ச்ராத்தம் போன்ற கார்யங்களில் வரும் மந்திரங்களை நாம் வருஷம் முழுவதும் சொல்லுகிறோம் அல்லவா, இவைகள் நமக்கு பலனளிக்க வேண்டுமானால் உபாகர்மா செய்தே ஆக வேண்டும். நாம் சொல்லும் மந்திரங்களுக்கு சக்தி வர வேண்டுமானால் உபாகர்மா ச்ரத்தையாக அனுஷ்டித்தே ஆக வேண்டும்.

இப்போது புரிந்ததா உபாகர்மாவுக்கும் வேதத்துக்கும் எவ்வளவு சம்பந்தம் உள்ளது என்று.

உபாகர்மாஅன்று நாம் செய்யும் வைதிக சடங்குகளில் வரும் சில அற்புதமான சில விஷயங்களை இங்கே இப்போ பார்ப்போம்:

* நூதன யக்ஞோபவீத தாரணம்..

” காமோகார்ஷீத் ஜபம்:
ஆரம்பம் என்று ஒன்று இருந்தால் ‘உத்ஸர்ஜனம்’ ஒன்றும் இருக்க வேண்டும் அல்லவா. இந்த உத்ஸர்ஜனத்தை அனுஷ்டிப்பவர்கள் மிக குறைவு. ஆதலால்தான் உத்ஸர்ஜனம் செய்யாததற்கு ப்ராயஸ்சித்தமாக ‘காமோகர்ஷீத்...’ என்கின்ற ஜபத்தை இன்று செய்கிறோம்.

* தர்ப்பணம், ஹோமம்:
மந்திரங்களை நமக்கு ஆதியில் தந்த ரிஷிகளையும், தேவதைகளையும் பூஜித்து அவர்களது தபஸ்சக்தி மூலம் அவர்களுடைய அனுக்ரஹத்தை நாம் அடையவேண்டித்தான் ச்ராவணத்தில் ப்ரஜாபதி முதலிய ஒன்பது பேர்களுக்கு காண்டரிஷி தர்ப்பணம் செய்கிறோம் தொடர்ந்து ஹோமமும் சொல்லப்பட்டுள்ளது.

ஸங்கல்பம்:
எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பு வைப்பது போல் உபாகர்மா அன்று சொல்லப்பட்டுள்ள ஸங்கல்பம் மிகவும் விசேஷமானது என்பதை நாம் அறிவோம். பல பாவங்களும் தோஷங்களும் நீங்குவதற்கான பிரார்த்தனை வாக்யங்கள் அடங்கியுள்ள இந்த ஸங்கல்பத்தை நாம் பக்தி ச்ரத்தையோடு சொல்லுவது பலன் அளிக்கும். இந்த ஸங்கல்பத்தில் பல தேவதா மூர்த்திகளின் சன்னிதிகளையும், புண்ய க்ஷேத்ரங்களையும், புண்ய நதிகளையும் நாம் நிணைவிற்கு கொண்டுவருகின்றோம் அல்லவா. நாம் பாக்யசாளிகள்தாம். .

லோக க்ஷேமம்:
எனவே வருஷத்தில் நாம் பல சந்தர்பங்களில் செய்யும் பலவிதமான கர்மாக்களில் வரும் மந்திரங்கள் பலமுள்ளதாக நமக்கு ஸ்ரேயஸ் அளிக்க வேண்டும் என நாம் நினைத்தால் நாம் இந்த உபாகர்மாவை ச்ரத்தையாக செய்ய வேண்டும்.

இதை செய்வோமாகில் இதன் மூலம் நமக்கும், நமது நாட்டு மக்களுக்கும் க்ஷேமம் ஏற்படும் என்று சாஸ்திரம் திடமாக கூறுகின்றது.

குருவருளும் திருவருளும் எல்லோருக்கும் கிடைக்கட்டும்.

அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்


Society full of crimes against women ? Laws not of much help ? misuse and exploitation of law for framing the innocent instead ?
All because the transformation must begin from an individual. Changing laws is not a solution, social change is.
And that's the reason why we need to get back to our roots.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக