வெள்ளி, 11 ஏப்ரல், 2014

மச்ச பலன்கள்:

ராதே கிருஷ்ணா 12-04-2014



Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
மச்ச பலன்கள்:

ஆண்களுக்கான பலன்கள்: புருவங்களுக்கு மத்தியில் – நீண்ட ஆயுள், நெற்றியின் வலது புறம் – தனயோகம், வலது புருவம் – மனைவியால் யோகம், வலது பொட்டு (நெற்றி) – திடீர் அதிர்ஷ்டம், வலது கண் – நண்பர்களால் உயர்வு, வலது கண் வெண்படலம் – புகழ், ஆன்மீக நாட்டம், இடது புருவம் – ஏற்ற, இறக்கம், செலவாளி, மூக்கின் மேல் – சுகபோக வாழ்க்கை, மூக்கின் வலதுபுறம் – நினைத்ததை அடையும் அம்சம், மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – ஆவணம், கர்வம், பொறாமை, மேல், கீழ் உதடுகள் – அலட்சியம், காதல் வயப்படுதல், மேவாய் (உதடுகளுக்கு மேல்) – செல்வாக்கு, இசை, கலைத்துறையில் நாட்டம், வலது கன்னம் – வசீகரம், தயாள குணம், இடது கன்னம் – ஏற்றத்தாழ்வு,வலது காது நுனி – சில கண்டங்கள் வரலாம், இடது காது நுனி – தகாத சேர்க்கை, அவமானம், காதுகளின் உள்ளே – பேச்சாற்றல், திடீர் யோகம், தொண்டை – திருமணத்துக்கு பிறகு யோகம், கழுத்தின் வலதுபுறம் – சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை, இடது மார்பு – ஆண் குழந்தைகள் அதிகம், பெண்களால் விரும்பப்படுவார், வலது மார்பு – பெண் குழந்தை அதிகம், அன்பு மிகுந்தவர், வயிறு – பொறாமை குணம், தகுதிக்கு மீறிய ஆசை,அடிவயிறு – திடீர் அதிர்ஷ்டம், பெண்களால் யோகம், அதிகார, ஆடம்பர வாழ்க்கை

பெண்களுக்கான பலனகள்: நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்து, நெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்கு, நெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபி, மூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலி, மூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம், மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள், மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம், மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர், இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்கு, வலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலை,வலது கழுத்து – பிள்ளைகளால் யோகம், நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம், கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்,இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம், தலை – பேராசை, பொறாமை குணம், தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கை, தொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம், தொப்புள் – ஆடம்பரம், படாடோபம், வயிறு – நல்ல குணம், நிறைவான வாழ்க்கை, அடிவயிறு – ராஜயோக அம்சம், உயர்பதவிகள், இடது தொடை – தடுமாற்றம், ஏற்ற இறக்கங்கள், வலது தொடை – ஆணவம், எடுத்தெறிந்து பேசுதல், தற்பெருமை.





உத்தியோகம்,தொழில் பற்றி அறிய
ஒருவன் சுக வாழ்க்கைக்கு மிகப்பெரிய அடித்தளமாக இருப்பது உத்தியோகம் அல்லது தொழில்,வியாபாரம் என்று கூறலாம். எனவே ஒருவன் உத்தியோகம் செய்வான (அரசு / தனியார்) அல்லது தொழில் துறையில் சாதிப்பான (Industry - சிறிய தொழில் முதல் பெரிய தொழிற்சாலை வரை ) அல்லது வியாபாரம் (Trading) அல்லது profession (doctor, Engineer, Lawyer & consultant) , அரசியல்வாதியா என்பதை ஜாதக வழியில் கீழ்க்கண்ட வழிகள் மூலம் அறிந்து செயல் பட்டால் மிக சிறப்பான பலன் அடைந்து. இதற்கு முன் ஏற்பாடாக குழந்தைகளின் கல்வியை தேர்தெடுக்கும் போதே கண்டறிந்தால் மிக்க பயனுள்ளதாக இருக்கும் என்பது என் அனுப்ப உண்மை.
ஒருவர் ஜாதகத்தில் கீழ்க்கண்ட கிரக நிலையை ஆராய வேண்டும்.
1. 10ல் நின்ற கிரகம்
2. 10 மாதி
3. 10 மாதி அம்சத்தில்
4. இந்து லக்
5. காரகாம்சம்
6. யோகி
7. அவயோகி
8. திதி சூன்யம்
9. அஷ்டவர்க்க பரல்
10. ஷட் பலம்
11. சூர்யன் அமர்த்த நிலை
12. சூர்யன் அமர்த்த நட்ச
13. சூர்யன் சேர்த்த கிரகம்
14. சூர்யன் நவாஅம்சத்தில்
15. 10மிட ஆட்சி கிரகம்
16. அங்கிசம்
இதற்கு மதிப்பெண்கள் இட்டு அதிக மதிப்பெண்கள் எந்த கிரகம் பெறுகிறதோ அதனை சார்ந்த கிரக தொழில் ஜாதகருக்கு முழு வெற்றியை தீர்க்கமாக கொடுக்கும்.
நன்றி
என்றும் அன்புடன்
ஜோதிடரத்னா சந்திரசேகரன்
மதுரை ஸ்ரீ மஹாஆனந்தம் ஜோதிடாலயம்
97154 55290

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக