செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

"ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்"

ராதே கிருஷ்ணா 26-02-2014


"ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்"


From the album: Timeline Photos
By Varagooran Narayanan
"ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்"

சொன்னவர்; ப்ரும்மஸ்ரீ ராமகிருஷ்ண தீக்ஷிதர்,காஞ்சிபுரம்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

1965ம் வருஷம் என்று ஞாபகம்.
ஸ்ரீ மகாப் பெரியவாள், திருப்பதி க்ஷேத்திரத்தில்
முகாமிட்டிருந்தபோது, பெருமாளுக்கு கல்யாண
உற்சவம், (ரூ.600/- செலுத்தி) நடத்தினார்கள்.
உற்சவ நிகழ்ச்சிகள் முடிந்ததும், பிரசாதம்
கொடுத்தார்கள் தேவஸ்தானத்தார்.

வரிசையில் நிற்காமல் ஸ்ரீநிவாஸப் பெருமாள்
தரிசனம் உண்டு,கல்யாணம் நடத்துபவர்களுக்கு.
மரியதை காரணமாக, ஸ்ரீ பெரியவாளுடன்
சென்றிருந்த எல்லோரையும்-15 பேர்கள்-
பெருமாள் தரிசனத்துக்கு அழைத்தார்.

பெரியவாள்; "கல்யாண உத்ஸவம் பண்ணினா,
எத்தனை பேருக்கு தரிசன அனுமதி உண்டு?.."

"ஆறு பேர்" என்றார், பேஷ்கார்.

பெரியவாள்; "அப்படியானா, நாங்க ஆறு பேர் மட்டும்
இந்த சலுகை தரிசனத்துக்கு வரோம். நான்,
புதுப் பெரியவாள், அப்புறம் நாலுபேர்..."

"எல்லாருமே போகலாம்.." என்று குழைந்து
பணிந்து சொன்னார், பேஷ்கார்.

"அது தப்பு; அதர்மம். ஆறு பேர் மட்டும்தான்
போகலாம்னு தேவஸ்தானம் சட்டம் போட்டிருக்கு.
நீங்க தேவஸ்தான சிப்பந்தி. எங்கிட்டவுள்ள
பக்தியாலே, பதினஞ்சு பேரையும் பெருமாள்
தரிசனத்துக்கு அனுப்பினா,அதிலே இரண்டு
குற்றம் உண்டாகிறது.

ஒண்ணு - தேவஸ்தானம் போட்ட விதியை,
தேவஸ்தான ஆபிசரே மீறி நடக்கிற குற்றம் !
சட்டம் போட்டவாளே, அதை மதிக்கல்லேன்னா,
அப்புறம் சட்டம் என்னத்துக்கு ?....
அடுத்தது - சட்டத்தை மீறும்படியான ஒரு
நிர்ப்பந்தத்தைக் கொடுத்தது நான் செய்த குற்றம் !."

தர்மம், வெறும் பிரசாரத்துக்காக மட்டுமல்ல;
ஸ்வயமே அனுஷ்டித்துக் காட்ட வேண்டும் -
என்பதைத் தன் செயல் மூலமே
நிரூபித்துவிட்டார்கள் ஸ்ரீ மகாப் பெரியவாள்.

'ராமோ விக்ரஹவாந் தர்ம;' ஸ்ரீ ராமன் தர்மத்தின்
திருவடிவம் - என்றால், நம்முடைய
ஸ்ரீ மகாப் பெரியவாள், இரண்டாவது இராமன்
என்பது நான் கண்கூடாகத் தெரிந்து கொண்ட உண்மை



































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக