செவ்வாய், 15 டிசம்பர், 2015

நேஷனல் ஹெரால்ட் - நடந்தது என்ன?

ராதே கிருஷ்ணா 15-12-2015




Raghuveeran's Aviyal
நேஷனல் ஹெரால்ட் - நடந்தது என்ன?
1. நேஷனல் ஹெரால்ட் என்ற பத்திரிகை திரு ஜவஹர்லால் நேரு அவர்களால் துவக்கப்பட்டது. இது அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் (AJL) என்ற நிறுவனத்திற்கு சொந்தமானது. இதில் மொத்தம் 1057 பங்குதாரர்கள். இந்த நிறுவனத்தின் ரூ 90 லட்சம் முதலீட்டில் ரூ 89 லட்சம் பெரிய மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் கொடுத்த பணம்.
2..பெருத்த நஷ்டத்தை சந்தித்துவந்த இந்த பத்திரிகையின் வெளியீடு 2008ம் வருடம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த நிறுவனத்திற்கு சுமார் 2000 கோடி ரூபாய்க்குமேல் பெறுமானமுள்ள அசையா சொத்துக்கள் உண்டு.
3.உதவி புரிவதாக கூறி காங்கிரஸ் கட்சி இந்த நிறுவனத்திற்கு ரூ 90.21 கோடி கடனாக கொடுத்தது. அப்பொழுது காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் திருமதி சோனியா காந்தி, திரு ராகுல் காந்தி திரு மோதிலால் வோரா மற்றும் பலர்.
4. 2010ம் வருடம் யங் இந்தியன் என்ற ஒரு நிறுவனம் துவங்கப்பட்டது. இதில் 38% சோனியா காந்திக்கும், 38% ராகுல் காந்திக்கும் மீதம் 24% நேரு குடும்பத்திற்கு நெருக்கமான மோதிலால் வோரா மற்றும் ஆஸ்கார் பெர்னான்டஸ் அவர்களுக்கும் பங்காகும். .
5. காங்கிரஸ் கட்சி யங் இந்தியன் நிறுவனத்திடமிருந்து வெறும் 50 லட்சம் பெற்றுக்கொண்டு தமக்கு AJL லிடமிருந்து வர வேண்டிய ரூ 90.21 கடனை சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு தாரை வார்த்து கொடுத்தது.
6.அதாவது யங் இந்தியன் நிறுவனம் ரூ 50 லட்சம் காங்கிரஸ் கட்சிக்கு செலுத்தி ரூ 90.21 கோடி பெறுமானமுள்ள வரவேண்டிய கடனை தனக்கு சாதகமாக பெற்றது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சியின் ரூ 89.71 கோடி சத்தமில்லாமல் சோனியா காந்தி குடும்பத்தின் யங் இந்தியன் நிறுவனத்திற்கு மாறியது.
7. தனக்கு கொடுக்க வேண்டிய கடனை பங்கு முதலீடாக மாற்றுமாறு யங் இந்தியன் கேட்டதிற்கிணங்க AJLம் அதை பங்கு முதலீடாக AJL ஷேர்ஹோல்டர்களை முறைப்படி கலந்து ஆலோசிக்காமல் மாற்றியது. இதன்மூலம் AJL என்ற நிறுவனத்தின் 99% பங்குகள் சோனியா காந்தியின் குடும்ப நிறுவனமான யங் இந்தியன் கைக்கு மாறியது. அதாவது ரூ 2000 கோடி பெறுமானமுள்ள அசையா சொத்துக்களை உடைய AJL நிறுவனம் இப்பொழுது வெறும் ரூ 50 லட்சம் செலவில் சோனியா காந்தியின் குடும்பத்தின் கையில் !!!
8. இதை கண்டுபிடித்து திரு சுப்பிரமணிய சுவாமி அவர்கள் 2012ம் வருடம் வழக்கு தொடர்ந்தார். இதன் தொடராக வரும் டிசம்பர் 19ம்தேதி சோனியா காந்தி, ராகுல் காந்தி அவர்களும் கோர்டில் ஆஜராக வேண்டும்.
9. இந்த ஊழலுக்கு துணைபோனவர்கள் மற்றும் கட்சிமீது தேர்தல் கமிஷனும் நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்
இதன் தொடர் வரும் 19ம் தேதி அன்று தெரியும்.





































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக