திங்கள், 25 மார்ச், 2013

முதன் முதலில் (1977) மன்றம் துவக்க அனுமதி கேட்ட ரசிகர்… ரஜினி சொன்னது என்ன?

ராதே கிருஷ்ணா 25-03-2013

முதன் முதலில் (1977) மன்றம் துவக்க அனுமதி கேட்ட ரசிகர்… ரஜினி சொன்னது என்ன?

முதன் முதலில் (1977) மன்றம் துவக்க அனுமதி கேட்ட ரசிகர்… ரஜினி சொன்னது என்ன?

Parthu Rowvey Vmp shared 12 12 12's photo.
முதன் முதலில் (1977) மன்றம் துவக்க அனுமதி கேட்ட ரசிகர்… ரஜினி சொன்னது என்ன?

இன்று புதிதாக அறிமுகமாகும் நடிகர்கள் கூட முதல் படத்தின் ரிலீசின் போதே ‘தலைமை ரசிகர் மன்றம்’ பேனரும் போஸ்டரும் வேண்டும் என்று அவர்களாகவே வைத்துக்கொள்கிறார்கள். மன்றங்கள் தொடர்பான பார்வை அவ்வளவு குறுகியதாக போய்விட்ட இந்த காலத்தில், அங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி, தனக்கு முதன் முதலில் (1977) மன்றம் துவக்க அனுமதி கேட்டு வந்த ரசிகரிடம் கூறியது என்ன தெரியுமா….?

முதல் மன்றம் துவக்கியது யார்?

இது தொடர்பாக நாம் மன்றப் பிரமுகர்கள் சிலரிடம் விசாரித்தோம். சூப்பர் ஸ்டாருக்கு முதன் முதலில் மன்றம் துவக்கியது மதுரை ரசிகர்கள் என்றாலும் அவர்கள் ரஜினியை சந்திக்காமலே – அதாவது அவரது அனுமதி பெறாமலே – ரசிகர் மன்றம் ஒன்றை துவக்கியதாக தெரிகிறது. ஆனால் திருச்சியை சேர்ந்த கலீல் என்னும் ரசிகர் தான் முதன் முதலில் (1977 ல்) மன்றம் வைப்பது தொடர்பாக ரஜினியை சந்திக்க அனுமதி கேட்டு நேரில் சென்றவர் என்று தெரியவந்தது. இதையடுத்து, திரு.கலீலை தொடர்புகொண்டு இது பற்றி விசாரித்தோம்.

கலீல் கூறுகிறார்:

ஆமா சார். மதுரை ரசிகர்கள் தான் மூன்று முடிச்சு  படத்துக்கு பிறகு முதன் முதலா மன்றம் ஆரம்பிச்சதா சொல்வாங்க. ஆனா, நாங்க திருச்சி ரசிகர்கள் ரஜினி சாரை நேர்ல பாத்து அனுமதி வாங்கிட்டு பிறகு மன்றம் ஆரம்பிச்சோம்.

அப்போல்லாம் எம்.ஜி.ஆர். சிவாஜி மன்றங்கள் தான் பட்டைய கிளப்புவாங்க…

1977 ல் முதன் முதலா நானும் என் நண்பர்கள் ஷங்கரன், கணேசன், செல்வராஜ் உள்ளிட்ட சிலரும் ரஜினி சாருக்கு மன்றம் வைக்கிறது தொடர்பாக அவரை மெட்ராஸ் போய் சந்திச்சோம். ரஜினி சாரோட வில்லத்தனம் கலந்த ஸ்டைலான நடிப்பால நாங்கள் ஈர்க்கப்பட்டு அவருக்கு மன்றம் வைக்க முடிவு செஞ்சோம். நான் திருச்சில ஜமால் முகம்மது காலேஜ்ல படிச்சிகிட்டு இருந்தேன். அப்போல்லாம் எம்.ஜி.யார். மற்றும் சிவாஜி மன்றங்க தான் ரொம்ப ஆக்டிவா இருந்துச்சு. தங்கள் நடிகர்களோட பட ரிலீசுன்னா அதகள ப்படுத்திடுவாங்க. அவங்களுக்கு அடுத்தபடியா அப்போ ஜெய் ஷங்கர் சாருக்கு மன்றங்கள் நிறைய இருந்துச்சு. எங்க பக்கத்து தெருவுல இருந்த பசங்க ஜெய் ஷங்கர் ரசிகர்கள். அவர் படம் ஏதாவது ரிலீசானா தெருவுல எல்லாருக்கும் சாக்லெட் கொடுப்பாங்க. நாங்க ரஜினி சாருக்கு ரசிகர்களா மாறிகிட்டிருந்த டைம் அது. எங்களுக்கும் ரஜினி சார் பட ரிலீசுக்கு அது போல ஏதாவது பண்ணனும்முன்னு ஆசையா இருந்துச்சு.

ரஜினியை சந்திக்க சென்னை பயணம்

என்னோட சிஸ்டர் வீடு மெட்ராஸ்ல இருந்ததால அடிக்கடி நான் அப்போ சென்னைக்கு வருவேன். அட அப்படியே ரஜினி சாரையும் பார்த்து மன்றம் வைக்க பர்மிஷன் வாங்கிடலாமுன்னு முடிவு செஞ்சு பிரெண்ட்ஸ் சிலரையும் கூட்டிகிட்டு மெட்ராஸ் கிளம்பினேன்.

first-manram-article-pjமாடி வீடு… கீற்று கொட்டகை… இது தான் ரஜினியோட வீடு…

ரஜினி சார் அப்போ,  நிறைய படங்கள்ல நடிக்க
ஆரம்பிச்சிட்டிருந்த சமயம். ராயப்பேட்டைல புதுப்பேட் கார்டன் தெருவுல இருந்த முரளி சார் வீட்டு மாடில குடி இருந்தாரு. நாங்க போனப்போ, ரஜினி சார் யார் கிட்டயோ உள்ளே பேசிக்கிட்டு இருந்தாரு. முரளி சாரை தான் பார்த்து விஷயத்தை சொன்னோம். அவர் எங்களை மேலே மாடிக்கு கூட்டிகிட்டு போய் அங்கே வெயிட் பண்ணச் சொன்னாரு. அது ரொம்ப சிம்பிளான ஆனா அழகான கீத்து கொட்டகை. எளிமையா இருந்தாலும் ஒரு ஆன்மா இருந்துச்சு. சின்ன பீரோ ஒன்னு, ஒரு டேபிள், சிங்கிள் பெட் கட்டில்,  நாங்க உட்கார்ந்திருந்த சோபா. இது தான் ரஜினி சாரோட ரூம் அப்போ.

வெள்ளை சட்டை கருப்பு பேன்ட்….

கீழே பேசி முடிச்சு, வந்தவங்க கிளம்பினவுடனே கொஞ்சம் நேரத்துல ரஜினி மாடிக்கு வந்தாரு. அப்போது தான் குளிச்சிருப்பாரு போல. பிரெஷா இருந்தாரு. வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்ல மேக்கப் துளிகூட இல்லை… ஆனா வசீகரமா இருந்தாரு.    “என்ன… என்ன… எங்கயிருந்து வர்றீங்க….? ஏதாவது சாப்பிடுறீங்களா? ன்னு கேட்டு உடனே மோர் கொண்டு வரச் சொன்னாரு.

என்னை பார்க்கவா அவ்வளவு தூரத்திலிருந்து வந்தீங்க?

அவரை பார்க்க வந்த திருச்சியிலிருந்து நாங்க வந்திருக்கும் விஷயத்தை சொன்னவுடன், “என்ன … என்னை பார்க்கவா அவ்வளவு தூரத்திலிருந்து வந்தீங்க…. என்ன விஷயம்?” என்று ஆச்சரியம் மேலிட கேட்டார். பிறகு எங்கள் படிப்பு மற்றும் நாங்கள் பார்க்கும் வேலை ஆகியவற்றை கேட்டு தெரிந்துகொண்டார். (எங்களில் சிலர் அப்போது கல்லூரியில் படித்துகொண்டிருந்தோம். சிலர் பணிக்கு சென்றுகொண்டிருந்தோம்).

மன்றமா… எனக்கா….. நோ… நோ…

பிறகு நாங்கள் மன்றம் துவக்க அனுமதி கேட்டு வந்த விஷயத்தை சொன்னவுடன், சிரித்துக்கொண்டே  “மன்றமா… எனக்கா….. நோ… நோ… அதெல்லாம் வேண்டாம். காந்திக்கு வைங்க மன்றம். எனக்கெதுக்கு?” என்றார்.

நான் உடனே குறுக்கிட்டு, “சார்…. காந்திக்கு வைக்கிறதுக்கு காங்கரஸ் காரங்க இருக்காங்க. ஆனா, நாங்க வைக்க ஆசைப்ப்படுறது உங்களுக்கு…” என்றேன். என்னை ஒரு மாதிரி பார்த்தாரு. (என்ன இவன் இவ்வளவு துடுக்க பேசுறான் என்ற அர்த்தத்தில்)

நாங்க பேசிக்கொண்டிருக்கும்போதே மோர் வந்துவிட்டது. “மன்றமெல்லாம் எனக்கு வேண்டாம். இதை குடிச்சிட்டு கிளம்புங்க…” ன்னு சொல்லிட்டு போய்ட்டார்.

அதிசயம் நிகழ்ந்தது…

எங்களுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. என்னடா அவ்வளவு தூரத்திலிருந்து வந்து நம்ம கோரிக்கையை சொல்லியிருக்கோம். இவரு இப்படி சொல்லிட்டு போய்ட்டாரேன்னு…. சரி கிளம்புவோம்முன்னு நாங்க கிளம்புறோம்… சரியான மழை பிடிச்சது … அதிசயம் என்னன்னா அது கோடை மழை… (நாங்க போயிருந்தது சரியான சம்மர்ல…) கீழே முரளி சார் நின்னுக்கிட்டுர்ந்தாறு…. “மழை விட்டதும் போங்க தம்பி. மேலேயே வெயிட் பன்னுகன்னு சொன்னாரு. சரின்னு திரும்ப மாடிக்கு வந்து சோபாவுல உட்கார்ந்தோம். மழை விடுற மாதிரி தெரியலே….

எதையும் எதிர்பார்க்கலை…

முரளி சார் வந்து எங்ககிட்டே பேசிக்கிட்டிருந்தாரு… நாங்க அவர் கிட்டே நடந்ததை சொன்னோம். “என்ன சார் அவ்வளவு தூரத்துல இருந்து இவரை பார்க்க வந்து மன்றம் வைக்க அனுமதி கேட்டா… எனக்கு வேண்டாம். காந்திக்கு வைங்கன்னு சொல்லிட்டு போய்ட்டாரு…. நாங்க பணம் உட்பட மன்றம் நடத்த எதையும் அவர்கிட்டே எதிர்ப்பார்க்கலை. ஜஸ்ட் ஆசைப்படுறோம் அவ்வளவுதான்.. ஆனா சார் முடியாதுங்குறார்” என்று எங்கள் ஏமாற்றத்தை பகிர்ந்துகொண்டோம்.

(மன்றம் தொடர்பாக ரஜினி இப்படி ஒரு பதிலை சொன்னபோது அவருக்கு வயது ஜஸ்ட் 27 தான் என்பதை நினைவில் கொள்ளவும். அந்த வயதிலேயே அப்படி ஒரு பக்குவம்!!)

சிறிது நேரம் கழித்து முரளி சார் கீழே சென்றுவிட்டார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம். மழை எப்போடா விடுமென்று பார்த்துக்கொண்டிருந்தோம். மீண்டும் ரஜினி சார் மேலே வந்தார்.

என்ன கோவிச்சுக்கிட்டீங்களா…?

வாட்டத்துடன் அமர்ந்திருந்த எங்களை பார்த்து, “என்ன கோவிச்சுக்கிட்டீங்களா…?” என்று கேட்டார். அவர் மீதான எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாக நாங்கள் பதிலளிக்காமல் மௌனமாக இருந்தோம்.

ஏதாவது பிரச்னை என்றால் உங்க படிப்பு பாதிக்கும்….

“அதுக்கில்லப்பா…. சிவாஜி… எம்ஜியார் மாதிரி பெரிய ஆளுங்க எல்லாம் இருக்கும்போது எனக்கெதுக்கு மன்றம்… அதுமட்டுமில்லாமா நீங்க மன்றம் அது இதெல்லாம் ஆரம்பிச்சா அவங்க மன்ற ஆளுங்க உங்களை வம்புக்கிழுப்பாங்க. சண்டை சச்சரவு வரும். நாளைக்கு ஏதாவது பிரச்னைன்னு வந்தா உங்க படிப்பு, வேலை இதெல்லாம் பாதிக்கும். நீங்க எல்லாம் யங்ஸ்டர்ஸ்… உங்களை நம்பி தான் உங்க குடும்பம் இருக்கும். நீங்க சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு…. அதனால தான் சொல்றேன்… மன்றமெல்லாம் வேண்டாம்ம்னு….” சொன்னாரு.

இப்படிபட்ட ஒருத்தருக்குத்தான்….

இப்படி அவர் சொன்னவுடனே… அவரோட நல்ல உள்ளம் எங்களுக்கு புரிஞ்சிடுச்சு. இப்படிபட்ட ஒரு ஆளுக்கு தான் நிச்சயம் மன்ற வைக்கனம்முன்னு முடிவு செஞ்சோம்.

“சார் நாங்க எம்.ஜி.யார். சிவாஜி ரசிகருங்க ரேஞ்சுக்கெல்லாம் பண்ணலை. மன்ற விஷயத்துல அவங்க கூட எங்களால போட்டி போட முடியாது. செலவும் பண்ண முடியாது. நாங்க சும்மா எளிமையா ஒரு பத்து பேறு க்ரூப்பா சேர்ந்து உங்க படம் வந்தா எங்க தெருவுல இருக்குறவங்களுக்கு சாக்லெட் கொடுத்து கொண்டாடுவோம். அவ்வளவு தான் அதுக்கு மேல நாங்க எதுவும் செய்ய மாட்டோம்… யாரு கூடவும் போட்டி போடமாட்டோம்….” என்று பதிலளித்தோம்.

கடைசியில் ஒருவழியாக அனுமதி…

சிறிது நேரம் ஆழ்ந்து யோசிச்சாரு. எங்க முகத்தை பார்த்தாரு. “சரி… ஓகே. பண்ணுங்க… ஆனா ரொம்ப சிம்பிளா பண்ணுங்க… பிரச்னைகளை வரவழைச்சுக்காதீங்க… உங்க படிப்பு வேலை… ரொம்ப முக்கியம் அதை மறந்துடாதீங்க…” என்று அனுமதி தந்தார்.

இப்படியாக சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து முதன் முதலாக மன்றம் துவக்க அனுமதி பெற்றோம். 1977 இல் எங்கள் மன்றம் சுமார் 10 பேருடன் துவக்கப்பட்டது. “திருச்சி நகர வெற்றி வேந்தன் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம்” – இது தான் எங்கள் மன்றப் பெயர். இப்படித்தான் ரஜினி சார் அனுமதியுடன் முதல் மன்றம் துவங்கப்பட்டது.

அதற்கு பிறகு அடிக்கடி சென்னை சென்று அவரை சந்திக்க ஆரம்பித்தோம். என் சகோதரியின் வீடு சென்னையில் இருந்ததால் எனக்கு மிகவும் சௌகரியமாக போய்விட்டது. ஒவ்வொருமுறையும் செல்லும்போதும் நாங்கள் வேறு வேலைக்காக சென்னை வந்ததாகவும் அப்படியே அவரை பார்க்கவந்ததாகவும் கூறுவோம். குளித்துவிட்டு டவல் கட்டிக்கொண்டு, பனியன் மற்றும் கைலியுடன் இப்படி ஜோவியலான தோற்றங்களிலெல்லாம் அவரை சந்தித்திருக்கிறோம். சிறிதும் பந்தாவோ பாசாங்கோ இன்றி பேசுவார். நாளாவட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் அவருக்கு நன்கு பரிச்சயமாகிவிட்டோம்,” என்று முடித்துக்கொண்டார் திரு.கலீல்.

——————————————————————————————————————–

ரசிகர்கள் மீது ஆரம்பத்திலிருந்தே ரஜினி மிகவும் அக்கறை கொண்டிருப்பது இதிலிருந்து புரிகிறது. அவரின் சமீபத்திய ரசிகர் சந்திப்பு வரை இது தொடர்கிறது. மேலும் சூப்பர் ஸ்டாருக்கு நம் தேசப்பிதா காந்தி மீதான அன்பு இன்று நேற்று ஏற்பட்டதல்ல…. அது காலம் காலமாக இருந்து வருவது என்றும் புரிகிறதல்லவா…
(ஹூம்… இங்கேயும் சில நடிகர்கள் இருக்கிறார்களே….!!)

ரசிகர்கள் மீது ரஜினி கொண்டுள்ள அக்கறை தான் பல நேரங்களில் அவரை கோழையாக நமக்கு காட்டுகிறது. தனக்கு அவப்பெயர் வந்தாலும் பரவாயில்லை… தன் ரசிகர்கள் நிம்மதியாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அவர் எண்ணம் மிகவும் மகத்தானது. ரசிகர்களுக்கு ஒரு பிரச்னை என்று வந்தபோதும், தோல்வி நிச்சயம் என்று தெரிந்தும் அவர்கள் பாதுகாப்புக்காக ஒரு பலவீனமான கூட்டணியை ஆதரித்து தன் ரசிகர்களை பாதுகாத்தார் அவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக