ராதே கிருஷ்ணா 20-04-2015
Narasimman Nagarajan shared Nataraja Sastry's photo.
1 hr ·
Thanks SRI Atthipattu Srinivasan
திருமணத்தின்போது, மாங்கல்யம் சூட்டும் நேரத்தில் "மாங்கல்யம் தந்துனானே' என்று ஒரு சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டிருப்போம்.
திருமணத்தின்போது, மாங்கல்யம் சூட்டும் நேரத்தில் "மாங்கல்யம் தந்துனானே' என்று ஒரு சுலோகத்தைச் சொல்வதைக் கேட்டிருப்போம். இதன் தொடர்ச்சியாக, ""சோமஹ ப்ரதமோ விவிதே, கந்தர்வோ விவித உத்ரஹ த்ரியோ, அக்னிஸ்டே பதிதுரியஸ்தேனுஷ்ய ஜாஹ'' என்று சுலோகம் நீளும்.
இதற்கான பொருளை நேரடியாகக் கொண்டு சிலர் விளங்கிக் கொள்வார்கள். அந்தப் பொருளின் படி, நீ(மணமகள்) முதலில் சோமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். என்று கூறுவார்கள்.
ஆனால், நம் சடங்குகளும் பழக்க வழக்கங்களும் மறைபொருளில் சொல்லப்பட்ட காரணத்தால்தானே மறையெனும் மந்திரத்தில் இருக்கின்றன. இதன் உள்ளர்த்தம் பொதிந்த பொருளாகப் பெரியவர்கள் காட்டுவது...
கண்களுக்கு சூரியன், கைகளுக்கு இந்திரன் என்பது போன்று, நம் உடலின் ஒவ்வொரு பாகத்துக்கும் ஒரு தெய்வத் தன்மையை உருவகித்திருக்கின்றனர் முன்னோர். இதே போல... குழந்தை பிறந்ததில் இருந்து, வளர்ந்து பெரியவனாகும் அல்லது பெரியவளாகும் வரை ஒவ்வொரு பருவத்திலும் மனித உடல் பல மாற்றங்களை அடைகிறது. அவ்வாறு ஒவ்வொரு பருவத்தையும் ஒரு தெய்வத்துக்கு, தெய்வத் தன்மைக்கு ஒப்புமைப்படுத்துவது முன்னோர் மரபு.
பெண் குழந்தை பிறந்ததில் இருந்து, ஆடை அணியும் வயது வரையான பருவம்வரை úஸôமன் எனப்படும் சந்திரனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அப்பருவத்தில் குழந்தை நிலவைப் போல் குளிர்ச்சியாக இருக்கிறாள். பின்னர் பூப்பு எய்தும் பருவம் வரை விளையாட்டுத் தனமும் அழகும் நிரம்பிய பெண் குழந்தையாக வளர்கிறாள். இந்தப் பருவத்தில் கந்தர்வனின் ஆதிக்கத்தில் இருக்கிறாள். அதாவது விளையாட்டுத்தனமும் அழகும் நிரம்பிய பருவம். பின்னர் அக்னியின் ஆதிக்கத்தில், அதாவது மண வாழ்க்கைக்குத் தயாராகும் உணர்வுகளுடன் இருக்கிறாள். அப்படிப்பட்ட பெண், குடும்ப வாழ்க்கைக்குத் தயாராகி, திருமணம் செய்விக்கப்பட்டு ஓர் ஆண்மகனின் கரங்களில் ஒப்படைக்கப் படுகிறாள்.
"மூன்று பருவம் கடந்து உன்னை வந்தடையும் பெண்ணை ஏற்று தர்மத்தின் வழியில் அன்புகலந்த இல்வாழ்க்கையை நீ நடத்துவாய்'' என்று ஆண்மகனுக்கு ஆசிகளை வழங்கச் சொல்கிறது இந்த சுலோகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக