செவ்வாய், 8 டிசம்பர், 2015

ஒரே சன்னிதியில் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலம் உண்டு.

ராதே கிருஷ்ணா 08-12-2015

ஒரே சன்னிதியில் நின்ற, இருந்த, கிடந்த என்ற மூன்று திருக்கோலம்
உண்டு.
அவ்வாறு அமைந்த ஸ்தலங்கள் பல உண்டு.
உதாரணத்திற்கு
திருநீர்மலை, திருக்கோட்டியூர், மதுரை, கூடலழகர், திருவல்லிக்கேணி
போன்றவைகளைக் கூறலாம்.
பொதுவாக திசையைக் குறிக்குமிடத்து அவைகள் மூலவர் நோக்கியுள்ள
திசையினையே குறிப்பதாகும்.
மூலவர் எந்தெந்த ஸ்தலத்தில் எந்த திசை
நோக்கியுள்ளாரோ அவ்வண்ணமே மேற்கண்ட கணக்கீடு கூறப்பட்டுள்ளது.
அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள பெருமாள் ஒரு கரத்தை மேல்
நோக்கி (அருளும் முகத்தான்) வைத்துள்ளதற்கு அபயஹஸ்தம் என்று பெயர்.
மற்றொரு கரத்தை கீழ்நோக்கி வைத்திருப்பதற்கு தன்னடிக் கீழ் சரணடைந்து
உய்யுங்கள் என்பது பொருள்.
சோழநாட்டுத் திருப்பதிகள்
ஒரு விளக்கம்
108 திவ்ய தேசங்களில் மிக அதிக அளவில் 40 திவ்ய தேசங்களைத்
தன்னகத்தே கொண்டு செழித்தோங்கிய செந்நெல் வயல்களினூடே செம்மாந்து
நிற்கிறது சோழ நாடு.
சோழநாட்டுத் திருப்பதிகள் யாவும் தரையோடு
கட்டப்பட்டு பெரும்பாலும் ஒரே மாதிரியான அமைப்பைக்கொண்டவை.
பாண்டி நாட்டுத் திருப்பதிகளில் எழுந்தருளியுள்ள பெருமாளை மாடி வீட்டு
பெருமாள்கள் என்று சொல்லலாம்.
அதாவது பாண்டி நாட்டுத்திருப்பதிகள் யாவும் இரண்டடுக்கு
மூன்றடுக்கு, என்று சொல்வது போல் இரண்டு மூன்று தளங்கள் உடையதாய்
முதல் தளத்தில் ஒரு திருக்கோலத்திலும், இரண்டாவது தளத்தில் பிறிதொரு
திருக்கோலத்திலும்,
மூன்றாவதில் வேறொரு திருக்கோலத்திலும்
எழுந்தருளியிருப்பார்.
(உ-ம்) திருக்கோட்டியூரில் முதல் தளத்தில் பாற்கடல் வண்ணனாகவும்,
2வது தளத்தில் நின்ற நாராயணனாகவும்,
மூன்றாவது தளத்தில் அமர்ந்த
திருக்கோலத்தில் பரமபத நாதனாகவும் வீற்றிருக்கிறார்.
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக