இறந்த நபர் இறுதிசடங்கில் உயிரோடு வந்ததால் பரபரப்பு
ராதே கிருஷ்ணா 27-10-2012 / 12:10 AM
இறந்த நபர் இறுதிசடங்கில் உயிரோடு வந்ததால் பரபரப்பு
Published:Friday, 26 October 2012, 08:33 GMTUnder:General
இறந்து விட்டதாக கருதிய தொழிலாளி, அவருக்காக நடைபெற்ற இறுதிசடங்கின் போது உயிருடன் திரும்பிய சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்தது.
அங்குள்ள அலாகோன்ஹாஸ் நகரில் இருக்கும் கார் சுத்தம் செய்யும் கம்பெனியில் ஜோஸ் மார்கோஸ் (வயது 41) வேலை செய்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு பொலிஸ் துறையில் இருந்து அவருடைய மனைவிக்கு ஒரு தகவல் வந்தது. உங்கள் கணவர் கொலை செய்யப்பட்டு விட்டார்.
இதனையடுத்து ஜோஸின் சகோதரர் சென்று உடலை பார்த்த போது அது தம்பியின் உடல் போலவே இருந்ததால் தங்களது சொந்த ஊரில் இறுதிசடங்கிற்கு ஏற்பாடு செய்தனர்.
இந்நிலையில் ஜோஸ் மார்கோஸ் தான் வேலை செய்த கம்பெனிக்கு அருகில் சாலையில் நடந்து வருவதை பார்த்த நண்பர் அதிர்ச்சி அடைந்தார்.
நீ இறந்து விட்டதாக ஒரு உடலை எடுத்து சென்று ஊரில் இறுதி சடங்கு நடத்துகிறார்கள் என்றார். உடனே அவர் ஊருக்கு விரைந்தார்.
ஜோஸ் மார்கோஸ் உயிருடன் திரும்பியதை கண்டதும் பெற்றோர், உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பிறகே ஆள்மாறாட்டம் காரணமாக இந்த குளறுபடி நடந்திருப்பது பொலிக்கு தெரியவந்தது.
கொலை செய்யப்பட்டு இறந்தது சாந்தோஸ் காமா என்ற மற்றொரு நபர் ஆவார். அவரும் கார் சுத்தம் செய்யும் நிறுவனத்தில் வேலை செய்தவர் என்பது மட்டுமின்றி உருவ தோற்றத்திலும் 2 பேரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள் என்பதேயாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக