வெள்ளி, 5 பிப்ரவரி, 2016

பழனி ஏமாற்றுபவர்கள்

ராதே கிருஷ்ணா 05-02-2016







பழனி ஏமாற்றுபவர்கள்

இப்படிப்பட்ட ஏமாற்று பேர்வழிகளால் தான் நம்மூர் சீரழிகின்றது... // படித்துவிட்டு அவசியம் பகிரவும் நண்பர்களே, பிறர் ஏமாறாமல் தடுப்போம் //

என்னுடைய பெண்ணுக்கு முதல் முடி பழனியில்
எடுக்கலாம் என முடிவு செய்து சென்ற மாதம் காரில்
குழந்தைகளுடன் பழனிக்கு சென்றோம்
------------------------------------------------------------------------------------
திருச்சியில் இருந்து திண்டுக்கல் வழியாக பழனிக்கு
சென்றடைந்தோம், பழனி மலை அடிவாரத்துக்கு சென்றதும்
அங்கே இருந்த கடைகாரர்கள், காரை எங்கள் கடை முன்னே
பார்க் பண்ணுங்க என்று போட்டி போட்டுக்கொண்டு அழைத்தனர்
---------------------------------------------------------------------------------
இழுவை ரயில் மூலம் பழனி மலைக்கு மேலே செல்லும்
நுழை வாயிலுக்கு எதிரே உள்ள ஒரு கடையின் முன்னே
ஒரு வழியாக காரை நிறுத்தினேன்
-------------------------------------------------------------------------------
காரை விட்டு நாங்கள் இறங்கியதும், முடிஎடுக்க வந்து இருக்கிறோம் என்று புரிந்துகொண்ட கடைகாரர், எங்களிடம் பக்கத்தில் இருக்கும் முடி எடுக்கும் இடத்தில் முடிஎடுத்து
விட்டு எங்கள் கடையின் பின்னே உள்ள தண்ணீர் தொட்டியில் குழந்தைகளை குளிப்பாட்டி கூட்டிசெல்லுங்கள் என்று கூறவே நாங்களும் அவ்வாறே செய்தோம்
-------------------------------------------------------------------------------
பிறகு கோவிலுக்கு செல்ல புறப்படும் வேலையில் அந்த கடைகாரர் குழந்தைகளுக்கு முடிஎடுக்குரப்ப சாமிக்கு பாலபிஷேகம் செய்தால் நல்லது என்று சொல்லி ஒரு பிளாஸ்டிக் குடத்தில் ஒரு அவுன்ஸ் பாலில் இரண்டு லிட்டர் தண்ணீர் கலந்த நிலையில் இருந்த பாலை நீட்டினார் அதோடு சேர்த்து தேங்காய் பழம் இவைகளோடு கூடிய அர்ச்சனை தட்டு ஒன்றையும் கொடுத்தார்
------------------------------------------------------------------------------
சரி என்று அவைகளை வாங்கிகொண்டு, " சரிப்பா, இங்கே
குழந்தைகள் குளித்ததர்க்கு, மற்றும் இந்த பால்குடம், அர்ச்சனை தட்டு இவைகளுக்கு எவ்வளவு பணம் " என்று கேட்டேன்
----------------------------------------------------------------------------
நீங்கள் மேலே போயி சாமி கும்பிட்டுட்டு வந்து கொடுங்க, எல்லாம் சேர்த்து 350 ரூபாய் ஆகுது என்றார், சரி என்று கிளம்ப தயாரானோம், அப்போது கடைக்காரர் இன்று விஷேச நாளாக இருப்பதால் கூட்டம் அதிகமாக உள்ளது என்று சொல்லி அருகில் நின்ற ஒரு நபரை அழைத்து, இவர்களை மேலே அழைத்து சென்று சாமிக்கு அர்ச்சனை செய்துவிட்டு அழைத்து வா என்று கூறி, எங்களிடம், அதற்கு நீங்கள் அந்த நபருக்கு 200 ரூபாய் கொடுத்தால் போதும் என்றார், நாங்களும் சரி கைக்குழந்தை வைத்திருக்கிறோம் கூட்ட நெரிசல் இல்லாமல் சாமி கும்பிட்டுவிட்டு வரலாம் என நினைத்து ஒத்துக்கொண்டோம்.
------------------------------------------------------------------------------
மேலும், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த சம்பவம் வேறு நினைவுக்கு வந்தது - இதேபோல என் மகனுக்கு முதல் முடி எடுக்க பழனிக்கு வந்தபோது அர்ச்சனை செய்ய அர்ச்சனை டிக்கெட் வாங்கும் இடத்தில் 50 ரூபாய் கொடுக்கையில், சில்லறை இல்லை என்றனர், பிறகு டிக்கெட் கொடுப்பவர், பரவாயில்லை நீங்க அங்க போங்க அங்க இருக்க ஆளுங்க உங்களுக்கு அர்ச்சனை செய்து தருவார்கள் என்றார், சரி என்று அங்கு கோவிலுக்கு உள்ளே சென்றோம் அங்கே அர்ச்சனை செய்பவர் ஒருவர் எங்களை அலைத்து கொண்டுபோய் சாமிக்கு அருகில் நிறுத்தி அர்ச்சனை செய்து 400 ரூபாய் பணம் வாங்கிகொண்டது நினைவுக்கு வந்தது.
-------------------------------------------------------------------------------
எப்படியா இருந்தாலும் இவனுங்களுக்கு பணம் கொடுத்துதான்
ஆகவேண்டும் என்று நினைத்து, கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்த நபர் அழைத்து செல்ல அவர் பின்னே பழனி ஆண்டவரை தரிசிக்க பழனி மலை மேலே ஏறினோம்.
---------------------------------------------------------------------------
செல்லும் வழியில் எங்களை அழைத்து சென்ற நபர் சொன்னார்
சாமிகிட்ட நின்னுகிட்டு கும்பிட்டா 200 ரூபாய் அது கொஞ்சம்
கூட்ட நெரிசலாக இருக்கும், உக்காந்து கும்பிட்டா 300 ரூபாய்
அது ரொம்ப சுலபமா சாமி கிட்டயே உக்காந்து அர்ச்சனை
செஞ்சுட்டு வந்துடலாம் என்றார், நானும் என்ன 100 ரூபாய்
தானே அதிகம், சரி என்று ஒப்புக்கொண்டேன்.
-----------------------------------------------------------------------
மேலே கோவிலுக்கு அருகில் பின் வாசல் வாசல் இருக்கும்
இடத்துக்கு அந்த நபர் அழைத்துசென்று அங்கு நின்றுகொண்டு
இருந்த மற்றொரு நபரிடம் ஏதோ சொன்னார், ஏற்கனவே அங்கே எங்களை போலவே வேறு வேறு நபர்களால் அழைத்துவரப்பட்ட நான்கு குடும்பத்தினர்கள் நின்றுகொண்டு இருந்தனர், சிறிது நேரத்தில் பின் வாசல் பக்கத்தில் இருந்த ஒரு சிறிய கதவை திறந்துகொண்டு ஒரு அர்ச்சகர் வெளியே வந்தார். அங்கே நின்றுகொடிருந்த மற்றொரு நபரிடம் ஏதோ பேசிவிட்டு எங்கள் அணைவரையும் உள்ளே அழைத்து சென்று சாமிக்கு சிறிது தூரத்தில் உட்கார வைத்து அர்ச்சனை செய்து, எங்கள் அனைவரையும் அதே பின்வாசல் வழியே அழைத்து வந்து வெளியே விட்டுவிட்டு சென்றார்
--------------------------------------------------------------------------------
பிறகு எங்களை அழைத்து சென்ற நபருடன் மலையிலிருந்து கீழே இறங்கிவந்து நேரே எங்கள் கார் நிறுத்தபட்டிருக்கும் அந்த கடைக்கு சென்றோம், அங்கே கடைகாரரோடு சேர்த்து மேலும் ரவுடிகள் தோற்றத்துடன் நான்கு பேர் நின்றுகொண்டு இருந்தனர்...
----------------------------------------------------------------------------
நான் கடைகாரரிடம் நீங்கள் கூறியபடி பால்குடம் 350 மற்றும் அழைத்து சென்ற நபருக்கு 300 மொத்தம் 650 ஆகுது என்று
650 ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.
---------------------------------------------------------------------------
உடனே அருகில் இருந்த புதிதாக வந்த நால்வரில் ஒருவர் ஒரு
துண்டு காகிதத்தில் ஏதோ கிறுக்கி மொத்தம் 3600 ரூபாய் ஆவுது என்று எழுதி எங்களிடம் நீட்டினார்.
--------------------------------------------------------------------------
நான் அதிர்ந்து போனேன், நான் அவர்களிடம், என்னப்பா இது
அநியாயமா இருக்கு நான் பேசியபடி 650 ரூபாய் கொடுத்து
விட்டேனே என்றேன், அதற்கு அந்த ரவுடிகள், சாமிகிட்ட உக்காந்து அர்ச்சனை பண்ணுனிங்கல்ல அதுக்குதான் இந்த பணம், இதுல எங்களுக்கு கிடைக்கிறது நூறு இருநூறுதான் மிச்சமெல்லாம் மேலே இருக்குற அர்ச்சகர்களுக்கும் அதிகாரிகளுக்கும் போயிடும் என்றனர்.
-----------------------------------------------------------------------
அந்த ரவுடிகள் பேசும் விதத்தை பார்த்து என் கணவர் அவர்களிடம் எதுவும் பேசவேண்டாம் என்று கூறவே 3600 ரூபாய் பணத்தை அந்த ரவுடிகளிடம் கொடுத்துவிட்டு காரை எடுத்துகொண்டு கிளம்ப தயாரானோம், அப்போது எங்களை அழைத்துக்கொண்டு போன நபர் எங்களிடம் வந்து எனக்கு நான் உங்களிடம் பேசியபடி 300 ரூபாய் கொடுங்கள் என்றார், நான் அவரிடம், அதான் அவர்களிடம் 3600 ரூபாய் கொடுத்து விட்டேனே என்றேன், அதற்கு அவர் அவர்கள் எனக்கு எதுவும் பணம் தரமாட்டார்கள், நான் பேசியபடி 300 ரூபாய் கொடுங்கள் என வற்புறுத்தவே அவரிடம் 300 ரூபாயை கொடுத்துவிட்டு அந்த இடத்தை விட்டு காரை ஓட்டிச்சென்றேன்.
-----------------------------------------------------------------------
என்ன அக்கிரமம் பாருங்கள் நண்பர்களே ....!!!
-----------------------------------------------------------------------
ஒவ்வொரு குடும்பத்துக்கும் 3600 ரூபாய் என வசூலித்தால்
ஒரு நாளைக்கு குறைந்தது நூறு குடும்பத்தினரிடம்
குறைத்து மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் வசூல் செய்கின்றனர்
ஒரு மாதத்திற்கு ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்கின்றனர்
------------------------------------------------------------------------
இவ்வளவு பணமும் எங்கே செல்கிறது .............???
------------------------------------------------------------------------
இவர்கள் பின்னணியில் இருப்பவர்கள் யார் ......???
-----------------------------------------------------------------------
பழனி, அருள்மிகு ஞான தண்டாயுத பாணி சுவாமி
திருக்கோவிலில் அறநிலைய துறை அதிகாரிகளும்
அர்ச்சகர்களும் ரவுடிகள் துணையுடன் நூதனமான
முறையில் மக்களிடம் பணம் பறிக்கிறார்களா .....???

via #ரிலாக்ஸ்_ப்ளீஸ்

1 கருத்து:

  1. there are lots of frauds like this in palani if you are planning to visit palani next time do not trust any of these shop keepers just climb the holy hills get special entry tickets or mostly free darshan queue will itself be free so try that get darshan do not even listen to what ever those shop keepers say. Also think if they are fooling tamilian like this think about the state of other states you should have told them that you will report to police and these guys donot dare to trouble people who speaks up if you think not to create any rucksacks then they will even pull out all your belongings and send you back empty handed, one more tip just remember some local places names and when these type of people approach you tell them you are a native and not a new bee so they will stop the troubles immediately

    பதிலளிநீக்கு