வியாழன், 27 பிப்ரவரி, 2014

ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !

ராதே கிருஷ்ணா 27-02-2014From the album: Timeline Photos
By tamilkey
ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் 9 அபாயங்கள் !

இன்றைய காலத்தில் மார்டன் என்ற பெயரில் ஆல்கஹால் பருகுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதுவரை ஆண்கள் தான் அதிக அளவில் ஆல்கஹால் அருந்திக்கொண்டிருந்தனர்.

தற்போது பெண்களும் குடிக்க ஆரம்பித்துவிட்டனர். சொல்லப்போனால் ஆண்களை விட பெண்களே அதிகம் குடிக்கின்றனர். அத்தகையவர்களிடம் மது அருந்துவீர்களா என்று கேட்டால், அவர்கள் இல்லை, அது ஃபேஷன் நான் அவ்வளவாக அருந்தமாட்டேன் என்று சொல்வார்கள்.

ஆனால் என்ன தான் ஃபேஷனாக இருந்தாலும். அவற்றை குடிப்பதால், உடலில் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையைச் சொன்னால், நம்பவேமாட்டீர்கள். அந்த அளவு நோயானது ஏற்படும். இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாது. ஆனால் வயதுக்கு ஏற்றவாறு குறைத்துக் கொண்டு வந்தால், நல்லது.

ஒரு வேளை அவ்வாறு செய்யாவிட்டால், பின் ஆல்கஹால் அதன் உண்மையான சுயரூபத்தை வெளிக்காட்டும். அதாவது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்றவை உடலில் ஏற்படும். அதுவும் குறைந்த வயதிலேயே அளவுக்கு அதிகமான அளவில் ஆல்கஹால் பருகினால், அவை இளம் வயதிலேயே உடலில் நோய்களை அதிகமாக்கிவிடும். உண்மையில் நிறைய நோய்கள் ஆல்கஹால் பருகுவதால், ஏற்படுகிறது.

இப்போது அவ்வாறு ஆல்கஹால் பருகுபவர்களின் உடலில் சாதாரணமாக எந்த நோய்கள் வரும் என்பதை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1.கல்லீரல் இழைநார் வளர்ச்சி :
இந்த நோய் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இந்த நோயால் கல்லீரலில் உள்ள செல்களில் டாக்ஸின்கள் தங்கி, அந்த செல்களை அழிக்கும். இவை தொடர்ந்தால், இறுதியில் கல்லீரலின் செயல்பாடு முற்றிலும் குறைந்து, இறப்பு ஏற்படும்.

2.அதிக இரத்த அழுத்தம் :
பொதுவாக மதுபானங்கள் பருகினால், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். அவையே அளவுக்கு அதிகமானால், இரத்த அழுத்தமானது உடனே அதிகரித்து, பின் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

3.அதிக எடை :
வோட்கா, பீர் மற்றும் ஜின் போன்றவற்றில் கொழுப்புகள் அதிகம் உள்ளன. பொதுவாக இவற்றை இந்த ஆல்கஹாலில் உணவுகளை விட, அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும். எனவே இதனை பருகினால், உடல் எடை அளவுக்கு அதிகமாக அதிகரித்துவிடும். பின் உடல் பாதிப்பின் ஆரம்ப நிலையான தொப்பை வந்து, பின் பல்வேறு கொடிய நோய்களும் உடலில் வந்துவிடும்.

4.இதய நோய் :
இரத்த அழுத்தம் உடலில் அதிகரித்தால், இவை இதயத்திற்கு அழுத்தத்தை கொடுத்துவிடும். பின் மாரடைப்பு ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆல்கஹால், இரத்தத்தை உறைய வைத்து, இதயத்திற்கு போதிய இரத்த ஓட்டத்தையும் தடுத்துவிடும்.

5.அனீமியா :
அனீமியா எனப்படும் இரத்தக்குறைவு, ஆல்கஹால் பருகுவதால், ஏற்படும். ஏனெனில் ஆல்கஹால் பருகும் போது, ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் கொள்ளவானது குறைந்து, உடலில் இரத்த ஓட்டம் குறைந்துவிடும். இதனால் எந்த வேலை செய்யாமல் இருக்கும்போதும், அதிகமான சோர்வு ஏற்பட்டு, மூச்சுவிடுவதே கஷ்டமாக இருக்கும்.

6.மன அழுத்தம் ;
மன அழுத்தம் குறைய வேண்டும் என்பதற்காக ஆல்கஹால் பருகுவார்கள். ஆனால் உண்மையில் ஆல்கஹால் பருகினால், தான் விரைவில் மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் ஏற்படும்.

7.மூட்டு வலி :
மூட்டுகளில் யூரிக் ஆசிட் அதிகமாக இருப்பதால், மூட்டு வலியானது ஏற்படுகிறது. அதிலும் ஆல்கஹால் அதிகமாக பருகினால், மூட்டுகளில் இன்னும் அதிகமான வலி ஏற்படும்.

8.கணைய பாதிப்பு :
ஆல்கஹால் குடித்தால், கணையத்தில் காயங்கள் ஏற்பட்டு, சாதாரணமாக நடைபெறும் செரிமானத்தையும் பாதிக்கும். இத்தகைய பிரச்சனை ஏற்பட்டால், அது குணமாவது மிகவும் கடினம். இதனால் இறப்பு கூட ஏற்படலாம்.

9.நரம்பு பாதிப்பு :
ஆல்கஹால் நரம்பு செல்களுக்கு விஷம் போன்றது. எனவே ஆல்கஹாலை அதிகம் பருகும் போது, அது உடலில் உள்ள நரம்புகளில் ஆங்காங்கு ஊசியை வைத்து குத்துவது போன்று இருக்கும் அல்லது உடலின் ஒரு பகுதி மட்டு ஒரு மணிநேரத்திற்கு உணர்ச்சியில்லாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக