சனி, 10 மே, 2014

மகா பெரியவா Part - II

ராதே கிருஷ்ணா 10-05-2014


மகா பெரியவா Part - II



Narasimman Nagarajan11:20am May 10
தஹனம் என்று எப்போது ஒரு கிரியை சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறதோ, அப்போது நம் மதப்படி எல்லோரும் கடைசியில், நல்ல விருத்தாப்பியத்தில் கூட , ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று விதிக்கவில்லை என்றே அர்த்தம்.

பிரம்மச்சர்யம், கிருஹஸ்தாச்ரமம், வானப்ரஸ்தம், ஸந்நியாஸம் என்ற நாலு ஆசிரமங்களை ஒவ்வொருவரும் வரிசையாக அநுஷ்டித்தேயாக வேண்டும் என்றால் வாஸ்தவமாகவே தகனக்ரியை இருக்கமுடியாதுதான். ஸந்நியாஸியை தகனம் செய்யாமல் புதைக்கத்தானே சொல்லியிருக்கிறது?அதனால் பக்குவிகளுக்கே ஸந்நியாஸம்;மற்றவர்களுக்கு இல்லை - கிழ வயஸில் கூட இல்லை - என்று சொன்னால் இந்த வாதத்தைத் தப்பு என்று சொல்ல முடியவில்லை.

ஸந்நியாஸம் வாங்கிக் கொள்கிற அளவுக்கு வயசு ஆகாமல், சின்ன வயசிலேயே செத்துப் போனவர்களை உத்தேசித்துத்தான் தஹனக் கிரியையைச் சொல்லியிருக்கிறது என்று நினைப்பதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. அகால மரணமாகவோ அல்பாயுஸாகவோ இல்லாமல் கால ம்ருத்யுவாக, நன்றாக வயஸாகிச் செத்துப் போகிறவர்களையும் உத்தேசித்ததாகத்தான் தகனக்கிரியை, அப்புறம் செய்யும் பித்ரு காரியங்கள் ஆகியன இருக்கிறது. ஆகையால், அத்தனை வயசிலும் அவர்கள் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலிருப்பதை சாஸ்திரம் அங்கீகரிப்பதாகத்தானே ஏற்படுகிறது?

நல்ல ஞான வைராக்கியத்தில் பிடிப்பு ஏற்பட்டவர்கள் கிருஹஸ்தாச்ரமம் ஆனபின் குடும்பப் பொறுப்புகளை விட்டுக் காட்டிலே போய் வைதிக காரியங்களை மட்டும் பண்ணிக் கொண்டிருக்க வேண்டும். பிள்ளைகுட்டிகளையும் சொத்து சுதந்திரங்களைவிட்டுவிட்டுப் பத்தினியை மட்டும் அழைத்துக் கொண்டு காட்டுக்கு போய்விடவேண்டும். பத்தினி எதற்கு என்றால் இந்திரிய ஸுகத்துக்காக அல்ல. பின்னே எதற்கு என்றால், அக்னி காரியங்களைப் பத்தினி கூட இருந்தால்தான் பண்ண முடியும் என்பதற்காகவே. யாகாதிகளையும் ஒளபாஸனையையும் பண்ணும் பொருட்டே அவளை அழைத்துக் கொண்டு போக வேண்டும். இதுதான் வானப்ரஸ்தம் - வனத்தில் போயிருப்பது என்று அர்த்தம்.

வீடு வாசலையும், உறவுக்காரர்கள், அவர்களுடைய காரியங்கள் ஆகியவற்றையும் விடுகிற பக்குவம் முதலில் வரவேண்டுமாதலால் வானப்ரஸ்தம் ஏற்படுகிறது. அப்புறம் வைதிக காரியத்தையும் விட்டுவிட்டு ஆத்மா என்ன, பரமாத்ம ஸத்யம் என்ன என்று தெரிந்து கொள்வது ஒன்றிலேயே நாட்டம் வலுத்த பின் குருமுகமாக ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ள வேண்டும். பத்தினியையும் வேதகர்மாக்களையும் விட்டுவிட்டு குருமுகமாக ஸந்நியாஸ ஆச்ரமம் பெற்று பரமாத்ம ஸத்யத்தையே ஸதாவும் சிந்தித்து

தியானித்து, அதை அநுபவத்தில் தெரிந்துகொண்டுவிட வேண்டும். "அந்த ஸத்யம்தான் தானும்; லோகமெல்லாம் அதன் பொய் விளையாட்டு தான்" என்ற அநுபவம் ஏற்பட்டு, சரீரத்துக்கும் மனஸுக்கும் அதீதமான பரம ஸத்யமாக இருந்து கொண்டிருப்பதுதான் மோக்ஷம். பிராரப்தப்படி (முன்வினைப் பயன்படி) சரீரம் இருக்கிற மட்டும் இருந்து விட்டு அப்புறம் மரணம் அடைந்துவிடும். ஆனால் அதைப் பற்றி அநுபவ ஞானியான ஸந்நியாஸிக்கு ஒரு பொருட்டும் இல்லை. வெளி உலகத்தின் பார்வையில், இது வரைக்கும் தேகத்தில் வாழ்ந்த போதே முக்தி நிலையில் இருந்த ஜீவன் முக்தன், தேகம் போய் விதேஹ முக்தனாகிறான் என்று சொல்வது வழக்கம். அவன் நேரே குணம் குறியற்ற பரமாத்ம தத்வமாகி விடுகிறான்.

கல்யாணம் பண்ணிக் கொள்ளாமலே ஸந்நியாஸி ஆகிறவன்; கல்யாணம் பண்ணிக் கொண்டு நாற்பது ஸம்ஸ்காரங்களையும் முறைப்படி ஒன்றும் விட்டுப்போகாமல் பண்ணி, அதோடு அஷ்ட குணங்களையும் கைக் கொண்டு கடைசியில் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்கிறவன் - ஆகிய இருவரும் இப்படித் தானே பரமாத்ம தத்வமாக ஆகிவிடுகிறார்கள்.

ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளாமலே கடைசி வரை எல்லா ஸம்ஸ்காரங்களையும் அஷ்ட குணங்களையும் அநுஷ்டித்தவனின் கதை என்ன? செத்துப் போன பின் அவன் கதி என்ன? இவனுக்குத்தானே தஹனம் சொல்லியிருக்கிறது? லோகத்தில் பொதுவாக ரொம்ப ஜாஸ்தி இருக்கிறவனும் இவன்தானே? இவன் செத்தபின் என்ன ஆகிறான்?

ஸ்ரீ சங்கர பகவத்பாதாள் இவன் பரமாத்ம தத்வத்தோடு அத்வைதமாகக் கரைந்து விடுகிறான் என்று சொல்ல வில்லை. கடைசி வரையில் எல்லாவற்றையும் விட்டு, பரமாத்மா ஒன்றையே பிடித்துக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் பெரிய தாபமாக இவனுக்கு வரத்தானே இல்லை? அது வந்துவிட்டால் யாரும் பிடித்து வைக்க முடியாது. அது வராததால் தான் இவன் ஸந்நியாஸியாக ஒடவில்லை. ஆகையால் இவன் அத்வைத முக்தி அடைவதில்லை. ஆனாலும் சாஸ்திரத்தை நம்பி அதன்படியே கர்மாக்களைப் பண்ணி சித்தத்தை நன்றாக சுத்தம் பண்ணி, லோக க்ஷேமத்தையும் உண்டாக்கியிருக்கிறானல்லவா?

அதனால் இவன் குணமும் குறியுமில்லாத பரமாத்மாவுடன் ஒன்றாகாவிட்டாலும், அதே பரமாத்மா குணம் குறிகளோடுகூட லோகங்களை நிர்வகிக்கிற ஈச்வரனாக இருக்கிற குணம் குறிகளோடுகூட லோகங்களை நிர்வகிக்கிற ஈச்வரனாக இருக்கிற பரம உத்தமமான ஸந்நிதானத்தை அடைகிறான். ஹிரண்யகர்ப்ப ஸ்தானம் என்று அது சொல்லப்படுகிறது. பிரம்ம லோகம் என்பது அதுதான். பரமாத்மாவிலேயே கரைந்து ஒந்றாகிவிடாமல், வெளியே இருந்து கொண்டிருந்தாலும்கூட, அவரை ஸதாவும் அநுபவித்துக் கொண்டிருப்பதால் அந்த ஸ்தானத்தில்கூட எப்போதும் ஆனந்தமாகவே இருக்கும். ஒரு குறையும் இருக்காது. அப்படியானால் இதையும் மோட்சம் என்று சொல்ல வேண்டியதுதான்.

ஒரு குறையில்லை, ஒரு துக்கம் இல்லை, எப்போதும் ஈச்வர ஸாந்நித்யம். இதற்கு மேல் என்ன வேண்டும்? இப்படிப்பட்ட நிலையைத்தான் எல்லா ஸம்ஸ்காரங்களையும் செய்துவிட்டு ஸந்நியாஸியாகாமலே இறந்தவன் அடைகிறான்.

அவன் இதற்கு மேல் ஒன்றும் கேட்க மாட்டான். ஆனாலும் அந்த ஈச்வரன் தானும் ஒரு காலத்தில் இந்த லோக வியாபாரங்களையெல்லாம் நிறுத்திவிட்டு, லோகங்களையெல்லாம் மஹாப் பிரளயத்தில் கரைத்துவிட்டு, குணம் குறியில்லாத பரமாத்ம ஸத்யமாக மட்டுமே ஆகிவிடுவான். அப்போது அதுவரை அவனுடைய ஸந்நிதானத்திலிருந்த ஜீவர்களும் அவனோடுகூடப் பரமாத்மாவோடு பரமாத்மாவாக அத்வைத முக்தி அடைந்து விடுவார்கள்.

மஹாப் பிரளயத்தில் ஸகல ஜீவராசிகளும்தான் - அநுஷ்டானமே செய்யாதவர்களும், புழு பூச்சியும் கூடத்தான் - பரமாத்மாவோடு சேர்ந்து விடுவார்கள். அப்படியிருக்க இத்தனை அநுஷ்டானங்களைச் செய்த இவனுக்கும் அந்த நிலை கிடைத்ததில் விசேஷம் என்னவென்றால், ஒரு விசேஷம் இருக்கிறது. மறுபடியும் அகண்ட வெளியிலிருந்து பரமாத்ம ஸகுண ஆச்வரனாகி லோகங்களை ஸ்ருஷ்டித்து, ஜகத் வியாபாரங்களை ஆரம்பித்து விடுவார்.

அப்போது அநுஷ்டானம் பண்ணாத மற்ற ஜீவர்களும், இதர உயிரினங்களும் பூர்வ கர்மாப்படி மறுபடி பிறந்துதான் ஆகவேண்டும். அதுவரை பரமாத்மாவில் அவை இரண்டற கரையாமல் லயித்துத்தான் இருந்திருக்கும். இப்போது லயம் விலகி மறுபடி ஜன்மா உண்டாகிவிடும். ஸம்ஸ்காரங்களைச் செவ்வேனே செய்து சுத்தியானவனோ இப்படி புனரபி ஜனனம் என்று மறு ஸ்ருஷ்டியின்போது பூமியில் வந்து விழாமல், பரமாத்மாவோடு பரமாத்மாவாக இரண்டறக் கரைந்தது கரைந்தபடியே இருப்பான்.

பிரம்மசரியம் என்பதிலிருந்து ரொம்பவும் தாண்டி முடிவான நிலைக்கு வந்துவிட்டேன். ஒருத்தன் பிரம்மசாரியாக வாழ்நாள் பூரா இருக்கலாமா? கிருஹஸ்தாச்ரமம் வகிக்காமலே ஒரு பிரம்மச்சாரி ஸந்நியாஸம் வாங்கிக் கொள்ளலாமா? என்ற கேள்விகள் எழுந்ததால் அதற்குப் பதில் சொல்ல ஆரம்பித்தேன்.

ஸமாவர்த்தனம் பண்ணிக் கொள்ளாமல் குருவிடத்திலேயே இருந்து வாழ்க்கை முழுதையும் அவருக்கே அர்ப்பணம் பண்ணி அவர் போன பிறகும் பிரம்மச்சாரியாகவே வாழ்நாள் முழுதும் இருப்பதும் உண்டு. இதற்கு நைஷ்டிக

பிரம்மச்சரியம் என்று பெயர். பீஷ்மர், ஆஞ்ஜநேயர் முதலியவர்களை நைஷ்டிக பிரம்மச்சாரிகள் என்று சொல்லியிருக்கிறது. ஆனால் இது கலியில் விசேஷமாக சொல்லப்படவில்லை.

இயற்கை தருமத்தை அநுஸரித்து பிரம்மச்சாரியானவன் ஸமாவர்த்தனம் பண்ணிக்கொண்டு அப்புறம் விவாஹம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டும் என்பதுதான் பொதுதர்மம். பிரகருதிக்கு எதிர் நீச்சல் போடுவது கஷ்டம். அதன் போக்கிலேயே போய், ஆனாலும் அதிலேயே முழுகிப்போய்விடாமல் கரையைப்பிடிக்க வேண்டும். அதனால்தான் தர்மமாக கார்ஹஸ்தியம் (இல்லறம்) வகித்து அப்புறமே கொஞ்சம் விடுபட்டு வானப்ரஸ்தம், அதற்கும் அப்புறம் பூர்ண சந்நியாஸம் என்று விதித்திருக்கிறது. Nature -ஐ Violent -ஆக எதிர்த்துப் போனால் ஹானிதான் உண்டாகும் என்பதால் இப்படி வைத்திருக்கிறது. நைஷ்டிக பிரம்ம்ச்சாரியாக இருப்பேன், ஸந்நியாஸியாக இருப்பேன் என்று நல்ல வாலிபத்திலேயே நினைத்துக் கொண்டிருந்துவிட்டு அப்புறம் பிரகிருதி வேகத்திலே இழுக்கப்பட்டு அந்த ஆசிரமத்துக்கு விரோதமாக நடந்து கொண்டுவிட்டால் மஹத்தான பாபமாகிறது. இதுவே கிருஹஸ்தனுக்குப் பாபமாக இல்லாமல் பிரகிருதி தர்மமாக அநுமதிக்கப்பட்டிருக்கிறது.

எந்த ரூல் இருந்தாலும் எக்ஸெப்ஷன் (விலக்கு) உண்டு. நல்ல திட சித்தமும் பக்குவமும் பூர்வ ஜன்ம ஸம்ஸ்கார பலமும் இருப்பவர்கள் நைஷ்டிக பிரம்மச்சாரிகளாக இருக்கலாம். ஒரு முந்நூறு வருஷத்துக்குள் ஸமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகள் அப்படித்தான் இருந்துகொண்டு முகம்மதிய பிரவாகத்தையே சிவாஜி மூலம் முறியடித்து, நம் தர்மத்தை ஆழமாக நிலைநாட்டினார். நைஷ்டிக பிரம்மச்சாரியான ஆஞ்சநேயரின் அம்சம் அவர்.

வேத தர்மத்தை மறுபடி ஸ்தாபிப்பதற்காகப் பரமேச்வர அவதாரமாக வந்த ஸ்ரீ சங்கர பகவத் பாதர்கள் தம் சொந்த வாழ்க்கையிலே பிரம்மச்சரியத்திலிருந்து நேரே ஸந்நியாஸத்துக்குப் போனது மட்டுமின்றி ஸுரேச்வரர் தவிர அவரது மற்ற மூன்று பிரதான சிஷ்யர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகர் என்ற மூன்று பேருக்கும் பிரம்மச்சரியத்திலிருந்தே நேராக ஸந்நியாஸ ஆச்ரமம் கொடுத்திருக்கிறார்.

சங்கர மடத்திலும் பிரம்மச்சாரிகளே நேரே ஸந்நியாஸம் வாங்கிக்கொண்டு பீடாதிபதிகளாக இருக்க வேண்டும் என்ற விதி அநுஸரிக்கப்படுகிறது. அதனால் எல்லாரும் கிருஹஸ்தாச்ரமம் வகித்துத்தான் ஆகவேண்டும் என்றில்லை என்று தெரிகிறது. ஆனால் இப்படிப்பட்ட பக்குவம் ரொம்ப அபூர்வமானவர்களுக்கே இருக்கும்.

விவாஹமும், பஞ்ச மஹா யக்ஞங்களும், தலைக்கு ஏழேழாக உள்ள பாக-ஹவிர்-ஸோம யக்ஞங்கள் இருபத்தியன்றும் நைஷ்டிக பிரம்மசாரிகளுக்கும் நேரே பிரம்மச்சரியத்திலிருந்து துரீயாச்ரமத்துக்கு (நாலாவது ஆசிரமமான துறவறத்துக்கு) ப் போனவர்களுக்கும் இல்லாமல் போகிறது. அதாவது நாற்பது ஸம்ஸ்காரத்தில், பாதிக்கு மேல் அவர்களுக்கு இல்லாமல் போகிறது. இவை இல்லாமலே அந்தஃகரணம் சுத்தியடைகிற அளவுக்கு அவர்கள் பக்குவமாகியிருக்கவேண்டும். அதனால் இதை 'எக்ஸெப்ஷனல் கேஸ்'கள் (விதிவிலக்கானவை, அசாதாரணமானவை) என்றே சொல்லவேண்டும்.


Narasimman Nagarajan11:17am May 10
NTRODUCTION
The Guru is God Himself manifesting in a personal form to guide the
aspirant. Grace of God takes the form of the Guru. To see the Guru
is to see God. The Guru is united with God. He inspires devotion in
others. His presence purifies all.
The Guru is verily a link between the individual and the immortal.
He is a being who has raised himself from this into That, and thus
has free and unhampered access into both the realms. He stands, as
it were, upon the threshold of immortality; and, bending down he
raises the struggling individuals with his one hand, and with the
other lifts them up into the empyrean of everlasting joy and
infinite Truth-Consciousness.
THE SADGURU
To be a Guru, one must have a command from God.
Mere study of books cannot make one a Guru. One who has studied the
Vedas, and who has direct knowledge of the Atman (Self) through
Anubhava (experience), can alone be enrolled as a Guru. A Jivanmukta
or liberated sage is the real Guru or spiritual preceptor. He is the
Sadguru. He is identical with Brahman or the Supreme Self. He is a
Knower of Brahman.
A Sadguru is endowed with countless Siddhis (psychic powers). He
possesses all divine Aisvarya (powers), all the wealth of the Lord.
Possession of Siddhis, however, is not the test to declare the
greatness of a sage or to prove that he has attained Self-
realisation. Sadgurus generally do not exhibit any miracle or
Siddhi. Sometimes, however, they may do so in order to convince the
aspirants of the existence of superphysical things, give them
encouragement, and instill faith in their hearts.
The Sadguru is Brahman Himself. He is an ocean of bliss, knowledge,
and mercy. He is the captain of your soul. He is the fountain of
joy. He removes all your troubles, sorrows, and obstacles. He shows
you the right divine path.
He tears your veil of ignorance. He makes you immortal and divine.
He transmutes your lower, diabolical nature. He gives you the rope
of knowledge, and takes you up when you are drowning in this ocean
of Samsara (cycle of birth and death). Do not consider him to be
only a man. If you take him as a man, you are a beast. Worship your
Guru and bow to him with reverence.
Guru is God. A word from him is a word from God. He need not-teach
anything. Even his presence or company is elevating, inspiring, and
stirring, His very company is self-illumination. Living in his
company is spiritual education. Read the Granth-saheb (the holy
scripture of the Sikh religion). You will come to know the greatness
of the Guru.
Man can learn only from man, and hence God teaches through a human
body. In your Guru, you have your human ideal of perfection. He is
the pattern into which you wish to mould yourself. Your mind will
readily be convinced that such a great soul, is fit to be worshipped
and revered.
Guru is the Moksha-dvara (door to liberation). He is the gateway to
the transcendental Truth-Consciousness. But, it is the aspirant who
has to enter through it. The, Guru is a help, but the actual task of
practical Sadhana (spiritual practice) falls on the aspirant
himself.
THE NEED FOR A GURU
For a beginner in the spiritual path, a Guru is necessary. To light
a candle, you need a burning candle. Even an illumined soul alone
can enlighten another soul.
Some do meditation for some years independently. Later on, they
actually feel the necessity of a Guru. They come across some
obstacles in the way. They are unable to know how to obviate these
impediments or stumbling blocks. Then they begin to search for a
Master.
Only the man who has already been to Badrinath will be able to tell
you the road. In the case of the spiritual path, it is still more
difficult to find your way. The mind will mislead you very often.
The Guru will be able to remove pitfalls and obstacles, and lead you
along the right path. He will tell you: "This road leads you to
Moksha (liberation); this one leads to bondage". Without this
guidance, you might want to go to Badrinath, but find yourself in
Delhi!
The scriptures are like a forest. There are ambiguous passages.
There are passages which are apparently contradictory. There are
passages which have esoteric meanings, diverse significance, and
hidden explanations. There are cross-references. You are in need of
a Guru or Preceptor who will explain to you the right meaning, who
will remove doubts and ambiguities, who will place before you the
essence of the teachings.
A Guru is absolutely necessary for every aspirant in the spiritual
path. It is only the Guru who will find out your defects. The nature
of egoism is such that you will not be able to find out your own
defects. Just as a man cannot see his back, so also he cannot see
his own errors. He must live under a Guru for the eradication of his
evil qualities and defects.
The aspirant who is under the guidance of a Master or Guru is safe
from being led astray. Satsanga or association with the Guru is an
armour and fortress to guard you against all temptations and
unfavourable forces of the material world.
Cases of those who had attained perfection without study under any
Guru should not be cited as authority against the necessity of a
Guru; for, such great men are the anomalies of spiritual life, and
not the common normality. They come into existence as spiritual
masters as a result of the intense service, study, and meditation
practised in previous births. They had already studied under the
Guru. The present birth is only its continuative spiritual effect.
Hence, the importance of the Guru is not lessened thereby.
Some teachers mislead their aspirants. They say unto all: "Think for
yourself. Do not surrender yourself to any Guru". When one says, "Do
not follow any Guru!", he intends to be the listeners' Guru himself.
Do not approach such pseudo-Gurus. Do not hear their lectures.
All great ones had their teachers. All the sages, saints, prophets,
world- teachers, incarnations, great men, have had their own Gurus,
however great they might have been. Svetaketu learnt the nature of
Truth from Uddalaka, Maitreyi from Yajnavalkya, Bhrigu from Varuna,
Narada from Sanatkumara, Nachiketas from Yama, Indra from Prajapati;
and several others humbly went to wise ones, observed strict
Brahmacharya, practised rigorous discipline, and learnt Brahma-vidya
(the science of God) from them.
Lord Krishna sat at the feet of His Guru Sandeepani. Lord Rama had
Guru Vasishtha who gave Him Upadesha (spiritual advice). Lord Jesus
sought John to be baptised by him on the banks of the river Jordan.
Even Devas (celestial beings) have Brihaspati as their Guru. Even
the greatest among the divine beings sat at the feet of Guru
Dakshinamurti.
A neophyte must have a personal Guru first. He cannot have God as
Guru to begin with. He must have a pure mind. He must have ethical
perfection. He, must be intensely virtuous. He must be above body-
consciousness. Then alone can he have God as Guru.
HOW TO CHOOSE YOUR GURU
If you find peace in the presence of a Mahatma (great soul), if you
are inspired by his speeches, if he is able to clear your doubts, if
he is free, from greed, anger, and lust, if he is selfless, loving,
and I-less, you can take him as your Guru. He who is able to clear
your doubts, he who is sympathetic in your Sadhana, he who does not
disturb your beliefs but helps you on from where you are, he in
whose very presence you feel spiritually elevated-he is your Guru.
Once you choose Your Guru, implicitly follow him. God will guide you
through the Guru.
Do not use your reason too much in the selection of your Guru. You
will fail if you do so. If you fail to get a first-class Guru, try
to follow the instructions of the Sadhu (a spiritual person) who is
treading the path for some years, who has purity and other virtuous
qualities, and who has some knowledge of the scriptures. Just as a
student of the Intermediate class will be able to teach a student of
Third Form when a professor with M.A. qualification is not
available, just as a sub-assistant surgeon will be able to attend on
a patient when the civil surgeon is not available, this second-
class type of Guru will be able to help you.
If you are not able to find out even this second-class type of Guru,
you can follow the teachings contained in the books written by
realised saints like Sri Sankara, Dattatreya, and others. You can
keep a photo of such a realised Guru, if available, and worship the
same with faith and devotion. Gradually you will get inspiration,
and the Guru may appear in dream and initiate and inspire you at the
proper time. For a sincere Sadhak (aspirant), help comes in a
mysterious manner. When the time is ripe, the Guru and the disciple
are brought together by the Lord in a mysterious way.
MYSTERIOUS HELP FROM THE LORD
Just see how the Lord has helped the devotees in the following
instances. Eknath heard an Akasavani (a voice from the sky). It
said, "See Janardan Pant at Deva Giri. He will put you in the proper
path and guide you." Eknath acted accordingly and found his Guru.
Tukaram received his Mantra, Rama Krishna Hari, in his dream. He
repeated this Mantra and had Darshan (vision) of Lord Krishna. Lord
Krishna directed Namdev to get his higher initiation from a
Sannyasin (renunciate) at Mallikarjuna. Queen Chudalai assumed the
form, of Kumbha Muni, appeared before her husband Sikhidhwaja in the
forest, and initiated him in the mysteries of Kaivalya (state of
absolute independence). Madhura Kavi saw a light in the firmament
for three days consecutively. It guided him and took him to his Guru
Nammalvar who was sitting in Samadhi underneath a tamarind tree near
Tinnevelly. Vilvamangal was very much attracted to Chintamani, the
dancing woman. The latter became his Guru. Tulasidas received
instructions from an invisible being to see Hanuman and, through
Hanuman, to get Darshan of Sri Rama.
Competent disciples are never in want of a competent Guru. Realised
souls are not rare. Ordinary ignorant-minded persons cannot easily
recognise them. Only a few persons, who are pure and embodiments of
all virtuous qualities, can understand realised souls, and they only
will be benefited in their company.
So long as there is a world, there are Gurus and Vedas to guide the
struggling souls in the path of Self-realisation. The number of
realised souls may be less in the Iron Age when compared with the
Satya Yuga (age of Truth), but they are always present to help the
aspirants. Let each man take the path according to his capacity,
temperament, and understanding. His Sadguru will meet him along that
path.
SIKSHA GURUS AND DIKSHA GURU
Man has a twofold duty here on earth-to preserve his life, and to
realise his Self. To preserve his life, he has to learn to work for
his daily bread. To realise his Self, he has to serve, love, and
meditate. The Guru who teaches him the knowledge of worldly arts is
the Siksha Guru. The Guru who shows him the path of Realisation is
the Diksha Guru. Siksha Gurus can be many-as many as the things he
wishes to learn. The Diksha Guru can be only one-the one who leads
him to Moksha.
STICK TO ONE GURU
Do not dig here and there shallow pits for getting water. The pits
will dry up soon. Dig a very deep pit in one place. Centralise all
your efforts here. You will get good water that can supply you
throughout the year. Even so, try to imbibe thoroughly the spiritual
teachings from one preceptor alone. Drink deep from one man. Sit at
his feet for some years. There is no use of wandering from one man
to another man, out of curiosity, losing faith in a short time. Do
not have the ever-changing mind of a prostitute. Follow the
spiritual instructions of one man only. If you go to several people
and follow the instructions of many persons, you will be bewildered.
You will be in a dilemma.
From a doctor, you get a prescription. From two doctors, you get
consultation. From three doctors, you get your own cremation. Even
so, if you have many Gurus, you will be bewildered. You will be at a
loss to know what to do. One Guru will tell you: "Do Soham Japa".
Another will tell you: "Do Japa of Sri Ram". A third Guru will tell
you: "Hear Anahat (mystic) sounds". You will be puzzled. Stick to
one Guru and follow his instructions.
Listen to all, but follow one. Respect all, but adore one. Gather
knowledge from all, but adopt the teachings of one Master. Then you
will have rapid spiritual progress.
GURU-PARAMPARA
Spiritual knowledge is a matter of Guru-parampara. It is handed down
from Guru to disciple. Gaudapadacharya imparted Self-knowledge to
his disciple Govindacharya; Govindacharya to his disciple
Sankaracharya; Sankaracharya to his disciple Suresvaracharya.
Matsyendranath imparted knowledge to his disciple Gorakhnath;
Gorakhnath to Nivrittinath; Nivrittinath to Jnanadeva. Totapuri
imparted knowledge to Sri Ramakrishna, and Ramakrishna to Swami
Vivekananda. It was Ashtavakra who moulded the life of Raja Janaka.
It was Gorakhnath who shaped the spiritual destiny of Raja
Bhartrihari. It was Lord Krishna who made Arjuna and Uddhava get
themselves established in the spiritual path when their minds were
in an unsettled state.
INITIATION-ITS MEANING
A Bhakta will be initiated by a Bhakta saint in the path of
devotion. A Jnani will initiate a student of Vedanta in the
Mahavakyas. A Hatha Yogi or a Raja Yogi can initiate another in his
particular path. But, a sage of perfect realisation, a Purna-jnani
(full-blown sage) or Purna-yogi, can give initiation in any
particular path. A sage or saint like Sri Sankara or Madhusudana
Sarasvati can initiate a Sadhak in any particular path for which the
aspirant is fit. The Guru will find out by close study of the
aspirant his tastes, temperaments, and capacity, and decide for him
the most suitable path. If his heart is impure, the teacher will
prescribe selfless service for a number of years. Then the Guru will
find out for what particular path the student is fit and initiate
him in that.
Initiation does not mean reciting a Mantra into another's ears. If
Rama is influenced by the thoughts of Krishna, the former has got
initiation already from the latter. If an aspirant treads the path
of truth after studying the books written by a saint, and imbibes
his teachings, that saint has already become his Guru.
SAKTI-SANCHAR
Just as you can give an orange to a man, so also, spiritual power
can be transmitted by one to another. This method of transmitting
spiritual powers is termed Sakti-sanchar. In Sakti-sanchar, a
certain spiritual vibration of the Sadguru is actually transferred
to the mind of the disciple.
Spiritual power is transmitted by the Guru to the proper disciple
whom he considers fit for Sakti-sanchar. The Guru can transform the
disciple by a look, a touch, a thought or a word, or mere willing.
Sakti-sanchar comes through Parampara. It is a hidden mystic
science. It is handed down from Guru to disciple.
Lord Jesus, through touch, transmitted his spiritual power to some
of his disciples. A disciple of Samartha Ramdas transmitted his
power to that dancing girl's daughter who was very passionate
towards him. The disciple gazed at her and gave her Samadhi. Her
passion vanished. She became very religious and spiritual. Lord
Krishna touched the blind eyes of Surdas. The inner eye of Surdas
was opened. He had Bhava Samadhi. Lord Gouranga, through his touch,
produced divine intoxication in many people and converted them to
his side. Atheists even danced in ecstasy in the streets by his
touch and sang songs of Hari.
The disciple should not rest satisfied with the transmission of
power from the Guru. He will have to struggle hard in Sadhana for
further perfection and attainments. Sri Ramakrishna Paramahamsa
touched Swami Vivekananda. Swami Vivekananda had superconscious
experience. He struggled hard for seven years more, even after the
touch, for attaining perfection.
GRACE AND SELF-EFFORT
Realisation cannot come to you as a miracle done by your Guru. Lord
Buddha, Lord Jesus, Rama Tirtha have all done Sadhana. Lord Krishna
asks Arjuna to develop Vairagya (dispassion) and Abhyasa (practice).
He did not say to him, "I will give you Mukti(liberation) now".
Therefore, abandon the wrong notion that your Guru will give you
Samadhi and Mukti. Strive, purify, meditate, and realise.
Guru-kripa-grace of a Guru-is very necessary. That does not mean
that the disciple should sit idle. He must do rigid Purushartha,
spiritual practices. The whole work must be done by the student.
Nowadays, people want a drop of water from the Kamandalu (water-pot)
of a Sannyasin and desire to enter into Samadhi immediately. They
are not prepared to undergo any Sadhana for purification and Self-
realisation. They want a magic pill to push them into Samadhi. If
you have got such delusion, give it up immediately.
The Guru and the Shastras can show you the path and remove your
doubts. Anubhava (direct experience) of the Aparoksha kind or direct
intuitive knowledge is left for your own experience. A hungry man
will have to eat for himself. He who has a severe itching will have
to scratch for himself.
No doubt, the Guru's blessing can do everything. But how can one
have his blessings? By pleasing the Guru. A Guru can be pleased with
his disciple only if the latter carries out his spiritual
instructions implicitly. Carefully follow, therefore the
instructions of the Guru. Act up to his instructions. Then only will
you deserve his blessings, and then alone his blessings can do
everything.

Narasimman Nagarajan11:16am May 10
குரு கீதை !! – சில துளிகள் !!

குருவின் மகத்துவம் :

22 . மகாதேவி ! இங்கு ஒன்றை வலியுறுத்த விரும்புகிறேன் ! குருவை எவன் நிந்தனை செய்கிறானோ அவன் சந்திரசூரியர்கள் உள்ளளவும் கொடும் துயரத்துக்கும் சிக்கலுக்கும் ஆட்படுவான் !

23 . தேவி ! தேகம் உள்ளளவும் ; கல்பம் முடியுமளவும் ஒருவன் குரு பக்தியில் லயிக்கவேண்டும் ! சுதந்திரமானவனாக இருந்தாலும் குருவுக்கு லோபம் செய்யலாகாது !!

24 . தெளிவுள்ள சிஷ்யன் ஒரு போதும் குருவின் அருகாமையில் குசுகுசுவென பிறரோடு பேசலாகான் ! ஒருபோதும் உலகியல் விசயங்களை அலட்டித்திரியான் !!

25 . குருவின் சந்நிதியில் அவரை அலட்சியப்படுத்தியும் ; அவமானப்படுத்தியும் பேசுகிறவன் தனது குருநிந்தனையால் அடர்ந்த காட்டிலும் தண்ணீரில்லாத வணாந்திரத்திலும் பிறந்து உழல்வான் !!

26 . குரு இட்ட பணியை விட்டு விலகிச்செல்லலாகாது ! அவரின் உத்தரவில்லாமலும் அவ்விசயத்தில் தலையிடலாகாது ! குருவின் திருவருளால் பிரகாசிக்கிற ஞானத்தின் வழியில் மட்டுமே வாழக்கற்றுக்கொள்ள வேண்டும் !!

27 . குருவின் ஆசிரமம் உள்ள தளத்தில் சுற்றி பொழுது போக்குவதும் ; குடிகூத்தில் ஈடுபடுவதும் கூடாது ! குருவே செய்யவேண்டிய தீஷை ; சாஸ்திர வியாக்கியானம் செய்து பிறருக்கு வழிகாட்டுதல் ; தூண்டுதல் ; உத்தரவிடுதல் போன்றவற்றில் முந்திரிக்கொட்டை போல ஈடுபடக்கூடாது !!

28 . சிரமபரிகாரம் செய்து கொள்ளுதல் ; அங்கங்களுக்கு போகத்தை நாடுதல் ; களிக்கூத்தை நடத்துதல் ; சுற்றுலா செல்லுதல் ஆகியவற்றை குருவின் ஸ்தலத்தில் செய்யலாகாது !!

29 . குருவின் ஸ்தலத்தில் தங்கியிருக்கும்போது அவரின் அடிமை போல இரவுபகலாக இட்ட கட்டளையை மட்டுமே செய்யவேண்டும் ! குருவால் எது சொல்லப்பட்டதோ அது நன்றாக தெரிந்தாலும் தீதாக தெரிந்தாலும் முரண்படாமல் ஈடுபாடோடு செய்யவேண்டும் !!

30 . குருவிற்கு சமர்பிக்காமல் எந்தப்பொருளையும் அனுபவிக்கலாகாது ! சமர்பித்ததன் எஞ்சியதையே பிரசாதமாக உட்கொள்ளவேண்டும் ! இதனால் நித்ய ஜீவனை அடைந்துகொள்ளமுடியும் !!

31 . குரு அணுக்கமாக பயன்படுத்தும் பாதுகை ; படுக்கை ; ஆசனம் அனைத்தையும் புனிதமாக பாவிக்கவேண்டும் ! காலால் அவற்றை கைப்பிசகாக கூட தொடக்கூடாது !!

32 . குருவை பின்தொடர்ந்தே நடக்கவேண்டும் ! அவரைத்தாண்டி செல்லலாகாது ! அவரின் அருகாமையில் பகட்டாக அலங்காரமும் செய்து கொள்ளாமால் அடக்கத்தை பேணவேண்டும் !!

33 . குருவை நிந்திப்போர் இருக்குமிடத்தை விட்டு அகன்று விடவேண்டும் ! ஏனென்றால் சக்தியிருந்தாலும் அவன் நாவை அறுக்காமல் அகன்று விடுவதே உத்தமம் !!

34 . குரு உண்டு மிஞ்சியதை அடுத்தவருக்கு கொடுத்துவிடலாகாது ! அதை அப்படியே கைப்பற்றிக்கொள்வது நல்ல சீடனுக்கு அதிஸ்ட்டம் !! நித்தியத்தை அளிக்கவல்ல குருவின் கட்டளையை ஒருபோதும் மீறலாகாது !!

35 . அநித்யமானதும் ; விரும்பப்படக்கூடாததும் ; அகம்பாவமுள்ளதும் ; புனையப்பட்டதும் ; குருவின் வழிகாட்டுதல்களுக்கு மாறுபாடானதுமான விசயங்களை பேசுவதை தவிர்த்து அவரின் வார்த்தைகளைப்பற்றியே சிந்தித்து வரவேண்டும் !!

36 . பிரபோ ; தேவோ ; சாமி ; ராஜா ; குலவிளக்கே ; குலேசுவரா என்றிவ்வாறு குருவை மரியாதையுடன் அழைப்பவனாகவும் ; எப்போதும் அவருக்கு கீழ்படிதலுள்ளவனாகவும் இருப்பாயாக !!

37 . பார்வதி ! முனிவர்களின் சாபத்திலிருந்தும் ; பாம்புகளிடமிருந்தும் ; தேவர்களின் அபசாராத்திலிருந்தும் ; இடி மின்னல்களிலிருந்தும் ; சந்தர்ப்ப சுழ்நிலையால் பகையாவோரின் தாக்குதல்களிலிருந்தும் குருவின் தயவு காப்பாற்றும் !!

38 . குரு சாபத்தை அடைந்தவனை முனிவர்களாலும் காக்க இயலாது ; இவ்விசயத்தில் தேவர்களும் சக்தியற்றவர்களே !!

39 . மந்திரங்களுக்கெல்லாம் ராஜமந்திரம் குரு என்ற இரண்டெழுத்து ஆகும் ! ஸ்மிருதி - வேத விளக்கங்களுக்கும் குருவின் வார்த்தையே பரம உறைவிடமாகும் !!

40 . பிறரால் மதிக்கப்படவும் ; பூஜிக்கப்படவும் ; வெகுமானத்தையும் எதிர்பார்த்து காவியும் தண்டமும் தரித்தவன் சந்நியாசி எனப்படான் ! ஞானத்திலே பொதிந்து நிற்பவனே உண்மையான சந்நியாசியாவன் !!

41 . யாரை சரணனடைந்து சேவை செய்தாலே மகாவாக்கியங்கள் பலரால் புரிந்துகொள்ள முடிகிறதோ அவரே சந்நியாசி ஆவார் ; மற்றவர்களெல்லாம் வேஷாதாரிகளே !!

42 . என்றுமிருப்பதும் ; வடிவமற்றதும் ; நிர்க்குணமானதும் ஆன பிரம்மபாவத்தை தானும் மென்மேலும் உணர்ந்துகொண்டும் ; ஒரு விளக்கு மற்றொரு விளக்கை ஏற்றுவதுபோல பிரம்மபாவத்தை பிறருக்கும் போதிப்பவனே சந்நியாசியாவான் !!

43 . குருவின் அருளாகிய பிரசாதத்தால் தனது ஆத்மாவை பரமாத்மாவின் குமாரனாக (ஜீவாத்மாவாக) உணரப்பெறலாம் ! மனச்சமநிலை அடைந்து முக்திமார்க்கத்தில் ஆத்மஞானம் பெருகிப்பரவும் !!

44 . அசையும் பொருளாயும் அசையாப்பொருளாயும் ; சிறு புல் முதல் சகலமாயும் ; உலக வடிவங்கள் அனைத்துமாயும் பரமாத்ம சொருபமே துலங்கும் ஞானம் உணரப்பெறலாம் !!

45 . சச்சிதானந்தம் உறையப்பெற்ற வடிவானவரும் ; உணர்வுகளை (பாவனையை) கடந்தவரும் ; என்றுமுள்ளவரும் ; பரிபூர்ணமானவரும் ; குணங்களை கடந்தவரும் ; உருவமில்லாதவருமான பரமாத்மாவே(அருவ உருவம்) வடிவெடுத்து வருபவரான சற்குருவையே(உருவம்) நான் வணங்குகிறேன் !!

Narasimman Nagarajan11:15am May 10
அரசியல் வேண்டவே வேண்டாம்! "-

(ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்)

(இரண்டு நாள் முன்பு வந்தது கல்கியில்-26 ஜனவரி தேதியிட்டது)

பாலிடிக்ஸ், ஸினிமா, பத்திரிகை, ஸ்போர்ட்ஸ் என்று நான் சொன்னதில் பாலிடிக்ஸ் என்பது மாணவர்களுக்கு வேண்டவே வேண்டாம்.

தேச நடப்பு அதில்தானே இருக்கிறது என்று கேட்கலாம்.

தேச நடப்பு அதில்தான் இருந்தாலும் அந்த நடப்பை நல்ல கூர்மையான அறிவுடன் நடத்தித் தரவும் கல்வியில் தேர்ச்சிப் பெறுவதுதானே உதவும்? இப்போது கல்விக்கு இடையூறு செய்துகொண்டு பொலிடிகல் பிரச்னைகளில் இறங்குவது அதை மேலும் உணர்ச்சி வேகத்தால் கெடுத்து, தங்களையும் கெடுத்துக் கொள்வதில்தான் முடியும். ‘மேலும்’ கெடுத்து என்று சொன்னேன்.

ஏனென்றால் தற்போது அரசியலில் யோக்யர்களும், யோக்யமான கொள்கைகளும் அபூர்வமாகிக் கொண்டே வந்து அது ஸ்வய நலத்துக்கும், ஆத்திர-க்ஷாத்திரங் களுக்குமே வளப்பமான விளைநிலமாகியிருக்கிறது. இந்த நிலையில் பக்குவ தசைக்கு வராத இளவயஸு மாணவர்கள் அதில் போய் விழுந்தால்?

இப்போது போலில்லாமல் பாலிடிக்ஸ் - அரசியல் - ஒழுங்காக, தார்மிகமாக இருந்தாலும், எதற்கும் உரிய பருவம் என்று ஒன்று உண்டாகையால், படித்துத் தேர்ச்சி பெற்று உத்யோகத்துக்குப் போய் வாழ்க்கைப் பொறுப்பு எடுத்துக் கொள்ளவே கடமைப்பட்டுள்ள மாணவ ஸமூஹம் அரசியலில் இறங்கவே கூடாது.

‘நாம் தேசத்தை நல்ல வழியில் நடத்துவதற்கு நல்ல புத்தி பலமும், தர்ம பலமும், தெய்வ பலமும் பெற வேண்டும். முதலில் இவற்றை நாம் பெற்று, நிலைப்படுத்திக் கொண்டால்தான் பிற்பாடு தேச ப்ரச்னைகளின் பளுவைக் கஷ்டப்படாமல், தாங்கி அதை அபிவிருத்தி செய்ய முடியும்.

ஆகவே பலம் பெறாத தற்போதைய ஸ்திதியில் நாம் ராஜீய வியவஹாரங்களில் இறங்குவது நமக்கும் நல்லதில்லை, ராஜ்யத்துக்கும் நல்லதில்லை’ என்று யௌவனப் பிராயத்தினர் உணர வேண்டும்.

இவற்றில் புத்திபலத்தை முக்யமாகக் காலேஜில் பெறுகிற படிப்பாகவே பெற வேண்டும்; அதோடு அதைக் கொண்டுதான் நாளைக்கு இவன் ஒரு உத்தியோகத்திலே அமர்ந்து வீட்டை நடத்த முடியும் என்றும் ஏற்பட்டிருக்கிறது. படிப்புக்குக் குந்தகம் பண்ணிக் கொண்டால் வீட்டை நடத்த முடியாமல் போகும். தன் வீட்டையே நடத்தாதவன் நாட்டை எப்படி நடத்த முடியும்?

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்



Narasimman Nagarajan11:13am May 10
ஸ்ரீ ஜகத்குரு பாதுகா ஸ்தோத்ரம்

அனந்த ஸம்ஸார ஸமுத்ரதாரா
நௌகாயி தாப்யாம், குருபக்தி தாப்யாம்
வைராக்ய ஸாம்ரஜ்யத பூஜநாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||1

கவித்வவாராசினி ஸாகராப்யாம்
தௌர்பாகய் தாவாம்புத பாலிகாப்யாம்
தூரீக்ருதா நம்ர விபத்ததிப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம ||2

நதா யயோ: ஸ்ரீ பதிதாம் ஸமீயு:
கதாசிதப்யாசு தரித்ரவர்யா:
மூகாஸ்ச வாசஸ்பதிதாம் ஹிதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||3

நாலீக நீகாஸ பதாஹ்ருதாப்யாம்
நாநாவிமேஹாதி நிவார்காப்யாம்
நமஜ்ஜனாபீஷ்ட ததிரதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||4

ந்ருபாசி பௌலீவ்ரஜரத்னகாந்தி
ஸரித் விராஜத் ஜஹகன்யகாப்யாம்
ந்ருபத்வதாப்யாம், நதலோகபங்க்தே
நமோ நம: ஸ்ரீ குரு பாதுகாப்யாம் ||5

பாபந்தகார்க்க பரம்பராப்யாம்
தபாத்ரயாஹீந்த்ர ககேஷ்வராப்யாம்
ஜாட்யாப்தி சம்ஷோஷணவாடவாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுபாக்யாம் ||6

சமாதி ஷட்சுப்ரத வைபவாப்யாம்
சமாதிதானவ்ரத தீக்ஷிதாப்யாம்
ரமாதவான்ரிஸ்திர பக்திதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||7

ஸ்வார்சாபராணாம் அகிலேஷ்டதாப்யாம்
ஸ்வாஹா ஸஹாயாக்ஷ துரந்தராப்யாம்
ஸ்வாந்தாஸ்ச பாவப்ரத பூஜனாப்யாம்
நமோ நம:ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||8

காமாதிஸர்ப வ்ரஜகாருடாப்யாம்
விவேக வைராக்ய நிதிப்ரதாப்யாம்
போதப்ரதாப்யாம் த்ருதமோக்ஷதாப்யாம்
நமோ நம: ஸ்ரீ குருபாதுகாப்யாம் ||9

பொருள்:

எல்லையற்ற வாழ்க்கையெனும் கடலைத் தாண்டுவிக்கும் படகாயும், குருவிடம் பக்தியைத் தரக்கூடியதாகவும், வைராக்யம் என்ற சாம்ராஜ்யத்தைக் கொடுக்கிறதாயும், பூஜிக்கத் தகுந்ததாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!1
கவித்துவமென்னும் கடலை பொங்கச் செய்கின்ற சந்திரனாகவும், துன்பமென்னும் காட்டுத்தீயை அணைக்கும் மேகக்கூட்டமாகவும், தன்னை வணங்கியவர்களின் துன்பங்களை போக்குகின்றதாகவும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!2
மிகவும் ஏழ்மையானவர்கள் கூட எப்பொழுதாவது எந்த குருவின் பாதுகைகளை வணங்கிய உடனே செல்வந்தர்களாக ஆகிறார்களோ, எந்த பாதுகைகளை வணங்கிய ஊமைகள் கூட ப்ரஹஸ்பதிக்கு நிகரான சொல்லாற்றல் பெற்றவர்களாய் ஆகிறார்களோ, அவ்விதம் பெருமை வாய்ந்த, நன்மைகளைத் தரக்கூடிய ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!3

தாமரைக்கு நிகரானதாயும், பலவித மயக்கங்களை (மோஹங்களை) போக்கக்கூடியதாயும் தன்னை வணங்கியவர்களுக்கு விரும்பியவற்றை தரக்கூடியதாயும் உள்ள, ஸ்ரீ குருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!4

அரசர்களின் கிரீடங்களில் ஒளி வீசுகின்ற சிறந்த ரத்தினங்களின் ப்ரகாசமாகிய ஆற்றல் (நதியில்) அழகுடன் விளங்குகின்ற பெண் மீங்கள் போன்றதாயும், தன்னை வணங்குகிறவர்களுக்கு அரசனாயிருக்கும் நன்மையைக் கொடுக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!5

பாவமாகிய இருளைப் போக்கும் சூரியன் போன்றதாயும், மூன்றுவித தாபங்களாகிய ஆதிபௌதிக, ஆதிதெய்வீக, ஆத்யாத்மிக பாம்புகளை அழிக்கின்ற கருடன் போன்றும், அக்ஞானமாகிய (மூடத்தன்மை) சமுத்ரத்தை வற்றச் செய்கின்ற வாடவாக்னியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ குரு பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!6

குறிப்பு:
ஆதிபுதிகம் : மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய ஈஷணாத்ரயம்
ஆதிதெய்வீகம் : தேவரிணம், ரிஷிரிணம், பித்ருரிணம் ஆகிய ரிணத்ரயம்
ஆத்யாத்மிகம்: சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய குணத்ரயம்

மேற்சொன்னவை எல்லாம் தனியாகவோ சேர்ந்தோ பிறவிக்குக் காரணமாகிறது

ஞானிக்கு வேண்டிய சமம் முதலிய ஆறு குணங்களைக் கொடுக்கும் பெருமை வாய்ந்ததாயும், அவ்வாறு குணங்களுக்கு மூலமாகவுள்ள வ்ரதத்தை அருளக்கூடியாதாயும், ஸ்ரீமன் நாராயணனின் சரணாரவிந்தங்களில் நிலையான பக்தியைக் கொடுக்க கூடியதாயுமுள்ள ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!7

தனனி (பாதுகைகளை) பூஜிப்பதில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு அனைத்து விருப்பங்களையும் கொடுக்கக் கூடியதாகவும், தேவதைகளின் அனுக்ரகத்தை விரைவில் அளிக்கக்கூடியதாகவும், மனதிற்கு ததூய்மையான எண்ணத்தைத் தரக்கூடியதாயும் பூஜிக்கத் தகுந்த ஸ்ரீ குருபாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!8

ஆசை முதலிய தீய குணங்களாகிய பாம்புகளை அழிக்கும் கருடனாகவும், விவேகம் (நன்மைகளை தீமைகளை அறிதல்) வைராக்யம் (பற்றின்மை), ஆகிய செல்வங்களை கொடுக்கக் கூடியதாயும், ப்ரம்ம ஞானத்தை அளிக்கக்கூடியதாயும், தன்னை (பாதுகைகளை) மனதில் சதா த்யானிப்பவர்களுக்கு மோக்ஷத்தை அளிக்கக் கூடியதாயும் உள்ள ஸ்ரீகுருவின் பாதுகைகளுக்கு நமஸ்காரம்! நமஸ்காரம்!!9

அனுதினமும் ஸ்ரீ ஜகத்குருவின் பாதுகைகளுக்கு நமஸ்கரித்து வாழ்வோம்! வாழ்விப்போம்!!
(இதை பிரதி தினமும் பாராயணம் செய்வதால் குரு பக்தி கைகூடும். ஜகத்குருவான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருளைப் பெற்று, இகபர லாபங்களை அடைந்து ஸ்ரேயஸை பெற வேண்டுகிறேன்.)

ஸ்ரீ மஹா பெரியவா பாதுகைகளுக்கு நமஸ்காரம்!


Narasimman Nagarajan11:10am May 10
ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம்:

ஸ்ரீஆதிசங்கரரால் அருளப்பட்ட ஸ்தோத்திரம் இது. இதைப் படிப்பதால் அபஸ்மார ரோகம், மறதி, சிவாபசாரம் முதலான தோஷங்கள் விலகி, சகல வித்யைகளும் உண்டாகும்.

யஸ்தே ப்ரஸன்னாமனுஸந்த தானோ
மூர்திம் முதா முக்தசசாங்கமௌளி:!
ஐச்வர்யமாயுர்லபதே ச வித்யா:மன்தே ச
வேதாந்தமஹாரஹஸ்யம்!!

பொருள்: பால சந்திரனை சிரஸில் தரித்த தங்களின் பிரஸன்ன மூர்த்தியை தியானம் செய்கிறவன், ஆயுள் ஐஸ்வர்யம் வித்யை ஆகியவற்றை அடைகிறான். முடிவில் வேதாந்தத்தின் பரம ரஹஸ்யமான தங்களையும் அடைவான். குரு வக்ர காலத்தில் நற்பலன்களைப் பெற, மேற்கண்ட ஸ்லோகத்தை பாராயணம் செய்யலாம்.

--

Narasimman Nagarajan11:07am May 10
சிவய நம’ எனும் சூட்சுமப் பஞ்சாட்சரம் ஆகும். இதிலும் பிரணவத்தைச் சேர்த்து, ‘ஓம் சிவய நம’ என்றே உச்சரிக்க வேண்டும். சிவபெருமானின் ஐந்து முகங்களிலிருந்தும் ஓம் என்ற பிரணவம் உதித்தது. அதாவது, வாமதேவ (வடக்கு) முகத்திலிருந்து ‘அ’காரமும், சத்யோஜாத (மேற்கு) முகத்திலிருந்து ‘உ’காரமும், அகோர (தெற்கு) முகத்திலிருந்து ‘ம’காரமும், தத்புருஷ (கிழக்கு) முகத்திலிருந்து ‘பிந்து’ எனப்படும் நாதத்தின் தொடக்கப்புள்ளியும், ஈசான (மேல் நோக்கியது) முகத்திலிருந்து நாதமாகிய முழுமையான சப்த ரூபமும் தோன்றின. இவ்வாறு ‘ஓம்’ என்ற மகத்தான பிரணவத்தோடு, சிவய நம என்று (சிவனை நமஸ்கரிக்கின்றேன்) சேர்த்து முழுமையான மந்திரஸ்வரூபமும் உருவானது.
திருவைந்தெழுத்து விளக்கம்:-
திருவைந்தெழுத்தான நமசிவாய இலுள்ள ஒவ்வொரு அட்சரமும் தத்துவப் பொருளுடையவை.
ந - திரோத மலத்தையும்,
ம - ஆணவ மலத்தையும்,
சி - சிவமயமாயிருப்பதையும்,...
திருவைந்தெழுத்தின் வேறு வடிவங்கள்:-
தூல பஞ்சாட்சரம் - நமசிவய
சூட்சும சாட்சரம் - சிவயநம
ஆதி சாட்சரம்- சிவயசிவ
காரண சாட்சரம் - சிவசிவ
மகாகாரண சாட்சரம் - சி


Narasimman Nagarajan11:06am May 10
ॐ नमः शिवायஎந்த மகானுடைய பாதாரவிந்தங்கள் காமாட்சி அம்பாளின் சரணங்களாக
விளங்குகின்றனவோ, எந்த மகானுடைய சரீரம் முழுவதும் ஒரே புஷ்பமயமாக
அலங்கரிக்கப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய சிரசில் புஷ்ப மகுடம்
சோபிதமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய ஞானப்பிரதானமான யோக தண்டம்
முழுதும் புஷ்பத்தினால் சுழற்றப்பட்டு விளங்குகிறதோ, எந்த மகானுடைய
மார்பினில் கதம்ப மலர்களால் ஆன மாலைகளுடன் துளசி, வில்வ மாலைகளும்
சர்வோத்திருஷ்டமாக விளங்குகிறதோ, எந்த மகானுடைய பாதாரவிந்தங்கள்
புஷ்பமயமான பாதுகைகளின் மேல் வைக்கப்பட்டு ஞானப் பிரதானமாகி
விளங்குகிறதோ- அப்படிப்பட்ட காஞ்சி மகா சுவாமிகளின் பாதார விந்தங்களை,
அடியேனின் சிரசில் சதா வைத்துக்கொள்வதில் பரமானந்த நிலை அடைகிறேன்!

Narasimman Nagarajan11:00am May 10
ஜகத்குரு ஆதிசங்கரரின் அவர் ஸ்தாபித்த காஞ்சி மடத்தின் ஆசாரியார்களைப் பற்றி [1-70]: PartI
1. ஜகத்குரு ஆதிசங்கரர்

(அருளாட்சி : கி.மு.509-477)
கேரளாவில் உள்ள காலடியில் அவதரித்து, பாரதமெங்கும் தெய்வீக திக்விஜயத்தை நடத்தி முடித்த சங்கரர், இறுதியாக காஞ்சிபுரத்தில் தங்கி, சர்வக்ஞபீடத்தையும், சங்கர மடத்தையும் நிறுவினார்.

தாமிரபரணிப் படுகையைச் சேர்ந்த, ஞானவானான ஒரு பாலகனுக்கு சன்னியாச தீட்சை அளித்து, சர்வஞாத்மன் என்று பெயரும் சூட்டினார். தனக்குப் பிறகு, காஞ்சி மடத்தின் பீடாதிபதியாகும் பொறுப்பை அவருக்குத் தந்து அதுவரை ஸ்ரீ சுரேச்வராசாரியரின் பராமரிப்பில் இருக்க ஆணையிட்டுவிட்டு அன்னை காமாட்சியுடன் இரண்டறக் கலந்தார்.

அவர் அருளிய நூல்களுக்கும், செய்த நெறிமுறைகளுக்கும், பெற்ற வெற்றிகளுக்கும், நடத்திய அற்புதங்களுக்கும் அளவேயில்லை. திருச்சூர் வடக்கு நாதனே, சங்கரராக அவதரித்தார் என்றால், இதைச் சொல்ல வார்த்தைகள் ஏது?

பிரம்மச்சர்யத்திலிருந்து நேரடியாக சன்னியாசம் பெற்றவர் ஆதிசங்கரர். அதே முறைதான் காஞ்சி மடத்தில் இன்றுவரை பின்பற்றப்படுகிறது. காமகோடி பீடத்தின் ஆசார்ய பரம்பரை, ஒரு சங்கிலித்தொடர் போன்றது. இடையே எந்தத் தொய்வும் இல்லாதது பெருமிதத்திற்குரியது.

ஆதிசங்கரர், இந்திரனையும் சரஸ்வதியையும், வெற்றி கொண்டதால் அவரைப் பின் தொடர்ந்து வந்த ஆசார்யர்களின் பெயருடன் `இந்திர சரஸ்வதி’ என்ற பெயரும் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

ஸ்ரீ சந்திரமௌளீஸ்வரருக்கு தினமும் 3 கால பூஜைகளை இந்த ஆசார்யர்களே நிறைவேற்றுகிறார்கள்.

2. ஸ்ரீ சுரேச்வராசாரியார்
(கி.மு.477-407)

ஜகத்குரு ஆதிசங்கரரின் சீடர்களுள் வயது முதிர்ந்த, அதிகம் கற்றறிந்த சீடர் இவர். மாகிஷ்மதி என்ற ஊரைச் சேர்ந்த இவர், பூர்வமீமாம்ச கொள்கையுடன், மண்டன மிஸ்ரர் என்ற பெயரில் இருந்தவர். ஆதிசங்கரர், இவருடன் வாதிட்டு வென்ற கதையும், சுரேச்வரர் என்று பெயரிட்டு, சன்னியாசம் வழங்கி, தன்னுடனேயே அழைத்துச் சென்ற கதையும் நமக்குத் தெரிந்ததுதான்.

பிருகதாரண்ய உபநிஷத்துக்கு உரை மற்றும் நைஷ்காம்ய சித்திக்கு தத்துவார்த்தமான உரை ஆகியவற்றை இவர் எழுதினார்.

கி.மு.407-ல் சுக்ல ஏகாதசி அன்று கேட்டை நட்சத்திரத்தில் பவ வருடத்தில் காஞ்சிபுரத்திலேயே இவர் முக்தியடைந்தார். இன்றும்கூட அவரது பழைய பெயரில், மண்டனமிஸ்ரர் அக்ரஹாரம் என்று ஒரு தெரு காஞ்சியில் உள்ளது.

இது மட்டுமன்றி காஞ்சி மடத்தில், ஒரு கற்சிலை வடிவில் ஸ்ரீ சுரேச்வராசாரியார் அருள்பாலிக்கிறார். தினசரி வழிபாடும் இவருக்கு உண்டு.

3. ஸ்ரீ சர்வஞாத்மன்
(கி.மு.407-364)
காஞ்சியில் ஆதிசங்கரர், பீடத்தை அலங்கரித்தபோது, பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பண்டிதர்களும், அறிஞர்களும் காஞ்சிபுரத்தில் குழுமினார்கள். அவர்களுள் தாமிரபரணிப் பகுதியைச் சேர்ந்த பிரம்ம தேசம் மற்றும் அதன் அண்டைப் பகுதியிலிருந்து வந்திருந்த கல்விப் பெருந்தகையாளர்கள் குறிப்பிடத் தக்கவர்கள். அவர்கள் தேவ பேதம், மூர்த்தி பேதம் போன்ற பல தலைப்புகளில் ஆசாரியாருடன் விவாதித்தார்கள். தன்னுடைய அத்வைத சித்தாந்தத்தை முன்னிறுத்தி, அந்த வாதங்களில் அவர்களைப் பேச்சிழக்கச் செய்தார் ஆதிசங்கரர். பிறகு சர்வஞான பீடத்தை ஆரோகணித்த ஆசார்யார் பார்வையை ஏழு வயது நிரம்பிய சிறுவன் ஒருவன் ஈர்த்தான். அச்சிறுவனுடைய பெற்றோருக்குச் சொல்லியனுப்பினார் ஆதிசங்கரர். அவர்களும் தம் மகனுடன் வந்து ஆசார்யாரை நமஸ்கரித்தார்கள். அவர்களிடம், அவர்களுடைய மகனை அந்தக் காஞ்சிமடத்தின் பீடத்துக்கு வாரிசாக நியமிக்க, தான் விரும்புவதாகச் சொன்னார். பெற்றோர் அதைக் கேட்டுப் பெருமிதம் அடைந்தார்கள். மகிழ்ச்சியால் பூத்த அவர்கள், ஆசார்யாரின் யோசனைக்குத் தம்முடைய பூரண சம்மதத்தைத் தெரிவித்தார்கள்.

அதன்பிறகு, அந்தச் சிறுவனை சந்நியாச தர்மத்திற்கு உட்படுத்தி, தீட்சையும் அளித்தார். அவனுக்கு சர்வஞாத்மன் என்று நாமம் சூட்டினார். இந்த பால சந்நியாசி, சுரேச்வராசாரியாரின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் ஒப்படைக்கப்பட்டார். சர்வஞாத்மன், ஆதிசங்கரரின் ருத்ர பாஷ்யத்தைத் தொகுத்து, உரையெழுதி மெருகூட்டினார். இவருடைய இந்த விளக்க விமரிசனமானது, `சம்ஸ்கேஷப சரீரிகா’ என்று அழைக்கப்பட்டது. அதேபோல சர்வஞான விலாசா என்ற கவிதை வழி ஆராய்ச்சித் தொகுப்பையும் இவர் இயற்றினார். சம்ஸ்கேஷப சரீரிகா, மொத்தம் 1267 பாடல்களைக் கொண்டது. மிகவும் எளிமையானதாகவும், கம்பீரமானதாகவும் விளங்குகின்றன அப்பாடல்கள். சிறப்புமிக்க பல வருடங்களை ஆசார்ய பொறுப்பில், திறம்பட செலவிட்ட சர்வஞாத்மர் (கி.மு.365ஆம் ஆண்டு) நள வருஷம் வைசாக கிருஷ்ண சதுர்தசி முன்னிரவில் விதேஹர் முக்தியடைந்தார்.

4. ஸ்ரீ சத்யபோதேந்திர சரஸ்வதி
(கி.மு. 364 – 268)
கேரள நாட்டைச் சேர்ந்த அமராவதி தீரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமத்தில் பாலினீகர் என்று அழைக்கப்பட்டார். தலினேச சர்மா என்பவரின் மகன்.

இவர் சாக்கியர், புத்தர், சமணர் ஆகியோரை வாதிட்டு வென்றார்.

ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கு `பாதகாசதா’ என்ற உரையை எழுதிய இவர், நந்தன வருடம் (கி.மு. 268) வைசாக மாதம் கிருஷ்ண அஷ்டமியில் காஞ்சியில் முக்தி அடைந்தார்.

5. ஸ்ரீ ஞானாந்தேந்திர சரஸ்வதி
(கி.மு. 268-205)

சந்நியாசத்திற்கு முன் ஞானோத்தமர் என்றுஅழைக்கப்பட்டார். தமிழக பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். தந்தையின் பெயர் நாகேசா. ஞானாந்தேந்திரா, தர்க்க சாஸ்திரத்தில் வல்லவர். சுரேச்வராசாரியாரின் நைஷ்காம்ய சித்தி என்ற நூலுக்கு `சந்திரிகா’ என்ற உரை எழுதியுள்ளார். இந்நூலில் தன் குருவான ஸ்ரீ சத்யபோதர் மற்றும் ஸ்ரீசர்வஞாத்மன் ஆகியோரைப் பற்றி மிகச் சிறப்பாகக் குறிப்பிடுகிறார். காஞ்சி பீடத்தின் ஞான ஒளியாக தன்னைப் பற்றியும் இதில் கூறியிருக்கிறார்.

இவர் சுக்ல சப்தமி அன்று மன்மத மாதம் (கி.மு.205) மிருக சீருஷத்தில் காஞ்சியில் முக்தி அடைந்தார்.

6. ஸ்ரீ சுத்தானந்தேந்திர சரஸ்வதி
(கி.மு.205-124)

வேதாரண்யத்தைச் சேர்ந்த இவர், பார்வு என்ற பண்டிதரின் மகன். பூர்வாஸ்ரமப் பெயர், விஸ்வநாதன். நள வருடம் ஜ்யேஷ்ட மாதம் சுக்ல சஷ்டி அன்று (கி.மு.124) காஞ்சியில் முக்தி அடைந்தார்.

7. ஸ்ரீ ஆனந்த ஞானேந்திர சரஸ்வதி
(கி.மு.124-55)
கேரளத்தைச் சேர்ந்த இவரது பூர்வாசிரமப் பெயர் சின்னைய்யா. தகப்பனார் பெயர் சூர்ய நாராயண மஹி. இவர் ஒரு சக்தி உபாசகர். கடவுள் கிருபையால் இலக்கிய ஞானம் கைவரப் பெற்றவர். ஆதிசங்கரரின் பாஷ்யத்திற்கும் சுரேச்வராசாரியாரின் நூலுக்கும் உரை எழுதியுள்ளார்.

ஸ்ரீசைலத்தில் கிருஷ்ண நவமி அன்று வைசாக மாதம் க்ரோதான வருடம் (கி.மு. 55) முக்தி அடைந்தார்.

8. ஸ்ரீ கைவல்யானந்த யோகேந்திர சரஸ்வதி
(கி.மு.55-கி.பி.28)
இயற்பெயர், மங்கண்ணா. சொந்த ஊர், திருப்பதி. தகப்பனார் பெயர், திரைலிங்க சிவய்யா. சர்வதாரி வருடம், (கி.பி.28) மகர மாதம் முதல் நாள் காஞ்சியில் முக்தியடைந்தார்.

9. ஸ்ரீ கிருபாசங்க ரேந்திர சரஸ்வதி
(கி.பி.28-69)
ஆந்திராவைச் சேர்ந்த பிராமணர் வகுப்பைச் சேர்ந்த இவரது இயற் பெயர், கங்கேஷா பாத்யாயர். சீரழிந்து கொண்டிருந்த இந்து மதத்தின் பிற்போக்கு மற்றும் காலத்திற்கு ஒவ்வாத பழக்க வழக்கங்களை முழு மூச்சுடன் கண்டித்து அவற்றை அறவே ஒழித்தவர் இவர். ஆதிசங்கரருக்குப் பிறகு அவர் ஏற்படுத்திய மார்க்கத்தை அவர் வழியிலேயே செம்மைப்படுத்தி உயர்த்தியதில் பெரும் பங்கு கிருபா சங்கரருக்கு உண்டு. குருவின் ஷண்மத மார்க்கத்தை வழிபாட்டு முறையாக்கி சிவன், விஷ்ணு, அம்பிகை, சூரியன், கணபதி, ஸ்கந்தன் என்று பிரித்து வழிபட வகை செய்தார். இவற்றை சங்கரரும் அவர் வழியில் கிருபாசங்கரரும் முறைப்படுத்தியதால் பின்னர் வந்த சைவ- வைணவ மதத் தலைவர்களுக்கு தங்கள் பணியை எளிதாய்ச் செய்ய முடிந்தது.

விந்திய மலை அருகே கிருஷ்ண திருதியை அன்று கிருத்திகை மாதம் விபவ வருடம் (கி.பி.69) இவர் முக்தி அடைந்தார்.

10. ஸ்ரீ சுரேஷ்வர்
(கி.பி.69-127)
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இவரது பூர்வாஸ்ரமப் பெயர் : மஹேஷ்வரர். தகப்பனார் பெயர்: ஈஸ்வர பண்டிதர். காஞ்சியில் ஆஷாட மாதம் அட்சய வருடம் (கி.பி.127) பௌர்ணமி அன்று முக்தியடைந்தார்.

11. ஸ்ரீ சிவானந்த சித்கனேந்திர சரஸ்வதி
(கி.பி.127-172)
இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமப் பெயர் ஈஸ்வரவது. தந்தை, உஜ்வலபட்டர். சிவானந்தர், தன் பெயருக்கேற்ப சிவா அத்வைதத்தில் ஈடுபாடுடையவர். சுக்லதசமி, ஜேஷ்டமாதம் விரோதி கிருதி அன்று (கி.பி.172) விருத்தாசலத்தில் முக்தியடைந்தார்.

12. ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி !
(கி.பி. 172-235)
பாலாறு அருகிலுள்ள சிறு கிராமத்தைச் சேர்ந்த வத்ஸ பட்டர் என்பவருடைய மகன். இவரது பூர்வாஸ்ரமப் பெயர் ஹரி. மடத்தின் பணிகளை ஒரு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு, எப்போதும் யோக மார்க்கத்திலேயே ஈடுபட்ட இவர், 63 ஆண்டுகள் காஞ்சி மடத்தின் தலைவராக இருந்தார். ஆனந்த வருடம் (கி.பி.235) ஆஷாட மாதம், சுக்ல நவமியன்று சேஷாசலம் சென்ற இவர், அங்கேயுள்ள ஒரு குகையில் நுழைந்தவர், திரும்பி வரவில்லை. அங்கேயே மறைந்துவிட்டார்.

காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக அருளாட்சி புரிந்த ஆசார்யார்களைப் பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அந்த அருள் நிறைந்த அணிவகுப்பு தொடர்கிறது.

13. ஸ்ரீசட்சித்கனேந்திர சரஸ்வதி
(கி.பி.235-273)

கெடில நதிக்கரையோர கிராமத்தைச் சேர்ந்தவர். பூர்வாஸ்ரமப் பெயர் சேஷையா. தகப்பனார் ஸ்ரீகர பண்டிதர். இவரும் தன் குருவைப் போலவே, மடத்தின் பணிகளை ஒரு சீடரிடம் ஒப்படைத்துவிட்டு, காஞ்சியின் சுற்றுப்புறங்களில் அவதூதராகச் சுற்றித் திரிந்தார். 32 ஆண்டுகள் இப்படிச் சுற்றித் திரிந்த இவர், மீண்டும் குருவைப் போலவே, காஞ்சி கோயிலுக்குள் நுழைந்தவர், அப்படியே ஒரு சிவலிங்கமாக மாறி விட்டார். இன்று காயாரோகணேஸ்வரர் கோயில் என்று அது அழைக்கப்படுகிறது. லிங்கத்தை இப்போதும் தரிசனம் செய்யலாம். கர வருடம் (கி.பி.272) மார்கசிரீஷ மாதம், சுக்ல பிரதிமையில் இது நடந்தது.

14. வித்யாகனர் I
(கி.பி.272-317)

ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். தந்தை, பாபண்ண சோமயாஜி. இயற்பெயர் நாயனா.

மந்திரசாஸ்திரத்தில் கைதேர்ந்தவர் இவர். மலையமலையில் உக்கிரத்-துடன் காணப்பட்ட பைரவமூர்த்தியை, சாந்தப்படுத்தியவர் இவர்.

கி.பி.317 தாது வருஷம், மார்கசீரிஷ மாதம் அமாவாசையன்று மலையமலைத் தொடரில் உள்ள அகத்திய மலையில் சித்தியடைந்தார்.

15.கீஷ்பதி கங்காதரர்
(கி.பி.317-329)

ஆந்திராவைச் சேர்ந்த அந்தணர். தந்தை, காஞ்சி பத்ரகிரி. இயற்பெயர், சுபத்ரர்.

அகத்திய மலைப்பகுதியில் இவர் சஞ்சரித்த போது அகத்திய முனிவரை தரிசித்து, அவரிடம் பஞ்ச தசாக்ஷரி மந்திர உபதேசம் பெற்றார்.

தன் பன்னிரண்டாவது வயதிலேயே பீடாதிபதியாகிவிட்ட இவர், பெரும் புலமையும் ஞானமும் மிக்கவர்.

கி.பி.329 சர்வதாரி வருஷம், சைத்ர மாதம் சுக்லப்பிரதமை நாளன்று அகஸ்திய மலைப் பகுதியில் சித்தியுற்றார்.

16. உஜ்வல சங்கரேந்திர சரஸ்வதி
(கி.பி.329-367)

இவர் மகாராஷ்டிர அந்தணர். இயற்பெயர் அச்சுத கேசவர். தந்தையார் கேசவ சங்கரர்.

இவர் சிறந்த அருளாளர். சீயாநந்தூர நாட்டு அரசனான குலசேகரனை தன் அருளால் பெரும் கவிஞனாக ஆக்கியவர். இமயம் முதல் குமரி வரை தல யாத்திரை செய்தவர். கி.பி.367-ல் அட்சய வருடம், சுக்லபட்சம், அஷ்டமி நாளில் காஷ்மீரில் உள்ள கலாபூரி என்ற ஊரில் சித்தியடைந்தார்.

17. பால குரு சதாசிவர்
(கி.பி.367-375)

காஷ்மீரில் அரசனாக இருந்த தேவமிச்ரன் என்பவரின் திருமகன் இவர். இவர் அவதரித்த சில வருடங்களில் இவரது தந்தை ஜைனமதத்தைத் தழுவி விட்டார். ஆனால் சதாசிவரோ சிறுவயதிலேயே வேதாந்தத்தில் பற்றுள்ளவராக இருந்தார். தந்தை, தன் மகனை மாற்ற எவ்வளவோ முயற்சித்தும் பலன் இல்லை. இரண்யனின் முயற்சிகள், பிரகலாதனிடம் பலிக்காதது போல தோல்வியடையவே, வெகுண்ட மன்னன், தன் மகன் என்றும் பாராது, சதாசிவரை சிந்து நதியில் வீசியெறிந்தான்.

நீரில் தத்தளித்த சிறுவனை பாடலிபுத்திரத்தைச் சேர்ந்த பூரிவசு என்பவன் மீட்டு, சிந்து நதியில் கிடைத்ததால் சிந்து தத்தன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். பின்னர், யாத்திரை வந்த உஜ்வலரிடம் ஒப்படைத்தான். அவர் அருளால் சிறுவன், ஸ்ரீபாலகுரு சதாசிவேந்திரர் ஆனார்.

தன் 17-ம் வயதில் காஞ்சி பீடாதிபதியான இவர், பாலிக, பௌத்த சமயத்தவரை, நம் நாட்டை விட்டு, புறத்தே செல்லுமாறு செய்தார்.

தன் 25-ம் வயதில் கி.பி.375 பவ ஆண்டு, ஜேஷ்ட மாதம் கிருஷ்ண பட்ச தசமியில் நாசிக் அருகில் உள்ள த்ரயம்பகத்தில் சித்தியடைந்தார்.

18.சுரேந்திரேந்திர சரஸ்வதி
(கி.பி.375-385)

மகாராஷ்டிராவைச் சேர்ந்த மதுராநாதர் என்பவரின் மகன் இவர். தன் யோகத் திறமையால் யோகி திலகர் என்று கூறப்பட்டவர். இயற்பெயர் மாதவர்.

துர்த்தீவி என்ற பிரபலமான நாத்திகனை தன் வாதத்தால் தோற்கடித்தவர் இவர். இதனைக் கேள்விப்பட்ட காஷ்மீர மன்னன் நரேந்திராதித்யன், தன் அரியணையையும் அரசுரிமையையும் சுரேந்திரரின் பாதங்களில் சமர்ப்பித்து வணங்கினான்.

கி.பி.385 தாரண ஆண்டு மார்கசீரிஷ மாதம் சுக்ல பிரதமையில் உஜ்ஜயினியில் சித்தியடைந்தார்.

19.வித்யாகனேந்திரர் II
(கி.பி.386-398)
ஸ்ரீகண்டர் என்ற இயற்பெயருடைய இவர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த உமேச சங்கரர் என்ற அந்தணரின் மகன். குழந்தைப் பருவத்திலிருந்தே இவருக்கு வெண்மேக நோய் இருந்தது. அதனால் தினமும் 1008 தடவை சூரிய நமஸ்காரம் செய்து, நோயிலிருந்து விடுதலை பெற்றார். எனவே சூரிய தாசர் என்று அனைவராலும் புகழப்பட்டார்.

மார்த்தாண்டவித்யாகனர் என்ற பெயரும் இவருக்குண்டு. தன் 18-ம் வயதில் காஞ்சி பீடாதிபதியான இவர், கி.பி. 398 ஹேவிளம்பி வருடம், பாத்ர பத மாதம், கிருஷ்ணபட்ச நவமியில் கோதாவரி நதி தீரத்தில் சித்தியடைந்தார்.

20. மூகசங்கரேந்திர சரஸ்வதி
(கி.பி.398-437)

இவர், வித்யாவதி என்னும் வானவியல் வல்லுநரின் மகன். பிறந்ததி-லிருந்தே பேசும் திறனற்று இருந்த இவர், காஞ்சி காமகோடி பீடாதிபதி திருவருளால் பேசும் திறன் பெற்று மூக பஞ்ச சதி என்ற 500 பாடல்களைப் பொழிந்தார்.

இவர் காலத்தில் காஷ்மீரின் மன்னனாக இருந்தவன் மாத்ருகுப்தன். பேரரசன் சகாரி விக்கிரமாதித்தன் சபையில் சந்தனம் அரைப்பவனாக இருந்து, சகாரியின் கருணையால் காஷ்மீர் மன்னனானவன். கவித்திறமையும் உடைய மாத்ருகுப்தன், மிகுந்த ஆணவத்துடன் யாரையும் மதிக்காமல் செயல்பட்டான்.

அவனை ஆட்கொள்ள விரும்பினார் மூகசங்கரர். மாத்ருகுப்தன் அரண்மனையில் ராமிலன் என்ற குதிரை ராவுத்தனும், மேது என்னும் யானைப் பாகனும் இருந்தார்கள். அரசனின் ஆணவம் அடங்க, அந்த இருவரும் பெரும் கவிஞர்களாக மாறுமாறு மூகசங்கரர் அனுக்ரஹம் செய்தார். அதன்படியே அவர்களும் ஆனார்கள். குதிரைக்காரனான ராமிலன், `மணிப்ரபா’ என்ற கவிதை நாடக நூலை எழுதினான். யானைப் பாகனான மேது, `ஹயக்ரீவ வதம்’ என்னும் நாடக நூலை இயற்றினான்.

அவர்கள் இருவரையும் பெரும் புலவர்களாக்கியது மூகசங்கரர்தான் என்பதை உணர்ந்த மன்னன் மாத்ருகுப்தன், மனம் மாறினான்.

ஆணவம் அழிந்து ஆசார்யாளின் திருவடியைப் பணிந்தான். `ப்ரவரசேனன்’ என்பவனை காஷ்மீர் மன்னனாக ஆக்கிவிட்டு, ஞானம் பெற்று, மூகசங்கரருடன் காசியாத்திரை மேற்கொண்டான்.

அதுமட்டுமல்ல, மூகசங்கரர், மாபெரும் சமுதாயப் பணியையும் புரிந்தார். காஷ்மீரில் ஜீலம் நதி முதல் சிந்து நதிக்கரை வரை பரவியிருந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் பொதுமக்கள் நலனுக்காக நெடுஞ்சாலை ஒன்றை மன்னனின் உதவியுடன் ஏற்படுத்தினார். நமது துரதிருஷ்டம், இன்று அது கிடைக்கவில்லை.

அற்புதங்கள் பலபுரிந்த மூகசங்கரர், கி.பி.437ல் தாது வருடம், ச்ரவண மாதம், பௌர்ணமி நாளில் கோதாவரி நதி தீரத்தில் சித்தியுற்றார்.


Narasimman Nagarajan10:59am May 10
ஸ்ரீ ஜெயேந்திர சுவாமி.
முதல் தரிசனம் (Jaya varusha importance)
நான் விழுப்புரத்தில் படித்தூக கொண்டிருக்கும் போது ஆசார்ய ஸ்வாமிகள் (மகா ஸ்வாமிகள்) ஸ்ரீ காஞ்சிபுரம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்ததுக்காக வந்து கொண்டிருந்தார்கள். அப்போதுதான் நான் அவர்களை முதன் முறையாகத் தரிசித்தேன். 'ஒவ்வொரு குடும்பதிலிருந்தும் ஒரு மாணவன் வேதம் படிப்பதற்கு வரவேண்டும்', என்று சொன்னார்கள். அதன்படி என்னுடைய பெற்றோர் ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளை வணங்கி, "என் பையனுக்குப் பூணூல் போட்டு வைக்க வேணும். இவனையும் வேதம் படிப்பதற்குத் தயார் செய்ய வேண்டும்," என்று தெரிவித்துக் கொண்டார்கள்.
ஆசார்ய ஸ்வாமிகள்,, "காஞ்சிபுரத்தில் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்
கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அங்கே அழைத்து வந்து விடு.
அங்கேயே இந்த மாணவனுக்கு வேத பாடத்தை ஆரம்பித்து வைக்கலாம்," என்று ஆருளாசி வழங்கினார்கள்.
இதுதான் முதல் சந்திப்பு.
ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு அடுத்த முகூர்த்த வேளையில் ஸ்ரீ
ஸ்வாமிகளுடைய பூர்வாசிரம கடைசி சகோதரர் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி சாஸ்திரிகள் அவரை வைத்து அந்த அம்மன் சன்னதியிலேயே ஸ்வாமிகள் பூஜை செய்யும் சன்னதியிலேயே - வேத பாட சிட்ஷையை ஆரம்பித்து வைத்தார்கள்.
திருவிடை மருதூர்
பிறகு திருவிடை மருதூருக்கு என்னை அனுப்பி வைத்தார்கள், என்னுடைய ஆசிரியர் ஸ்ரீ கிருஷ்ண மூர்த்தி சாஸ்திரிகளுடன் சிதம்பரத்துக்கு சென்று ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசித்துவிட்டு- திருவிடைமருதூர் போய்ச் சேர்ந்தேன்,
என் பெற்றோர் விழுப்புரத்திலேயே தங்கிவிட்டார்கள் பதின்மூன்றாம் வயதில் என்னுடைய 13வது வயது வரை திருவிடைமருதூரில் வேதம் படித்து வந்தேன். ஆசார்ய சுவாமிகள் காஞ்சிபுரம் யாத்திரையை எல்லாம் முடித்துக் கொண்டு திரும்பவும் திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்கள்.சுமார் ஒரு வருடகாலம் ஆசார்ய சுவாமிகள் அங்கே தங்கயிருந்தார்கள்.
நான் வேதம் படிப்பதைப் பூர்த்தி செய்கிற நேரம். அப்படிப்பட்ட வேளைகளில்என் பெயர், மற்றும் ஊர், படித்த படிப்பு பற்றி எல்லாம் அடிக்கடி விசாரிப்பார்கள்.
ஒருநாள் சுவாமிகள் திருவிடைமருதூருக்கு அருகில் உள்ள வேதாந்தபுரம்என்ற ஊருக்குச் சென்றிருந்தார்கள். அங்கே ஸ்ரீ போதேந்திர சுவாமிகள் என்ற பெயர் கொண்ட பெரிய மகானின் சமாதி உள்ளது. காஞ்சி காமகோடி பீடத்தை அலங்கரித்த பெரியவரின் சமாதி அது. ஆசார்ய சுவாமிகள் அங்கு அடிக்கடிசென்று விடுவார்கள். நானும் சுவாமிகளுடன் சென்றேன்.
சுவாமிகளின் எண்ணம்
அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தில் ஆச்சார்ய சுவாமிகள், திடீரென்று ஒரு
நாள், 'ஸ்ரீ மடத்துக்கு வருகிறாயா?' என்று என்னிடம் கேட்டார். 'நான்தான் உங்களுடன் வந்து கொண்டிருக்கிறேனே,' என்ற சொன்னேன்.
'அப்படி அல்ல, என்னைப்போல நீயும் வருகிறாயா?' என்று கேட்டார்.
அப்போதுதான் சுவாமிகளின் மனத்தில் என்ன இருந்தது என்று புரிந்து
கொண்டேன். 'என் பெற்றோர்களைக் கேட்க வேண்டும்,' என்று சொன்னேன்.
உடனே என் பெற்றோர்களையும் ஊரிலிருந்து வரவழைத்தார்கள்.
அவர்களையும் கேட்டார்கள்.
பாக்கியம்
'சுவாமிகள் வேதம் படிப்பதற்கு பையனை விட வேண்டும் என்று
சொன்னீர்கள். அப்படியே செய்தோம். இப்போது ஸ்ரீ மடத்திலேயே
சுவாமிகளாகச் சேர்க்க விருப்பம் கொண்டிருக்கிறீர்கள். தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்," என்று என் பெற்றோர் தெரிவித்தனர்.
ஆகவே, ஆசார்ய சுவாமிகள் எப்போது என்னை விழுப்புரத்திலே
கண்டார்களோ, அப்போது என்னை இந்தப் பீடத்திற்கு வாரிசாக
வைக்கவேண்டும் என்ற எண்ணம் உதித்து விட்டது என்பது புரிந்தது.
பதினான்காம் வயதில் என்னுடைய பதினான்காம் வயதில் ஸ்ரீ மடத்துக்கு நான் வர வேண்டும் என்று சுவாமிகள் தீர்மானித்தார்கள். அப்போதிலிருந்தே ஸ்ரீ மடத்தில் கற்க வேண்டிய பாடங்களை யெல்லாம் கற்கும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள்.
பின்னர் திருச்சிக்குச் சென்று அங்கு அருகில் உள்ள திருவானைக்கோவிலில் படித்தேன். அங்கேயும் ஸ்ரீ மடத்துக்கு வேண்டிய பாடங்களையே கற்றேன்.
பதினேழாம் வயதில்
பதினேழு வயது வரை இம்மாதிரியான பாடங்களையே கற்று வந்தேன்.
சுவாமிகள் ஒரு நாள் என்னை அழைத்து, 'அகில இந்திய யாத்திரை சென்று வா',என்று உத்தரவிட்டார்கள். என் பெறறோருடன் ரயில் மூலமாக இந்தியாவில் எல்லா ஊர்களுக்கும் ஷேத்திரங்களுக்கும் சென்று வந்தேன்,
பதினெட்டு வயது முடிந்தவுடன் "என்னுடனேயே கொஞ்சநாள் இரு" என்று காஞ்சிபுரத்திலேயே தன்னுடன் வைத்துக் கொண்டார்கள். ஒராண்டு காலம் கழிந்தது.
பத்தொன்பதாம் வயதில்
எனக்குப் பத்தொன்பது வயது தொடங்கியதும், காஞ்சிபுரத்திலேயே
என்னைச் சுவாமிகளாகத் தயாராக்கினார்கள்.
இப்படித்தான் பெரிய ஆசார்ய சுவாமிகளுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு,
ஸ்ரீ மடம் வரைக்கும் வந்து என்னையும் சுவாமிகளாக ஆக்கிய வரை நேர்ந்த ஒரு நிலை.
பெயர் சூட்டல்
எனக்கு என்ன பெயர் சூட்டலாம் என்பதற்காக, சன்னியாச ஆசிரமம்
ஏற்றுக்கொள்வதற்கு முதல் நாள் புலவர்களையும் பண்டிதர்களையும் கூட்டி என்னையும் கூடவே வைத்துக் கொண்டு ஆசார்ய சுவாமிகள் ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள்.
சந்திரசேகரன், மகாதேவன் என்கிற பெயர்கள் ஐந்தாறு தலை முறையாக இந்தப் பீடத்தில் மாற்றி மாற்றிச் சூட்டப்பட்டு வந்தன.
அதன் தொடர்பாக இருக்கலாமா, அல்லது முற்றிலும் புதிதாக வேறு பெயரா என்பது பற்றித்தான் ஆலோசனை.
நான் ஸ்ரீ மடத்துக்கு மாசி மாதத்தில் வந்து சேர்ந்தேன். அடுத்த சித்திரை,
வைகாசி மாதங்களில் பெரியவர்களுடைய பிறந்த தினம். அவர்களுடைய அறுபது ஆண்டு நிறைவு பெறுகிற ஆண்டாகவும் அமைந்தது. அந்த ஆண்டின்
பெயர் ஜெய.
சந்திரனுடைய நிலையை அனுசரித்து வரக்கூடிய சாந்திரமான முறைப்படி மாசி மாதக் கடைசியிலிருந்து ஸ்ரீ ராமநவமியைத் தொட்டு, தெலுங்கு வருஷப்
பிறப்பிலிருந்தே ஜெய வருஷம் வந்துவிடும். சூரிய சஞ்சார முறைப்படி தமிழ் வருடப் பிறப்பு, பதினைந்து நாட்கள் தள்ளி வரும்.
இந்தச் சூழலில் பெயர் சூட்டல் பற்றிய ஆலோசனையில் 'ஜெய' என்கிற
பெயர் நினைவில் நின்றது.
'ஜெய' ஆண்டுக்கு மற்றொரு சிறப்பு உண்டு. பெரியவர்கள் பிறந்த ஆண்டு அது. ஆகவே ஜெய என்கிற பெயரை முன்வைதது எனக்கு
ஜெயேந்திர சரஸ்வதி
என்ற பெயர் சூட்டினார்கள்.அந்த ஆண்டு தெலுங்கு வருஷப் பிறப்பு, ஸ்ரீ ராம நவமி விழாக்கள் எல்லாம் விமரிசையாக நடந்தன. ஸ்ரீராமநவமியை விசேஷமாகக் கொண்டாடுவார்கள். பத்து நாட்கள் வேள்விகள் நடத்திப் பூஜை செய்து ஸ்ரீராம
பட்டாபிஷேகம் கோலாகலமாக நடைபெறும். ஸ்ரீ மடத்திலும் விசேஷப் பூஜை நடைபெற்றது. தற்போதுள்ள பெரியகாஞ்சி மடத்திலேயே ஸ்ரீராம நவமி விழாவின் போது பட்டாபிஷேக தினத்தன்று, ஸ்ரீராமருக்கு அபிஷேகம் செய்கிற இடத்திலேயே என்னையும் உட்கார வைத்தார்கள். அந்த ஜலம் விழும் இடத்திலேயே நானும் உடர்கார்ந்திருந்ததேன். பெரிய சுவாமிகள் தன் கையினாலேயே ஸ்ரீ ராமருக்கு அபிஷேகம் செய்கிற போது அடியேன் அங்கே உட்கார்த்தி வைக்கப்ட்டு அந்த ஜலம் என் தலையில் விழும்படியாகச் செய்தார்கள்.
பட்டினப் பிரவேசம்
ஆசாரிய சுவாமிகள் ஸ்ரீராம பட்டாபிஷேக ஜலத்தை என்றைக்குக் தன்
கருணையால் என் தலைமீது விழச் செய்தார்களோ, அன்றைக்கே ஸ்ரீமடத்தின் பீடாதிபதியாக என்னையும் ஆக்கி விட்டார்கள். ஸ்ரீமடத்துக்கு வந்து பத்துப் பதினைந்து தினங்களுக்குள் ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்த கையோடு பெரியவர்கள் தன் திருக்கரங்களால் எனக்கும் பட்டாபிஷேகம் செய்வித்து அன்று மாலையே காஞ்சயின் நான்கு ராஜ வீதிகளிலும் பட்டினப் பிரவேசம் என்று சொல்லுவார்கள் - என்னை ஊர்வலமாக வரச் செய்தார்.
அதாவது நான் வந்த பதினைந்து நாளுக்குள்ளேயே ஸ்ரீமடத்தின் முழுப்
பொறுப்பையும் எனக்குக் கொடுத்துவிட்டார்கள்.
பாக்கியம்
காஞ்சிபுரம் நகரப் பகுதியில் இருப்பதால் நிறையக் கூட்டம் சேருகிறது
என்பதால் பக்க்ததில் பாலாற்றங்கரை அருகே ஒரிக்கை என்ற கிராமத்தில் பெரிய
கொட்டகையாக நிர்மாணித்து, பிரத்யேகமாக இரண்டு வீடுகளையும் அமர்த்தி அங்கயே பூஜை செய்யவும் நான் மேற்கொண்டு படிக்க வேண்டிய பாடாந்திரங்களுக்கும் பெரிய சுவாமிகள் ஏற்பாடு செய்து விட்டார்கள்.
அந்தச் சமயத்தில்தான் பெரிய சுவாமிகளுக்கு அறுபது பிராயம்
பூர்த்தியானது. சஷ்டியப்த பூர்த்தி என்று அதைச் சொல்லுவார்கள்.
அந்தச் சஷ்டியப்தப் பூர்த்தி வைபவத்தையும் நானே பெரிய சுவாமிகளுக்குச் செய்யம் பாக்கியம் எனக்குக் கிடைத்தது.
அவர் சன்னியாசியாக இருந்தாலும் இந்த அறுபது ஆண்டு நிறைவு
விழாவை விசேஷ முறையில் வேள்விகள் நடத்தி, வேத விற்பன்னர்கள் முன்னிலையில் ஒரு புனிதமான நிகழ்ச்சியாகக் கொண்டாடினோம். எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் ஸ்ரீராமர் பட்டாபிஷேகத்தன்று என் தலையிலே அவர் ஜலம் விட்டார்கள். அவருடைய சஷ்டியப்த பூர்த்தி விழாவின்போது எலலாக் கலசங்களையும் வைத்துப் பூஜை பண்ணி ஹோமங்கள் செய்து அந்த
ஜலத்தை அவருக்கு அபிஷேகம் செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அப்படி அவருடைய அறுபதாம் ஆண்டு விழாவை ஒரு வைபவமாகக் கொண்டாடினோம். அன்று முதல் அவரோடு இணைந்து பாடம் படிப்பது- பூஜை செய்வது, மடத்தை நிர்வாகம் செய்வது போன்ற எல்லா விஷயங்களிலுமே கூடவே இருந்து, பேச்சுக் கொடுத்து 1970ம் ஆண்டு வரை அவர் கூடவே இருந்து ராத்திரி வரை எல்லாம் செய்திருக்கிறேன்.
1970ம் ஆண்டு முதல் அவர் கொஞ்சம் தனிமையாக இருக்க வேண்டும்
என்ற விரும்பி சில கோயில்களிலே அல்லது குளத்தங்கரைகளிலே ஆசிரமம் வைத்துக் கொண்டிருந்தார்கள்.
1976ம் ஆண்டுக்கும் பிறகு ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு கொஞ்சம்,
மகாராஷ்டிரம் கொஞ்சம் என்று 1980ம் ஆண்டு வரை 4 வருடங்கள் கொஞ்சம் தனியாக யாத்திரை செய்தார்கள். 1980ம் ஆண்டு சதாராவில் நான் அவர்களைப் பார்த்த பொழுது, 'தங்களுக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது. இனி யாத்திரை எல்லாம் செய்ய வேண்டாம். திரும்பி வந்து விடுங்கள்,' என்று அவரிடம் பிரார்த்தித்துக் கொண்டேன். அதன்படி அவர்களும் காஞ்சிபுரத்தை 83ம் ஆண்டு
வந்தடைந்தார்கள்.
83ம் வருடம்
அதற்குள் நான் தனியாக இருந்து மடத்தினுடைய பூஜைகள், காரியங்கள்
எல்லாவற்றையும் நிர்வகிக்க வேண்டியது சிரமமாக இருந்ததனால், பெரியவரின் அனுமதியோடு பாலபெரியவரையும் தயாராக்கி, சிஷ்யராக்கி, கூட வைத்துக்கொண்டு பெயரிவரையும் அழைத்துக் கொண்டு 83ம் ஆண்டு வந்து சேர்ந்தோம்.
அப்போது முதல் அவர் ஸ்ரீ மடத்திலேயே தங்கி, எல்லோருக்கும் அருள்
பாலித்துக் கொண்டிருந்தார்க்.ள மற்ற மடங்களுடைய பீடாதிபதிகளுக்கும் பெரியவருடைய நிலைக்கும் ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. வெறும்பீடத்தில் உட்கார்ந்து கொண்டு பீடாதிபதியாக இருந்து ஆசீர்வாதம் செய்வது மட்டும் அல்லாமல், தனிமனிதனுடைய வாழ்க்கையிலே எத்தனை சுக துக்கங்கள்
இருந்தாலும், அவற்றிலும் பங்கு கொண்டு, அவர்களுக்கும் ஆசீர்வதித்து, அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு பெருமை பெரியவருக்கு உண்டு.
ஆகவேதான் இன்றைக்குக் கூடப் பலரும் விம்மி அழுதுகொண்டு
கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய குடும்பத்தைச் சார்ந்தஒருவரை இழந்துவிட்ட நிலையிலே அவர்களெல்லாம் வருத்தப்படுகிறார்கள்.
தனிச்சிறப்பு
பொதுவான ஒரு பீடாதிபதியாக இருந்திருந்தால், சாமான்யமாக
இருந்திருக்கும் ஆனால் தனிப்பட்ட மனிதனுடைய ஆயிரக்காணக்கானவர் வாழ்ககையிலே அவர் ஊன்றிப் போயிருருந்த காரணத்தால், அத்தனை பேருக்கும் மனத்தில் பாதிப்பு ஏற்பட்டதனால், இது ஒரு நாடு தழுவிய துக்கமாக இருக்கிறது. இது எந்த ஒரு பீடாதிபதிக்கும் இல்லாத தனிச் சிறப்பாக இருக்கிறது.
வழிகூட்டிஅந்தப் பழக்கங்களெல்லாம் அவரிடம் இருந்து வந்ததால், என்னுடைய வாழ்க்கையிலே நானும் பொதுமக்களோடு இணைந்து, பழகி, கஷ்டப்படுகிறவர்கள், துன்பப்படுகிறவர்கள், பின்தங்கியவர்கள் எல்லோரும் வருத்தப்படும் நிலையை உணர்ந்து, அவர்களுக்கு வேண்டிய நன்மையைச் செய்ய ஆர்வமும் ஊக்கமும் ஏற்பட்டது. அதற்கு வழிகாட்டி பெரியவர்.
அந்த வழியிலே நின்றுஅதை வளர்ந்தவன் என்ற முறையிலே நான் இருந்த பணிகளைச் செய்தேன்,அவர் எது செய்தாலும் சங்கல்பம் செய்வார். சங்கல்பம் 'இச்சா' சக்தி என்பார்கள். அதுபோல் இச்சா சக்தியாக, சங்கல்ப மூர்த்தியாக விளங்கினார். நான் கிரியா சக்தியாகச் செய்து காட்டினேன். இதுதான் எங்கள் இரண்டு பேருக்கள் இருந்த ஒரு நிலை.அப்படி, இந்தப் பீடத்திலே வெறும் பீடாதிபதியாக இல்லாமல், பொது
மக்களுக்காகவே, ஜனங்களுக்ககாகவே, தர்மத்திற்காகவே, ஆஸ்திகத்திற்காகவே, ஆன்மிகத்திற்காகவே அதை வளர்ப்பதற்காக ஏற்பட்டது இந்தப் பீடம். அந்த வகையில் அவர்கள் போட்ட விதை, அவர்கள் வளர்த்த செடி இன்று மரமாக வளர்வதற்கு நான் உறுதுணையாக இருந்து இந்தப் பணிகளைச் செய்து வருகிறேன்.
பணிகள்
இந்த மரமானது காயாகக் காய்த்துப் பழமாகக் கனிவதற்கு, வந்து
கொண்டிருக்கும் வேளையிலே திடீரென்று அவர் உடல் மறைந்து,
லட்சக்கணக்கானவர்கள் பாதிப்படைந்தது ஒரு புறம் இருக்க, சொந்த முறையில்,அவர் இருக்கிறார்கள் என்ற பலத்திலே நான் பல பணிகைளச் செய்தேன். அவர் நினைத்ததை என்னால் செய்ய முடிந்தது.
ஆகவே, ஒரு தனிமனிதனுடைய வாழ்க்கையிலே எவ்வளவு சுக துக்கங்கள் வந்தாலும், அவற்றையும் போக்க முயற்சி செய்வது என்பதுதான் இந்தப் பாரம்பரியத்தில் வந்த ஒரு விசேஷம். எத்தனையோ மகான்கள் பிறந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம்
பிடாதிபதியாக இல்லை. பல பீடாதிபகள் இருந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் மகான்களாகவும் இல்லை. பலர் மகான்களாகவும் இருந்திருக்கிறார்கள்
பீடாதிபதிகளாகவும் இருந்திருக்கிறார்கள். ஆனால், துயரங்களைத் துடைத்தெறிந்து மக்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலே மேம்படுத்திக் கொடுத்து குறைவு. நம்முடைய பெரியரவர்கள் தான், மடாதிபதியாகவும் இருந்து, மகாத்மாகவும் இருந்து, தனிமனிதர்கள் வாழ்ககையிலும் ஓர் உயர்ந்த நிலையை உண்டாக்கியர், அந்தப் பாரம்பரியத்தைக் காத்து வர நாங்களும் முயற்சி எடுத்ததனால், அதே முறையிலே வளர்த்துக் கொண்டுவருகிறோம்.
குரு அனுக்கிரகம்
, நம்முடைய பாரம்பரியத்தையும், நம்முடைய சம்பிரதாயத்தையும், நம்முடைய நிலையையும் மறவாமல் எப்படி அநாதியாக ஒரு கடவுள் இருக்கிறாரோ, பாரம்பரியமாக ஒர் கடவுள் இருக்கிறாரோ, அதுபோல் பாரம்பரியமாக ஒரு பீடம் உண்டு. பாரம்பரியமாகப் பீடாதிபதிகள் வருகிறார்கள் என்ற உணர்வோடு நாமெல்லாம் குரு பக்தி செய்து,குரு அனுக்ரகத்தின் மூலமாக நம் வாழ்க்கையை நல்வழிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
நடுநிலை
ஓரளவு உயர்ந்த நிலை அடைந்தவர்களைப் பற்றிச் சிலருக்குப் பலவிதமான கருத்துக்கள் எல்லாம் தோன்றி, பலவிதமான சர்ச்சைகளெல்லாம் வருவது இயற்கை. எந்த ஒரு மனிதனாக இருந்தாலும் சரி, சமயத் துறையாகட்டும், வேறு துறையாகட்டும் எந்தத் துறையானாலும், ஒரளவு வளர்ந்த மனிதன் பற்றிச் சர்ச்சை செயவது, பேசுவது என்பது பழக்கமாகிவிட்ட உலகம். அதனால் இன்றைக்கும் ஒரு சிலருக்கு அப்படி எழுத வேண்டும். இப்படி எழுதவேண்டும். பேச
வேண்டும் என்று இருக்கலாம். ஆனால் அதைப்படிப்பவரோ, கேட்பவரோ அதற்கு இடம் கொடுக்காமல், நம்முடைய பாரம்பரியம், நம்முடைய தெய்வீகம்,
நம்முடைய ஆன்மீகம், நம்முடைய குரு என்ற அந்த ஒரு உணர்வோடு
இருந்துகொண்டு, நல்லதை மட்டும் எடுத்துக் கொண்டு தீயவை எல்லாம் விட்டுவிட்டு, நடுநிலைப் பாதையில் நிற்க வேண்டுமாய் அனைவரையும் ஆசீர்வதிக்கிறோம்.



Narasimman Nagarajan10:56am May 10
‘வினைநீங்கு பதிகம்
காஞ்சிபுரத்தில் இருந்து ‘ஓரிக்கை’ வழியாக, உத்திரமேருர் செல்லும் வழியில் அமைந்துள்ளது ‘திருமாகறல்.’

சேலம் கி.சுப்பராயப்பிள்ளை என்ற ஒரு சிவபக்தர் தனது 84வது வயதில் கீழே விழுந்ததில், அவரது முழங்கால் எலும்பும், இடுப்பெலும்பும் முறிந்த நிலையில் பெரிய மருத்து வர்கள் எல்லாம், குணப்படுத்த இய லாது என்று கைவிட்டுவிட்டனர். அவர் திருமுறையில் நூல்சாத்திப் பார்த்ததில், ‘வினைநீங்கு பதிகம்’ ஓதச் சொல்லி வழிகாட்டல் கிடைத்ததாம். அதன்படியே அவரும் அதை ஓதி வழிபட்டதில், ஓராண்டு...க்குள்ளேயே எலும்புகள் கூடி - வாசியாகி, மீண்டும் நடக்கத் தொடங்கினாராம். இதுபற்றிய விவரம், தென்னிந்திய சைவ சித்தாந்த சங்க 1960ம் ஆண்டு வெளியீடு ஒன்றில் காணப்படுகிறது.

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகள் மாடமலி நீடுபொழில் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணீ செஞ்சடையினான்
செங்கண்விடை அண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீரும்உடனே.

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவின் எய்தியழகார்
மலையின்நிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல் நுனைய சூலம்வலன் ஏந்திஎரி புன்சடையினுள்
அலைகொள்புனல் ஏந்துபெரு மானடியை ஏத்தவினை அகலும்மிகவே.

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்கள் ஏத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை ஏத்தவினை மறையும்உடனே.

இங்குகதிர் முத்தினொடு பெண்மணிகள் உந்திஎழின் மெய்யுளுடனே
மங்கையரும் மைந்தர்களும் மன்னுபுனல் ஆடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையினான் அடியையே
நுங்கள்வினை தீரமிக ஏத்திவழி பாடுநுக ராஎழுமினே.

துஞ்சுநறு நீலமிருள் நீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கள்நட மாடமலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன்வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதன்அடி யாரைநலி யாவினைகளே.

மன்னுமறை யோர்களோடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சிஇமை யோரில்எழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைகள் ஒல்கஉயர் வானுலகம் ஏறல்எளிதே.

வெய்யவினை நெறிகள்செல வந்தணையும் மேல்வினைகள் வீட்டல்உறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளான்எழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனிஅழகார்
ஐயனடி சேர்பவரை அஞ்சியடை யாவினைகள் அகலுமிகவே.

தூசுதுகில் நீள்கொடிகள் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்கள் ஓதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி ஈசனென ஏத்தவினை நிற்றலில் போகும்உடனே.

தூயவிரி தாமரைகள் நெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலும் ஓசைபயில் மாகறலுளான்
சாயவிரல் ஊன்றியஇ ராவணன் தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுகழ் ஏத்தும்அடி யார்களைவினை ஆயினவும் அகல்வதெளிதே.

காலினல பைங்கழல்கள் நீள்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலும்மல ரானும்அறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலும்எரி தோலும்உரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை அடிகள்அடி யாரைஅடை யாவினைகளே.

கடைகொள்நெடு மாடமிக ஓங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழில் மாகறலு ளான்அடியையே
உடையதமிழ் பத்தும்உணர் வாரவர்கள் தொல்வினைகள் ஒல்கும்உடனே.


Narasimman Nagarajan10:55am May 10
ஸ்ரீ ஸௌந்தர்யலஹரி
ஸிவ : ஸக்த்யா யுக்தோ யதி பவதி ஸக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குஸல: ஸ்பந்திது - மபி|
அதஸ் -த்வா - மாராத்த்யாம் ஹரி - ஹர -விரிஞ்சாதிபி -ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கத - மக்ருத - புண்ய: பிரபவதி || 1 ||
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண - பங்கேருஹ - பவம்
விரிஞ்சி: ஸஞ்சிந்வந் விரசயதி லோகா - நவிகலம் |
வஹத்யேநம் ஸெளரி : கதமபி ஸஹஸ்ரேண ஸிரஸாம்
ஹர: ஸம்க்ஷுத்யைநம் பஜதி பஸிதோத்தூளந -விதிம் || 2 ||
அவித்யாநா - மந்தஸ்திமிர - மிஹிர - த்வீப - நகரீ
ஜடாநாம் சைதந்ய - ஸ்தபக - மகரந்த ஸ்ருதிஜரீ |
தரித்ராணாம் சிந்தாமணி - குணநிகா ஜந்மஜலதௌ
நிமக்நாநாம் தம்ஷ்ட்ரா முரரிபு - வராஹஸ்ய பவதி || 3 ||
த்வதந்ய: பாணிப்ப்யா - மபயவரதோ தைவதகண :
த்வமேகா நைவாஸி ப்ரகடித - வராபீத்யபிநயா |
பயாத் த்ராதும் தாதும் பலமபி ச வாஞ்ச்சா - ஸமதிகம்
ஸரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபனௌ || 4 ||
ஹரிஸ் - த்வா - மாராத்த்ய ப்ரணத - ஜந - ஸௌபாக்ய - ஜநநீம்
புரா நாரீ பூத்வா புரரிபுமபி க்ஷோப - மநயத் |
ஸ்மரோSபி த்வாம் நத்வா ரதி - நயந - லேஹ்யேந வபுஷா
முநீநா - மப்யந்த : ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம் || 5 ||
தநு: பௌஷ்பம் மௌர்வீ மதுகரமயீ பஞ்ச விஸிகா:
வஸந்த: ஸாமந்தோ மலயமரு - தாயோதந - ரத :
ததாப்யேக: ஸர்வம் ஹிமகிரிஸுதே காமபி க்ருபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதித - மநங்கோ விஜயதே || 6 ||
க்வணத் காஞ்சீ - தாமா கரிகலப - கும்ப - ஸ்தந - நதா
பரிக்ஷீணா மத்த்யே பரிணத - ஸரச்சந்த்ர - வதநா |
தநுர் - பாணாந் பாஸம் ஸ்ருணி - மபி ததாநா கரதலை :
புரஸ்தா - தாஸ்தாம் ந: புரமதிது - ராஹோ - புருஷிகா || 7 ||
ஸுதா - ஸிந்தோர் - மத்யே ஸுரவிடபி - வாடீ - பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவநவதி சிந்தாமணி க்ருஹே
ஸிவாகாரே மஞ்சே பரமஸிவ - பர்யங்க - நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா : கதிசந சிதாநந்த - லஹரீம் || 8 ||
மஹீம் மூலாதாரே கமபி மணிபூரே ஹுதவஹம்
ஸ்த்திதம் ஸ்வாதிஷ்ட்டாநே ஹ்ருதி மருத - மாகாஸ - முபரி |
மநோ S பி ப்ரூமத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரஸே || 9 ||
ஸுதாதாராஸாரைஸ் - சரணயுகலாந்தர் - விகலிதை :
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ புநரபி ரஸாம்நாய மஹஸ: ||
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜகநிப - மத்த்யுஷ்ட - வலயம்
ஸ்வமாத்மாநம் க்ருத்வா ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி || 10 ||
சதுர்ப்பி: ஸ்ரீ கண்டை: ஸிவ யுவதிபி: பஞ்சபிரபி
ப்ரபிந்நாபி: ஸம்போர் - நவபிரபி மூலப்ரக்ருதிபி: |
சதுஸ்சத்வாரிம்ஸத் - வஸுதல - கலாஸ்ர - த்ரிவலய -
த்ரிரேகாபி: ஸார்த்தம் தவ சரணகோணா: பரிணதா: || 11 ||
த்வதீயம் ஸௌந்தர்யம் துஹிநகிரிகந்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதமபி விரிஞ்சி - ப்ரப்ருதய : |
யதாலோகௌத்ஸுக்யா - தமரலலநா யாந்தி மநஸா
தபோபிர் - துஷ்ப்ராபாமபி கிரிஸ - ஸாயுஜ்யபதவீம் || 12 ||
நரம் வர்ஷீயாம்ஸம் நயநவிரஸம் நர்மஸு ஜடம்
தவாபாங்காலோகே பதித - மநுதாவந்தி ஸதஸ:
கலத்வேணீபந்தா: குசகலஸ - விஸ்ரஸ்த - ஸிசயா
ஹடாத் த்ருட்யத் - காஞ்ச்யோ விகலித - துகூலா யுவதய: || 13 ||
க்ஷிதௌ ஷட்பஞ்சாஸத் - த்விஸமதிக - பஞ்சாஸ - துதகே
ஹுத்தாஸே த்வாஷஷ்டிஸ் சதுரதிக பஞ்சாஸ - தநிலே |
திவி த்விஷ் ஷட்த்ரிம்ஸந் - மநஸி ச சதுஷ்ஷஷ்டிரிதி யே
மயூகாஸ் - தேஷா - மப்யுபரி தவ பாதாம்புஜ - யுகம் || 14 ||
ஸரஜ் - ஜ்யோத்ஸ்நா ஸுத்தாம் ஸஸியுத - ஜடாஜூட - மகுடாம்
வர - த்ராஸ - த்ராண -ஸ்படிக கடிகா - புஸ்தக - கராம் |
ஸக்ருந் நத்வா ந த்வா கதமிவ ஸதாம் ஸந்நிதததே
மது - க்ஷீர - த்ராக்ஷா - மதுரிம -துரிணா: பணிதய: || 15 ||
கவீந்த்ராணாம் சேத: கமலவந பாலாதப - ருசிம்
பஜந்தே யே ஸந்த: கதிசிதருணா - மேவ பவதீம் |
விரிஞ்சி - ப்ரேயஸ்யாஸ் - தருணதர - ஸ்ருங்காரலஹரீ
கபீராபிர் - வாக்பிர் - விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ || 16 ||
ஸவித்ரீபிர் - வாசாம் ஸஸிமணி - ஸிலா - பங்க - ருசிபிர்-
வஸிந்யாத்யாபிஸ் - த்வாம் ஸஹ ஜநநி ஸஞ்சிந்தயதி ய: |
ஸ கர்த்தா காவ்யாநாம் பவதி மஹதாம் பங்கிருசிபிர்
வசோபிர் - வாக்தேவீ - வதந - கமலாமோத - மதுரை : || 17 ||
தநுச்சாயாபிஸ் - தே தருண - தரணி - ஸ்ரீ ஸரணிபிர் -
திவம் ஸர்வா - முர்வீ - மருணிம - நிமக்நாம் ஸ்மரதி ய : |
பவந்த்யஸ்ய த்ரஸ்யத் - வந ஹரிண - ஸாலீந - நயநா :
ஸஹோர்வஸ்யா வஸ்யா: கதிகதி ந கீர்வாண - கணிகா : || 18 ||
முகம் பிந்தும் க்ருத்வா குசயுக - மதஸ் தஸ்ய தததோ
ஹரார்த்தம் த்யாயேத் யோ ஹரமஹிஷி தே மந்மதகலாம் |
ஸ ஸத்ய : ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதிலகு
த்ரிலோகீ மப்யாஸு ப்ரமயதி ரவீந்து - ஸ்தநயுகாம் || 19 ||
கிரந்தீ - மங்கேப்ப்ய : கிரண - நிகுரும்பாம்ருதரஸம்
ஹ்ருதி த்வா மாதத்தே ஹிமகர - ஸிலா - மூர்த்திமிவ ய :|
ஸ ஸர்ப்பாணாம் தர்ப்பம் ஸமயதி ஸகுந்தாதிப இவ
ஜ்வரப்லுஷ்டாந் த்ருஷ்ட்யா ஸுகயதி ஸுதாதார ஸிரயா || 20 ||
தடில்லேகா - தந்வீம் தபந - ஸஸி - வைஸ்வாநர - மயீம்
நிஷண்ணாம் ஷண்ணா - மப்யுபரி கமலாநாம் தவ கலாம் |
மஹாபத்மாடவ்யாம் ம்ருதித - மல மாயேந மநஸா
மஹாந்த : பஸ்யந்தோ தததி பரமாஹ்லாத - லஹரீம் || 21 ||
பவாநி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சந் கதயதி பவாநி த்வமிதி ய : |
ததைவ த்வம் தஸ்மை திஸஸி நிஜ - ஸாயுஜ்ய - பதவீம்
முகுந்த - ப்ரஹ்மேந்த்ர - ஸ்புட - மகுட - நீராஜித -பதாம் || 22 ||
த்வயா ஹ்ருத்வா வாமம் வபு - ரபரித்ருப்தேந மநஸா
ஸரீரார்த்தம் ஸம்போ - ரபரமபி ஸங்கே ஹ்ருதமபூத் |
யதேதத் த்வத்ரூபம் ஸகல - மருணாபம் த்ரிநயநம்
குசாப்யா - மாநம்ரம் குடில - ஸஸி - சூடால - மகுடம் || 23 ||
ஜகத்ஸூதே தாதா ஹரி-ரவதி ருத்ர : க்ஷபயதே
திரஸ்குர்வந் - நேதத் ஸ்வமபி வபு - ரீஸஸ் - திரயதி |
ஸதா - பூர்வ : ஸர்வம் ததித - மநுக்ருஹ்ணாதி ச ஸிவஸ்
தவாஜ்ஞா - மாலம்ப்ய க்ஷண - சலிதயோர் ப்ரூ - லதிக - யோ : || 24 ||
த்ரயாணாம் தேவாநாம் த்ரிகுண - ஜநிதாநாம் தவ ஸிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் - யா விரசிதா ||
ததா ஹி த்வத் பாதோத்வஹந - மணிபீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே ஸஸ்வந் - முகுலித - கரோத்தம்ஸ - மகுடா : || 25 ||
விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிராப்நோதி விரதிம்
விநாஸம் கீநாஸோ பஜதி தநதோ யாதி நிதநம் |
விதந்த்ரீ மாஹேந்த்ரீ விததிரபி ஸம்மீலித - த்ருஸா
மஹா - ஸம்ஹாரேSஸ்மிந் விஹரதி ஸதி த்வத்பதி - ரஸௌ || 26 ||
ஜபோ ஜல்ப : ஸில்பம் ஸகலமபி முத்ரா - விரசநா
கதி: ப்ராதக்ஷிண்ய - க்ரமண - மஸநாத்யாஹுதி - விதி : |
ப்ரணாம : ஸம்வேஸ: ஸுகமகில - மாத்மார்ப்பண - த்ருஸா
ஸபர்யா - பர்யாயஸ் - தவ பவது யந்மே விலஸிதம் || 27 ||
ஸுதா மப்யாஸ்வாத்ய ப்ரதிபய - ஜராம்ருத்யு - ஹரிணீம்
விபத்யந்தே விஸ்வே விதி - ஸதமகாத்யா திவிஷத : |
கராலம் யத் க்ஷ்வேலம் கபலிதவத: காலகலநா
ந ஸம்போஸ் தந் மூலம் தவ ஜநநி தாடங்க - மஹிமா || 28 ||
கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடபபித :
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம் |
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயாதஸ்ய பவநம்
பவஸ்யாப்யுத்தாநே தவ பரிஜநோக்திர் விஜயதே || 29 ||
ஸ்வதேஹோத்பூதாபிர் - க்ருணிபி - ரணிமாத்யாபி - ரபிதோ
நிஷேவ்யே நித்யே த்வா - மஹமிதி ஸதா பாவயதி ய: |
கிமாஸ்சர்யம் தஸ்ய த்ரிநயந ஸம்ருத்திம் த்ருணயதோ
மஹாஸம்வர்த்தாக்நிர் - விரசயதி நீராஜந - விதிம் || 30 ||
சது: ஷஷ்ட்யா தந்த்ரைஸ் ஸகல - மதிஸந்தாய புவநம்
ஸ்திதஸ் - தத்தத் - ஸித்தி - ப்ரஸவ - பரதந்த்ரை: பஸுபதி: |
புநஸ் - த்வந்நிர்பந்தா - தகில - புருஷார்த்தைக - கடநா -
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதிதல - மவாதீதர - திதம் || 31 ||
ஸிவ: ஸக்தி: காம: க்ஷிதி - ரத ரவி: ஸீதகிரண :
ஸ்மரோ ஹம்ஸ: ஸக்ரஸ் ததநு ச பரா - மார - ஹரய : |
அமீ ஹ்ருல்லேகாபிஸ் -திஸ்ருபி - ரவாஸாநேஷு கடிதா
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜநநி நாமாவயவதாம் || 32 ||
ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரிதயமித - மாதௌ தவ மநோ:
நிதாயைகே நித்யே நிரவதி - மஹாபோக - ரஸிகா: |
பஜந்தி த்வாம் சிந்தாமணி - குண - நிபத்தாக்ஷ - வலயா:
ஸிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத - தாராஹுதி - ஸதை : || 33 ||
ஸரீரம் த்வம் ஸம்போ: ஸஸி - மிஹிர - வக்ஷோருக - யுகம்
தவாத்மாநம் மந்யே பகவதி நவாத்மாந - மநகம் |
அத: ஸேஷ: ஸேஷீத்யய - முபய - ஸாதாரணதயா
ஸ்த்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ - பராநந்த - பரயோ: || 34 ||
மநஸ்தவம் வ்யோம த்வம் மருதஸி மருத்ஸாரதி - ரஸி
த்வ - மாபஸ் - த்வம் பூமிஸ் - த்வயி பரிணதாயாம் ந ஹி பரம் |
த்வமேவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விஸ்வ - வபுஷா
சிதாநந்தாகாரம் ஸிவயுவதி - பாவேந பிப்ருஷே || 35 ||
தவாஜ்ஞா - சக்ரஸ்த்தம் தபந - ஸஸி - கோடி த்யுதிதரம்
பரம் ஸம்பும் வந்தே பரிமிலித - பார்ஸ்வம் பரசிதா |
யமாராத்த்யத் பக்த்யா ரவி -ஸஸி - ஸுசீநா - மவிஷயே
நிராலோகேSலோகே நிவஸதி ஹி பாலோக - புவநே || 36 ||
விஸுத்தௌ தே ஸுத்தஸ்படிக - விஸதம் வ்யோம - ஜநகம்
ஸிவம் ஸேவே தேவீமபி ஸிவஸமாந - வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: ஸஸிகிரண - ஸாரூப்ய - ஸரணே:
விதூதாந்தர் - த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதீ || 37 ||
ஸமுந்மீலத் - ஸம்வித் - கமல - மகரந்தைக - ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம் ||
யதாலாபா - தஷ்டாதஸ - குனித வித்யாபரிணதி :
யதாதத்தே தோஷாத் குனமகில - மத்ப்ய: பய இவ || 38 ||
தவ ஸ்வாதிஷ்ட்டாநே ஹுதவஹ - மதிஷ்ட்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாஞ்ச ஸமயாம் ||
யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோதகலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: ஸிஸிர முபசாரம் ரசயதி || 39 ||
தடித்வந்தம் ஸக்த்யா திமிர - பரிபந்த்தி - ஸ்புரணயா
ஸ்புரந் - நாநாரத்நாபரண- பரிணத்தேந்த்ர- தனுஷம் |
தவ ஸ்யாமம் மேகம் கமபி மணிபூரைக - ஸரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர - தப்தம் த்ரிபுவநம் || 40 ||
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய - பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ - மஹாதாண்டவ - நடம் |
உபாப்யா - மேதாப்யா - முதய - விதி - முத்திஸ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம் || 41 ||
கதைர் - மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ர - கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி ய: ||
ஸ நீடேயச்சாயா - ச்சுரண ஸபலம் சந்த்ர - ஸகலம்
தநு: ஸௌநாஸீரம் கிமிதி ந நிபத்நாதி திஷணாம் || 42 ||
துநோது த்வாந்தம் நஸ் - துலித - தலிதேந்தீவர - வநம்
கந - ஸ்நிக்த - ஸ்லக்ஷ்ணம் சிகுர - நிகுரும்பம் தவ ஸிவே |
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜ - முபலப்தும் ஸுமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந - வாடீ - விடபிநாம் || 43 ||
தநோது க்ஷேமம் நஸ் தவ வதந - ஸௌந்தர்யலஹரீ
பரீவாஹ - ஸ்ரோத: - ஸரணிரிவ ஸீமந்த - ஸரணி: |
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல - கபரீ - பார - திமிர -
த்விஷாம் ப்ருந்தைர் - பந்தீ - க்ருதமிவ நவீநார்க்க - கிரணம் || 44 ||
அராலை: ஸ்வாபாவ்யா - தலிகலப - ஸஸ்-ரீபி - ரலகை :
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ - ருசிம் |
தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி - கிஞ்ஜல்க - ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர - தஹந - சக்ஷுர் - மதுலிஹ : || 45 ||
லலாடம் லாவண்ய - த்யுதி - விமல - மாபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுட - கடிதம் சந்த்ரஸகலம் |
விபர்யாஸ - ந்யாஸா - துபயமபி ஸம்பூய ச மித :
ஸுதாலேப - ஸ்யூதி: பரினமதி ராகா - ஹிமகர: || 46 ||
ப்ருவௌ புக்நே கிஞ்சித்புவந - பய - பங்க - வ்யஸநிதி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர - ருசிப்யாம் த்ருத - குணம் |
தநுர் - மந்யே ஸவ்யேதர கர - க்ருஹீதம் ரதிபதே :
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி நிகூடாந்தர - முமே || 47 ||
அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயந - மர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ - நாயகதயா |
த்ருதீயா தே த்ருஷ்டிர் - தரதலித - ஹேமாம்புஜ - ருசி :
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ - நிஸயோ - ரந்தரசரீம் || 48 ||
விஸாலா கல்யாணீ ஸ்புடருசி - ரயோத்யா குவலயை :
க்ருபாதாரா தாரா கிமபி மதுராSSபோக - வதிகா |
அவந்தீ த்ருஷ்டிஷ்தே பஹுநகர - விஸ்தார விஜயா
த்ருவம் தத்தந் - நாம - வ்யவஹரண - யோக்யா விஜயதே || 49 ||
கவீநாம் ஸந்தர்ப்ப - ஸ்தபக - மகரந்தைக - ரஸிகம்
கடாக்ஷ - வ்யாக்ஷேப - ப்ரமர - கலபௌ - கர்ணயுகலம் |
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத - தரலௌ
அஸூயா - ஸம்ஸர்கா - தலிக - நயநம் சிஞ்சிதருணம் || 50 ||
ஸிவே ஸ்ருங்காரார்த்ரா ததி தரஜநே குத்ஸநபரா
ஸரோஷா கங்காயாம் கிரிஸநயநே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹ - ஸௌபாக்யஜநநீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா || 51 ||
கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஸ் - சித்தப்ரஸம - ரஸ - வித்ராவண - பலே |
இமே நேத்ரே கோத்ராதரபதி - குலோத்தம்ஸ - கலிகே
தவாகர்ணாக்ருஷ்ட - ஸ்மரஸர - விலாஸம் கலயத: || 52 ||
விபக்த - த்ரைவர்ண்யம் வ்யதிகரித - லீலாஞ்ஜந - தயா
விபாதி த்வந்நேத்ர - த்ரிதய - மித - மீஸாந - தயிதே |
புந:ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண - ஹரி - ருத்ரா - நுபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரயமிவ || 53 ||
பவித்ரீ - கர்த்தும் ந: பஸுபதி - பராதீந - ஹ்ருதயே
தயாமித்ரைர் - நேத்ரை - ரருண - தவல - ஸ்யாம - ருசிபி : |
நத: ஸோணோ கங்கா தபந - தநயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தாநா - முபநயஸி ஸம்பேத - மநகம் || 54 ||
நிமேஷோந்மேஷாப்யாம் ப்ரலய - முதயம் யாதி ஜகதீ
தவேத்யாஹுஸ் ஸந்தோ தரணிதர - ராஜந்ய - தநயே |
த்வதுந்மேஷாஜ்ஜாதம் ஜகதித - மஸேஷம் ப்ரலயத:
பரித்ராதும் ஸங்கே பரிஹ்ருத - நிமேஷாஸ் - தவ த்ருஸ: || 55 ||
தவாபர்ணே - கர்ணே - ஜப - நயந - பைஸுந்ய - சகிதா
நிலீயந்தே தோயே நியத மநிமேஷா: ஸபரிகா:
இயஞ் ச ஸ்ரீர் - பத்தச்சத - புட - கவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஸி ச விகடய்ய ப்ரவிஸதி || 56 ||
த்ருஸா த்ராகீயஸ்யா தரதலித - நீலோத்பல - ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய க்ருபயா மாமபி ஸிவே |
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநி - ரியதா
வநே வா ஹர்ம்யே வா ஸமகர - நிபாதோ ஹிமகர : || 57 ||
அராலம் தே பாலீயுகல - மகராஜந்யதநயே
ந கேஷா - மாதத்தே குஸுமஸர - கோதண்ட - குதுகம் |
திரஸ்சீநோ யத்ர ஸ்ரவணபத - முல்லங்க்ய விலஸந்
அபாங்க வ்யாஸங்கோ திஸதி சரஸந்தாந - திஷணாம் || 58 ||
ஸ்புரத்கண்டாபோக - ப்ரதிபலித - தாடங்க - யுகளம்
சதுஸ்சக்ரம் மந்யே தவமுகமிதம் மந்மதரதம் |
யமாருஹ்ய த்ருஹ்யத் - யவநிரத - மர்க்கேந்து - சரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே || 59 ||
ஸரஸ்வத்யா: ஸூக்தீ - ரம்ருத - லஹரீ - கௌஸலஹரீ:
பிபந்த்யா: ஸர்வாணி ஸ்ரவண - சுலுகாப்யா - மவிரலம் |
சமத்கார - ஸ்லாகாசலித ஸிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ் - தாரை: ப்ரதிவசந - மாசஷ்டஇவ தே || 60 ||
அஸௌ நாஸாவம்ஸஸ் - துஹிநகிரிவம்ஸ - த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பல - மஸ்மாக - முசிதம் |
வஹத்யந்தர் - முக்தா: ஸிஸிரகர - நிஸ்வாஸ - கலிதம்
ஸம்ருத்த்யா யஸ்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: || 61 ||
ப்ரக்ருத்யாSSரக்தாயாஸ் - தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஸ்யம் ஜநயது பலம் வித்ருமலதா|
ந பிம்பம் தத்பிம்ப - ப்ரதிபலந - ராகா - தருணிதம்
துலா - மத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா || 62 ||
ஸ்மிதஜ்யோத்ஸ்நாஜாலம் தவ வதந - சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணா - மாஸீ - ததிரஸதயா சஞ்சு - ஜடிமா |
அதஸ்தே ஸீதாம்ஸோ - ரம்ருதலஹரீ - மாம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஸி ப்ருஸம் காஞ்ஜிகதியா || 63 ||
அவிஸ்ராந்தம் பத்யுர் - குணகண - கதாம்ரேடநஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா |
யதக்ராஸீநாயா: ஸ்படிகத்ருஷ - தச்சச்சவி - மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமதி மாணிக்யவபுஷா || 64 ||
ரணே ஜித்வா தைத்யா - நபஹ்ருத - ஸிரஸ்த்ரை: கவசிபி :
நிவ்ருத்தைஸ் சண்டாம்ஸ - த்ரிபுரஹர - நிர்மால்ய - விமுகை:
விஸாகேந்த்ரோபேந்த்ரை: ஸஸிவிஸத - கர்ப்பூரஸகலா
விலீயந்தே மாதஸ்தவ வதந - தாம்பூல - கபலா: || 65 ||
விபஞ்ச்யா காயந்தீ விவித - மபதாநம் பஸுபதே:
த்வயாரப்தே வக்தும் சலிதஸிரஸா ஸாதுவசநே |
ததீயைர் - மாதுர்யை - ரபலபித - தந்த்ரீ - கலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம் || 66 ||
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிநகிரிணா வத்ஸலதயா
கிரீஸேநோதஸ்தம் முஹுரதர - பாநாகுலதயா |
கரக்ராஹ்யம் ஸம்போர் - முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதங்காரம் ப்ரூமஸ் - தவ - சுபுக - மௌபம்ய - ரஹிதம் || 67 ||
புஜாஸ்லேஷாந்நித்யம் புரதமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முக - கமலநால - ஸ்ரிய - மியம் |
ஸ்வத: ஸ்வேதா காலாகரு - பஹுல - ஜம்பால - மலிநா
ம்ருணாலீ - லாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா || 68 ||
கலே ரேகாஸ்திஸ்ரோ கதி - கமக - கீதைக நிபுணே
விவாஹ - வ்யாநத்த ப்ரகுணகுண - ஸங்க்யா ப்ரதிபுவ: |
விராஜந்தே க்ராமாணாம் ஸ்திதி - நியம - ஸீமாந இவ தே || 69 ||
ம்ருணாலீ - ம்ருத்வீநாம் தவ புஜலதாநாம் சதஸ்ருணாம்
சதுர்ப்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதநை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம - மதநா - தந்தகரிபோ:
சதுர்ணாம் ஸீர்ஷாணாம் ஸம - மபய - ஹஸ்தார்ப்பணதியா || 70 ||
நகாநா - முத்யோதைர் - நவநலிந - ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே |
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ - சரண - தல - லாக்ஷா - ரஸ - சணம் || 71 ||
ஸமம் தேவி ஸ்கந்த - த்விபவதந - பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத - முகம் |
யதாலோக்யாஸங்காகுலித - ஹ்ருதயோ ஹாஸஜநக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஸதி ஹஸ்தேந ஜடிதி || 72 ||
அமூ தே வக்ஷோஜா - வம்ருதரஸ - மாணிக்ய - குதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதி - பதாகே மநஸி ந: |
பிபந்தௌ தௌ யஸ்மா - தவிதித - வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதந - க்ரௌஞ்ச - தலநௌ || 73 ||
வஹத்யம்ப ஸ்தம்பேரம - தநுஜ - கும்பப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி - ரமலாம் ஹாரலதிகாம்|
குசாபோகோ பிம்பாதர - ருசிபி - ரந்த: ஸபலிதாம்
ப்ரதாப - வ்யாமிஸ்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே || 74 ||
தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ |
தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு - ராஸ்வாத்ய தவ யத்
கவீநாம் ப்ரௌடாநா - மஜதி கமநீய: கவயிதா || 75 ||
ஹரக்ரோத - ஜ்வாலாவலிபி - ரவலீடேந வபுஷா
கபீரே தே நாபீ - ஸரஸி க்ருதஸங்கோ மநஸிஜ: |
ஸமுத்தஸ்த்தௌ தஸ்மா - தசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி || 76 ||
யதேதத் காலிந்தீ - தநுதர - தரங்காக்ருதி ஸிவே
க்ருஸே மத்யே கிஞ்சிஜ்ஜநநி தவ யத்பாதி ஸுதியாம் |
விமர்தா - தந்யோந்யம் குசகலஸயோ - ரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஸதிவ நாபிம் குஹரிணீம் || 77 ||
ஸ்திரோ - கங்காவர்த்த: ஸ்தந - முகுல - ரோமாவலி - லதா -
கலாவாலம் குண்டம் குஸுமஸர - தேஜோ ஹுதபுஜ : |
ரதேர் - லீலாகாரம் கிமபி தவ நாபிர் - கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர் - கிரிஸ - நயநாநாம் விஜயதே || 78 ||
நிஸர்க - க்ஷீணஸ்ய ஸ்தந - தட - பரேண க்லமஜுஷோ
நமந்மூர்த்தேர் - நாரீதிலக ஸநகைஸ் - த்ருட்யத இவ |
சிரம் தே மத்யஸ்ய த்ருடித - தடிநீ - தீர - தருணா
ஸமாவஸ்தா - ஸ்தேம்நோ பவது குஸலம் ஸைலதநயே || 79 ||
குசௌ ஸத்ய: ஸ்வித்யத் - தடகடித - கூர்ப்பாஸ - பிதுரௌ
கஷந்தௌ தோர் - மூலே கநக - கலஸாபௌ கலயதா |
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ - வல்லிபிரிவ || 80 ||
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜாத்
நிதம்பா - தாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே |
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரய - மஸேஷாம் வஸுமதீம்
நிதம்ப - ப்ராக்பார: ஸ்தயகதி லகுத்வம் நயதி ச || 81 ||
கரீந்த்ராணாம் ஸுண்டாந் கநககதலீ - காண்டபடலீம்
உபாப்யா - மூருப்யா - முபயமபி நிர்ஜித்ய பவதீ |
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதி - கடிநாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞே ஜாநுப்யாம் விபுத - கரிகும்ப - த்வய - மஸி || 82 ||
பராஜேதும் ருத்ரம் த்விகுணஸரகர்ப்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிஸிகோ பாட - மக்ருத |
யதக்ரே த்ருஸ்யந்தே தஸஸர - பலா: பாதயுகலீ -
நகாக்ரச்சத்மாந: ஸுர - மகுட - ஸாணைக - நிஸிதா : || 83 ||
ஸ்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ ஸேகரதயா
மமாப்யேதௌ மாத: ஸிரஸி தயயா தேஹி சரணௌ |
யயோ: பாத்யம் பாத: பஸுபதி - ஜடாஜூட - தடிநீ
யயோர் - லாக்ஷா - லக்ஷ்மீ - ரருண - ஹரிசூடாமணி - ருசி: || 84 ||
நமோவாகம் - ப்ரூமோ நயந - ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புட - ருசி - ரஸாலக்தகவதே |
அஸூயத்யத்யந்தம் யதபிஹநநாய ஸ்ப்ருஹயதே
பஸூநா - மீஸாந: ப்ரமதவந - கங்கேலி - தரவே || 85 ||
ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலந - மத வைலக்ஷ்யநமிதம்
லலாடே பர்த்தாரம் சரணகமலே தாடயதி தே |
சிராதந்த: ஸல்யம் தஹநக்ருத - முந்மூலிதவதா
துலாகோடிக்வாணை: கிலிகிலித - மீஸாந - ரிபுணா || 86 ||
ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிமகிரி - நிவாஸைக - சதுரௌ
நிஸாயாம் நித்ராணம் நிஸி சரமபாகே ச விஸதௌ |
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஸ்ரிய - மதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜநநி ஜயதஸ் - சித்ரமிஹ கிம் || 87 ||
பதம் தே கீர்த்தீநாம் ப்ரபத மபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிந - கமடீ - கர்ப்பர - துலாம் |
கதம் வா பாஹுப்யா - முபயமநகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமாநேந மநஸா || 88 ||
நகைர் - நாகஸ்த்ரீணாம் கரகமல ஸங்கோச ஸஸிபி:
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ |
பலாநி ஸ்வ: ஸ்த்தேப்ய: கிஸலய - கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஸ்ரியமநிஸ - மஹ்நாய தததௌ || 89 ||
ததாநே தீநேப்ய: ஸ்ரியமநிஸ - மாஸாநுஸத்ருஸீம்
அமந்தம் ஸௌந்தர்ய - ப்ரகர - மகரந்தம் விகிரதி |
தவாஸ்மிந் மந்தார - ஸ்தபக - ஸுபகே யாது சரணே
நிமஜ்ஜந் - மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் || 90 ||
பதந்யாஸ - க்ரீடா - பரிசய - மிவாரப்து - மநஸ:
ஸ்கலந்தஸ் - தே கேலம் பவநகலஹம்ஸா ந ஜஹதி |
அதஸ்தேஷாம் ஸிக்ஷாம் ஸுபகமணி - மஞ்ஜீர - ரணித -
ச்சலா - தாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே || 91 ||
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிண - ஹரி - ருத்ரேஸ்வர - ப்ருத:
ஸிவ: ஸ்வச்ச - ச்சாயா - கடித - கபட - ப்ரச்சதபட: |
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலந - ராகாருணதயா
ஸரீரீ ஸ்ருங்காரோ ரஸ இவ த்ருஸாம் தோக்தி குதுகம் || 92 ||
அராலா கேஸேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஸிரீஷாபா சித்தே த்ருஷதுபலஸோபா குசதடே |
ப்ருஸம் தந்வீ மத்யே ப்ருது - ருரஸிஜாரோஹ - விஷயே
ஜகத் த்ராதும் ஸம்போர் - ஜயதி கருணா காசிதருணா || 93 ||
கலங்க: கஸ்தூரீ - ரஜநிகர - பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்ப்பூரைர் - மரகதகரண்டம் நிபிடிதம் |
அதஸ் - த்வத்போகேந ப்ரதிதிந - மிதம் ரிக்தகுஹரம்
விதிர் - பூயோ பூயோ நிபிடயதி நூநம் தவ க்ருதே || 94 ||
புராராதே - ரந்த:புரமஸி ததஸ - த்வச்சரணயோ:
ஸபர்யா - மர்யாதா தரலகரணாநா - மஸுலபா |
ததா ஹ்யேதே நீதா: ஸதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்த - ஸ்திதிபி - ரணிமாத்யாபி - ரமரா: || 95 ||
கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:
ஸ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை: |
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநா - மசரமே
குசாப்யா - மாஸங்க: குரவக - தரோ - ரப்யஸுலப: || 96 ||
கிராமாஹுர் - தேவீம் த்ருஹிணக்ருஹிணீ - மாகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹரஸஹசரீ - மத்ரிதநயாம் |
துரீயா காபி த்வம் துரதிகம - நிஸ்ஸீம - மஹிமா
மஹாமாயா விஸ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம - மஹிஷி || 97 ||
கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண - நிர்ணேஜந - ஜலம் |
ப்ரக்ருத்யா மூகாநாமபி ச கவிதா - காரணதயா
கதா தத்தே வாணீ - முககமல - தாம்பூல - ரஸதாம் || 98 ||
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி - ஹரி - ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஸிதிலயதி ரம்யேண வபுஷா |
சிரம் ஜீவந்நேவ க்ஷபித - பஸுபாஸ - வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத் - பஜநவாந் || 99 ||
ப்ரதீப - ஜ்வாலாபிர் - திவஸகர - நீராஜநவிதி:
ஸுதாஸூதேஸ் - சந்த்ரோபல - ஜலலவை - ரர்க்யரசநா |
ஸ்வகீயை - ரம்போபி: ஸலிலநிதி - ஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர் - வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிரியம் || 100 ||



Narasimman Nagarajan10:54am May 10
காஞ்சி மாநகர் போக வேண்டும்-எங்கள்
காருண்ய மூர்த்தியைக் காண வேண்டும் (கா)

உத்தமர் வணங்கும் ,,,,,,,,,குருபீடம்
சித்தர்கள் போற்றும்..........குருபீடம்
கற்றவர் கூடும் ...குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத்...................குருபீடம்

அத்வைதம் வணங்கும்......குருபீடம்
தத்துவம் நிறைந்த................குருபீடம்
கருணையின் சிகரம் ..குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் .........குருபீடம்

தவநிலை வளர்க்கும்..............குருபீடம்
தன்னிகரில்லா .....குருபீடம்
கவலைகள் போக்கும்.............குருபீடம் காஞ்சி
காமகோடி ஜகத் .......குருபீடம்

எளிமை நிறைந்த .....குருபீடம்
யாவரும் வணங்கும்..................குருபீடம்
கலைகள் வளர்க்கும் குருபீடம் ..காஞ்சி
காமகோடி ஜகத் .........குருபீடம்

மடமையைப் போக்கும் குருபீடம்
திடமான ஞானம் ....குருபீடம்
நடமாடும் தெய்வம்........................குருபீடம்..காஞ்சி
காமகோடி ஜகத் ......குருபீடம்.




காமாட்சியும் நானே !- ஸ்ரீ மகா பெரியவா

Status Update
By Hinduism
காமாட்சியும் நானே !- ஸ்ரீ மகா பெரியவா

அனுஷ நக்ஷத்ரமும் ..வெள்ளிக்கிழமையும் ..கலந்த நன்னாள் அன்று….அதற்கேற்ப ….பெரியவா முகாம் இட்டிருந்த அந்த ஊரில் ஒரு பெண்மணிக்கு பெரியவா மேல் அபார பக்தி. ஆனால், அடிக்கடி வீட்டிலிருந்து கிளம்பிப் போய் தரிசனம் செய்ய அவளால் முடியவில்லை. குடும்பச் சூழ்நிலை அப்படி.
***
ஒரு நாள் எப்படியோ வீட்டிலிருந்து கிளம்பி ஸ்ரீமடம் முகாமுக்கு வந்துவிட்டாள். பிற்பகல் நேரம். ஸ்ரீபெரியவா பூஜை மேடையிலேயே ஒரு பக்கம் அமர்ந்து பலருடன் பேசிக்கொண்டு இருந்தார்கள். இந்தப் பெண்மணி, கையில் சூடம் வைத்த தட்டுடன் ஹாரத்தி எடுக்க வேண்டும் என்று மேடை அருகில் சென்று பெரியவா முகத்தைப் பார்த்தாள். ஆனால் சடக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு விட்டார். பெரியவா, இதேபோல் இரண்டு, மூன்று முறை முயன்றும் பெரியவா முகம் திரும்பிப் பார்க்கவில்லை.
***
இந்தப் பெண்மணிக்கு ரொம்ப துக்கம். பெரியவா கொஞ்சம் திரும்பியது போல் இருந்த ஒரு சந்தர்ப்பத்தில் கற்பூரத்தை ஏற்றி விட்டாள். அருகில் போய் ஹாரத்தி சுற்றுவதற்குள் பெரியவா எழுந்து உள்ளே போய் விட்டார்கள். திகைத்துப் போனவள் “அம்பிகே! ஏன் இப்படி சோதிக்கிறாய் ? நான் என்ன பாவம் செய்தேன் ?” – என்று புலம்பிவிட்டு ‘ சரி உனக்கே ஹாரத்தி எடுக்கிறேன்‘ என்று பூஜையில் உள்ள அம்பாள் திரிபுரசுந்தரிக்கே எடுத்துவிட்டு, மிகுந்த ஏமாற்றத்துடனும் கண்ணீருடனும் திரும்பி விட்டாள்.
***
அவள் பந்தலின் வெளியே வரும்போது ஒருவர் ஓடி வந்து ” அம்மா ! பெரியவா உத்தரவாகிறது” – என்று சொன்னார். ” என்னையா ? – இருக்காது ” – என்று தயங்கினாள், அவள். ” உங்களைத்தான் அம்மா, வாருங்கள்” – என்று சொல்ல, தயங்கியபடி உள்ளே சென்றாள், அப்பெண்மணி. அங்கு அமர்ந்திருந்த பெரியவா ” எனக்கு ஏற்றிய சூடத்தை அம்பாளிடம் எடுத்துவிட்டோம் என்று குறைப்படாதே. இப்போ ஹாரத்தி காட்டு.” – என்று சொன்னதும் அவள் தட்டுத்தடுமாறி மறுபடி சூடத்தை எடுத்து தட்டில் வைத்து, கை நடுங்கப் பற்ற வைத்து பெரியவா அருகில் சென்று சுற்ற அந்த தீப ஒளியில் பெரியவாளைப் பார்த்தாள். கரும்பு வில்லும், பாசாங்குசமும், மந்த ஹாஸ முகமாக அப்படியே அம்பாளாகவே பெரியவா காட்சி கொடுக்க, அந்த அம்மாள் மயங்கி விழாத குறையாய் ‘ அம்மா ! அம்மா ! ‘ என்று பக்திப் பரவசத்துடன் கன்னத்தில் போட்டுக் கொண்டாராம்.
***
‘மேடையில் இருந்த அம்பாளும் நானும் ஒன்றுதான் !‘ என்று புரிய வைத்த நிகழ்ச்சி இது. அந்தப் பெண்மணி திருச்சியை சேர்ந்த நாகலக்ஷ்மி. பலமுறை பலபேருக்கு மகாப்பெரியவாள் அம்பாளாகக் காட்சியளித்ததை அவரவர்களே சொல்ல கேட்டிருக்கிறோம்.




மதமாற்றம் பற்றி மகாபெரியவா சொன்னது.

From the album: Timeline Photos
By Raman Iyengar
மதமாற்றம் பற்றி மகாபெரியவா சொன்னது.

ஒரு ஆசாரசீலர் பெரியவா கிட்ட போய் மிக வினயத்துடன், "பெரியவா இப்போஎல்லாம் conversion அதிகமா ஆயிண்டே இருக்கு, போற போக்க பாத்தா நம்ம தேசத்துல ஹிந்துக்கள் கொறஞ்சி மற்ற மதத்தவர் அதிகமா ஆயிடுவா போல இருக்கே.பெரியவா தான் இந்த இக்கட்டான சூழலுக்கு முடிவு காணனும்" என்று தன் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.
உடனே பெரியவா "இப்போ மாட்டும் இல்ல எப்பவுமே இந்த பிரச்சனை நம் பாரத தேசத்துல உண்டு.பகவத் பாதாள் காலத்துல பௌத்த ஜைன உள்பட 72 மதங்கள் இருந்தது.ஆனா பகவத்பாதாள் அனைத்தையும் கண்டனம் செய்து நம் சனாதன தர்மத்தை நிலைக்கச்செய்தார்.நமது சனாதன தர்மமானது யுகங்களை கடந்தது.அதற்க்கு எப்பவுமே அழிவில்லை.க்ஷீணம் ஆவதுபோல தெரியும் ஆனா எப்பவுமே நமத தர்மம் க்ஷீநிப்பது இல்லை.
மழைக்காலத்துல பனைமரத்த சுத்தி பல கொடிகள் வளரும்.அந்த கொடிகள் பனைமரத்தயே மறைக்குறா போல மரத்துமேல படர்ந்து வளரும்.ஆனா அந்த கொடிகளுக்கு ஆயிசு அதிகம் இல்ல.பலமா ஒரு காத்து அடிச்சாளோ, மழைமுடிஞ்சு வேனல்காலம் வந்தானோ மரத்த மறைத்திருக்குற அந்த கொடிகள் எல்லாம் காஞ்சி கீழே விழுந்துடும்.ஆனா பனைமரம் எந்த பாதிப்பும் இல்லாம அப்படியே இருக்கும்.அது போலத்தான் நம் சனாதன தர்ம மதமும் பனைமரம் போல ஸ்திரமா இருக்கும்.அதற்கு என்னைக்குமே அழிவோ க்ஷீனமோ இல்லை.வீணா கவலைப்படாம உன் ஸ்வதர்மத்துள இருந்து வழுவாம உனக்கு விதிக்கப்பட் நித்ய கர்மாக்களை ஒழுங்காசெய்து வா.அதுவே நீ நம் மதத்துக்கு செய்யுற மிகப்பெரிய உபகாரம்.அனைத்தையும் காமாக்ஷி பாத்துண்டே இருக்க.எப்போ எத செய்யனும்னு அவளுக்குத்தான் தெரியும்."
என்று அருளாசி வழங்கினார்!!!


































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக