செவ்வாய், 9 அக்டோபர், 2012

தாத்தா மடல்


ராதே கிருஷ்ணா 10-10-2012


ஹலோ ரங்கநாதன் ,
எப்படி இருக்கிறாய் , நலம் நலம் அறிய ஆவல் ,

வர்ஷா மற்றும் அர்ச்சனா எப்படி இருக்கிறார்கள் .

பம்மல் வாழ்க்கையில் இன்பம் கண்டு சிறந்து வாழ செல்வங்கள் 

அனைத்தையும் பெற்று நீண்ட ஆயுளுடன் பேரன் பேத்திகளுடன் பல 

வருடங்கள் இன்பமாக வாழ நம் பத்ர விநாயகரிடம் வேண்டிக் கேட்டுக் 

கொள்கிறேன்.

உன்னுடைய தாத்தா மடல் அருமையிலும் அருமை . 

தாத்தாவுக்கு நிகர் அவரே தான் !!!

எனக்குத் தெரிந்ததில் சிலவற்றைச் சொல்லலாம் என்றும் ஆசைபடுகிறேன்.

சுதந்திர தினத்திற்கு முன் தினம் நமது நாட்டு ஜனாதிபதி அவர்கள் ஆற்றும் 

உரையை  அன்று உள்ள HMV ரேடியோவில் அலமாரி முன்பு நின்று 

கொண்டு  ஷார்ட் ஹேண்டில் நோட்ஸ் எடுத்துக் கொண்டு அதை விரிவாக எழுதி , மறுநாள் பேப்பரில் வந்ததைக் காட்டி சரியாக இருக்கிறதா என்று பார்த்து எங்களிடம் காட்டுவார். அவருக்கு அவரே தான் என்று வாழ்ந்தவர்.

மார்கழி மாதம் பஜனையில் மௌனசாமி மேடம் வரை வீதி பஜனை செய்து வந்து தின்னையில் உட்கார்ந்து பேப்பர் பார்த்துக் கொண்டே அம்மா கொடுத்த காப்பியை ருசித்து குடிப்பார். மறு நாள் யார் பிரசாதம் செய்யவேண்டும் என்று சார்ட்டில் பார்த்து அவரிடம் கூறி தயார் செய்து கொள்வார்.

7.55க்கு சாப்பிட உட்கார்ந்து 8 மணிக்கு புறப்பட்டு அன்று உள்ள  சைக்கிளில் சென்று ஸ்டேஷனில் உள்ள ஸ்டேண்டில் வைத்து விட்டு ட்ரைனைப் பிடித்து விடுவார்.

இரவு வேளையில் ஈசிசேரில் சாய்ந்து கொண்டு வீட்டில் உள்ள அனைவரிடமும் பேசவேண்டியதை பேசி அனைவருடன் சேர்ந்து சாப்பிடவேண்டும். இந்த வழக்கம் அவரோடு போய்விட்டது.

இன்று அவரவர் அவரவர் ஸ்டைலில் சாப்பிட்டு (டைம் கிடையாது) முடிக்கவேண்டும்.

அவர் ஒருநாள் இரவு வீட்டிற்கு வந்தவுடன் என்னிடம் இன்று பேப்பர் பார்த்தாயா, அதில் IIT வேலைக்கு ஆள் எடுக்கிறார்கள் என்று வந்திருக்கிறது , அதெல்லாம் பார்ப்பதே கிடையாது என்றார். அதற்கு நான் காலையிலேயே அதற்கு அப்ளிகேஷனுக்கு அனுப்பிவிட்டேன் என்று கூறியது இன்னும் ஞாபகம் இருக்கிறது.

அவரது பஜனையைத் தொடர்ந்து செய்வதற்கு வாய்ப்பு கொடுத்த குருஜி அவர்களுக்கும் இறைவனைக்கும் என்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

தாத்தா கும்பகோணம் பாட்டி , குஞ்சவ்வா, நெய்வேலி அவ்வா மற்றும் குடும்பத்தினர் (ராச்குட்டி மாமா , அவருக்கு பாலிடெக்னிக் படிக்க வைத்து , B & C வேலை  பார்த்துக் கொடுத்து பிறகு கல்யாணம் ஹேமா அத்தையுடம் செய்து நெய்வேலியில் அமர்த்தி நல்லபடி வாழ வழி செய்தவர், காவேரியை கரை ஏற்றியவர், சரோஜாவிற்கு கல்யாணம் செய்து வாழவைத்தவர், நெல்லூர் அத்தை அவரது தங்கை கோடம்பாக்கம் அத்தை என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்).

இப்போதைக்கு முடித்துக் கொள்கிறேன்.


மீண்டும் சந்திப்போம்.


முரளி சுதா 




















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக