செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

திருமண பொருத்தம் : - எளிய வழி

ராதே கிருஷ்ணா 26-02-2014


திருமண பொருத்தம் :
- எளிய வழி 
From the album: Mobile Uploads
By Jeyananthan Durai
திருமண பொருத்தம் :
- எளிய வழி

1) தினம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்:- ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்:- பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்:- பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி:- நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி:- பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி:- பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

வசியம்:- பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்):- நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி:- 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அ) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

ஆ) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

இ) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

அ) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

ஆ) தினம்,கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

இ) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

ஈ) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம்,சுவாதி, கேட்டை,மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.Status Update
By Narasimman Nagarajan
நோயை விரட்டும் சரபேஸ்வர தியான சுலோகம்:
(திருபுவனத்தில் உள்ளது சரபேஸ்வரர் ஆலயம்)

அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:-

ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:
பக்ஷீ சதுர் பாஹுக:
பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:
காலாக்னி கோடித்யுதி:
விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:
பிரும்மேந்திர முக்யைஸ்துத:
கங்கா சந்தரதர: புரஸ்த சாப:
ஸத் யோரிபுக் னோஸ்து

(சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என்முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்.Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
மந்திரத்தில் (!!?!!) மாங்காயும் பறிக்கலாம்:(நன்றி- Parasuram Sv )

குறுக்கு புத்தி இருந்தால் போதும் நீங்கள் விரும்பினால் உங்கள் கையில் மற்றும் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு குறிப்பிட்ட சாமியாரின் படத்திலிருந்து விபூதி கொட்டுவதாக ஒரு பெரிய தகவலே பரவியது. இப்படி விபூதி கொட்டுவது ஒன்றும் தெய்வீகமானது அல்ல. நீங்கள் விரும்பினால் உங்கள் படத்தில் இருந்து கூட விபூதி கொட்ட வைக்கலாம்.

உங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியர் யாரவது இருந்தால் அவரிடம் சிறிதளவு திமிர் பாஷானம் கேட்டு வாங்கி கொள்ளுங்கள் இது நாட்டு மருந்து கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு திமிர்பாஷானத்தை விற்கமாட்டார்கள்.

நீங்கள் வைத்தியரிடம் வாங்கிய திமிர் பாஷானத்தில் ஒரே ஒரு சொட்டு மட்டும் எடுத்து உங்கள் படத்தின் கண்ணாடியில் வைத்து விடுங்கள். அடுத்து ஆறு மணி நேரத்தில் விபூதி கொட்ட ஆரம்பித்து விடும். இது எப்படி நிகழ்கிறது என்றால் திமிர் பாஷானத்தின் தன்மை காற்றில் உள்ள தூசிகளை தனக்குள் இழுத்து வெளியிடுவதாகும்.

காற்றில் உள்ள தூசிகள் தான் வெள்ளை விபூதியாக கொட்டும். மேலும் இந்த திமிர்பாஷானத்தை வைத்து சில வித்தைகள் செய்யலாம். கற்பூரத்தை ஒரு பத்து நிமிடம் இதில் ஊற வைத்து ஒரு பாட்டிலில் தனியாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். எதாவது யாகம், ஹோமம் நடக்கும் இடத்திற்கு சென்று சமித்து என்ற மர குச்சிகளின் மீது அந்த கற்புரத்தை வைத்து மந்திரம் சொல்வது போல் முணுமுணுத்து குப் என்று ஊதுங்கள், கரியமலவாயு பட்டவுடன் கற்பூரம் தானாக பற்றி கொள்ளும்.

நல்ல பருமனான கடப்பாறை கம்பியை வளைத்து ஒடிக்க விரும்புகிறீர்களா? அதற்கு ஒன்றும் நீங்கள் பயில்வானாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஒடிக்க விரும்பும் கடப்பாரையை பத்து நாட்களுக்கு முன்பாகவே குலை தள்ளிய வாழை மரத்தில் நடுவில் சொறுகி வைத்துவிட வேண்டும். வாழை மர சாரானது இரும்பின் கட்டி தன்மையை நீர்த்து போக செய்துவிடும். பிறகு சுலபமாக ஒடித்து விடலாம்.

இப்படி கொதிக்கும் எண்ணெயில் கை விடுவது, ஒன்றரை மணி நேரத்தில் கம்பு விதையை பயிராக்கி கதிர் தள்ள செய்தல் என்று எத்தனையோ வித்தைகள் உள்ளன.

இவற்றை செய்து பார்க்க மந்திரம் தேவையில்லை. குறுக்கு புத்தி இருந்தால் போதும். இந்த மாதிரியான வயிற்றுப்பிழைப்பு வித்தைகளை கற்று கொண்டவர்கள் தான் வெறுங்கையில் விபூதி வரவழைப்பது உட்பட பல வேலைப்பாடுகளை செய்கிறார்கள்.உண்மையான மந்திரம் அறிந்தவர்கள் இறைவனை அடையவே முற்படுவர் !நமக்கும் அதையே போதிப்பார்கள் !போலிகளைகண்டு ஏமாறாதீர்
Status Update
By Guruvayurappadhasan Sundara Raman AstroThanthrik
ஒரு ஜாதகத்தில் குரு, சுக்கிரன், புதன் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ, 1ம் இடம், 2ம் இடம், 4ம் இடம், 5ம் இடம், 7ம் இடம், 9ம் இடம், 10ம் இடம் அகிய இடங்களில் நின்றால் அதற்கு பெயர் சரஸ்வதி யோகம் எனப்படும்.
சரஸ்வதி யோகம் பெற்ற ஜாதகர் நல்ல கற்றவராக, புத்திசாலியாக, அணைவரும் பாராட்டத் தக்க வகையில் வாழ்க்கை இருக்கும். மிக நல்ல வசதியுடன், நல்ல மனைவி, குழந்தைகள், குடும்பம், வண்டி வாகனம் நல்ல முறையில் அமைந்திருக்கும். அவர் இந்த பூமிதனில் போற்றத் தக்க மனிதராக‌ திகழ்வார்கள்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக