புதன், 2 ஏப்ரல், 2014

" குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” (மகா பெரியவா விளக்கம்)

ராதே கிருஷ்ணா 02-04-2014




10 hrs · 
" குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” (மகா பெரியவா விளக்கம்)

From the album: Timeline Photos
By Hinduism
" குலதெய்வம் எதுன்னே தெரியாதா?” (மகா பெரியவா விளக்கம்)

மகா பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி மகா பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் மகா பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,
சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.
மகா பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.
குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.
சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”
ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.
உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”
ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”
அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”
ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”
அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”
என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”
நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”
அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”
காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”
அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”
நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.
அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.
சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!
சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”
அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”
அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.
சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?
ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து மகா பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”
- மகா பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”
- மகா பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது.
(நன்றி : தீபம் (கல்கி வழங்கும் ஆன்மீக இதழ்)





ஸ்ரீமஹா பெரியவாளும், ஸ்ரீபுதுப் பெரியவாளும் வெவ்வேறு இல்லை;
இருவரும் ஒன்றே-என்ற உண்மையும் எங்களுக்குப் புரிந்தது.

From the album: Timeline Photos
By Varagooran Narayanan
ஸ்ரீமஹா பெரியவாளும், ஸ்ரீபுதுப் பெரியவாளும் வெவ்வேறு இல்லை;
இருவரும் ஒன்றே-என்ற உண்மையும் எங்களுக்குப் புரிந்தது.

சொன்னவர்; ஏ.எஸ்.வேதநாராயணன், மாடல் காலனி,பூனே.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1986-வது வருஷம். மும்பையில் தாதர் பகுதியில்
'கார் ரோடு' என்ற புறநகரில் ஸ்ரீராம நவமி உற்சவம்
நடந்து கொண்டிருந்தது.

பிரவசனம் கேட்க நான் மட்டும் போயிருந்தேன்.
பிரவசனம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் என்னால்
உட்கார முடியவில்லை. உடம்புக்கு என்ன ஆயிற்று
என்றும் தெரியவில்லை.

பஸ்ஸில் போனால் பல பிரயாணிகள் கூட
இருப்பார்கள் என்ற தைரியத்தில் பஸ் ஏறிவிட்டேன்.
என்னுடைய வீட்டு விலாசம்,டெலிபோன் நம்பர் எழுதி
சட்டைப் பையில் பத்திரமாக வைத்துக் கொண்டேன்.
சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டே இருந்தேன்.
எங்கள் குடியிருப்பில் இருந்த ஒரு டாக்டர் என்னைப்
பார்த்ததும், 'உடம்பு சரியில்லையா?' என்று கேட்டார்.

உடனே உள்ளே அழைத்துச் சென்று நாடித்துடிப்பும்
பார்த்தார். பின்னர், கவலைக்குறியுடன் 'பிளட் பிரஷர்'
பரிசோதித்தார். 'பிரஷர் அதிகமாக இருக்கிறது.
உங்களுக்கு பிரஷர் பிராப்ளம், இருதயக் கோளாறு உண்டா.?
என்று கேட்டார். 'அப்படி தெரியவில்லையே' என்றேன்.
"நீங்கள் வெளியேயிருந்து வந்திருப்பதால் களைத்திருக்-
-கிறீர்கள். அரைமணிக்குப் பிறகு மறுபடியும் வீட்டுக்கு
வந்து பார்க்கிறேன். அதுவரை பேசாமல் படுத்திருங்கள்.
'பிரஷர்' இறங்கா விட்டால் அவசர சிகிச்சைப் பிரிவில்
சேர்க்க வேண்டி இருக்கும்.

என் மனைவி கமலா கதவைத் திறந்தாள்.உடன் வந்த
டாக்டர் விஷயத்தை சொல்ல, என் மனைவி கவலையுடன்
ஸ்ரீபரமாசாரியாள் படத்தின் முன் விழுந்து நமஸ்கரித்து,
"எனக்கு நீங்கள்தான் தெய்வம்.எனக்கு ஒன்றும் தெரியலை,
என் கணவரைக் காப்பாற்றுங்கள்.அவரைக் காப்பது உங்கள்
பொறுப்பு.உங்களையே நம்பியிருக்கிறேன். எனக்குப் பிச்சை
போடுங்கள்." என்று மனம் கலங்கி அடுக்கடுக்காக
பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டாள்.

அரை மணிக்குப்பின் டாக்டர் வந்து மறுபடியும் பரிசோதனை
செய்தார். முன்போல் கவலைக்குறி இப்போது இல்லை.
"பயமில்லை, பிரஷர் இறங்கி இருக்கிறது. ஆனால்
;பெட் ரெஸ்டில்' இருங்கள். காலையில் பார்க்கிறேன்."
என்று சொன்னது ஆறுதலாக இருந்தது. மீண்டும்
'பெரியவா' படத்துக்கு முன் நமஸ்காரம்.
இரவு நன்கு தூங்கினேன்.

காலையில் டாக்டர் வந்து பார்த்து 'பிரஷர் நார்மல்'
என்று புன்முறுவலுடன் சொன்னார்.ஒரு வாரம் ஆபீஸ்
போக வேண்டாம் என்றும் அட்வைஸ், பின்னர் என்
நண்பர் இருதய சிகிச்சை வைத்தியர் வீட்டுக்கு வந்து
பரிசோதனை செய்து, 'எல்லாம் சரியாக இருக்கு.....
கவலைப்பட வேண்டாம்' என்று சொல்லிவிட்டார்.

மறுநாள் ஒரு டெலிபோன்.

புதுக்கோட்டை ராஜம்மா மாமி பெண் ஸ்ரீமதி
ராஜேஸ்வரி மஹேஷ் பேசினாள்;

"நான் 'காசி ஹனுமான் காட்'டில் வஸந்த நவராத்ரி
பிக்ஷாவந்தனம் செய்யப் போயிருந்தேன். இன்று தான்
வந்தேன். ஸ்ரீ புதுப் பெரியவா, பிரசாதம் தரும்போது,
தனியாக பிரசாதம் அளித்து, 'பம்பாய் போனவுடன்
இந்தப் பிரசாதத்தை வேத நாராயணன் வீட்டில் கொண்டு
போய் கொடு. வேத நாராயணன் மனைவி என்னிடம்
வேண்டிக் கொண்டாள்.கவலைப்படாதே என்று சொல்'
என்று சொல்லி, கண்களை மூடிக்கொண்டு பிரார்த்தனை
செய்து அனுக்ரஹம் பண்ணி, என்னிடம் பிரசாதம் அளித்தார்"
என்று ராஜேஸ்வரி சொன்னாள்.

ஸ்ரீ புதுப் பெரியவர் பிரசாதம் அனுக்ரஹித்த தினமும்,
என் மனைவி பெரியவர்கள் படத்தின் முன்பு மனமுருக
வேண்டிக் கொண்டதும் ஒரே தினம்.!/

ஸ்ரீமஹா பெரியவாளும், ஸ்ரீபுதுப் பெரியவாளும் வெவ்வேறு இல்லை;
இருவரும் ஒன்றே-என்ற உண்மையும் எங்களுக்குப் புரிந்தது.




"பெரியவாளுக்கு சமையல் பக்குவம் செய்யும்
புதுமை முறைகள் எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!."


Photos from Varagooran Narayanan's post in PERIYAVA CHARANAM
By Varagooran Narayanan
"பெரியவாளுக்கு சமையல் பக்குவம் செய்யும்
புதுமை முறைகள் எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!."

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
(ஸ்வாரஸ்யமான புதிய தட்டச்சு)

இப்போதெல்லாம், சமையல் வகுப்புகளை
தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.
சின்னத்திரையில் காட்டுகிறபடி செய்து பார்த்தால்,
கடைசியாக உருவாகும் பண்டத்தை வாயில் வைக்க
முடியுமா.? என்பதே சந்தேகம்.

இல்லாவிட்டால், முருங்கைக்காய் சாம்பார்,
வெண்டைக்காய் பொறியல் என்று, காலம் காலமாக
வருகிற குழம்பு - பொறியல்களையே ஆங்கில வார்த்தைகள்
மிலி அளவுகள் சொல்லி நிகழ்ச்சியை ஒப்பேற்றிவிடுவார்கள்.

பெரியவா, பூர்வாசிரமத்தில் சமையற்கட்டுப் பக்கம்
போனதில்லை; சந்நியாசம் ஏற்றபிறகு அதற்கு அவசியமும்
இல்லாமல் போய்விட்டது. ஆனால் பெரியவாளுடைய
சமையல் பக்குவம் செய்யும் புதுமை முறைகள்
எப்படியோ அத்துபடியாகியிருந்தது.!.

பண்டரிபுரத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தோம்.
சின்னஞ்சிறு கிராமம். நாலைந்து குடிசைகள் மட்டுமே..
ஒரு பெரிய மரத்தடியில் முகாம்.

பெரியவாளுக்குப் பிட்சை தயார் செய்தபின்,
மிகுதியாக இருந்த சில பொருள்களைக் கொண்டு
ஒருவழியாக எங்கள் மதிய உணவை முடித்துக்கொண்டோம்.
சற்று ஓய்வெடுக்கும் வேளை.

அமர்க்களமாக வந்து இறங்கினார்கள்,இருபது பேர்கள்.

எல்லோரும் சென்னைப் பகுதியிலிருந்து வந்தவர்கள்.
ஸ்ரீமடம் முகாமில், ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வர பிரசாதமாக
அருமையான உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன்
வந்தவர்கள்.

ஆனால் ஸ்ரீமடம் ஒரு பெரிய மரத்தின் அடியில்
அல்லவா முகாமிட்டிருக்கிறது.

சமைப்பதற்குத் தேவையான பாத்திரங்கள்,
சாமான்கள் கிடையாதே.?.

பரமாசாரியாளுக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை!
பசியுடன் வந்திருக்கும் அன்பர்களுக்குச் சாப்பாடு
போட வேண்டும் என்பது மட்டுமே குறிக்கோள்.

பிரும்மசாரி ராமகிருஷ்ணன் என்று ஓர் அணுக்கத் தொண்டர்
அவரிடம், "எல்லோருக்கும் சமையல் செய்"
என்று உத்திரவும் இட்டார்கள்.

ராமகிருஷ்ணன் கைகளைப் பிசைந்துகொண்டு பரிதாபமாக
நின்றான்."அடுத்த ஊர் போனதும் சமைத்துப் போடுகிறேனே.?
என்றான்.

ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது பெரியவாளுக்குப்
புரிந்துவிட்டது.

"அரிசி இருக்கோன்னோ.?"

"இருக்கு.கொஞ்சம் பயத்தம்பருப்பும் இருக்கு."

(மோர்).."நல்லதாப் போச்சு.! நீ என்ன பண்றே.? அரிசியைக்
..............களைஞ்சு, அந்த ஜலத்தைத் தனியா ஒரு பாத்திரத்திலே
.............வெச்சுக்கோ.அந்த ஜலத்தில் கொஞ்சம் உப்புப் போட்டு
.............எலுமிச்சம் பழம் பிழிஞ்சு, நாரத்தை இலையைக்
.............கிள்ளிப் போடு. இதுதான் மோர்.

(ரசம்).."பயத்தம்பருப்பை வேகவைச்சு-நிறைய ஜலம் விட்டு
............- அந்தக் கொதிநீரிலே எலுமிச்சம்பழ ரசம் (சாறு)
.............சேர்த்துட்டேன்னா, அதுதான் ரசம்.

(கறி)...."வேகவெச்ச பயத்தம்பருப்பு இருக்கே.? உப்பு போடு
..............ரெண்டு பச்சைமிளகா கிள்ளிப் போடு.
..............இதுதான் கறி.!"

எல்லாம் அரைமணியில் ரெடி.அதற்குள், எல்லோருக்கும்
இலை, தண்ணீர் சேகரித்து வைத்தோம்.

சாதம்,பயத்தம்பருப்புக் கறி, ரசம், மோர் -என்று
அறுசுவை டின்னர்.!."

"சாப்பாடு ஏ ஒன்.!" என்றார் ஒருவர்.

"தேவாமிர்தம்.!" என்றார் இன்னொருவர்.

"இவ்வளவு ருசியான சாப்பாட்டைச் சாப்பிட்டதே இல்லை.!"
என்றார். மற்றொருவர்.

தொண்டர்களாகிய நாங்கள் எங்களுக்குள் சிரித்துக்
கொண்டோம். எல்லாம் பெரியவாள் வாக்கின் ருசி
என்பது எங்களுக்குத் தெரிந்ததுதான்.

விருந்தோம்பல் பற்றி, பெரியவாளிடம் பாடம் கற்க வேண்டும்.

அது அட்சய பாத்திரம்.!. பெரியவாள் சொல்கிறார்.



மகானின் அருட்பார்வை



Status Update
By Mannargudi Sitaraman Srinivasan
மகானின் அருட்பார்வை

இந்தச் சம்பவம் காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சி.

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை
தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த
கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை
வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும்
மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும்.மகான்
மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல
வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத
கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு
வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர,அதனால்
கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள்
வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து
விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல..
காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.

பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு
ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக்
கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து
போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால்
பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து
சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள்
நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச்
சொன்னார்கள்.

தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு
இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே
அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே
இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று
ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா
நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக்
கொண்டே இருந்தார்கள். இப்படியும் அப்படியுமாக
நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு.....
ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில்
இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது.துள்ளியபடி
நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே
கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.

ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான்.
அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை
எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து
கொண்டனர்.

பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின்
மகான் உள்ளே போனார். — with தமிழ் ஜோதிடம் இலவசம்.
























































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக