செவ்வாய், 18 நவம்பர், 2014

ஸ்ரீ ராம அநு யாத்ரை 2014 (25-10-2014 to 14-11-2014)

ராதே கிருஷ்ணா 21-11-2014


ஸ்ரீ ராம அநு யாத்ரை 25-10-2014 to 14-11-2014


24-10-2014 அன்று பெங்களூரிலிருந்து லக்நோவ்க்கு ஆகாயவிமானத்தில் சென்று , அங்கிருந்து உடன் வந்திருந்த ஏழு பேருடன் இரண்டு கார்களில் கான்பூர் வந்தடைந்தோம். அங்கு நாங்கள் இருவரும் கோகுல் தாம் சத்திரத்தில் (எங்களது பஸ் யாத்ரிகளுக்காக ஏற்பாடு செய்திருந்த ) தங்கினோம். எங்களுடன்  மணிவண்ணன் , அவரது மனைவி லக்ஷ்மி, முத்தையன், ஜெயலக்ஷ்மி மற்றும் புஷ்பா மாமி ஆகியோர் அவரவர் இடத்திற்குச் சென்று தங்கினர்.

நாங்கள் எங்களது பை, புத்தகம் திரு.ஸ்ரீநிவாசன் (டெல்லி) அவர்களிடம் இருந்து பெற்றுக் கொண்டோம். இரவு உணவு தயிர் சாதம் சாப்பிட்டு உறங்கினோம்.
மறுநாள் காலை 4 மணிக்கு கிளம்பவேண்டும் என்று சொன்னார்கள்.

எங்களது பஸ் நம்பர் 28, வ, மற்றும் திரு. ராமச்சந்திரன் & ஜானகிராமன் எங்களை அழைத்துச் செல்பவர்கள் ஆவர் .

1. பித்தூர்    பாலகாண்டம் முதலிரண்டு ஸர்கங்கள்

25-10-2014 காலை 4 மணிக்கு பஸ் கிளம்பி பிட்டூர் கான்புரிலிருந்து கனோஜ் செல்லும் மார்கத்தில் ( கல்யான்பூரில் திரும்பி) 30 கி,மீ. தூரத்தில் உள்ளது.

தர்சன ஸ்தானங்கள்

1. வால்மீகி ஆஸ்ரமம் : இராமாயணம் எழுதப்பட்ட இடம். கர்பிணி ஸீதை வசித்த இடம். இராமன் செய்த அஸ்வமேத யாகத்தில் குதிரையைப் பிடித்து லவ குசர்கள் சண்டையிட்ட இடம். இராமன் சித்திரகூடத்திற்கு வந்தபோது அங்கிருந்த வால்மீகி , பிற்பாடு இங்கு வந்திருக்கக்கூடும். உத்தரகாண்டத்தில் சொல்லியபடி சத்ருக்னன் அயோத்தியிலிருந்து வாடா மதுரையை நோக்கி லாவனாசுரனை முடிக்கப்போகும்போதும் திரும்ப வரும் போதும் இங்கு தங்கி வால்மீகியை தர்சித்துச் சென்றார்.

2. கங்கை நதி : இதன் தென்கரையிலேயே கர்பிணியான சீதையை இராமனின் ஆணைப்படி லக்ஷ்மணன் விட்டுச் சென்றான்.

3. தமஸா நதி : இராமயணத்தின் தொடக்கத்தில் கூறப்பட்டபடி , வால்மீகி  பரத்வாஜரோடு இங்கே ஸ்நானம் செய்து திரும்பும்போதே , கிரௌஞ்ச பறவைகளில் ஒன்றை வேடன் கொள்வதைக் கண்டு சபித்து 'மாநிஷாத ' என்று தொடங்கும் ஸ்லோகம் உரைத்தார்.

4. ஸீதா ரஸோயீ : ஸீதாவின் மடப்பள்ளி (சமையல் அறை)

5. ப்ரஹ்மாவர்த்தம் : உலக ஸ்ருஷ்டியின் போது , ப்ரஹ்மா , தவம் செய்து, ஸ்வயம்புவ மனுவை உற்பத்தி பண்ணி, அவருக்கு ப்ரியவ்ரதன், உத்தான பாதன் ஆகிய புதல்வர்கள் பிறந்து , அதில் உத்தான பாதனுக்கு த்ருவன் பிறந்து, தவம் இயற்றி பகவானை ஸாக்ஷாகரித்தது இங்கேயே, த்ருவகிலா என்றும் சொல்கிறார்கள்.


2. அயோத்யா           பாலகாண்டம் 16 & 18 வது ஸர்கம் 

சரயு நதியின் தென்கரையில் அமைந்துள்ள ஊர். தகர்க்கவோ எதிர்க்கவோ முடியாததால் இப்பெயர் பெற்றது. ஸ்ரீமந்நாராயணன் வைகுந்தத்தில்  அம்சமாக அயோத்யா என்னுமிடத்தை ஸ்வயம்புவமனுவுக்கு கொடுக்க, அதை அவர் மனுவுக்கு கொடுக்க அவரால் சரயு நதிக்கரையில் அமைக்கப்பட்டது. முக்தி தரும் ஏழு க்ஷேத்திரங்களில் முதன்மை பெற்றது. ஸுர்ய வம்சத்தவர்கலான  தொடக்கமான மன்னர்களின் தலைநகரம்./ இராமனின் அவதார ஸ்தலமானதால் "ஸாகேதம்' என்று பெயர் பெற்றது.இராமன் 11000 ஆண்டுகள் இந்நாட்டை ஆண்டு , ஸ்ரீவைகுண்டம் செல்லும்போது புல், எறும்பு முதலானவை கூட அவனுடன் வானுலகம் போய் இவ்வூரே காலியாகி பின்பு குசனாலே புனர் நிர்மாணம் பண்ணப்பட்ட ஊர். ஆழ்வார்கள் ஐவரால் 13 பாடல்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இன்றுள்ள ஸ்ரீரங்க விமானம் )பிரணவாகார விமானம்) பெரிய பெருமாளோடு இவ்வூரிலேயே இஷ்வாகுவால் குலதெய்வமாக ஸ்தாபிக்கப்பட்டு இராமன் வரை ஆராதிக்கப்பட்டு வந்தது.

தர்சன ஸ்தலங்கள் 

1. ஸ்ரீ ராம ஜென்ம பூமி : இராமன் திரேதாயுகத்தில் அவதரித்த இடம். துஷ்டர்களால் இங்கிருந்த புராதனமான கோயில் நாசம் செய்யப்பட்டது.  இன்று சிறிய கோயிலும் மூர்த்திகளும் உள்ளன.

2. அரண்மனைகள் : தசரதன் கௌசல்யா ஆகியோர்களுடைய அரண்மனைகள், மற்றும் கைகேயி கோபம் கொண்டு கிடந்த கோப்பவனம் ஆகியவை உள்ளன. தர்சனேச்வர் என்ற மகாலும் உண்டு.

3. கனக பவன் : ஸீதா ராமர்களின் அந்தப்புரம், ஸீதா ராமர்களின் ப்ராசீனமான சிறிய மூர்த்திகளும், சிங்காதனத்தில் பெரிய மூர்த்தியும் ஸேவிக்கலாம். 

4.பரத் பவன் : தசரதன் புத்ரகாமேஷ்டி பண்ணிய இடம் இன்றும் ஹோம குண்டத்துடன் காட்சி அளிக்கிறது.

5. லக்ஷ்மணகாட் : லக்ஷ்மணன் இங்கிருந்துதான் ஸ்ரீவைகுண்டத்திற்கு புறப்பட்டார்.

6. குப்தார்காட் : சரயூ நதிக்கரையில் (கோப்ரதார் தீர்த்தம்) அயோத்தியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இராமன்  ஸ்ரீவைகுண்டத்திற்க்கு (சராசரங்களை ஸாந்தானிக லோகத்திற்கு உய்த்துப்) புறப்பட்ட இடம்.

7. தசரத தீர்த்தம் : இனாம் தொலைவில் ஸரயூ நதிக்கரையில் தசரதனுக்கு அந்திமச்சடங்குகள் செய்யப்பட இடம்.

8. ஹனுமான் கடீ : 60 படிகள் கொண்ட சிறு குன்றின் மேல் அமர்ந்திருக்கும் ஹனுமார் கோயில் 

9. ஸரயூ : கோதாநத்திர்க்கு பிரசித்தி பெற்ற புண்ணிய நதி. இதன் வரலாற்றை பாலகாண்டத்தில் விஸ்வாமித்திரர் கூறுவதைக் காணலாம்.

10. வால்மீகி பவன் : விசாலமான மண்டபத்தில் வால்மீகி லவகுசர்கல் ஆகியோர்களின் விக்ரஹங்களையும் , அவற்றில் எழுதப்பட்ட இராமாயணத்தின் 24000 சுலோகங்களையும் தரிசிக்கலாம்.

11. அம்மாஜி மந்திர் : தென்திசை ஸ்ரீ வைஷ்ணவர்கள் கட்டிய ராமர் கோயில்.

12. நந்திகிராமம் (பாரத குண்டம்) : 

அயோத்திக்கு சுமார் 25 கி.மீ. தெற்கே, அலஹபாத் மார்கத்தில் அமைந்துள்ள இடம். பரதன் இங்கிருந்து 14 ஆண்டுகள் நாட்டை ஆண்டார். இராமன் புஷ்பக விமானத்தில் வந்து கொண்டிருக்கிறான் என்ற செய்தியோடு ஹனுமான் பரதனை சந்தித்து தழுவிக்கொண்டது இங்கே தான்.அதை விக்ரஹ ரூபத்தில் தத்ரூபமாக சேவிக்கலாம். இராமன் இங்கே இறங்கி  சடை முடிகழித்து , பின் ஊருக்குள் பிரவேசித்தார்.

3. ஸித்தாஷ்ரமம் ( பக்ஸர்  - பீஹார் ) 

விஸ்வாமித்ரர் தசரதனிடம் வேண்டி ராம லக்ஷ்மணர்களை யாக ரக்ஷணத்திற்க்காகப் பெற்று அழைத்துப் போனார். இந்தப்ரயாணத்தில் , காமாஸ்ரமம் , தாடகாவனம், ஸித்தாஸ்ரமம் ,  கங்கை, சோணாநதி , விசலா நகரம், கௌதம ஆஸ்ரமம் மிதிலா நகரம் ஆகிய இடங்களுக்கு பதினைந்து நாட்களில் சென்றனர். முதல் நாள் ஸரயூ வின் தென்கரை ஓரமாக நடந்து (சுமார் 25 கி.மீ.) இரவு ஓரிடத்தில் தங்கினர். மறுநாள் காலை விஸ்வாமித்ரர் கௌஸல்யா சுப்ரஜா ராமா...' என்று திருப்பள்ளிஎழுச்சி பாடி பிள்ளைகளை எழுப்பி நடத்திக்கொண்டு போய் காமாஸ்ரமத்தை அடைந்தார்.

காமாஸ்ரமம் :  (பாலியா)    பாலகாண்டம் 23 வது ஸர்கம்            

சிவன் காம தேவனை எரித்த இடம். இது உ.பி இல்பாலியா மாகாணத்தில் பக்ஸரிலிருந்து காசிப்பூர் பாதையில் 35 கி.மீ. தூரத்தில் உள்ளது. 
இரண்டாம் இரவு இங்கே தங்கினார்கள். அடுத்த நாள் காலை புறப்பட்டு கங்கையை படகில் கடந்தார்கள். அப்பொழுது கிழக்கில் வந்த பெரும் ஓசை , ஸரயூவும், கங்கையும் கலப்பதால் ஏற்பட்டது என்று விஸ்வாமித்ரர் சொன்னார். இப்போது அந்த சங்கமம் அங்கில்லை. சாப்ரா அருகில் உள்ளது. கங்கையைக் கடந்து தாடகா வனத்தை .அடைந்தார்கள்.

தாடகாவனம் :   (பக்ஸர்)   பாலகாண்டம் 24 வது ஸர்கம்   

இது பக்ஸருக்கு அர்கே 2 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தான் ராமன் தாடகையைக் கொன்று மூன்றாம் நாள் இரவு தங்கினர்.

அடுத்த நாள் காலை புறப்பட்டு , ஸித்தாஸ்ரமத்தை அடைந்தார்கள்.

ஸித்தாஸ்ரமம் :  (பக்ஸர்)    பாலகாண்டம் 29 வது ஸர்கம்
                                                       
                                                        பாலகாண்டம் 30 வது ஸர்கம்

இது பக்ஸரில் கங்கைக் கரையில் உள்ளது. இங்கே 6 நாட்கள், விஸ்வாமித்ரர் யாகம் செய்த புண்ணிய உள்ளது. பிரயாணத்தின் பத்தாம் நாள் வரை இங்கு தங்கி இருந்தார்கள். இதன் அருகிலேயே ஸுப்ரபாதம் பிறந்த இடம் என்றும் காட்டுகிறார்கள். இங்கே ஒர்  அழகிய ஸ்ரீ வைஷ்ணவக் கோயில் உள்ளது. இங்கிருந்து 4 கி.மீ. தொலைவில் டோரா நதிக்கரையில் வாமணனின் ஆஸ்ரமம் ( இன்று சிறைச்சாலை வளாகத்தில்) உள்ளது.

 கங்கா - கண்டகி - ஸோணா 

 ஸங்கமம்  (சாப்ரா - ஸோனேபூரி)    பாலகாண்டம் 31 - 35  வது ஸர்கம்

4. விசலா நகரம் (ஹாஜிபூர் - பீஹார்)

                                                                        பாலகாண்டம் 35 - 48  வது ஸர்கம்


பதினோராம் நாள் கலை மிதிலைப் பிரயாணத்தை தொடங்கினார்கள். வடகிழக்கு மார்கத்தில் , ஒரு நாள் முழுவதும் நடந்து மாலை சோணா நதியின் மேற்கு கரையை அடைந்தார்கள். மணல் திட்டில் பதினோராம் நாள் இரவு தங்கினார்கள். அடுத்த நாள் காலை புறப்பட்டு நதியைக் கடைந்து மாலையில் கங்கையின் தெற்குக்  கரையை அடைந்தார்கள். அங்கே பல ஸாதுக்களை ஸந்தித்து , பன்னிரண்டாம் நாள் இரவு தூங்கும்போது விஸ்வாமித்ரர் பல கதைகளைக் கூறினார். அடுத்த நாள் காலை கங்கையைக் க(பாட்னாவுக்கு கிழக்கே) கடந்து, வடகரையில் விசாலா நகரத்தைக் கண்டார்கள்.அங்கு ஸுமதி என்னும் அரசன் வரவேட்ட்றுப் புகழ்ந்தான்.  பதிமூன்றாம் நாள் இரவு அங்கு தங்கினார்கள். இவ்விடத்தில் ராம்சௌடா என்ற சிறு குன்றில் ராமனின் திருவடிகள் இருக்கின்றன. பதினான்காம் நாள் கிளம்பி பதினைந்தாம் நாள் ஜனக்புரியை அடைந்தார்கள்.

சங்கமங்கள் : (பீஹார்)

நதிகளும் சங்கமங்களும் ஒரு தேசத்தின் வரலாற்றில் முக்கியமான அம்சங்கள்.

1. கங்கை - ஸரயூ (காக்ரா) இது முன்னே குறிப்பிட்டபடி மேற்கே இருந்தது. தற்போது சாப்ராவுக்கு அருகே ரேவால் கன்ஜ் என்னுமிடத்தில் உள்ளது.

2. கங்கை - ஸோணா (ஸோன்) - இது சாப்ராவுக்கும் ஸோநேபுருக்கும் நடுவில் உள்ளது.

3. கங்கை - கண்டகி - இது பாட்னாவுக்கும் ஸோனேபூருக்கும் அருகில் உள்ளது. கண்டகியின் மேற்க்குக் கரையில் ஸோனேபுரியில் தான் கஜேந்திர மோட்சம் நடந்ததாகச் சொல்கிறார்கள். எந்த நதியும் கங்கையொடு கலந்த பிற்பாடு அதற்கு கங்கை என்று மட்டுமே பெயர்.

கௌதம ஆஸ்ரமம் : பக்ஸரிலிருந்து சாப்ரா செல்லும் மார்கத்தில் கங்கை - ஸரயூ சங்கமக் கரையிலேயே அமைந்துள்ளது.
ஆனால் ராமாயணத்தின்படி , இராமன் அஹல்யையின் சாபத்தை ஜனக்புரியில் நுழைவதற்கு சிறிது தூரத்துக்கு முன் தீர்த்தார். அவ்விடம் இன்று ஜனக்புரிக்கு தெற்கே 20 கி.மீ. தூரத்தில் காம்தௌல் என்னுமிடத்தில் உள்ளது. ஒருவேளை கௌதமரின் ஆஸ்ரமம் சாப்ரா அருகேயும், அவர் மனைவி சாபம் பெற்றுக் கல்லாகக் கிடந்தது ஜானக்புரிமுன்பாகவும் இருக்கலாம்.

அஹல்யா ஸாப விமோசனம்      பாலகாண்டம் 48 - 49  வது ஸர்கம்


5. ஸீதாமர்ஹி  
                                 (ஸ்ரீ விஷ்ணு பிராணம்  4 - 5​)

பீகாரில், விசாலா நகரத்திற்கு வடக்கிளிருந்துதொடங்கி, தர்பங்கா மாகாணம், அதிலுள்ள ஸீதாமர்ஹி, நேபாளத்தில் உள்ள ஜனக்புரி ஆகிய நிலப்பரப்பு முழுவதும் (சம்பகாரண்யத்திலிருந்து கண்டகி வரை) மிதிலா தேசம் என்றழைக்கப்பட்டது. இதில் ஸீதாமர்ஹி , மாதா ஸீதையின் அவதார பூமியாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விடம் முசாபர்பூருக்கு வடக்கே 58 கி.மீ. தூரத்தில் தர்பங்கா ரக்ஸொல் ரயில் மார்கத்தில் உள்ளது.

தர்சன ஸ்தானங்கள் :

1. ஸீதா ராமர் கோயில்
2. ஸீதா குண்ட்  - சீதையின் ஸ்நான காட்டம்
3. யக்ஞ பூமி     - ஜனகன் சீதையை கண்டெடுத்த யாக சாலை


6. ஜனக்புரி  (நேபாளம்)   ஸீதா கல்யாணம்

பாலகாண்டம் 50 - 73  வது ஸர்கம்


ஸீதாமர்ஹியிலிருந்து பிட்டாமூர் வழியாக நேபாள எல்லையைக் கடந்து வந்தால் (48 கி.மீ.) இவ்வழகிய சிற்றூரை தரிசிக்கலாம். மிதிலா தேசத்திற்கு முன்னாளில் தீரபுக்தி என்று பெயர் இருந்தது. அது இன்று மருவி 'திர்ஹூத்' எனப்படுகிறது.

தர்சன ஸ்தானங்கள் :

1. ஸ்ரீ ஜானகி மந்திர் : பழைய கோயில் சிதிலமானதால் புதுக்க் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. இதன் விசாலமான மஹால் ஸீஸ் மஹால் என்று அழைக்கப்படுகிறது.

2. ஸ்ரீ ராம மந்திர் : இது ஸீதா ராம திருக்கல்யாணம் நடந்த ஸ்வர்ண மண்டபம்

3. ரத்னா ஸாகர் மந்திர் : திருக்கல்யாணத்துக்காக ரத்னகளும் செல்வமும் வைக்கப்பட்டிருந்த கஜானா.

4. தனுஷ் ஸாகர் : இங்கு தான் சிவதனுஸ்  வைக்கப்பட்டிருந்தது.

5. கங்கா ஸாகர் : இங்கே தான் நிமி அரசனின் உடல் கடையப்பட்டு முதல் ஜனகன் உற்பத்தி ஆனார்.

6. தனுஷா : ஜானக்புரியிலிருந்து 20 கி.மீ. தூரத்தில் உள்ள இவ்விடத்தில் சிவதனுஸ்  இராமனால் முறிக்கப்பட்டது. இன்றும் உடைந்த துண்டு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

7. காம்துளா: முன் சொன்னபடி கௌதம ஆஸ்ரமம் உள்ள இடம்.


7. ச்ருங்கிபேரபுரம்        அயோத்யா காண்டம் 50 - 53  வது ஸர்கம்


(முன் கதைச் சுருக்கம்: பால காண்டத்தின் இறுதியில் இராமன் ஸீதா கல்யாணம் முடித்து திரும்பி வரும் வழியில் பரசுராமர் கர்வத்தை அடக்கி அயோத்தி எய்திய கதை சொல்லப்பட்டுள்ளது. ஜனக்புரியிளிருந்து அயோத்தி சுமார் 380 கி.மீ. தூரம் உள்ளது. முதலில் ஜனகன் ஸீதா  கல்யாணச் செய்தியை தூதர்கள் மூலம் தசரதனுக்குச் சொல்லி அனுப்பியபோது, அவர்கள் அதிவேக குதிரைகளில் 3 நாட்களில் சென்றடைந்தார்கள். தசரதன் சுற்றம் சூழ திருமணத்திற்கு வந்தபோது 5 நாட்களில் அடைந்தான். திருமணம் முடிந்து எல்லோரும் திரும்பும் போது சுமார் 15 நாட்களில் அயோத்தியை அடைந்தார்கள். திருக்கல்யாணத்தின் போது இராமனுக்கு வயது 12. ஸீதைக்கு வயது 6. பிறகு அயோத்தியில் 12 ஆண்டுகள் ஸுகமே வாழ்ந்தார்கள். இனி கைகேயின் வரத்தின்படி இராமன் காடு நோக்கி மேற்கொண்ட இரண்டாவது பிரயாணத்த நோக்குவோம்.)

ஸீதையும் இலக்குவனுஊராரும் பின்தொடர இராமன் அயோத்தியைத் துறந்து தெற்கு நோக்கி நடந்து தமஸா நதிக்கரையில் முதல் நாள் இரவு தங்கினார். அப்போது ஊரார் அறியாவண்ணம் புறப்பட்டு, வேகஸ்ருதி , கோமதி, ஸ்யந்திகா ஆகிய மூன்று நதிகளைக் கடந்து ச்ருங்கிபேரபுரம்  அடைந்தார். இவ்விடம் அலஹாபாத்திலிருந்து வடமேற்கில் 32 கி.மீ. தூரத்தில் ராய்ப்ரேலி ரயில் மார்க்கத்தில் ராம்சௌராரோட் நிலையத்திற்கு அருகில் கங்கையின் வட கரையில் உள்ளது. இவ்விடம் குஹன் என்ற வேடர் தலைவனுடயது. ச்ருங்கி  என்றால் மான், பேரம் என்றால் உடல், குஹன் தான் வேட்டையாடிய மானின் உடலை சுற்றி தொங்கவிட்டிருக்கும் ஊர் அன்று பெயர்க்காரணம். அல்லது இது ருஷ்யச்ருங்கர் என்ற முனிவரும் அவர் பத்னி சாந்தாவும் வசித்த ஊர்.
அதனாலும் இப்பெயர் பெற்றது. இராமன் குஹனோடு தோழமை கொண்டு ஒரு நாளிரவு தங்கினார். அடுத்த நாள் குஹன் ஓடத்தில் இராமனை கங்கையைத் தாண்டுவித்தான்.

தர்சன ஸ்தானங்கள் :

1.கோமதீ நதி : இராமன் காட்டிற்கு சென்றபோது கடந்த நதிகளில் ஒன்று.

2. ருஷ்யச்ருங்கர், சாந்தாதேவி கோயில்

3. விபாண்டக குண்டம் : ருஷ்யஸ்ருன்கரின் தகப்பனார் பெயரில் வழங்கும் இடம்.

4. ராம் ஸ்நாந்காட் : இராமனும் ஸீதையும் தீர்த்தமாடிய இடம்.

5. சிறு குன்று : ஓர் இரவு ஸீதா இராமர்கள் படுத்து உறங்கிய இடம்.

6. கங்கைக்கரை : இராமன் கங்கையைக் கடக்க ஓடம் ஏறிய இடம்.


8. பரத்வாஜ ஆஸ்ரமம்  அலஹாபாத் (ப்ரயாக் )

                            அயோத்யா காண்டம் 54 & 55 வது ஸர்கம்

          யமுனையைக் கடந்தது - அயோத்யா காண்டம் 55வது ஸர்கம்

ப்ரயாக்ராஜ் எல்லா தீர்த்தங்களின் அதிபதி. கங்கை யமுனை மற்றும் அந்தர்வாஹினியான ஸரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் ஸங்கமிக்கும் இடம். இம்மூன்று நதிகளும் ஸ்ரீ மஹாலக்ஷ்மியின் மூன்று பின்னல்கள். பின்னால் வடமொழியில் வேணி எனப்படும். ஆகையால் இதற்கு த்ரிவேணி ஸங்கமம் என்று பெயர். இராமன் கங்கையைக் கடந்து தென்கரையில் வத்ஸ தேசத்தை அடைந்தார். அங்கிருந்து ப்ரயாகை அடைந்து பரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்துக்குச் சென்றார்.

தர்சன ஸ்தானங்கள் :

1. ஸங்கமம்

2. மாதவன் ஸந்நிதி : இங்கு மொத்தம் 12 மாதவர்கள் தர்சனம் கொடுக்கிறார்கள். கங்கைக்கரையில் பிந்து மாதவன் இருக்கிறார்.

3. பரத்வாஜ ஆஸ்ரமம் : இராமன் முனிவரை சந்தித்து சித்திரகூடத்துக்கு வழி கேட்டுக்கொண்ட இடம். ஓர் இரவு தங்கிய இடம். திருபி வரும்போதும் தங்கினார்.

4. பாதாள்புரி கோயில் : இது கோட்டைக்குள் இருக்கும் புராதனக் கோயில். சீதா இராமர்கள் இங்கே இருக்கும் மூர்த்திகளையும் அக்ஷய வடத்தையும் வணங்கியதாக சொல்கிறார்கள்.

5. ஸ்யாம் வடவ்ருக்ஷம் : இராமன் வனாகிய அக்ஷயவடம்.


9. சித்ரகூடம் :                அயோத்யா காண்டம் 56 வது ஸர்கம்

பரத்வாஜர் , இராமன் வாழ்வதற்கு சிறந்த இடம் சித்ரகூடம் என்று சொல்லி தென்மேற்கே 10 க்ரோஸ தூரம் (32 கி.மீ.) நடக்கச் சொன்னார். இராமன் முதலில் யமுனையை அடைந்து மரமிதவையால் கடந்தார். இன்று மாவோ என்னுமிடத்தில் உள்ளது. பின்பு தென்மேற்கே நடந்து சித்ரகூட மலைத்தொடரின் தொடக்கத்தை அடைந்தார்கள். மேலும் நடந்து அலஹாபாத்திலிருந்து சுமார் 100 கி.மீ. தொலைவில் உள்ள சித்ரகூட தாமத்தை ( கார்வி அருகில்) அடைந்தார்கள். இது உ.பி. மற்றும் ம.பி.யின் எல்லையில் மந்தாகினி நதிக்கரையில் உள்ளது. (சித்ரா = அழகிய, கூடம் = உச்சி)

  அயோத்யா காண்டம் 57 - 70 வது ஸர்கம்  -  தசரதன் ஸ்வர்கப்ரஸ்தி 

அயோத்யா காண்டம் 71 - 82 வது ஸர்கம்  -  பரதன் நிலை 

அயோத்யா காண்டம் 83 - 88 வது ஸர்கம்  -  பரதனும் குஹனும் 

அயோத்யா காண்டம் 89 - 93 வது ஸர்கம்  -  பரதனும் பரத்வாஜரும் 

அயோத்யா காண்டம் 94- 97 வது ஸர்கம்  -  லக்ஷ்மணன் கோபமும் -                                                                                                             வெட்கமும்    

அயோத்யா காண்டம் 98 - 102 வது ஸர்கம்  -  பரத ஸரணாகதி 

அயோத்யா காண்டம் 103 - 104 வது ஸர்கம்  -  மந்தாகிணி தர்ப்பணம்   

அயோத்யா காண்டம் 105 - 111 வது ஸர்கம்  -  வாத - பிரதிவாதங்கள் 

அயோத்யா காண்டம் 112 - 114 வது ஸர்கம்  -  அடி சூடும் அரசு 

அயோத்யா காண்டம் 115 வது ஸர்கம்  -  பாதுகா பட்டாபிஷேகம் 

அயோத்யா காண்டம் 116 - 119 வது ஸர்கம்  -  அத்ரி - அநுசூயா         

தர்சன ஸ்தானங்கள் :

1. யமுனா காட் : / துளசிதாஸ் ஆஸ்ரமம் : இராமன் யமுனையை கடந்த இடம், மற்றும் துளசிதாஸ் பாலகாண்டத்தி எழுத துவங்கிய இடம்.

2. காமதகிரி : வேண்டியதைக் கொடுக்கும் மலை. இதன் புனிதத்வம் கருதி யாரும் ஏறாமல் பிரதக்ஷிணம் மட்டும் செய்கிறார்கள்.

3. ராம் காட் : இராமன் தசரதன் மரித்த செய்தி கேட்டு பிண்டப்ரதானம் செய்த இடம்.

4. ஜானகி குண்டம் :  ஸீதை தீர்த்தமாடிய இடம்.

5. பரத்மிலாப் : இராமனை பரதன் ஸந்தித்த இடம்.

6. ஸ்படிக சிலா : காக்கை அசுரன் ஜயந்தன் ஸீதையிடம் அபசாரப்பட்டு, இராமனின் ப்ரஹ்மாஸ்திரத்தால் கண்ணை இழந்த இடம்.

7. பரதன் கோயில் : பாதுக தானத்தின் நினைவாக உள்ளது.

8. ஹனுமான் தாரா ; சிறு குன்றின் மேல் ஹனுமானின் விக்ரஹத்திலிருந்து
ஜலதாரை விழுகிறது.

9. ஸீதா ரஸோயீ : அதே குன்றில் சீதையின் மடப்பள்ளி

10. குப்த கோதாவரி : மலைப்புரத்தில் இருக்கும் இரு ஆழமான குஹைக்குள் தண்ணீர் ஓடுகிறது. கோதாவரி, ராமனை சேவிப்பதற்காக ரஹஸ்யமாக  மறைந்து ஓடுவதாக சொல்கிறார்கள்.

11. வால்மீகி  ஆஸ்ரமம் : இராமன் சித்ரகூடத்துக்குள் நுழையும் முன்பு இவரை வணங்கி அனுமதி பெற்றே வந்தார். பின்பு வால்மீகி இங்கிருந்து பிட்டூருக்கும், அடுத்து நைமிஸாரன்யத்துக்கும் செல்வதாகத் தெரிகிறது.

12. துளசிதாஸ் ஆஸ்ரமம் : ராமசரிதமானஸ் எழுதிய இம்மஹான் வாழ்ந்த இடம்.

13. விஸ்வாமித்ரர் கோயில் : முற்காலத்தில் விச்வாமித்ரரின் அஸ்ரமமாக இருந்தது.

14. அத்ரி அனுஸூயா ஆஸ்ரமம் : சித்ர கூடதுக்கு தெற்கே 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.இராமன் சித்ரகூடத்தை விட்டு காட்டை நோக்கி புறப்பட்டபோது இங்கு தான் வந்து ரிஷியை வணங்கினார்.


10. தண்டகாரண்யம்  

          தண்ட காண்டம் 4 வது ஸர்கம்  -  விராத குண்டம்  

          தண்ட காண்டம் 5 வது ஸர்கம்  -  ஸரபங்காஸ்ரமம் 

          தண்ட காண்டம் 7 - 10 வது ஸர்கம்  -  ஸுதீக்ஷ்ணாஸ்ரமம் 

          தண்ட காண்டம் 11 வது ஸர்கம்  -  அகஸ்த்யாஸ்ரமம்      

          தண்ட காண்டம் 14 வது ஸர்கம்  -  ஜடாயுவின் தீர்கதர்சனம்  

          தண்ட காண்டம் 15 & 16 வது ஸர்கம்  -  பஞ்சவடியும் கோதாவரியும் 

         தண்ட காண்டம் 17 & 18  வது ஸர்கம்  -  சூர்ப்பனகையின் காது                                                                                                                  மூக்கறுத்தல்  

          தண்ட காண்டம் 19 - 30 வது ஸர்கம்  -  14000 ராக்ஷஸ வதம்  

வனவாஸத்தின்போது ராமன் நீண்ட காலம் வாழ்ந்த இடம். இங்கே ஓல மகரிஷிகளை சந்தித்து ஆசை தீர அளவுளாவுகிறான் இராமன் . ஆரண்ய காண்டமே, எல்லோருக்கும் ஸாது ஸங்கம் இன்றியமையாதது என்றுணர்த்தவே ஏற்பட்டது. சித்திரகூடத்துக்கு பரதன் வந்து போனபின், இனி இங்கிருந்தால் நாட்டார் அடிக்கடி வருவார்கள் என்பதால், இராமன் புறப்பட்டு தெற்கு நோக்கி நடந்து அத்ரி  ஆஸ்ரமத்துக்குச் சென்றார். அவரிடம் விடைபெற்று அடர்ந்த கானகத்தே புகுந்தார். ம.பி.யின் வடக்கு எல்லையில் பன்னாவிலிருந்து , தெற்கு எல்லை வரையும், கிழக்கே சத்தீஸ்கரின் பக்ஸர் வரையிலும் பரந்திருந்த அடர்ந்த காடே தண்டகாரண்யம். இஷ்வாகு மன்னனின் கடைசிப் பிள்ளை தண்டன். அவன் தீய ஒழுக்கத்தோடு, தன குருவான சுக்ராச்சாரியாரின் மகளான அரஜையிடம் தவறாக நடந்து முனிவரால் சபிக்கப்பட்டு , அவன் வாழ்ந்த இடம் கொடிய தண்டக வனமாயிற்று. பிற்பாடு பல ரிஷிகள் ஏகாந்தத்தை விரும்பி இங்கு தவமியற்றத் தொடங்கினார்கள். (உத்தரகாண்டம் 79 வது ஸர்கம் ) , தண்டகாரண்யத்தில் புகுந்தவுடன் முதலில் விராதனை எதிர்கொண்டு , பின்பு ஸரபங்கர் , ஸுதீக்ஷ்னர் , பல ரிஷிகள், மறுபடியும் ஸுதீக்ஷ்னர் , அகஸ்த்தியர் ஆகியோரை வணங்கி, கடைசியாக அகஸ்த்யர் சொன்னபடி பஞ்சவடிக்கு வந்து சேர்ந்தான் இராமன் .

இதில் அகஸ்த்தியாஸ்ரமம் மூன்று இடங்களில் காணப்படுகிறது.

1. சாதனாவுக்கு அருகில் 65 கி.மீ. தூரத்தில்

2. நாக்பூரிலிருந்து 50 கி.மீ. வடக்கே ராம்டேக்  என்னுமிடத்தில்

3. நாசிக் பஞ்சவடிக்கு அருகே

இதனால் இராமனின் பாதையை சரியாகக் குறிப்பது கடினமாக இருந்தாலும், ஓரளவு ஊஹிக்க முடிகிறது. இதைப் பற்றிப் பல கருத்துக்களும் நிலவுகின்றன.

1. முதலில் விராத குண்டம் : அத்ரி ஆஸ்ரமத்திற்கு தெற்கே 8 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தான் இராமன் விராதனைக் கொன்றார். இது கொடிய காட்டில் இருப்பதால் செல்ல இயல்வதில்லை.

2. ஸரபங்க ஆஸ்ரமம்: விராத குண்டத்திலிருந்து காட்டு மார்க்கமாகச் சென்றால் தெற்கே 15 கி.மீட்டரும் , ஊர் வழியாகச் சென்றால், சித்ரகூடத்திலிருந்து சாதனா மார்கத்தில் 25 கி.மீ தூரத்தில் உள்ளது. இராமன் இம்முனிவர் சொல்லியே மந்தாகினி கரையோரம் சென்று ஸுதீக்ஷ்ன ஆஸ்ரமத்திற்குச் சென்றார். இராமனை வணங்கி வழிகாட்டிவிட்டு , ஸரபங்கர் வானுலகம் சென்றார். இவ்விடத்தில் மந்தாகினியும் சரபங்க நதியும் கலக்கிறது.

3. ஸுதீக்ஷ்ண ஆஸ்ரமம் : ஸரபங்கர் வழி சொல்லும்போது பின் வரும் ஸ்லோகங்கள் காணப்படுகின்றன.

1. இமாம் மந்தாகினீம் ராம ப்ரதிஸ்ரோதாம்  அனுவ்ரஜ (3.5.37) (மந்தாகினியை ஓட்டி மேற்கு நோக்கி நடப்பாய் )

2. இஹ ராம மஹா தேஜா : ஸுதீக்ஷ்ணோ நாம தார்மிக: வஸத்யரண்யே ... (3.5.35) ( ஸுதீக்ஷ்ணர் என்பவர் இக்காட்டில் வசிக்கிறார்) அடுத்து இராமனின் பிரயாணத்தைச் சொல்கையில்

3. தே கத்வா தூரமத்வானம் நதீஸ்தீர்த்வா பஹூதகா: ததர்சவிபுலம் சைலம் (3.7.2)

முதல் கருத்து: 1&2 சேர்த்துப் பார்த்தால் சரபங்க ஆஸ்ரமத்துக்கு மேற்கே சிறிது தூரத்தில் ஸ்தீக்ஷ்ண ஆஸ்ரமம்  தோன்றுகிறது. அப்படித்தான் இப்போது நாம் தரிசிக்கும் ஸுதீக்ஷ்ணாஸ்ரமம் மேற்கே 10 கி.மீ.தூரத்தில் உள்ளது.ஆனால் தூர நடந்தார்கள் என்ற 3 வது ஸ்லோகம் ஒவ்வாது. அதற்கு வடமொழிச் சொல்லைப் பிரிக்கும்போது - " தே கத்வா அதூரம்"  என்று கொண்டால் 'சிறிது தூரம்' என்று பொருள் ஒத்துப்போகும். இக்கருத்தையே வ்யாக்யதா கோவிந்தராஜர் ஆமோதிக்கிறார்.

இரண்டாம் கருத்து: 3 வது பிரமாணத்தின்படி வெகுதூரம் நடந்திருப்பது உண்மை. ஆகையால் ஸுதீக்ஷ்ணாஸ்ரமம் சரபங்க ஆஸ்ரமத்திலிருந்து தெற்கே, தூரத்தில், ராம்டேக்குக்கு வடக்கே இருந்திருக்கவேண்டும். இதற்குக் கிழக்கே சத்தீஸ்கர் எல்லையில் இராமன் பத்தாண்டுகள் வாழ்ந்த ஆஸ்ரம மண்டலம் இருந்திருக்கவேண்டும். ஆனால் இப்போது எந்த இடமும் இக்கருத்தின்படி காணப்படவில்லை.

இராமன் ஸுதீக்ஷ்ணரிடம் விடை பெற்று பல ரிஷிகளின் ஆஸ்ரமங்களில்  சுமார் 10 ஆண்டுகள் கழித்து , மறுபடியும் ஸுதீக்ஷ்ண ஆஸ்ரமம் வந்து, அகஸ்த்யாஸ்ரமம் செல்ல வழி கேட்டார். ஸுதீக்ஷ்ணர், தன் ஆஸ்ரமத்திலிருந்து தெற்கே 5 யோசனை (80 கி.மீ) போகச் சொன்னார். இன்று நாம் தர்சிக்கும் அகஸ்தியாஸ்ரமம் இதன்படி தான் இருக்கிறது.

4. அகஸ்தியாஸ்ரமம் : முதல் கருத்துப்படி சத்னாவுக்கு அருகிலேயும் இரண்டாம் கருத்துப்படி ராம்டேக்குக்கு அருகிலேயும் உள்ளது. இராமன் அகஸ்த்யரெ பஞ்சவடிக்கு வழிகாட்டி இரண்டு யோசனை (32 கி.மீ.) தூரம் நடக்கச் சொன்னார். முதல் கருத்துப்படி இது ஒத்து வரவில்லை. ஏனென்றால் நாசிக் பஞ்சவடி வெகு தூரத்தில்  இருக்கிறது. இரண்டாம் கருத்துப்படி ராம்டேக்குக்கு தெற்கே 32 கி.மீ. தூரத்தில் பஞ்சவடி இருக்கவேண்டும். இன்று அப்படி ஓரிடம் இல்லை. ஒருவேளை இதைத்தான் வெகுதூரத்தில் இருக்கும் பத்ராசலப்பர்ணசாலையாகச் சொல்லியிருக்கலாம். ஆனால் பத்ராசலத்தில் ஒரு ஒவ்வாமை ஏற்படுகிறது. பஞ்சவடியிலிருந்து இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது , ஸீதை  தன திருவாபரணங்களை மூட்டையாகக் கட்டி, ருஷ்ய முக பர்வதத்தில் அமர்ந்திருந்த சுக்ரீவாதிகள் நடுவே போட்டாள். பத்ராசலம் அருகிலிருந்து ஆகாயமார்க்கமாக இலங்கை சென்றால்கர்நாடகத்திளிருக்கும் ஹம்பி- ருஷ்யமூகம் வழியில் வராது.நாசிக் பஞ்சவடியிளிருந்து இலங்கை செல்லும் மார்க்கத்தில் ருஷ்யமூகம் வரும்.

நாசிக் பஞ்சவடியிலும், மன்மாட் அருகேயும் உள்ள அகச்த்யாஸ்ரமமும் , இராமாயணத்தில் கொடுக்கப்பட்டுள்ள தூரங்களின்படி ஒத்துவரவில்லை.

இப்படி எல்லா கருத்துக்களிலும் பல நன்மைகள் உள்ளன. இதைப் பற்றியெல்லாம் வாதமோ, விசாரமோ பண்ணாமல், இராமன் திருவடி எல்லாவிடத்திலும் பட்டது என்று உகந்து விஸ்வசிப்பதே பக்தனுக்கு அழகு.

11.ராமகிரி ராம்டெக் (நாக்பூர்)

இவ்விடம் நாக்பூருக்கு வடக்கே சுமார் 45 கி.மீ. தூரத்தில் உள்ளது.  சிருகுன்றுக்கு மேலே மிக அழகிய ராமர் கோயில் உள்ளது. அருகில் ராம் ஸாகர் என்ற பவிதமான குளம் உள்ளது.  கோயிலில் அகஸ்த்யர் விக்ரஹம் உள்ளது. இம்மலையைச் சார்ந்த வனத்திலேயே அகஸ்த்யாஸ்ரமம் இருந்ததாககே கூறுகிறார்கள். இவ்விடத்திலும் இரண்டு கருத்துக்கள் உண்டு.

முதல் கருத்து: முன்னே நாம் பார்த்தபடி, ஸ்தீக்ஷ்ண ஆஸ்ரமம் நாக்பூருக்கு வடக்கே இருக்கும் பக்ஷத்தில், அதற்கு தெற்கே சுமார் 80 கி.மீ. தொலைவில் , அகஸ்த்யாஸ்ரமம் இருக்கவேண்டும். அவ்வஸ்ரமமே இது. ஆகையால் இராமன் சித்ரகூடத்திலிருந்து  இங்கு வந்து தங்கி, இதன் கிழக்கே உள்ள ஆஸ்ரம மண்டலத்தில் 10 ஆண்டுகள் வசித்து, பின்பு பஞ்சவடீ  நோக்கிச் சென்றார். இங்கிருக்கும் குளத்தில் இராமனும் ஸீதையும் சனனம் பண்ணினார்கள். இதற்கு 32 கி.மீ. தெற்கே பஞ்சவடீ யும் இருந்திருக்கவேண்டும்.

இரண்டாம் கருத்து: ஸாத்னா அருகிலிருக்கும் அகஸ்த்யாஸ்ரமத்திலிருந்து தென்மேற்கே சென்று நாசிக் பஞ்சவடீ யை அடைந்துவிட்டார்கள். ராம்டெக் வழியாகப் போகவில்லை. ஆனால் இராமன் மற்றொரு சமயம் , பட்டாபிஷேகத்திற்குப் பிற்பாடு, ஸம்பூகன் என்பவனை அடாத செயலுக்காககே கொன்று, உடனே அகஸ்த்யரை சந்தித்து உயர்ந்த ரத்னா ஹாரத்தைப் பெற்ற இடமே இது என்று கூறுகிறார்கள். இவ்வரலாறு உத்தரகாண்டத்தில் 75, 78 ஸர்கங்களில் கூறப்பட்டுள்ளது. இதையே குலசேகர ஆழ்வாரும் 'செறித்தவச்சம்புகன் தன்னை சென்று கொன்று செழுமறையின் உயிர் மீட்டுத்தோன் ஈந்த நிரைமணிப்பூண் அணியும் கொண்டு...' என்று அருளினார்.

12. பஞ்சவடீ  (நாசிக்)

     தண்ட காண்டம் 31 - 41 வது ஸர்கம்  -  இராவணனும் மாரிசனும் 

      தண்ட காண்டம் 42 - 45 வது ஸர்கம்  -  அம்மானும் பொன்மானும் 

      தண்ட காண்டம் 46 - 49 வது ஸர்கம்  -  சீதையை அபஹரித்தல் 

       தண்ட காண்டம் 50 - 53 வது ஸர்கம்  -  ஜடாயு கைங்கர்யம் 

        தண்ட காண்டம் 54 வது ஸர்கம்  -  திருவாபரண அநுக்ரஹம் 

         தண்ட காண்டம் 55 - 56 வது ஸர்கம்  -  ராவணனின் விபரீத ஆசை 

         தண்ட காண்டம் 57 - 67 வது ஸர்கம்  -  ராமனின் சோகமும் கோபமும் 

         தண்ட காண்டம் 68 வது ஸர்கம்  -  ஜடாயு மோக்ஷம் 

          தண்ட காண்டம் 69 - 73 வது ஸர்கம்  -  கபந்தனின் சாப விமோசனமும்                                                                                              வழிகாட்டலும் 

           தண்ட காண்டம் 74 வது ஸர்கம்  -  சபரி மோக்ஷம் 
   

ஐந்து ஆலமரங்கள் சேர்ந்திருக்கும் இவ்விடத்திலேயே லக்ஷ்மணன் அமைத்த மிக அழகிய பர்ணசாலையில் ஸீதா ராமர்கள் வாழ்ந்தனர். கோதாவரியின் கரையில் அமைந்துள்ளது இவ்வூர். வடகரையில் பஞ்சவடீ யும் தபோவனமும் தென்கரையில் நாசிக் ஊரும் உள்ளது. நாசிக்க என்றால் மூக்கு. சூர்ப்பனகையின் காது மூக்கு அறுந்து விழுந்த இடமாகையால் நாசிக் என்று பெயர் பெட்ட்ரதாகவும் செவி வழிச் செய்தி.

தர்சன ஸ்தானங்கள் :

1. பஞ்சவடி : ஐந்து வடவ்ருக்ஷங்கள் இருக்கின்றன. இது தான் பர்ணசாலை இருக்கும் இடம். அருகே இலக்குவன் பாதுகாப்புக்காக நின்ற இடமும் இருக்கிறது.

2. தபோவனம் : பஞ்சவடியிலிருந்து 3 கி.மீ.தூரத்தில் உள்ளது. இங்கு கபில என்னும் சிறுநதி கோதாவரியில் ஸங்கமிக்கிறது. இங்கு கௌதமர் மற்றும் கபில முனிவரின் ஆஸ்ரமம் இருக்கிறது. இங்கு தான் இலக்குவன் சூர்ப்பனகையின் காது மூக்கை அறுத்து கோதாவரிக்கு தெற்குக் கரையில் வீசினார். இங்கு ப்ரஹ்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் பெயரில் மூன்று குண்டங்கள் தண்ணீர் இல்லாமல் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை. இதற்கருகே அக்னிதீர்த்தம் இருக்கிறது. இங்கு தான் இராமன் ஸீதையை அக்னியிடம் மறைத்து வைத்து,  மாயா ஸீதையை அருகே வைத்தார். அவளையே ராவணன் தூக்கிப் போனான். ( இது ராமாயணத்தில் இல்லை).

3. காலாராம் மந்திர்: புராதனமான சஸீதாராமர் கோயில்

4. ஸீதா கும்ஃபா : இங்கிருந்தே இராவணன் ஸீதையை தூக்கிப் போனதாகத் தெரிகிறது. நாசிக்கிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ள குன்றின் மேல் இருக்கும் ராமசஅய்யா என்னும் இடத்தில் இருந்தும் தூக்கிப் போனதாகச் சொல்கிறார்கள்.

5. ராமகுண்டம்: கோதாவரியில் முக்யமான ஸ்நான கட்டம். இராமன் இங்கே அமாவாசை அன்று பிண்ட  தானம் செய்ததாகச் சொல்கிறார்கள்.

6. கரதூஷனர்களை அழித்த இடம்: சட்ட்று தொலைவில் இருப்பதாகச் சொல்கிறார்கள். சரியாகத் தெரியவில்லை.

7. கோதாவரி உற்பத்தி : சுமார் 40 கி.மீ. தொலைவில் த்ரயம்பகேஸ்வரில் சக்ர தீர்த்தத்தில் உள்ளது. வனத்தில் இருப்பதால் காண்பது ஸ்ரமம் . மேலும், பிராமகிரியிலும், குசாவர்த்தத்திலும் , மறைந்து பின்பு மறுபடியும் புலப்படுகிறது.

8. ம்ருகவ்யாதேச்வர்: தள்ளி இருக்கும் இவ்விடம் தற்போது தண்ணீரில் மூழ்கி, போக முடியாமல் இருக்கிறது. இங்கு தான் ராமன் மாரீசனைக் கொன்றார்.

9. ஜடாயு க்ஷேத்ரம் : நாசிக்கிலிருந்து தென்மேற்கே செல்லும் இகத்புரி மார்க்கத்தில் 55 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்கு தான் இராமன் ஜடாயுவுக்கு அந்திம ஸம்ஸ்காரங்கள் செய்தார். அப்போது தர்ப்பணத்துக்காக தண்ணீர் வேண்டி அம்பெய்தார்.அப்புண்ணிய தீர்த்தம் தற்போது ஸர்வதீர்த்தகுண்டம் என்று வழங்கப்படுகின்றது.

10. ஆகஸ்த்யாஸ்ரமம் : நாசிக்கிலிருந்து வடகிழக்கே சுமார் 90 கி.மீ. தூரத்தில் மன்மாடுக்கு அருகே 'அங்கயீ' என்னும் ஊருக்கு அருகில் உள்ளது. இதையே ஸுதீக்ஷ்ணர் காட்டிக்கொடுத்த  அகஸ்த்யாஸ்ரமம் அன்று சொல்கிறார்கள். ஆனால் இக்கருத்து எவ்விடத்திலும் ஒத்து வரவில்லை. இராமாயணத்தின்படி ஸாத்னா ஸுதீக்ஷ்ண ஆஸ்ரமத்திலிருந்து அகஸ்த்யாஸ்ரமம் 80 கி.மீ. தூரமும், அகஸ்த்யாஸ்ரமத்திலிருந்து பஞ்சவடீ 32 கி.மீ. தூரமும் இருக்கவேண்டும். ஆனால் இந்த அகஸ்த்யாஸ்ரமம், ஸாத்னா ஸுதீக்ஷ்ண ஆஸ்ரமத்திலிருந்து 500 கி.மீ. தள்ளியும் பஞ்சவடீயிலிருந்து 90 கி.மீ. தூரமும் உள்ளது.

11. ஜனஸ்தானம் : தண்டகாரண்யம் கட்டுக்கு அருகில் மக்கள் வாழ்ந்த இடம் இது.


13. ருஷ்யமூகம் - கிஷ்கிந்தா

            கிஷ்கிந்தா காண்டம் 1 - 12 வது ஸர்கம்  -  ருஷ்ய மூக பர்வதம் 

            கிஷ்கிந்தா காண்டம் 8- 11 வது ஸர்கம்  -  வாலியோடு விரோதம் 

            கிஷ்கிந்தா காண்டம் 12 - 16 வது ஸர்கம்  -  சுக்ரீவன் வாலி யுத்தம் 

            கிஷ்கிந்தா காண்டம் 17 - 18 வது ஸர்கம்  -  வாலிக்கு ஸமாதானம் 

            கிஷ்கிந்தா காண்டம் 19 - 25 வது ஸர்கம்  -  தாரையின் நிலை 

            கிஷ்கிந்தா காண்டம் 26 வது ஸர்கம்  -  சுக்ரீவ பட்டாபிஷேகம் 

            கிஷ்கிந்தா காண்டம் 27 - 28 வது ஸர்கம்  -  மால்யவானில் 4 மாதம்  

            கிஷ்கிந்தா காண்டம் 29 - 36 வது ஸர்கம்  -  லக்ஷ்மணன் கோபம் 

            கிஷ்கிந்தா காண்டம் 37 - 47 வது ஸர்கம்  -  நான்கு திசைக்கும்                                                                                                                         வானரப்படை   

            கிஷ்கிந்தா காண்டம் 44 வது ஸர்கம்  - அங்குலீயக ப்ரதாநம் 

            கிஷ்கிந்தா காண்டம் 48 - 55 வது ஸர்கம்  -  தெற்கே தேடுதல் 

            கிஷ்கிந்தா காண்டம் 56 - 63 வது ஸர்கம்  -  ஸம்பாதியின்                                                                                                                                     வழிகாட்டல்    

            கிஷ்கிந்தா காண்டம் 64 - 67 வது ஸர்கம்  -  திருவடியின் ஆற்றல் 

  


          சுந்தர காண்டம் 1 - 15 வது ஸர்கம்  -  ஸீதையைத் தேடுதல்   

          சுந்தர காண்டம் 16 வது ஸர்கம்  -  ஸீதையின் உபதேசமும் துன்பமும்         
    சுந்தர காண்டம் 28 - 31 வது ஸர்கம்  -  ம்ருத ஸஞ்ஜீவியான ஸ்ரீ ராம கதை 

    சுந்தர காண்டம் 32 - 35 வது ஸர்கம்  -  அடையாளம் கூறல் 

    சுந்தர காண்டம் 36 - 38 வது ஸர்கம்  -  அங்குலீயகம் - 
                                                                                     சூடாமணியைக் கொடுத்தல்  

    சுந்தர காண்டம் 38 - 57 வது ஸர்கம்  -  ஹனுமானின் பராக்ரமம் 

    சுந்தர காண்டம் 58 - 63 வது ஸர்கம்  -  வானர சேஷ்டை 

    சுந்தர காண்டம் 64 - 66 வது ஸர்கம்  -  சூடாமணியைக் கண்டு ராமபிரான்                                                                                        புலம்புதல் 

ஜடாயுவிற்கு ஸம்ஸ்காரம் பண்ணிவிட்டு ஸீதையை தேடத்தொடங்கிய இராம லக்ஷ்மணர்கள் , கோதாவரியைக் கடந்து ஜனஸ்தானத்துள் நுழைந்தார்கள். முதலில் எதிர்த்து வந்த கபந்தனைக் கொன்றார்கள். கபந்தன் சுக்ரீவன் இருக்கும் இடத்திற்கு வழி காட்டினான். இத விளக்கும்போது வால்மீகி கீழ்க்கண்டபடி திசைகளைச் சொல்கிறார். ஜடாயு ஸம்ஸ்காரத்திரற்குப் பின் மேற்கே நடந்து தாண்டி ஜனஸ்தானம் அடைந்து அங்கிருந்து 10 கி.மீ. உள்ள க்ரௌஞ்சாரண்யம் அடைந்து அங்கு அயோமுகி என்பவல்காது மூக்கை அறுத்தார்கள். பிறகே கபந்தனை முடித்தார்கள். கபந்தன் சபா விமோசனம் ஏற்பட்டு ருஷ்ய மோக பர்வதத்தில் பம்பா ஸரஸ் அருகிலிருக்கும் சுக்ரீவனோடு தோழமை கொள்ளச் சொன்னான். அங்கிருந்து மேற்கு நோக்கி நடந்து அழகிய காடுகளைத் தாண்டி இராமன் சென்றால் பம்பா ஸரஸும் சபரி  ஆஸ்ரமமும், மதங்க வனமும் வரும் என்றும் சொன்னார்கள்.

ஜடாயு ஸம்ஸ்காரம் முடித்து இராமன் கிஷ்கிந்தைக்கு வந்த வழி சுமாராகத்தான் புரிகிறது. இதப் பற்றியும் இரண்டு கருத்துக்கள் நிலவுகின்றன. முதல் கருத்து: ஜடாயு க்ஷேத்ரத்திலிருந்து தென்கிழக்கு திசையிலேயே நடந்து  லோனாவாலா மலைத்தொடரைகே கடந்து ஹம்பிக்கு அருகில் இருக்கும் கிஷ்கிந்தைக்கு வந்திருக்கவேண்டும். இமோட்க்ஷத்திர்க்கு க்கருத்து நாசிக் அருகே தான் பஞ்சவடி உள்ளது என்னும் கருத்தை ஒட்டியது.

இரண்டாம் கருத்து: பஞ்சவடி நாக்பூருக்கு அருகே உள்ளது என்னும் பக்ஷத்தில் இராமன் நேரே தெற்கு நோக்கி நடந்து "நல்ல மலா" மலைத்தொடரில் அஹோபிலத்துக்கு அருகே கபந்தனை சந்தித்து அவன் வழி  நேர்மேற்கே சென்று கிஷ்கிந்தையை அடைந்தான். ஆனால் இக்கருத்தின்படி பஞ்சவடியோ ஜடாயு ஸ்தலமோ எங்கு உள்ளது என்று குறிப்பிடப்படவில்லை.


இராமன் சபரியை சந்தித்து மோக்ஷத்திரற்கு அனுப்பிவிட்டு அருகே பிரகாசிக்கும் "ருஷ்ய முகத்தை" அடைந்தான். அங்கு அழகிய பம்பா  ஸரஸையும் அதன் கரையில் ருஷ்ய மூகத்தையும் கண்டான். அங்கு மறைந்திருந்த சுக்ரீவன் இராமனைக் கண்டு பயந்து 'மலாயா' மலையில் ஒளிந்து கொண்டான். ஹனுமான் வந்து இராம் லக்ஷ்மணர்களை இன்னார் என அறிந்து கொண்டு பின்பு சுக்ரீவனைப் போய்  கூட்டி வந்தான். (4.5.1) பின்பே சுக்ரீவ ஸக்யம் ஏற்பட்டது. பின்பு சுக்ரீவனை வாலியோடு ஏற்பட்ட விரோதத்தையும் அவனுக்கு அஞ்சி தான் பூமியில் பல இடங்களுக்கு ஓடிகே கடைசியில் ருஷ்ய முகத்தில் ஒளிந்து இருப்பதையும் சொன்னன்.  வாலியின் அரண்மனை , குரங்கு கூட்டத்தின் தலைநகரமான கிஷ்கிந்தையில் உள்ளது. இன்று அது ருஷ்ய மூகத்திற்கு வெகு அருகில் உள்ளது. (3.10.27.28) ஆகையால் இவ்விடத்திற்கு வாலி வரமுடியாது என்ற ரகசியம் முன்னமேயே தெரியாததால் பல இடங்களுக்கு ஓடினான் அன்று கொள்ளவேண்டும்.

இனி கிஷ்கிந்தைகே கதைக்கு வருவோம்.

இது துங்கபத்ரா நதிக்கரையில் உள்ள ஒரு வரலட்ட்றுச் சிறப்பு மிக்க ஊர். கர்நாடகத்தில் ஹம்பிக்கு அருகில் இவ்விடம் இருக்கிறது. துங்கபத்ரா நதியைப் பற்றி இராமாயணத்தில் சொல்லப்படவில்லை. விஜயநகர ஸாம்ராஜ்யத்தின் தலைநகரான ஹம்பியில் மிகச் சிறந்த சிற்ப வேலைப் பாடுகளுடன் விருபாக்ஷன் (சிவன்) கோயில் உள்ளது. துங்கபத்ரையின் ஒரு கரையில் உள்ள ஆனகுந்தீ என்கிற இடத்திலே இராமாயணத்தில் சொல்லப்பட்ட பல ஸ்தலங்கள் உள்ளன.

தர்சன ஸ்தானங்கள் :

1. சபரி ஆஸ்ரமம் : இராமன் சபரி கொடுத்த கனிகளை உண்டு அவளை மோக்ஷத்திற்கு வழி அனுப்பிய இடம். இது பம்பா ஸரோவர் கரையில் உள்ளது.

2. பம்பா எரி : இதக்கிரிப்பகா வைத்துக்கொண்டே இராமன் ருஷ்ய முகத்தை அடைந்தார்.

3.ருஷ்ய மோக மலை : இதுவே சுக்ரீவன் ஒளிந்து கொண்டிருந்த இடம். இது ஒரு வில்லைப் போல் வளைந்து ஓடும் துங்கபத்ரைக்கு நடுவில் உள்ளது. அதனால் இவ்விடத்தில் நதி "சக்ர தீர்த்தம்" என்று வழங்கப்படுகிறது.
கல் காத்திருந்த மிக அழகிய மலை.
4. கோதண்டராமர் கோயில் : மலைக்குக் கீழே இராமனின் நினைவாக ஏற்பட்டிருக்கும் கோயில். இங்கு தான் சுக்ரீவ பட்டாபிஷேகம் நடந்தது.

5. மதங்க பர்வதம் : சபரியின் குருவான மதங்க முனிவர் வசித்த இடம். இங்கிருந்து துங்கபத்ரையின் எதிரில் உள்ள துந்துபி மலை தெரிகிறது.

6.ஸீதா குண்ட் : இலங்கையிலிருந்து திரும்பி வரும் வழியில் ஸீதை ஸ்நானம் பண்ணிய இடம் என்று சொல்கிறார்கள். இங்கு ஸீதாவின் திருவடிகளின் சின்னமும் வஸ்த்ரத்தின் சின்னமும் காட்சி தருகின்றன.

7. மால்யவான் மலை: சுக்ரீவ பட்டாபிஷேகத்திற்குப் பின் மழைக்காலம் வந்து விட்டதால் உடனடியாக ஸீதா தேவியைத் தேடித் போகமுடியாமலே இராம லக்ஷ்மணர்கள் காத்திருந்த மிக அழகிய மலை. இதை ப்ரஸ்ரவண கிரி என்றும் சொல்கிறார்கள். இதில் ஸ்படிக சிலா கோயில் இருக்கிறது.

8. கிஷ்கிந்தா : துங்கபத்ரையின் எதிர்கரையில் உள்ளது. இதுவே வானர ராஜ்யத்தின் தலைநகர்.

9. சிந்தாமணி : வாலி சுக்ரீவர்கள் சண்டையிட்டது மற்றும் இராமன் மறைந்திருந்து வாலி பேரில் அம்பு எய்தது ஆகியவை நடந்த இடம். இராமன் அம்பு வைத்த சின்னம் காட்சி அளிக்கிறது. இங்கிருக்கும் வெள்ளைப் பாறைகளில் வாலியின் ரத்தச் சுவடு தெரிகிறது. இங்கேயே ஏழு ஸால வ்ருக்ஷங்கள் இருந்ததாகவும் சொல்கிறார்கள்.

10 அரங்கநாதர் கோயில் :

11. விட்டல கிருஷ்ணன் கோயில் : விட்டல பகவான் இங்கிருந்து பண்டரிபுரம் சென்றதாகச் சொல்கிறார்கள். இப்போது எந்த மூர்த்தியும் இல்லை.

12. அஞ்சனா பர்வதம்: ஹனுமானின் தாயார் அஞ்சனை வசித்த இடம் மற்றும் மகானுமான் பிறந்த இடம் என்று சொல்கிறார்கள்.

13. மதுவனம் : சுக்ரீவனுக்கு மிகப்ரியமான தோட்டம். ஹனுமான் ஸீதா தேவியைக் கண்டு திரும்பி வரும் சமயம் மகிர்ச்சி தாங்காமல் வானரக்கூட்டம் இதை அழித்தது.14. ஸஹ்ய - மலயமலை 

இலங்கையிலிருந்து ஹனுமான் திரும்பி வந்து சீதையைக் கண்டதைச் சொன்னவுடன் சுக்ரீவன் மிகப் பெரிய வானரப் படையோடு தெற்கு நோக்கிப புறப்பட்டான். அப்போது இராமன் வானரப் படையிடம் , மலைத்தாழ்வரைகள் வழியாகவே காட்டுமார்க்கத்தில்  யார் கண்ணிலும் படாமல் மறைந்தே செல்லவேண்டும் என்றும், விஷயமறிந்த ராக்ஷஸர்களால் எந்தத் தீங்கும் வராமல் செல்லவேண்டும் என்றும் ஆலோசனை கூறினான். ஆகையால் வால்மீகியும் இந்த மார்க்கத்தைப் பற்றி விவரித்து எழுதாமல் சுருக்கமாகச் சொல்லியுள்ளார். (காண்க 6.4.73, 74,95 - 101, 108, 7 6.5.10. மேற்கண்ட சுலோகங்களின்படிவானரப்படை சஹ்யமலை, மலயமலை ஆகியவற்றைக் கடந்து தெற்குக் கோடியில் உள்ள மகேந்திர மலையின் உச்சியில் ஏறி இறங்கி சமுத்திரத்தைக் கண்டார்கள். என்று அறிகிறோம். கடற்கரையில் தங்கி அணை கட்டுவதற்கு சரியான இடத்தைத் தேடி வேலாவனத்தைக் கடந்தார்கள். இந்தச் செய்திகளின் அடிப்படையில் இராமன் மால்யவான் மலையிலிருந்து புறப்பட்டு தென்மேற்குத திசையில் வானரஸைன்யத்தோடு நடந்து சஹ்ய மலையை ஒட்டி நடந்து , தலைக் காவேரிக்கு மேற்குப் புறத்திலோ அல்லது தலைக் காவேரிக்கும் ஸ்ரீ ரங்கப்பட்டணத்திற்கும் இடையிலோ வந்திருக்கவேண்டும். அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் மேற்குப் பக்கத்தில் நடந்து நாஹர்ஹோலே காடுகள், பிலிகிரி, பண்டியூர் ஆகிய காடுகளைக் கடந்து நீலகிரி மழைத் தொடர்க்கு மேற்கே நடந்து மலாயா பர்வதம் வழியாக (கார்டமம் - திருவிதாங்கூர்) மலைகளைகே கடந்து , இன்று திருக்குறுங்குடி அமைந்துள்ள மகேந்திர கிரியில் எரியுல்லார்கள். திருக்குறுங்குடிக்குத் தெற்கே அதே மகேந்திர மழைத் தொடரில் சென்றால் அம்மலை கொளச்சல் என்னும் இடத்தில் முடிந்து அங்கு கடல் தெரியும். இவ்விடத்தில் துறைமுகம் உள்ளதால் கடல் மிக ஆழமாக இருந்திருக்கும். ஆகையால் அனைகட்ட சரியான இடம்தேடிக் காத்திருந்து வேலாவனத்தை கடந்துல்லார்கள். வேலவாவனம் என்பது கன்யாகுமரியை ஒட்டியும், கிழக்குக் கடற்கரை ஓரமாக திருப்புல்லாணி (ராம்நாடு) வரையிலும் உள்ள காடுகள்.

தர்சன ஸ்தானங்கள் :

1. லக்ஷ்மண தீர்த்தம் : மைசூருக்கு தென்மேற்கே சுமார் 120 கி.மீ. தூரத்தில் உள்ள நாகர்ஹோலே  காடுகளில் உள்ள இர்ப்பு அருவியே இது. வானரப்படை இவ்விடத்தைக் கடக்கும்போது தண்ணீர் தாகம் எடுத்தாதால் லக்ஷ்மணன் அம்பு விட்டு இத்தீர்த்தத்தை உண்டாக்கினான் என்று வரலாறு கூறுகிறது. இம்மலை ப்ரஹ்மகிரி என்று வழங்கப்படுகிறது.

2.ஸ்வயம் ப்ரபா தீர்த்தம்: தென்காசியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவிலுள்ள கடையநல்லூர் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில்லுள்ளது. இவ்விடம் ஹநுமன் முதலான வானரப்படைகள் விந்தியமலைச் சாரலிலுள்ள குஹைக்குள் நுழைந்து ஸ்வயம் ப்ரபா என்னும் தபஸ்வினியின் உதவியால் வெளியேறி , அருகில் கடற்கரையைக் கண்ட இடம்.(இன்று கடற்கரை இவ்விடத்தில் இல்லை.) இங்கு அபயமளிக்கும் அனுமன் விக்ரஹம் மற்றும் இராமர் , ஸீதை, லக்ஷ்மணன் ஆகியோர் எழுந்தருலியுள்ளனர். ஒரு சிறிய குளம் அதனுள்ளே இருக்கும் குஹை அதன் கரையில் தவம் புரியும் கோலத்தில் சிறிய ஸ்வயம் ப்ரபா விக்ரஹம் ஆகியவற்றை தரிசிக்கலாம்.

3. மஹேந்திர கிரி (திருக்குறுங்குடி): மஹேந்திர கிரியின் ஒரு பகுதியே மலை மேல் நம்பியில் ஆஸ்தானம். இங்கிருந்து தொலைவில் மஹேந்திர கிரியின் உச்சி தெரிகிறது. இதற்கு அருகே தான் எங்கோ வானரப் படை கடந்து இருக்கவேண்டும். இங்கிருந்து தான் ஹனுமான் இலங்கை செல்வதற்குத் தாவினார்.

15. திருப்புல்லாணி - ஸேது 


ராமன் இலங்கைக்குச் செல்வதற்காக கட்டிய அணையே ஸேது என்று சொல்லப்படுகிறது. இதைப் பற்றியும் இரண்டு கருத்துகள் நிலவுகின்றன.'

முதல் கருத்து: இராமன் கன்யாகுமரியிலிருந்து (கன்யா தீர்த்தம்) நேர் தெற்கே இலங்கையை நோக்கி சுமார் 1600 கி.மீ. நீளத்திற்கும் 160 கி.மீ. அகலத்திற்கும் அணை கட்டியுள்ளார். ஆகையால் இந்து மகா சமுத்திரத்தின் நேர்தெற்கே அன்று இலங்கை இருந்திருக்கிறது. பிற்பாடு ஒரு பகுதி அழிந்திருக்கவேண்டும். அதாவது இன்றிருக்கும் இலங்கையே அதன் தென்மேற்குக் கோடியில் நீண்டு கன்யாகுமரிக்கு நேர் தெற்கில் இருந்திருக்கவேண்டும். பின்பு அப்பகுதி அழிந்து இன்றிருக்கும் பகுதி உள்ளது.

இரண்டாம் கருத்து : இராமாயணத்தில் இராமன் வேலாவனத்தைக் கடந்தார் என இருக்கிறபடியால், வானரஸைன்யம் திருப்புல்லாணிக்கு வந்திருப்பது சாத்தியமே . மேலும் திருப்புல்லாணியில் தான் இராமன் தர்ப்பங்களைப் பரப்பி சமுத்திர ராஜனிடம் ஸரணாகதி பண்ணியதற்கு அடையாளமாக தர்பசயணப் பெருமாள் சேவை ஸாதிக்கிறார். மேலும் ஸேதுவின் அகலம் 160 கி.மீ. இருந்தபடியால் கரையோரமாக அநேகமாக திருப்புல்லாணி முதல் தூத்துக்குடி வரை அணையின் அகலம் இருந்திருக்கும். மேலும் பல கோடி வானரங்கள் அவ்விடத்தில் சேர்ந்திருந்தபடியால் அவை திருப்புல்லாணியில் மட்டும் கூடி நின்றிருக்க முடியாது. வானரங்களை வரிசையாக (Queue) நிறுத்தியிருந்தால் அது தூத்துக்குடி வரை அணையின் தொடக்கத்தில் அணி வகுத்து நின்றிருக்கும். மேலும் அமெரிக்க வின்வெளி ஆராய்ச்சிக் கழகம் (NASA) திருப்புல்லாணிக்கு அருகே கடலுக்குள் இருக்கும் பாறைகளை படம் பிடித்து வெளியிட்டுள்ளது. இந்தச் செய்திகளின் பின்புலத்தில் திருப்புல்லாணிக்குச் செல்வோம்.

தர்சன ஸ்தானங்கள் :

1. தர்பஸயனப் பெருமாள் கோயில் : இங்கு தான் ராமன் தரையில் தர்ப்பைகளைப் பரப்பி சமுத்திர ராஜனிடம் வழி கேட்டு சரணாகதி பண்ணினான். இங்கு தான் விபீஷண ஸரணாகதி நடந்தது.

2. கந்த மாதன மலை : இராமேஸ்வரத்திலிருந்து வடக்கே 4 கி.மீ. தூரத்தில் உள்ளது. இங்குதான் வானரப்படையை இராமன் திரட்டினார். இங்கு இராமனின் திருவடிச் சுவடுகள் காட்சி தருகின்றன.

3. மஹேந்திர பர்வதம் : இங்கிருந்து ஹனுமான் கடல் தாவியதாகச் சொல்கிறார்கள். ஆனால் இராமாயணக் கதைப்படி இது ஒத்து வரவில்லை. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மஹேந்திர கிரியை அடைந்த ஹனுமான் வேலாவனத்தைக் கடந்தாலே கிழக்குக் கடற்கரைக்கு வரமுடியும். இராமன் தான் இதக் கடந்து திருபுல்லாணிக்கு வந்திருக்கவேண்டும்.

4. ஸேதுக்கரை : இங்கிருந்துதான் இராமன் அணை கட்டினார். கடலுக்குள் அணை மூழ்கி இன்று சில பகுதிகள் மிஞ்சியிருப்பதாக சொல்கிறார்கள்.

குறிப்ப : இராமேஸ்வரம் ,  தனுஷ்கோடி,இராமன் செய்த லிங்க பூஜை ஆகிய எவற்றைப் பற்றியும் வால்மீகி இராமாயணத்தில் இல்லை. இலங்கையிலிருந்து புறப்பட்ட புஷ்பக விமானம் முதலில் கிஷ்கிந்தையில் தான் தரையைத் தொட்டது. அருகில் அமர்ந்திருந்த சீதைக்கு இராமன் ஆகாயத்திலிருந்து தான் ஸேதுவைக் காட்டினான். (6.126.15,16). கிஷ்கிந்தையிளிருந்து பரத்வாஜ ஆஶ்ரமத்திர்க்கும் அங்கிருந்து அயோத்திக்கும் போய் ஸ்ரீ ராமன் பாட்டாபிஷேகம் பண்ணிக்கொண்டான்.

16. திருவரங்கம்

ஸ்ரீ இராமப்பட்டாபிஷேகம் முடிந்து விபீஷணன் இலங்கைக்கு விடைபெற்று போகும்போது  இராமன் தன ஆராத்ய தெய்வமான , நாராயணன் என்றும் ஜகந்நாதன் என்றும் பெயர் பெற்ற, எம்பெருமானை விபீஷணனுக்கு "ப்ரணவாகார விமானத்தோடு " அளித்தார். (6.131.90) (7.109.310. விமானத்தோடு விபீஷணன் இலங்கையை நோக்கி பிரயாணப்பட்டபொது வழியில் இரண்டு காவிரிக்கு நடுவே அழகிய சோலைக் கண்ட ஜகந்நாதப் பெருமாள் அங்கேயே சேஷ பீடத்தில் எழுந்தருள ஆசை கொண்டார். விபீஷணனும் அந்த எம்பெருமானுக்கு பங்குனி உத்ஸவம் நடத்துவதற்கு நாள் நெருங்கியபடியால் திருவரங்கத்தில் இறங்கி விமானத்தை எழுந்தருளப் பண்ணி முற்பட்டபோது, முன்னால் ஜகந்நாதனாக இருந்த பெருமாள் தற்போது ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியபடியால் ஸ்ரிரங்கனாதனாகப் பெயர் பெற்ற எம்பெருமான் , தான் ஸ்ரீரங்கத்திலேயே கோயில் கொள்ளப் போவதாகத் தன ஸங்கல்பத்தை வெளியிட்டான். அன்றிலிருந்து தெற்கே இலங்கையை ஆண்ட விபீஷணனை நோக்கி சயனித்து இன்றும் என்றும் அனுக்ரஹிக்கிரார். இவ்வரலாறு தசாத்யாயீ, சதாத்யாயீ போன்ற நூல்களிலும் ஸ்ரீ பராசரபட்டரின் ஸ்ரீ ரங்கராஜஸ்தவத்த்லும் கண்டு கொள்ளலாம்.

ஸ்ரீரங்கத்தில் பங்குனி உத்திர மண்டபத்தில் விபீஷண ஸரனாகதி விக்ரஹ ரூபத்தில் வடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹனுமானும் விபீஷணனும் முதல் பிராகாரத்திலேயே நித்யமாக விக்ரஹ ரூபத்தில் எழுந்தருளியுள்ளார்கள். ஸ்ரீ வைஷ்ணவ மரபில் இராமனுக்கு பெருமாள் என்று பெயர். திருவரங்கத்தில் உத்ஸவருக்கு நம்பெருமாள் என்று பெயர். இராமானுஜர் நம்பெருமாளிடம் ஸரணாகதி பண்ணியபோது "தானே இராமன்" என்று உண்மையை வெளியிட்டார் நம்பெருமாள். இராமனின் நடையழகைஎல்லாம் இன்று நாம் நம்பெருமாளிடம் ஸேவிக்கலாம். இராமனே ஸ்ரீரங்கநாதன் , சீதையே ஸ்ரீரங்கநாச்சியார். அன்று பாரத தேசத்தை ஆண்டான் இராமன். இன்று உபய விபூதியையும் தன செங்கோளாலே ஆண்டு பக்தர்கள் எல்லாரையும் குளிக் கடாக்ஷிக்கிறான். அரங்கன் அன்று ஆதிசேஷ அவதாரமான லக்ஷ்மணன் இராம கைங்கர்யம் பண்ணினான். இன்று ஆதிசேஷ அவதாரமான பகவத் ராமானுஜர் நம்பெருமாளுக்கு கைங்கர்யம் பண்ணினார்.

" ராமாநுஜார்ய திவ்யாஜ்ஞா வர்ததாம் அபிவர்த்தாம்"

 என்னும்படி ராமானுஜருடைய ஆணையும் அருளும் உலகெங்கும் பொலிக, பொலிக என்று பரவட்டும்.


யுத்த காண்டம் ஸர்கம்  1 - 5  வானர சேனையின் பிரயாணம் 

யுத்த காண்டம் ஸர்கம்  6 - 14  ராவணன் ஆலோசனை 

யுத்த காண்டம் ஸர்கம்  15 - 18  விபீஷண ஸரணாகதி 

யுத்த காண்டம் ஸர்கம்  19 - 21  ராமபிரானுடைய ஸரணாகதி  

யுத்த காண்டம் ஸர்கம்  22 - 25  ஸேது பந்தநம் 

யுத்த காண்டம் ஸர்கம்  26 - 37  மாயாச்ரன் 

யுத்த காண்டம் ஸர்கம்  38 - 41  அங்கதன் தூது 

யுத்த காண்டம் ஸர்கம்  42 - 102  மஹயுத்தம் 

யுத்த காண்டம் ஸர்கம்  103 - 111  ராவண வதம் 

யுத்த காண்டம் ஸர்கம்  112 - 113  விபீஷண பட்டாபிஷேகம் 

யுத்த காண்டம் ஸர்கம்  114 - 120  ஸீதையும் ராமனும் 

யுத்த காண்டம் ஸர்கம்  120 - 127  புஷ்பகவிமான ப்ரயாணம்  

யுத்த காண்டம் ஸர்கம்  128  ஸ்ரீ ராம பட்டாபிஷேகம் 

                                     சுபமஸ்துஸ்ரீ ராம அநு யாத்ரையில் தரிசித்த ப்ராப்தமாகும் புண்ய நதிகள் :


1. கங்கை                                              -  பித்தூர்

2. சரயு                                                    - அயோத்யா

3. காமாஷ்ரமம் குளம்                    -காமாஷ்ரமம்        

4. சரயு - கங்கா சங்கமம்                கௌதமாஷ்ரமம்  

5. ஸீதாமர்ஹி குண்ட

6. திரிவேணி சங்கமம்                    அலஹாபாத்                    -

3. சோணா                                             -

4. கண்டகி

5. கோமதி

6. யமுனா

7. மந்தாகிணி                                       சித்ரகூடம்

8. கோதாவரி                                         பஞ்சவடி

9. துங்கபத்ரா                                         கிஷ்கிந்தா (ஹம்பி)

10 காவேரி- லக்ஷ்மண தீர்த்தம்     மைசூர்

11. நம்பி ஆறு                                         திருக்குறுங்குடி மகேந்திரகிரி

12. சேது சமுத்திரம்                              ராமேஸ்வரம்

13. காவேரி                                               ஸ்ரீ ரங்கம்கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக