திங்கள், 3 மார்ச், 2014

4-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

ராதே கிருஷ்ணா 04-03-2014




From the album: Timeline Photos
By Varagooran Narayanan
4-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்

‘நீ என் கவலப்படற? உனக்குத்தான் வாட்ச்மேன் மாதிரி முருகன் இருக்கானே… !’
நன்றி;பால ஹனுமான்.

பல மாதங்கள் ‘அவரைத் தரிசிக்க வேண்டும்‘ என்று சினிமா உலகிலும் எம்.ஜி.ஆர்.உள்பட அனேக வி.ஐ.பி.க்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். அவரே ஒருநாள் தேவரை வரச் சொல்லியிருந்தார். ஆன்மீக ஆலமரத்தின் அருள்பார்வை தன்மீது விழாதா என்று அனைவரும் ஏங்கி நின்றார்கள். தேவருக்கே முதல் அழைப்பு.

‘புனிதம்’ என்பதற்குரிய அர்த்தத்தை அவரைப் பார்த்த பின்பே புரிந்து கொண்டார் தேவர். திருப்பாதம் விழுந்து தொழுதார். தன் குறையைக் கூறினார்.

‘உடம்பு முடியலீங்க சாமி. சர்க்கரை….’

அவர் புன்னகை பூத்தார். உதயசூரியன் சிரித்ததுபோல் இருந்தது. அவரது தேஜஸில் கண்கள் கூசின தேவருக்கு. கை கூப்பி நின்றார்.

‘நீ என் கவலப்படற? உனக்குத்தான் வாட்ச்மேன் மாதிரி முருகன் இருக்கானே… !’

உள்ளுக்குள் ஏதோ அறுந்தது. ‘நான்’ என்கிற அகம்பாவமோ, எல்லாம் என் காசு என்கிற சுயநலமோ, எதுவோ. தேவர் உடைந்து போனார். எத்தனைப் பெரிய வார்த்தை! இந்தப் பாமர வியாபாரிக்குத் தகுமா ?

கைகளை உயர்த்தி ஆசி கூறினார் காஞ்சி மஹா பெரியவர். பொத்திய கரங்களை எடுக்க மனசில்லாமல் திரும்பினார் தேவர்.

மௌனம் தெய்வாம்சம்! சத்தம் அசுரத் தாண்டவம்!

அனுபவங்கள் தொடரும்…

மஹா பெரியவா அருள்வாக்கு : -

அருணகிரிநாதர் தம்முடைய திருப்புகழ் பாட்டு ஒவ்வொன்றையும் ‘பெருமாளே‘ என்கிற வார்த்தையுடன் முடிக்கிறார். பொதுவாகப் பெருமாள் என்றால் மகாவிஷ்ணுதான்.

சிவசக்தியின் பூர்ண தேஜஸாக இருக்கப்பட்ட சுப்ரமண்யத்தை இப்படி பெருமாளாகச் சொல்லிச் சொல்லி அவர் முடிப்பதும் அழகாகத்தான் இருக்கிறது.

தமிழ்நாட்டிலேயே பொதுவில் இவரை மகாவிஷ்ணுவுடன் சம்பந்தப்படுத்திப் பேசுவது அதிகம். ‘மருகன்’, ‘மருகன்’ என்று முருகனைச் சொல்கிறோமே இது எதனால்? அவர் அம்பாளுக்கு சகோதரராக இருக்கிற மஹாவிஷ்ணுவின் மருமகன் என்பதால் தான், ‘மால்மருகன்’ என்கிறோம். பூர்வத்தில் வள்ளி தேவசேனைகள் மஹாவிஷ்ணுவின் புத்திரிகள்தான்.

ஆனால், வடதேசத்தில், இந்த மாமனார் சமாசாரமே சுப்ரமணியருக்குக் கிட்டே வரக்கூடாது. அவர் அங்கே எந்நாளும் பிரும்மச்சாரி தெய்வம்தான். சில இடங்களில் சுப்ரமண்யர் கோவிலுக்குள் ஸ்திரீகளை அனுமதிப்பது கூட இல்லையாம். அத்தனை கடுமை. சுப்ரமண்யர் என்ற பெயரும் வட தேசத்தில் பிரசித்தி இல்லை. அங்கே அவரைக் ‘கார்த்திகேய’ என்றே சொல்வார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக