வியாழன், 7 ஆகஸ்ட், 2014

வரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }

ராதே கிருஷ்ணா 07-08-2014வரலக்ஷ்மி விரதம் ( மறுபதிவு ) :
வரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }

From the album: Timeline Photos
By குரு பெயர்ச்சி பலன்கள் 2014-2015.
வரலக்ஷ்மி விரதம் ( மறுபதிவு ) :

வரலக்ஷ்மி விரதம் { 08.08.2014 }

மகாலக்ஷ்மி அவதரித்த தினம் துவாதசி வெள்ளிகிழமை ஆகும்..அதுவும் ஆடி/ஆவணி மாத பௌர்ணமிக்கு முன்பு வரும் துவாதசி வெள்ளிகிழமை நாளே வரலக்ஷ்மி விரத நாளாகும்..

நாம் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப செல்வத்தை தரும் [ குறை / நிறை ] செல்வ வடிவான மகாலக்ஷ்மிக்கு நாம் செய்யும் நன்றி கலந்த விரதமே இந்த வரலக்ஷ்மி விரதம்..பொறுமையே வடிவான , கணவரின் இதயத்தில் குடிகொண்டு பெண்களை பல இன்னல்களில் இருந்து காப்பவளே மகாலக்ஷ்மி

அன்பு , அழகு , கருணை , புக்தி , வெட்கம் போன்றவற்றிற்கு அதிபதியான இந்த மகாலக்ஷ்மியை பெண்கள் விரதம் இருந்து வணங்கும்போது அஷ்டலக்ஷ்மிகளும் மகிழ்ந்து திருமணம் ஆன பெண்களுக்கு நீடித்த மாங்கல்ய பலமும் , கன்னி பெண்களுக்கு விரைவில் திருமணமும் கிடைக்கப்பெறுகிறது என்பது நிதர்சனமான உண்மை .

இந்த விரதத்தை அன்றைய தினத்தன்று சந்தியா கால வேளையில் கொண்டாட வேண்டும். வீட்டை நன்றாக மெழுகி மாக்கோலம் இட்டு , விளக்கேற்றி வாசனைப் புகையை வீடெல்லாம் நிறைந்திருக்க செய்ய வேண்டும்.

வீட்டின் தென்கிழக்கு மூலையில் சிறு மண்டபம் அமைத்துக் கொண்டு அவ்விடத்தில் ஒரு பலகையை வைத்து அதில் சந்தனத்தில் செய்த லட்சுமியின் வடிவத்தை வைக்கவேண்டும். வெள்ளி சிலைகளும் வைக்கலாம். சிலைக்கு மஞ்சள் ஆடை அணிவித்து, தாழம்பூவால் அலங்காரம் செய்து, எதிரில் வாழை இலை போட்டு அதில் ஒரு படி பச்சரிசியை பரப்ப வேண்டும்.கும்ப கலசத்தினுள் பச்சரிசி எலுமிச்சம்பழம் பொற்காசுகள் ஆகியவற்றை இட்டு , கும்பத்தை வெண்மையான பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து அம்பாளின் முகத்தை அமைத்து மஞ்சள் சரடை கும்பத்தின் மீது சாத்த வேண்டும்.

அம்பாளை கிழக்கு முகமாக எழுந்தருளி , நாம் வலது பக்கம் அமர்ந்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் சரடையும் கும்பத்துடன் சேர்த்து பூஜிக்க வேண்டும்.

பூக்களாலும் தூப தீபங்களாலும் அம்மனை ஆராதித்து மஞ்சள் சரடை எடுத்து வலது மணிக்கட்டில் பக்தி சிரத்தையுடன் கட்டிக்கொள்ள வேண்டும் நோன்பு சரட்டில் ஒன்பது முடிகள் போட்டு பூவை சேர்த்து மற்றொரு முடி போட வேண்டும்.

இனிப்பு கொழுக்கட்டை நிவேதனம் செய்து பாத்யம் அர்க்கியம் முதலிய பதினாறு வகை உபசரணங்களையும் செய்ய வேண்டும். உற்றார் உறவினர் நண்பர்களுக்கு நிவேதனங்கள் கொடுத்த பிறகு தான் நாம் நிவேதனம் உண்ண வேண்டும். பூஜையின் போது அஷ்டலட்சுமிகளுக்கு விருப்பமான அருகம்புல்லை சிலை மீது தூவி பூஜிப்பது நல்லது. ஏழை சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறை வலது கையில் கட்டி, தேங்காய், குங்குமம், புதிய ஆடைகள் கொடுக்க வேண்டும்.

அன்று முழுவதும் பகவத் சிந்தனையுடன் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம்,கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி ஸ்தோத்திரங்களை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இரவில் கலசத்தை அரிசி பாத்திரத்துக்கு வைப்பது விசேடம். அதனால் அன்னபூரணியின் பேரருள் இல்லத்தில் நிரந்திரமாக நிறைந்திருக்கும்! அட்சயமாக இருப்பவள் அம்பாள்!

பூஜைக்கு பிறகு, கும்பத்திலுள்ள புனிதநீரை செடி அல்லது மரங்களுக்கு ஊற்றிவிட்டு, கும்பத்தை ஒரு பெட்டியில் வைத்து பத்திரப் படுத்த வேண்டும். அதை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். வேறு பூஜைகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது மட்டுமே எடுக்க வேண்டும். சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. அது நெளிந்து விட்டாலோ, பிற பழுது ஏற்பட்டாலோ யாருக்காவது தானமாகக் கொடுத்து விட வேண்டும். சந்தனத்தில் செய்த லட்சுமியின் உருவத்தை மறுநாள் நீர்நிலைகளில் கரைத்து விட வேண்டும்

கலசத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட தேங்காயை அதற்கடுத்த வெள்ளிக்கிழமை உடைத்து பாயசம் செய்யலாம். இவ்விரதத்தை கடை பிடிப்பதால் கர்ம நோய்கள் நீங்கும். நல்ல ஆரோக்கியம் ஏற்படும். திருமணம் நடைபெறும்.

நன்றி

அன்புடன்

மஹாலக்ஷ்மி ஜோதிட நிலையம்
mahalakshmiastroservices@gmail.com
[Contact for Astro Reading / Astro Predictions]

Follow us to get updates on Astro Articles..
www.facebook.com/Mahalakshmiastroservices

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக