செவ்வாய், 13 ஜூன், 2017

மஹா பாரதம் - குருஷேத்ரம்

ராதே கிருஷ்ணா 13-06-2017





Vyasa Lakshmanan Lakshmanan
மஹா பாரதத்தில் இந்த 5 பேர் முக்கியமானவர்கள்
ಮಹಾ ಭಾರತ್ ಪ್ರೀತಿಪಾತ್ರರಾದ 5 ಜನರು ಮುಂದುವರೆಯಿರಿ
1. பீமன்
2. துரியோதனன்
3. இடும்பன்
4 கீசகன்
5. ஜராசந்தன்
இவர்களுக்குள் ஒரு ஒற்றுமை என்னவென்றால் 5 வரும்
சம பலம் உடையவர்கள் ஒவ்வொருவரும் 10 யானை பலம்
கொண்டவர்கள். (சிலர் 100 யானை என்றும் சொல்வதுண்டு).
இதில் ஜராசந்தன் மகதத்தின் அரசன். கீசகன் விராட நாட்டின்
சேனாபதி. இடும்பன் இடும்ப வனத்தின் அதிபதி அரக்கன்.
பீமனும் துரியோதனனும் ஹஸ்தினாபுர இளவரசர்கள். இதில்
யார் யாரை முதலில் கொல்கிறார்களோ அவருக்கு கொல்லப்பட்டவரின்
பலம் வந்து சேரும். பீமன் வாயு புத்திரன் வாயுவின் அம்சம்.
வானராவத அரக்கு மாளிகையில் துரியோதனன் பீமனை கொல்ல
நினைக்க, பீமன் தப்பித்து இடும்பனை சந்திக்க நேரிடுகிறது.
பீமன். இடும்பனை கொல்ல நேர்ந்தது. இதன். தொடர்ச்சியாக
மற்ற மூவரையும் பீமனால் கொல்லப்பட்டனர்.
பீமனும் இடும்பனும். சந்திக்க அரக்கு மாளிகை காரணமானது
விதி வலியது.
பீமனிடம் இருந்த தர்மமும், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆசியும் இதை செய்தது
அரக்கு மாளிகை இல்லை என்றால் பீமன் இடும்பன்
சந்திப்பே நிகழ்ந்து இருக்காது.
நாம் ஒன்று நினைக்க தெய்வம். ஒன்று நினை



Vyasa Lakshmanan Lakshmanan
மஹா பாரதம் - குருஷேத்ரம்
மஹா பாரதம்-குருஷேத்ரம் உண்மையில் நடந்ததா ? எப்போது நடந்தது ?
சரித்திர ஆராய்ச்சியாளர்கள் பல ஆதாரங்களை காட்டுகிறார்கள். சொல்கிறார்கள்
உண்மையிலேயே குருஷேத்ரம்நடந்தது. நடந்து கொண்டிருக்கிறது நாளையும்
நடக்கும்.
என்ன இது ? நடந்தது என்றால் நம்பலாம் அல்லது கற்பனை என்று சிலர்
பழிப்பது போல் சொல்லிவிடலாம்
ஆனால் குருஷேத்ரம் நடக்கிறது என்றும் நாளையும்
நடக்கும் என்று கூறினால் நம்மை பைத்தியம் என்பார்கள்.
ஆனால் நான் கூறியது
முழுக்க முழுக்க உண்மை. அதிலும் நாம் ஒவ்வொருவரும் இந்த குருஷேத்ர போரில்
பங்கு கொண்டு போரிடுகிறோம். ஆனால் என்ன நாம் நிற்பது பாண்டவர் பக்கமா
அல்லது கௌரவர் பக்கமா என்பது அவரவர் செயலினை பொறுத்தது.
இது என்ன
புது குழப்பம் ? புது கதை என்று மூளையை கசக்க வேண்டாம்.
எப்படி ?
குருக்ஷேத்ரம் பஞ்ச பாண்டவர்களுக்கும் - 100 கௌரவர்களுக்கும் நடந்த போர்
இங்கு தான் நான் கூற வரும் செய்தியே உள்ளது.
சரி இந்த உலகம் அனைத்தும்
பஞ்ச பூதங்களால் ஆனது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நம் உடலும்
பஞ்ச பூதங்களால் ஆனது தான். எனவே நமது பஞ்ச இந்திரியங்களே பஞ்ச
பாண்டவர்கள். சுருக்கமாக நமது உடல் பஞ்ச பாண்டவர்கள். நமது மனமே
திரௌபதி - பாஞ்சாலி. திரௌபதியை மணந்த பின்னர் தான் பாண்டவர்களுக்கு
வாழ்க்கையே கிடைத்தத. அதற்கு முன் அவர்களுக்கு வாழ்க்கை இல்லாமல் இருந்தது
பஞ்ச இந்திரியங்களால் ஆன நமது உடல் பாண்டவரானால் அதில் திரௌபதி ஆத்மா
ஆகிறாள். திரௌபதி என்ற ஆத்மாவால்தான் பாண்டவர் என்ற உடல் வாழ்ந்தது
எனவே நமது ஆத்மா திரௌபதி நமது உடல் பஞ்ச பாண்டவர்கள்.
நமது உடலை 100 வித ஆசைகள் அதாவது 100 கௌரவர்கள் ஆசை என்ற
பெயரில் அநியாயம், அக்கிரமம் செய்வார்கள் ஆத்மாவை
கோபம், ஆசை, மாயம், மத மாச்சர்யம் என்று அலைகழிப்பார்கள்
அதையெல்லாம் ஜீவாத்மா எதிர்த்து நிற்க வேண்டும். அதற்கு
திரௌபதிக்கு பாண்டவர்கள் துணை நின்றது போல நமது
ஆத்மாவுக்கு நமது பஞ்ச இந்திரியங்கள் ஒத்துழைக்க வேண்டும்
நமது உடலே குருஷேத்ரம்
நமது ஆத்மாவே திரௌபதி
நமது பஞ்சேந்திரியங்களே பாண்டவர்கள்
நமது நூற்றுக்கணக்கான ஆசைகளே கௌரவர்கரகள்.
நமது புத்தி தான் கிருஷ்ணர்
நமது புத்தி தான் கீதை
யாராவது படித்த பண்புள்ளவர் தவறு செய்தால் அவருக்கு
ஏன் புத்தி இப்படி போனது ? என்றுதான் எல்லோரும்
சொல்வார்கள்.
எனவே
கிருஷ்ண புத்தி கீதையை உபதேசிக்கும்
சகுனி புத்தி சூதாட்டத்தை உபதேசிக்கும்
உங்களுக்கு என்ன புத்தி வேண்டும் ? நீங்கள்
யார் பக்கம்
நின்று போரிட விருப்பம் ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக