செவ்வாய், 22 ஏப்ரல், 2014

பா.ஜ.க.வுக்கே வாக்களிப்போம்!

ராதே கிருஷ்ணா 22-04-2014



பா.ஜ.க.வுக்கே வாக்களிப்போம்!
மோடியின் ஆட்சியால் நல்லவை வாழும் என்ற நம்பிக்கை வரட்டும்!
மோடிக்கு நான் ஏன் வாக்களிக்க வேண்டும்?
மோடி பிரதமர் ஆகி விட்டால் நமது வாயில் அல்வா ஊட்டி விடுவாரா? இல்லை லட்டை எடுத்து வாயில் பொடித்து தருவாரா? என்று கேட்கலாம். நிச்சயமாக அப்படி செய்ய மாட்டார். அப்புறம் எதற்கு மோடியை ஆதரிக்க வேண்டும்?
கோதுமையை குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து விட்டு அமெரிக்காவிலிருந்து அதிக விலைக்கு கோதுமையை இறக்குமதி செய்து எனது தலையில் அதிக விலைக்கு கோதுமையை கட்டாமல் இருக்க வேண்டும்.
சர்க்கரையை அரபு நாடுகளுக்கு குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்து விட்டு பாகிஸ்தானிலிருந்து அதிக விலைக்கு இறக்குமதி செய்து எனது தலையில் கட்டாமல் இருக்க வேண்டும்.
வெங்காயத்தை எனது தலையில் 1௦௦ ரூபாய்க்கு கட்டி விட்டு வங்காள தேசத்துக்கு 5௦ ரூபாய்க்கு ஏற்றுமதி செய்யாமல் இருக்க வேண்டும்.
பருத்தி விளைந்தால் அதை உள்நாட்டு தேவைக்கு எஞ்சியதை ஏற்றுமதி செய்ய அனுமதிக்க வேண்டும்.
உள்நாட்டு நிலக்கரியை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து விட்டு, நெய்வேலிக்கு கனிமொழி மூலமாக இந்தோனேஷியாவிலிருந்து தரமற்ற நிலக்கரியை இறக்குமதி செய்யாமல் இருக்க வேண்டும்.
மொத்தத்தில் எனக்கு எனது நாட்டு விளைபொருட்கள் கிடைக்க வேண்டும்.
அதை விற்கும் வியாபாரிகள் பதுக்காமல் பார்க்க வேண்டும்.
அதை விளைவிக்கும் விவசாயிக்கு விளைந்த பிறகு விளைபொருட்கள் அழுகாமல், அதற்கான விலை அல்லது பாதுகாப்பை கொடுக்கும் நிலை வேண்டும்.
விவசாயி விளைவிக்கும் போது விதை கிடைக்காமல், உரம் கிடைக்காமல், தண்ணீர் கிடைக்காமல் உழலும் நிலை இல்லாது இருக்க வேண்டும்.
இதை மோடி செய்வார் தானே!
அது போதும், மற்றதை எனது சகோதர்கள் விவசாயிகள் பார்த்து கொள்வார்கள்.
இதற்கு நிதி இல்லையென்றால் அடுத்த துறையிலிருந்து கூட நிதி ஒதுக்க நேரிடும். அதை மோடி நிச்சயம் செய்வார்.
இது போதுமா?
போதுமென்றால், அந்த நிர்வாகத் திறனுக்காக மோடிக்கு வாக்களியுங்கள்!



























































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக