ராதே கிருஷ்ணா 10-04-2015
தமிழ் வருடங்களின் பெயர்கள்
தமிழ் வருடங்களின் பெயர்கள்
புலிப்பாணி சித்தர் அடிமை added 2 new photos — with Anand Siva Sivaand 2 others.
••• அறுபது தமிழ் ஆண்டுகளின் ஆன்மசக்தி மகாத்மியம்
••• அறுபது ஆண்டு வாழ்க்கையானது, ஒவ்வொரு மனிதனுக்கும் குழ்ந்தைப் பருவம் , சிறுவர் பருவம் போன்று ஆறு முக்கியமான வாழ்க்கைப் பருவங்களைக் கொண்டதாம் ..
••• வாழ்வில் பிறப்பு முதல் ஒவ்வொரு பத்து ஆண்டுகளிலும் , அதாவது 10,20,30,40,50,60.,வயதுகளில் , ஒவ்வொரு மானுடனுக்கும் உடல் , மனம் , உள்ளம் , புத்தி ,அறிவு ஆகிய ஐந்திலும் பெரும் மாற்றங்கள் , பெரும் வளர்ச்சி ஏற்படுவதைக் காண்கின்றோம் ..,
••• இவ்வகையில் மானுட வாழ்வின் அறுபது ஆண்டுகளில் , ஒவ்வொரு மனிதனிடமும் பலத்த மாற்றங்கள் ஏற்படுவதோடு அவன் வாழும் இடமும் பெரிதும்
••• பக்தியிற் சிறந்த நம் பண்டைய யுகச் சான்றோர்கள் , பல லட்சம் யுகங்களுக்கு முன்னரேயே , ஒவ்வொரு தமிழ் ஆண்டுக்கும் ஆன்ம சக்திகள் கொழிக்கும் திவ்யமான பெயரைச் சூடி வந்துள்ளனர் ...,
••• அறுபது தமிழ் ஆண்டுப் பெயர்களும் பல யுகங்களாய்த் தொன்மைச் சமுதாயத்தில் புழங்கிய பேறு கொண்டவை . பவித்ரமான தமிழ் ஆண்டுப் பெயர்களை உச்சரித்தலும் பலத்த ஆன்ம சக்திகளை வார்ப்பதாம்..,
••• இதனால் தான் தினமும் பஞ்சாங்கத்தைப் பார்த்து ஆண்டு , அயனம் , ருது , மாதம் , நட்சத்திரம் , கரணம் , போன்றவற்றைப் படித்து வருதல் , மிக சிறந்த நித்ய காலபைரப பூஜையாய்ப் போற்றப் பெறுகின்றது..
•••தமிழ் ஆண்டுப் பெயர்களின் சப்த த்வனிகள் , தொன்மைத் தமிழ் ஒலிச்சாரங்கள் , பண்டைய யுகங்களில் தமிழில் இருந்து பிற மொழிகளுக்குத் வித்யாதானமாய்ச் சொற்கள் சென்றடைந்த ஆன்மீகச் சிற்ப்பையுங் கொண்டுச் செந்தமிழ் மிளிர்வதாம்.
••• தமிழகத்தில் , யுகப் போக்கில் பேச்சு , எழுத்து வழக்கில் அதிகமாய்ப் பயன்படாது போன – அகவா , அகம்பகம் , அங்கிலி , பெத்தமுத்தி , பகம் , தாராகதம்பம் , சிங்கிளி – போன்ற தொன்மையான தமிழ்ச் சொற்கள் உண்டு என்பதைப் பலரும் அறியார்.
••• இவையாவும் வழக்கில் இருந்து விடுபட்டு விட்டமையால் , தற்போது கேட்பதற்கு இவ்வார்த்தைகள் புதிதாய் , அன்னியமாய்த் தோன்றும் அல்லவா ,
••• இதே போல் , புனிதமான அறுபது தமிழ்ப் பெயர்களும் , வழக்கில் நெடுங்காலம் பயன்படுத்தாமையால் வித்யாசமாய்த் தோன்றக் கூடும்.
தமிழ் ஆண்டுப் பெயர்கள் அறுபதும் , பழந்தமிழ்ச் சமுதாய , உலக நடைமுறையில் ஆன்ம சக்தியுடன் பிரகாசித்தவை .
தமிழ் ஆண்டுப் பெயர்கள் அறுபதும் , பழந்தமிழ்ச் சமுதாய , உலக நடைமுறையில் ஆன்ம சக்தியுடன் பிரகாசித்தவை .
•••முருகனைத் தமிழ்க் கடவுளாய்க் கொண்டுய்யும் தெய்வத் தமிழின் , காலங்கடந்த தொன்மை காரணமாய் , அனைத்து உலக மொழிகளின் தாய் ஸ்தானத்தில் , தமிழ் மொழி துலங்கும்வதாம்...
•••இவ்வாறாய் , பிற மொழிகளுக்குத் தாய் ஸ்தானத்தில் இருந்து அவற்றை விருத்தி செய்த புனிதப் புண்ணிய சக்தியுடன் பிரகாசித்துச் சிறப்பது செந்தமிழ் , இத்தகைய ஆன்மத் தொன்மைச் சிறப்பால் ..,
••• உலக மொழிகள் பலவற்றின் வார்த்தைகள் மற்றும் அந்தந்த மொழி சப்தங்கள் பலவும் , ஆன்ம சக்தி கொழிக்கும் தமிழ் மொழியின் அரிய பொக்கிஷத்தில் இருந்து , வித்யாதானமாய்ச் சென்றவை..,
••• தாம் தானமாய் அளித்ததை தர்மகர்த்தா மீண்டும் பெறுவதில்லை .., இதே போல் , ஆதிமொழியாம் தொல்தமிழின் எண்ணற்றச் சொற்கள் ., யுகப் போக்கில் பிற மொழிகளில் ஆனந்தமாய்க் குடியேறினாலும் . வித்யா தானமாய்ச் சென்ற ஆன்மீக பொலிவுடன் சிறக்கும் ....,
•••இந்தச் “சொற்கடவு” எனும் மொழித் துறை , தானமார்கம் , - கிரேக்கம் , வடமொழி , லத்தீன் , மைதிலீ ,பாலி போன்ற தொன்மையான உலக் மொழிகளுக்கும் காலப் போக்கில் ஏற்ப்பட்டுள்ளதே....
••• தொல் தமிழ் நூல்களில் உள்ள ஆயிரக் கணக்கான நுண்தமிழ்ச் சொற்கள் , தற்போது வழக்கில் அவ்வளவாக இல்லை...,
•••இவற்றுள் பலவற்றை , கலியுக மகான் அருணகிரி நாதர் , தம்முடைய அமிதமயத் திருப்புகழ் பிரபந்தத்தில் பதித்து , ஆன்மசக்தி பரிணமிக்கும் சந்தத்துடன் கனிவித்தார் ..,
•••அமுதினும் இனிதாய்ப் போற்றப் பெறும் திருப்புகழில் நிரவி உள்ள அனைத்தும் , புனிதப் பவித்ரமான அறுபது தமிழ் ஆண்டுப் பெயர்கள் போன்று , புண்ணியங் கொழிக்கும் அருந்தமிழ்ச் சொற்களாம் .
•••இவ்வாறாய் , பன்னெடுங்காலப் போக்கில் தமிழ்த் தாயின் வித்யா தானமாய்ச் சென்ற தொன்மைச் சொற்கள் , மீண்டும் நடைமுறைப் பேச்சு அலல்து எழுத்து வழக்கிற்கு வரும் போது அல்லது ஆண்டுப் பெயர்கள் போன்று பல காலமாய் அவ்வளவாய் வழக்கில் பயன்படுத்தப் பெறாது போனாலும் . இவை சப்த வித்யாசத்துடன் அன்னியமாய்த் தோன்றக் கூடும்..
•••யாமியர் (அகஸ்தியர்) , கச்சலி போன்ற அமுதத் தமிழ் வார்த்தைகளையும் தற்போது தமிழ் உரை நடை ,எழுத்து எவரும் பயன்படுத்தாமையால் , இவை காலப் போக்கில் மறைந்தன..,
•••இவ்வாறாய் பிற மொழிகளுக்கு வித்யாதானமாய்ச் சென்றவை .., நெடுங்கால இடைவளிக்குப் பிறகு வித்யாசமான அன்னியமாய்த் திரும்பி வருவதுண்டு..., வருங்ககாலச் சமுதாயத்தாருக்கும் இவ்வாறே தோன்றக் கூடும் ..,
•••எனவேதாம் , பண்டையச் சொற்களை தேவாரம் , திவ்யப் பிரபந்தம் தமிழ்மாமறைத் துதிகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் மறைப் பாசுரங்களைச் சமுதாயத்தில் நிதமும் ஓதி வந்தால் ., தாமே தொல் சொற்கள் மறையாது நீடித்து நிற்கும்...,
•••புனிதமான அறுபது தமிழ் ஆண்டுகளுக்குமான தமிழ்ப் பெயர் முறை , புண்ணிய பாரத்தின் .., உலகின் ஏனைய நாடுகளிலும் எடுத்தாள்ப் பெற்று , ஏனையப் பிராந்த்யக் காலண்டர் முறையிலும் , 60 ஆண்டுப் பெயர்களுடன் காலச்சுழற்சி ஆண்டும் முறை ஏற்பட்டுள்ளது ..,
•••இவ்வாறாய்க் குறித்த வருடங்களைக் கொண்ட வருடக் காலச்சக்கர அமைப்பு தோன்றுதற்கு , புனிதமான அறுபதாண்டுத் தமிழ் ஆண்டுப் பெயர் முறை முன்னோடியாய்ப் பிரகாசிக்கின்றது...,
••• இந்த ஆன்மீகக் கீர்த்தி புண்ணியத் தமிழ் மொழிக்கு என்றென்றும் உண்டு..,இவ்வாறாய் ,அறுபது தமிழ் ஆண்டுகள் ஒவ்வொன்றும் ஆன்ம சக்திகள் கொழித்து நிரவும் பெயரைச் சூடியவாறு , கோடானு கோடி ஆண்டுகளாய் இம்மியும் பிசகாது சுழன்று வருவதே கால யோக சக்திகள் நிறைந்த காலச்சக்கரம்..
••• பல ஆலயங்களின் உச்சி மேல் விதானத்தில் இதனைக் குறிக்கும் ராசி , நட்சத்திரங்கள் பதிந்த ஓவியத்தைக் காணலாம்.., இதுவும் உத்தம தமிழின் தெய்வீக மகத்துவத்தைப் பரைசாற்றுவதாம்..,
•••இவ்வாறாய் ,அறுவது தமிழ் ஆண்டுக்காலச்சக்கரத்தில் கால யோக சக்திகள் சிறந்து பரிமளித்தாலும்., தற்போது தமிழ் ஆண்டுப் பெயரை வழக்கில் பயன்படுத்துவது பெரிதும் மறைந்து வருவதால் , ஆன்மீக ரீதியாக கால சக்திகளை நிறையவே நாம் , இழந்து விட்டோம்.
•••தெய்வத்வப் புலமும் , ஆன்மவளம் நிறைந்த தமிழ் ஆண்டுப் பெயர்களை நடைமுறை வழக்கில் மீண்டும் நிலை நிறுத்திக் கொண்டு , இதுகாறும் இழந்த ஆன்ம சக்திகளை அடையப் பெறுவோமாக !
•••தெய்வத் தமிழின் ஆன்மீகக் கீர்த்தியை மீண்டும் பண்டைய யுகச் சிறப்புடன் புனரமைப்பதற்கு , தமிழ் மறைத் துதிகளை , வேதமந்திரங்களை இல்லந்தோறும் நிதமும் ஓதி வந்து ,
••• உலக ஜீவ சமுதாயத்தில் ஆன்ம சக்திகளை விருத்தி செய்தல் வேண்டும்.,
- ஏனைய திவ்ய விளக்கங்களுக்கு ஏப்ரல் 2015ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழை காண்க ..புத்தங்கள் கிடைக்குமிடங்கள்
http://www.agasthiar.org/store.htm
http://www.agasthiar.org/store.htm
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக