வியாழன், 11 அக்டோபர், 2012

அம்பத்தூர் தாத்தா LIC ரங்கா ராவ் அவர்கள்

ராதே கிருஷ்ணா 14-10-2012

அம்பத்தூர் தாத்தா LIC ரங்கா ராவ் அவர்கள் 


பிறந்த நாள் : 31-03-1923

இறந்த நாள் : 27-06-2001 (இரவு 12:50)

நமது நாயகன் திரு.ந.ரங்க ராவ் அவர்கள் சிறு வயதில் சென்னையில் உள்ள முத்தியால்பேட் பள்ளியில் படித்து வந்தார். அண்ணன் சீதாபதி ராவ் அவர்களின் கண்காணிப்பில் வளர்ந்தார். அண்ணன் சீதாபதி ராவ் அவர்கள் துங்கா பாய் அவர்களை மணந்த பிறகு வடகிழக்கு ரயில்வேயில் பணி புரிய கரக்பூர் சென்று விட்டார்.

திரு. ரங்க ராவ் அவர்கள் தனது அக்கா சரஸ்வதி பாய் அவர்களின் புதல்வி திருமதி.லக்ஷ்மி அவர்களை மணந்து இல்வாழ்க்கையைத் தொடங்கினார். பொறுப்புக்கள் வரத் தொடங்கியது. அம்மா அப்பாவை விட 4 வயது சிறியவர்கள்.
தனது அக்கா குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு வந்தது. அக்காவிற்கு ஒரு மகன் ந. ரங்கநாதன் அவர்களும், மகள்கள் காவேரி, சரோஜா ஆகியோரை பார்த்துக் கொள்ளவேண்டும். 
தனது அண்ணன் திரு.ராஜகோபால் என்பவரை, (சற்று மன நிலை குன்றியவரையும்) தன வீட்டிலேயே இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.தனது சித்தி குஞ்சவ்வா அவர்களை தன வீட்டிலேயே இருக்கச் செய்து பார்த்துக் கொண்டிருந்தார். 
தனது உறவினரான கும்பகோணம் பாட்டியையும் அழைத்து வந்து பார்த்துக் கொண்டும் இருந்தார்.

குஞ்சவ்வா சமையல் அறையில் எல்லாருக்கும் சமையல் செய்யும் பொறுப்பு எடுத்துக் கொண்டார். அதுவும் மடி சமையல் மண் அடுப்பில் விறகு உபயோகபடுத்தி  செய்யவேண்டும்.

தினமும் காலையில் குஞ்சவ்வா குளித்து விட்டு மடியாக சமையலுக்கு வருவார்கள். அம்மா மற்றபடி வெளி வேலைகளைச் செய்து விடுவார்கள்.
கும்பகோணம் பாட்டி நடக்க முடியாதவர், உட்கார்ந்தே ஹாலில் இங்கும் அங்கும் வருவார்.

அப்பா ஒருவர் ப்ரித்வி இன்சுரன்ஸ் கம்பனியில் வேலை பார்த்து வந்தார்.
அம்மா குஞ்சவ்வா இருந்தவரைவெளி வேலைகளை மேற்பார்வையுடன் செய்யவேண்டும்.

முதலில் வீடு கட்டும் பணியை ஆரம்பித்தார். அதற்காக ப்ரித்விபாக்கம் அருகே இருந்த குரங்கு பாப்பான் என்று பெயர் பெற்ற ஒருவர் இருந்தார். அவரிடம் சென்று தனக்கென்று ஒரு கிரௌண்ட் நிலமும், அண்ணனுக்கென்று ஒரு கிரௌண்ட் நிலமும் வாங்கினார். அப்பொழுது ஒரு கிரௌண்ட் நிலம் ருபாய் 350/- என இரண்டு நிலங்கள் வாங்கினார்.

ஒன்றில் வீடு கட்ட ஆரம்பித்தார். அதற்காக அம்பத்தூர் சாஸ்வத நிதியில் லோன் வாங்கினார். ருபாய் 5000/- கிடைத்தது. 
சிறிது காலத்திற்குப் பிறகு அண்ணன் தனது நிலத்தை விற்கவேண்டும் என்றதும், தானே அந்த நிலத்தை ருபாய் 750/- க்கு வாங்கினார்.
வீடு கட்டுவதற்கு பணம் போறாது என்று ஆலந்தூர் நிதியில் லோன் வாங்கினார்.
அம்பத்தூர் சாஸ்வத நிதியில் அப்பாவின் பாவா ராஜகோபால் ராவ் ப்ரெசிடென்ட் ஆக இருந்தார். அப்பாவின் நெருங்கிய நண்பர்கள் சப்தரிஷி மாமா , அவரது பெயர் ராமச்சந்திரன் அவர்கள். ஆனால் அனைவரும் சப்தரிஷி என்றே அழைப்பர். இன்னொருவர் சுந்தரம் மாமா அவர்கள், திருவேங்கட நகரில் வசிப்பவர். இன்னொருவர் திரு.V G ராமச்சந்திரன் அவர்கள் . சுந்தரம் மாமா அவர்களும் LIC யில் வேலை செய்பவர். இவரது மனைவி ஜெயலக்ஷ்மி ஹிந்தி டீச்சர் ஆக ராமசுவாமி முதலியார் ஹை ஸ்கூலில் வேலை செய்கிறார்.

இவரும் சப்தரிஷி மாமாவும் ப்ரித்விபாக்கத்தில் எதிர்  எதிர் வீட்டில் வசிப்பவர்கள். இவரை VGR என்றே அழைப்பார்கள். இவர் ஆனந்தா எம்போரியம் பார்மசி வைத்திருப்பார்கள்.

அப்பாவின் அடுத்த நண்பர் R.S.மணி அவர்கள் அப்பாவுடன் LIC யில் பணி புரிபவர்கள்.

அப்பாவிற்கு 24 வயதிலேயே பொறுப்பு ஆரம்பம் ஆகியது. 1947 ஆம் வருடம் டிசம்பர் மாதம் பாமா பிறந்தாள். 

1950 ஜூன் இல் நான் முரளி பிறந்தேன். அப்போது ஏகாம்பர ஐயர் தெருவில் வசித்தவர்கள் நம் வீடு பள்ளத்து வீடு என்றே அனைவரும் அழைப்பார்கள். எதிர் வீட்டில் ரங்கநாதன் அவரது அப்பா சுப்ரமணியம் அவர்கள், அலமேலு மாமி, ராமமூர்த்தி மாமா அவர்கள் SRMHS டீச்சர், துரைசுவாமி , ராமகிருஷ்ணன், கந்தசாமி சாஸ்த்ரி, நாராயணன் VV , மற்றும் ராமநாத வாத்யார் என்பவராகும்.

கிரூஷ்ணாஜி சுக்கல் தெருவில் கணபதி ஐயர் , ஆனந்த் / ஹரி/ரவி , ராம ராவ், சுக்கல், கம்பௌண்டர் ஸ்ரீனிவாசன், ஜெயராம ஐயர் , பால்கார பார்வதி , மற்றும் ரெட்டியார் ஆகும்.

நான் கந்தசுவாமி சாஸ்த்ரி வீட்டில் தான் பிறந்தேன். வீடு கட்டிக்கொண்டு இருந்ததால் அங்கு குடி இருந்தார்கள்.

எனக்கு 5 வயது வந்ததும் எதிரில் உள்ள சங்கம் ஸ்கூலில் சேர்த்தார்கள். முதல் நாள் தலையில் ஹாட் போட்டுக்கொண்டு மேள தாளத்துடன் அழைத்துச் சென்று விட்டனர். அங்கு கோவிந்தம்ம என்ற டீச்சர் தான் எங்களுக்கு டீச்சர். அப்போது கோவிந்தன் தான் மேளம், மற்றும் சலூன் வைத்திருப்பவர்.

பிறகு மகா கணேசா வித்யாலயா ஸ்கூலில் படித்தேன். 6 வது வகுப்பு முதல் ராமசுவாமி முதலியார் ஸ்கூலில் படித்தேன்.
மஹா கணேசா ஸ்கூலில் படித்த ஞாபகம் இன்னும் இருக்கிறது. பூசணிக்காய் என்று தலைப்பு அதைப்பற்றி பேசவேண்டும்.
சங்கரன் ஹெட் மாஸ்டர் தான் கிளாஸ் எடுப்பார். இதன் கரஸ்பான்டன்ட் சுவாமிநாத ஐயர் ஆவார்.

1953 இல் பிருந்தா , 1956 இல் சந்திரா, 1958 இல் அனந்து, 1961 இல் ராகவேந்திரன் என்று பிறந்தனர்.


அப்பாவின் அன்றாட வாழ்க்கை , காலையில் திண்ணையில் உட்கார்ந்து ஹிந்து பேப்பர் பார்ப்பது , வலது கையில் மூக்குப்பொடி எப்போதும் இருக்கும்.
அப்பாவின் கை சீவல் போடும் வழக்கம் இறுதி வரை இருந்தது.

7:55க்கு ஹாலில் தட்டை இருக்கவேண்டும் . அப்பா குளித்து விட்டு வந்து சாப்பிட உட்கார்ந்து விடுவார். அவருக்கு பரிமாறுதல் என்பது அம்மா ஒருவருக்குத்தான் வரும். அவர் தண்ணீர் குடிக்கும்போது எதையும் தட்டில் போடக்கூடாது.  8:00 மணிக்கு ஆபீசிற்கு கிளம்பி விடுவார். கிளம்புவதற்கு முன் அம்மா திலகம் இட்டு விடுவார். பிள்ளைகள் வாசலில் செருப்புகளையும், சைக்கிளையும் வைக்கவேண்டும்.

சைக்கிளில் சென்று ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள சைக்கிள் ஸ்டேண்டில் வைத்து விட்டு வண்டியைப் பிடித்து விடுவார். நண்பர்கள் சப்தரிஷி, RS மணி மாமா, சுந்தரம் மாமா மற்றும் மற்ற நண்பர்களுடன் சென்ட்ரல் அடைந்து அங்கிருந்து பஸ் நம்பர் 21 பிடித்து LIC (14 மாடி கட்டிடம்) ஆபீஸ் வந்து விடுவார்கள்.

மாலையில் வீட்டிற்கு 8 மணிக்கு வருவார்கள். வாசலில் ஈசிசேர் போட்டு இருக்கவேண்டும்.அம்மா சூடாக காபி டவராவோடு கொண்டு வந்து கொடுப்பார்கள்.
குடித்து விட்டு ஒரு சிட்டிகை போடி போட்டு கை சீவல் போட்டபின் அன்றைய நிகழ்ச்சிககளைச சொல்லுவார்கள். மறு நாள் என்ன செய்யவேண்டும் என்ன கொண்டு வரவேண்டும் என்றும்  கேட்டுக்கொள்வார்கள்.

மார்கழி மாதம் என்றால் அந்த மாதம் நாட்கள் / தேதி / நட்சத்திரம் / திதி உள்ள சார்ட் , பேப்பரில் எழுதி அதை அட்டையில் ஒட்டி ஆணியில் மாடிவிடவேண்டும்.

பஜனை நண்பர்கள் கோபால் மாமா, ராமஸ்வாமி மாமா, சுக்கல் மாமா, நாராயணன் மாமா(அப்பாய் மாமா) நரசிம்ஹன், என்று ஆரம்பித்தது.
அம்மா கோயிலில் பெருக்கி விட்டு நீர் தெளித்து கோலம் இட்டு ரெடியாக இருக்கவேண்டும். அப்பா முதல் நாள் இரவே மறு நாளுக்கு வேண்டிய டவல், வேஷ்டி, மேல் வேஷ்டி செட் அடுக்கி ஹாலில் உள்ள ஜன்னலில் வைத்து விடுவார்கள். பஜனை புத்தகம் ஜால்ராக்கள் வைத்து விடுவார்கள்.

நாங்கள் எழுந்து விட்டு பஜனை ஆரம்பித்ததும் தூங்கி பிறகு எழுந்து விடுவோம்.
குளித்துவிட்டு பிரசாதத்திற்கு ரெடியாகிவிடுவோம்.

ஜனவரி 1 ஆம் நாள் பஜனை மௌனசாமி மடம் வரை சென்று வருவோம்.
வரும்வழியில் உள்ள இரண்டு பிள்ளையார் கோயில்களில் (ஒன்று மகா கணேசா ஸ்கூல் அருகில் உள்ளது, இன்னொன்று பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவில் உள்ளது) 

பொங்கல் அன்று முதல் உஞ்சவர்த்தி நடக்கும் அதன் பிறகு அடுத்த சனி ஞாயிறு உஞ்சவ்ருத்தி நடக்கும். ஜனவரி 26 ஆம் நாள் விடுமுறை, அதனால் அதனைத் தொடர்ந்து வரும் சனி ஞாயிறு தினங்களில் ராதா கல்யாணாம் நடக்கும். எப்போதும் ஆஸ்தான பாகவதராக நமது இயனாவரம் ராமகிருஷ்ண ஐயங்கார் இருந்தார். அவரது தலைமையில் ராதகல்யானம் நடைபெறும்.

ஜெய் கணேஷ் கோயிலில் பஜனை ஆரம்பமாகியது, அதன் பிறகு அவர்கள் பஜனை நமது தெரு பின்னால் உள்ள தெரு சுற்றி வரும். நமது பஜனை அதனது  வழியில் சென்று வரும்.

நமது பஜனை வருகிறது என்று எதிர்பார்த்து நிற்கும் பக்தர்களும் உண்டு.

எங்களது வேலை தினமும் அபிஷேக சாமான்கள் வாங்கி வைப்பது.

எனது ஸ்கூல் படிப்பு 1966 முடிந்தது. 1966 - 1967 PUC படிப்பதற்கு நியூ காலேஜில் சேர்ந்து படித்தேன்.
1967 - 1970 மூன்று ஆண்டுகள் ஆவடியில் உள்ள MCMP முருகப்பச் செட்டியார் மெமோரியல் பாலிடெக்னிக்கில் சேர்ந்தேன். அதன் பிரின்சிபால் ராம ராவ் என்பவர் மத்வர் கமலாபுரம் கோலோனி போகுன் வழியில் இருந்தவர்.
எலக்ட்ரானிக்ஸ் பிரிவு அடுத்து படித்தேன். இதன் தலைமை நிர்வாகி அஸ்வத்தாமன் என்பவருடன் , கல்யாணராமன், மகாலிங்கம், பழனியப்பன் என்பவர்கள் இருந்தனர்.

இதில் நான் எனது ப்ராஜெக்ட் ஆகா வால்வு ரேடியோ நன்றாகவே வேலை செய்தது.  செய்தேன்.

அம்பத்தூர் ஆவடி அடுத்த ஸ்டேஷன் தான். காலையில் 5:30 மணிக்கு ட்ரைன் பிடித்து ஆவடியில் இறங்கி நடந்து செல்வோம். பாலிடெக்னிக் சுமார் 2 kms தூரம் இருக்கும். வகுப்புகள் 8 மணிக்கு ஆரம்பம். முதல் வருடம் ட்ரைன் , மறு வருடம் சைக்கிளில் சென்றேன். அப்போது 7:30க்கு செல்வேன். மூன்றாவது வருடம் பஸ்ஸில் செல்வேன்.

அனந்து MSc மேதமேடிக்ஸ் (கணக்கு பிரிவு) படித்தான். ராகவேந்திரன் வைஷ்ணவா காலேஜில் BSc பிஸிக்ஸ் படித்து, பெங்களூர் IISc இல் BE படித்துதேர்ச்சி பெற்றான்.

பிருந்தா PUC படித்து வேலூரில் உள்ள ஜெயில் டிபார்ட்மென்டில் வேலைக்கு சேர்ந்தாள்.

பாமா சந்திரா இருவரும் SSLC படித்து முடித்துக் கொண்டனர்.

1971 ஆம் ஆண்டு பாமாவிற்கு வரன் பார்க்க ஆரம்பித்தோம் கல்யாணம் நன்றாக நடந்து முடிந்தது. பாமா கல்யாணத்தில் எனக்கு உபநயனம் நடந்தது.

1971 ஆம் ஆண்டு IIT யில் சேர்ந்தேன். எனது வேலையைத் தொடங்கினேன்.

பிருந்தா கல்யாணம் 1975 ஆம் ஆண்டு நடந்தது. பிருந்தாவிற்கு கல்யாணத்திற்கு அப்பாவிற்கு உதவியாக இருந்தேன்.  நான் ஒரு கவிதை மடல் எழுதி பிரிண்ட் செய்து கல்யாணத்தின் பொது படித்து அனைவருக்கும் வழங்கினேன். மவுண்ட் ட்டில் பிரஸில் கொடுத்து தயார் செய்தேன்.

சந்திரா கல்யாணம் 1980 ஆம் ஆண்டு  நடந்தது. கல்யாணத்திற்கு அப்பாவிற்கு உதவியாக இருந்தேன்.

அனந்து ஜெயந்தி கல்யாணம் 1986 இல் துரைசாமி ரோடு அருகில் நடந்தது

ராகவேந்திரன் விஜி கல்யாணம் ஹோட்டல் காஞ்சி யில் 1988 இல் நடந்தது.
அப்பா LIC மெயின் பில்டிங்கில் வேலை செய்தார், பிறகு பாரிஸ் கார்னரில் உள்ள ஆபீசில் வேலை செய்தார். அப்போது கல்யாணசுந்தரம் நண்பர் இருந்தார்.

வெள்ளிகிழமை மாலை ஆபீஸ் முடித்து கொத்தவால்சாவடி சென்று காய்கறிகள் வாங்கி வருவார்.   நானும் பாரிஸ் சென்று அவருடன் காய்கறிகள் வாங்க உதவியாக சென்று வருவேன். அல்லது அம்பத்தூரில் காத்திருந்து இரண்டு பெரும் சேர்ந்து வருவோம்.

1977 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கல்பாக்கம் சேர்ந்து வேலை செய்யத் தொடங்கினேன்.

எனது கல்யாணம் எனக்கும் சுதாவிற்க்கும் அக்டோபர் மாதம் 30 ஆம் நாள் திருச்சானூரில் நடந்தது.

அப்பாவிற்கு ப்ரோமோஷன் வந்து பம்பாய் செல்லவேண்டும் என்று இருந்தது.

பம்பாய் சென்றால் பேன்ட் ஷர்ட் போடவேண்டி வரும் என்றும் இந்த வீட்டை விட்டு போக மனமில்லாததாலும் அதை வேண்டாம் என்று கூறி விட்டார். இங்கேயே டிவிஷனல் மேனஜரிடம் (AM ஸ்ரீனிவாசன்) பர்சனல் அசிஸ்டன்டாக இருந்து விட்டார்.

1983 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் நாள் அவரது பிரிவு உபசார விழா நாள், அதற்க்கு நானும் சென்று அவரை அழைத்து வந்தேன். நீண்ட வருடங்கள் வேலை பார்த்து ரிடையர் ஆகி வரும் நாள்.

அப்பா தொடர்ந்து 45 ஆண்டுகள் பஜனை செய்து ராதா கல்யாணம் நடத்தி வந்தார்.. குருஜி யின் சம்மேளனத்தில் தானும் அம்மாவும் மெம்பெர்களாக இருந்து வந்தனர். மாதா மாதம் நாரத கான சபாவில் நடக்கும் பஜனைக்கும் , குருஜி அழைத்துச் செல்லும் இடங்களுக்கும் சென்று வருவார்கள். அது போல் பண்டரிபுரம் சென்று வந்தார்கள்.

ஒவ்வொரு வருடமும் ராதா கல்யாணத்தில் மாலையில் உபன்யாசங்கள், TSB பாலக்ருஷ்ண சாஸ்த்ரிகள் ஹரிகதா போன்ற நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடத்தி வந்தார். அவருக்கு துணையாக நரசிம்ஹன், சுக்கல், என அனைவரும் உதவி புரிந்தனர்.

ராதா கல்யாணத்திற்கு பண உதவி பெரும் நபர்களில் முக்கியமானவர்களில்   வசந்த் என்பவரும், ஏகாம்பரம் என்பவரும ஆவர்.

ராமா ராவ் , சுக்கல், ராமநாராயணன், கோபால் , ராமசுவாமி, ஆதிமூர்த்தி, கம்பௌண்டர் ஸ்ரீனிவாசன்
VV நாராயணன், ஆவர்.

ராதா கல்யாணத்தில் எங்களது (நான் கிட்டா என்கிற கிருஷ்ணமுர்த்தி, விஜயநாத், பாபு போன்றவர்கள் கூட வேலை செய்பவர்கள்.

1983 ஆம் ஆண்டு அப்பாவின் ஷஷ்டியப்த பூர்த்தி விழா கொண்டாடினோம்.

சில ஆண்டுகள் அப்பா சத்தியமுர்த்தி, சீனு, சுந்தர் ஆகியோருடன் சேர்ந்து பஜனைகள் செய்தார்.
1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்பாவைப் பார்க்க நான் நாரத கானசபாவிற்க்கு சென்றேன்.  அப்பாவிடம் வீடு விஷயமாக பேசுவதற்கு சென்றேன்.

அங்கு நடந்த குருஜி பஜனை என்னை மிகவும் கவர்ந்தது. அன்று முதல் இன்று வரை என்னை அதில் ஈடுபடுத்துகிறது. அதற்க்கு வாய்ப்பு கொடுத்த பெற்றவர்களுக்கு குருஜிக்கு இறைவனக்கு என்றென்றும் என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்றிலிருந்து பஜனையில் என்னை ஈடுபடுத்திக் கொள்கிறேன்.
நானும் பாகவத சாமேளனத்தில் மெம்பராக சேர்ந்து தொடர்ந்து இரண்டாம் ஞாயிற்ற்க் கிழமைகள் பஜனைக்கு கல்பாக்கத்திலிருந்து வந்து போய்க்கொண்டு இருந்தேன். தென்னங்கூரில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்கிறேன்.

குருஜியுடன் ரீஷிகேஷ் ஹரித்வார் உடுப்பி ஸ்ரீபெரும்புதூர் திருநீர்மலை போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது மனதிற்கு நிறைவு தருகிறது.

1993 ஆம் ஆண்டு அப்பாவிற்கு பீமரத சாந்தி விழா நடந்தது. அனைவருக்கும் தங்களது ஆசிகளை தந்து விழாவினை நிறைவு செய்தார்.

அப்பாவும் அம்மாவும் அமேரிக்கா சிகாகோ சென்று வந்தனர். அங்கும் அஷ்டபதி பஜனைகள் செய்து வந்தனர்.
அமேரிக்கா செல்வதற்கு  தயாராகும் பொழுது தனக்கு வேண்டிய சீவல், மூக்குப்பொடி ஆகியவற்றை சரியாக வேண்டிய அளவுக்கு எடுத்துச்சென்றார்.

1996 ஆம் ஆண்டு அம்மா உடம்பு முடியாமற்போன போது சிறிது மனம் தளர்ந்தார். 1998 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் அம்மாவைப் பிரிந்தபோது தனிமையை உணர்ந்தார். ஆனாலும் யாரிடமும் போகக்கூடாது என்கின்ற குணம் அவரை தனியே அம்பத்தூரில் காரியர் சாப்பாடு சாப்பிட்டு வந்தார்..
பிருந்தா பாமா வந்து வந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கல்பாக்கத்திற்க்கு அழைத்து போனோம்.
அங்கு அவருக்காக மெடிக்கல் கார்டு வாங்கி கவனித்து வந்தோம்.
அங்கிருந்து சுந்தரம் மெடிக்கல் பௌண்டஷன் சென்று காண்பித்து வந்தோம். அவருக்கு மருந்துகள் கொடுத்தார்கள்.
ஒல்லியாக இருந்தவர் உடல் பருமன் ஆகி 15 நாட்கள் ICU வில் இருந்து 27-06-2001 இரவு 12:50க்கு உயிர் பிரிந்தது.

அவருக்கு இறுதி சடங்குகள் ஸ்ரீரங்கம் முளுபாகள் மடத்தில் செய்தோம்.

அவரது வருஷாப்திகம் வியாச ராஜா மடத்தில் செய்தோம்.

அதன் பிறகு கிருஷ்ணமுர்த்தி (கிட்டா)  ஆதிமூர்த்தி போன்றவர்கள் கோயில் பொறுப்பினை எடுத்து ராதா கல்யாணம் போன்ற நிகழ்சிகளை நடத்தி வருகின்றனர். நானும் அதில் கலந்து கொண்டு வருகிறேன்.
இப்போது கோயில் விழாக்கள் சிறப்பாக நடந்து வருகிறது.

ராதே கிருஷ்ணா 




அப்பாவின் சில முக்கிய செயல்பாடுகள்


1. குஞ்சவ்வா

2. கும்பகோணம் அவ்வா

3. காவேரி

4. மாமா ரங்கநாதன் படிப்பு, வேலை போன்றது

5. மாமா ரங்கநாதன் கல்யாணம்

6. சரோஜா கல்யாணம்

7. தன் பிள்ளைகள் படிப்பு & கல்யாணம்

8. வீடு நிலம்

9. தொடர்ந்து 45 ஆண்டுகள் ராதா கல்யாணம் நடத்தியது

10, பத்ர விநாயகர் பிரதிஷ்டாபனம்

11. அரச மரம் வேப்ப மரம் கல்யாண மஹோத்ஸவம்

12. கோபாலக்ருஷ்ண பாகவதர் & சஞ்சீவி பாகவதர் உபசரிப்பு

13. பாலகிருஷ்ண சாஸ்த்ரிகள் & ராமகிருஷ்ண ஐயங்கார்

14. அம்மாளு அத்தை உபசரிப்பு

15. வியாச ராஜா மட ஸ்வாமிகள் (ஸ்ரீ மத் பயோநிதி தீர்த்தரு)

16. பாகவத சம்மேளன பஜனைகள் பங்கேற்ப்பு

17. அமெரிக்காவில் பஜனை

18. முழுக்காலமும் வேஷ்டி உடுத்தியது 










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக