வெள்ளி, 23 மே, 2014

சுந்தர மூர்த்தி நாயனார் (ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த பன்னீராயிரம் பொன்):

ராதே கிருஷ்ணா 24-05-2014




சுந்தர மூர்த்தி நாயனார் (ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த பன்னீராயிரம் பொன்):
*

சுந்தர மூர்த்தி நாயனார் (ஆற்றில் இட்டு குளத்தில் எடுத்த பன்னீராயிரம் பொன்):
*
சுந்தரரின் துணைவியார் 'பரவை நாச்சியார்' பங்குனி உத்திர விழாவில் எண்ணிறந்த அடியார்களுக்கு அமுது செய்விக்கும் நியமம் பூண்டு இருந்தார். சுந்தரர் பரவையாரின் நியமம் நிறைவேறப் பொன் வேண்டும் பொருட்டு, அடியவர்களுடன் திருப்புகலூர் சென்றார். சிவபெருமானை வணங்கி விண்ணப்பித்துக் கொண்டார். நெடுந்தூரம் நடந்தக் களைப்பால் சிறிது ஓய்வு பெற எண்ணினார்
*
திருக்கோயிலில் திருப்பணிக்காக அடுக்கி வைக்கப் பட்டிருந்த செங்கற்களில் சிலவற்றை எடுத்து, அவற்றின் மேல் ஆடைகளை விரித்துப் படுத்துக் கண் துயின்றார். உறங்கிக் கண் விழித்ததும் அனைத்து செங்கற்களும் செம்பொன் கட்டிகளாக மாறி இருந்ததைக் கண்ணுற்று மிக மகிழ்ந்தார். திருவருளின் திறத்தை வியந்து 'தம்மையே புகழ்ந்து' என்னும் தேவாரம் பாடி அருளினார்.
*
பின்பு மற்றொரு சமயம் திருமுதுகுன்றம் சென்று பொன் வேண்ட, இறைவன் பன்னீராயிரம் பொன் அருளினார். சுந்தரர், மேலும் பல தலங்களைத் தரிசிக்க எண்ணி இருந்ததால், பொன் கட்டிகளை திருவாரூரில் தான் பெறுமாறுச் செய்தருள இறைவனிடம் வேண்டினார். இறைவன் அசரீரியாய் 'இவற்றை மணிமுத்தா நதியில் இட்டுப் பின் திருவாரூர்க் குளத்தில் பெற்றுக் கொள்வாய்' என அருளிச் செய்தார்.
*
சுந்தரர் பொன்னை மணிமுத்தா நதியில் இட்டார். பல தலங்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டுத் திருவாரூர் வந்து சேர்ந்தார். பரவையாரிடம் நடந்ததை விவரித்துக் கமலாலயக் குளத்தில் பொன்னை வருவித்துத் தருவேன் எனக் கூறி, அடியவர் பலரும் உடன் வரத் திருக்குளம் சென்றார். அப்பொழுது இட்டார்ப் போல் குளத்தில் பொன் கட்டிகளை தேடத் துவங்கினார்.
*
இறைவன் சுந்தரரின் தேவாரம் கேட்கும் பெரும் விருப்பத்தால் பொன்னைத் தருவித்துத் தராமல் இருந்தருளினார். பரவையார் புன்சிரிப்புடன் 'ஆற்றில் இட்டு குளத்தில் தேடுகிறீரோ' என உரைத்தார். சுந்தரர் 'பொன்செய்த மேனியினீர்' என்னும் பதிகம் பாடி விண்ணப்பிக்க, இறைவன் மிக மகிழ்ந்து பொன்னை வருவித்து அருளினார்.
*
பரவையாரும், கூடி இருந்த அடியவர் அனைவரும், திருவருளின் துணைக் கொண்டு சுந்தரர் நிகழ்த்திய இந்த அற்புதச் செயலை வியந்துப் போற்றி மகிழ்ந்தனர்.






















































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக