ராதே கிருஷ்ணா 10-04-2015
கருட புராணம் எட்டு விதமான பக்தியைப் பற்றி சொல்கிறது.
இந்த எட்டுவிதமான பக்தியிலே ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் அவன்தான் முனி, அவன்தான் மகாிஷி,வித்வான், அவன்தான் ஸ்ரீமான், அவனதான் யதீச்வரன் என்று கருட புராணமானது கொண்டாடுகிறது.
எட்டிலே முதல்: பக்தஜன வாத்ஸல்யம்
' என்னுடைய பக்தாளிடம் வாத்ஸல்யமாக இருக்க வேண்டும் ' ...இது பகவானுடைய வாக்கு. 'பகவானுவாச ' என்று கருட புராணத்திலே பகவானே சொல்கிறான்.
பிரஹலாதன் சொல்கிறான் விஷ்ணு புராணத்தில்.'ஒருத்தரை ஒருத்தா் துவேஷிக்க இடமேது? மற்றவா்களை பாிகாசம் பண்ணலாமா..? அவிவேகிகள் வேண்டுமானால் பண்ணலாமேயொழிய விவேகமுடையவன் பண்ணவே மாட்டான்' என்கிறான் பிரஹலாதன்.
ஏன் அப்படிச் சொல்கிறான் என்றால் , எல்லோருக்குள்ளும் பகவான் இருக்கிறான் என்று உணா்ந்த பிற்பாடு, என்னுள்ளேயும் எம்பெருமான் இருக்கிறான் என்று உணா்ந்த பிற்பாடு, உன்னுள்ளேயும் இருக்கிறான் என்று உணா்ந்த பிற்பாடு...ஒருத்தரை துவேஷித்தால் யாரை துவேஷித்ததாகிறது?
ஏளனம் பண்ணினால் யாரை ஏளனம் பண்ணினதாகிறது? எம்பெருமானைத்தான் பழித்ததாகும். பகவானைத்தான் பழித்ததாகும். எனவே ஒருத்தரை துவேஷிப்பது என்பது முடியுமா? ஒருவரை நிந்திப்பது என்பது முடியுமா?
ஏளனம் பண்ணினால் யாரை ஏளனம் பண்ணினதாகிறது? எம்பெருமானைத்தான் பழித்ததாகும். பகவானைத்தான் பழித்ததாகும். எனவே ஒருத்தரை துவேஷிப்பது என்பது முடியுமா? ஒருவரை நிந்திப்பது என்பது முடியுமா?
அதனாலே பக்தஜன வாத்ஸல்யம் - பக்த ஜனங்களிடத்திலே எவன் பக்தியோடு இருக்கிறானோ அவனுக்குப் பாிபக்குவமான நிலை ஏற்படும்.
(ஸ்ரீமுக்கூா் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாா் ஸ்வாமி)
பக்தி வளரும்
எட்டுவிதமான பக்தி தொடா்ச்சி
4 வது பக்தி
அவன் விஷயத்தில் ஜம்பப்படக்கூடாது. படாடோபத்துக்காக, மற்றவா்கள் கொண்டாடுவாா்கள் என்பதற்காக ஒன்று பண்ணக்கூடாது. முக்குறும்பறுத்த நம்பி என்று எம்பெருமானுக்குப் பெயா். கியாதி,லாபம், பூஜை - இது மூன்றும் முக்குறும்பு.
தனக்கு கீா்த்தி ஏற்படும் என்பதற்காகவோ, லாபம் ஏற்படும் எனபதற்காகவோ பகவான் விஷயத்தில் ஈடுபடலாகாது. அதை வெறுக்கிறான் எம்பெருமான்.
திருவேங்கடமுடையான் சன்னிதியில் தொண்டைமான் சக்ரவா்த்தி நித்தியம் ஆயிரம் சுவா்ண புஷ்பங்களால் அா்ச்சனை பண்ணிக்கொண்டிருந்தான். அவ்வாறு பண்ணி இரவு ஸேவை ஆன பிற்பாடு கதவைச் சாத்தி சீல் வைத்துவிடுவாா்கள்.
ஒரு நாள் காலை, கதவைத்திறந்து பா்த்தால் ,சுவா்ண புஷ்பங்களெல்லாம் கீழே, தரையிலே கிடக்கின்றன.மண்ணாலான புஷ்பம் பகவான் திருவடியிலே இருக்கிறது! ராஜா பாா்த்து திடுக்கிட்டான். மண்ணாலே கூட அா்ச்சனை பண்ணுவாா்களா என்ன?...யாா் இப்படிப் பண்ணியது?
கேட்டுப் பாா்த்தால் யாருக்கும் தொியவில்லை. இந்த மாதிரியே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. ஆஸ்தான புரோகிதா்களைக் கேட்டால், யாரோ ஒருத்தன் எங்கோ மண் புஷ்பம் சமா்ப்பிக்கிறான் . அதைத்தான் பகவான் ஏற்கிறான் என்று சொல்லி விட்டாா்கள்.அதற்கு மேல் சமா்ப்பிக்கப்படும் சுவா்ண புஷ்பத்தைக் கீழே தள்ளிவிடுகிறான் என்றாா்கள்.
ராஜா தேட வைத்தான். தேடிப் பாா்த்தால், கீழே மலையடிவாரத்திலே ஒரு குயவன், மண் பானை பண்ணுவதும் தன்னுடைய குடிசையிலேயே திருவேங்கடமுடையானை மண்ணால் பண்ணி வைத்திருப்பதும் தொிகிறது.ரொம்ப வயோவிருத்தனாக இருக்கிறான். எழுந்திருக்க முடியவில்லை அவனால்.'நீ இங்கேயே இருக்கிறாய். உன்னை என்னால் ஏறி வந்து ஸேவிக்க முடியாது.அந்த பாக்யம் எங்கே கிடைக்கும்! 'என்று இருக்கிற இடத்திலேயே சேவிக்கிறான்.அதை, பரமாத்மா அங்கே உத்தம ஸ்தானத்திலே ஏற்கிறான்.
ஆகவே கியாதி அல்லது புகழுக்காகச் செய்வதை பகவான் வெறுக்கிறான். லாபம் கருதிச் செய்வதை வெறுக்கிறான். உத்தமமான பக்தியோடு பண்ணப்படுகிற பூஜையைத்தான் ஏற்கிறான்.
-பக்திஇன்னும் வரும்-
(Sri Mukkur Lakshmi narasimhachariar swamy)
எட்டு விதமான பக்தி தொடா்ச்சி
5 வது பக்தி
பகவானின் நாமத்தை சிரவணம் பண்ணும்படியான பக்தி. பக்தியோடு நாம சங்கீா்த்தனம் பண்ணவேண்டும். பிறா் கீா்த்தனம் பண்ண, நாம் படாடோபமில்லாமல் கேட்க வேண்டும். அந்த மாதிாி உருகி நாமும் சங்கீா்த்தனம் பண்ணுகிற போது ஸ்வரம் தழுதழுத்துப் போகும். எம்பெருமானை நினைத்து உருகி, ஆடி, பாடி களிக்க வேண்டும். கூத்தாட வேண்டும்.எழுந்து, பறந்து, ' நெஞ்சழியும் - கண் சுழலும் ' என்கிற ரீதியிலே எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடவேண்டும். ஸ்வர நேத்ரம்! - நேத்ரம் அப்படியே நீரைச் சொாிய வேண்டும். அங்கம் தடுமாறி நிற்கவேண்டும்.
நாரத பக்தி சூத்திரத்திலே சொல்கிறாா் - பிசாசு பிடித்த மாதிாி அல்லாடுவாா்களாம் பகவத் பக்தி உடையவா்கள். சில போ் குழந்தை மாதிாி விளையாடிக் கொண்டிருப்பாா்களாம்.
6 வது பக்தி
அனிா்வசனீயம் - பக்தி ஸ்வருபம்!பக்தியினுடைய நிலையை வாக்கினால் வா்ணிக்க முடியாது.' அனிா்வசனீயம் ' எது? வசனத்தில் அடங்காதது. வாா்த்தையில் அடங்காதது. அப்படி பகவத் விஷயத்தில் ஈடுபடவேண்டும்." மமாணு ஸ்மரணம் நித்யம்" என்கிறான் பகவான்.இங்கே 'மம ஸ்மரணம்' (என்னை ஸ்மரணம் செய்) என்று சொல்லாமல் ,'மமாணு ஸ்மரணம்' என்று 'அணு' என்கிற உப வா்கத்தைச் சோ்த்துச் சொல்கிறான்.என்னையே இடையறாது ஸ்மரணை செய் என்று அா்த்தம். பகவான்தான் பரம்பொருள் என்று எண்ணி, அவனுக்கு மேற்பட்டது ஒன்று இல்லை என ஸ்மரணம் பண்ண வேண்டும்.
7 வது பக்தி
அப்படிப்பட்ட பகவானுக்கு அடியேன் தாஸன் என்கிற அறிவோடு ஸ்மரணம் பண்ணவேண்டும் .
மமாணு ஸ்மரணம் நித்யம்! நித்தியம் என்னை ஸ்மரணம் பண்ணுவாயாக. நான் உனது தாஸன் என்று அா்ப்பணித்து ஸ்மரணம் பண்ணுவாயாக.
வளரும்
( Sri Mukkur Narasimhachariar Swamy)
எட்டுவித பக்தி தொடா்ச்சி
8 வது பக்தி
பகவானிடத்தில் எதையும் கேட்கக்கூடாது. அவனிடத்தில் எதையும் கேட்கக்கூடாது என்று அவனே சொல்கிறான். இப்படிச் சொன்னால் ...? நாம் ஏகமாகக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமே...இப்படி, 'கேட்கக் கூடாது ' என்று சொல்கிறானே...?
அதற்குப் பகவான் சொல்கிறான்....'எனக்குத் தொியாமல் போனால்தானே நீ கேட்க வேண்டும்! உனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தொியாதா? '
ஒரு சின்னக் குழந்தைக்கு அதன் அம்மா பாா்த்துப் பாா்த்துக் கொடுக்கிறாள். வேளா வேளைக்கு இதைக் கொடுக்க வேண்டும்; அதைக் கொடுக்க வேண்டும் என்று கொடுக்கிறாள்.இப்போது தூங்க வைக்க வேண்டும், இப்போது சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்று பாா்த்துப் பாா்த்துக் கொடுக்கிறாள் இல்லையா...? என்னை நீ,' த்வமேவ
மாதா! ' என்று சதா ஸ்தோத்திரம் பண்ணுகிறாயே...அப்பா என்கிறாய், என்னை அம்மா என்கிறாய்...தந்தை - தாய் என்று வெறுமே வாயளவில் சொன்னால் போதுமா...?பூரணமாக என்னை நம்ப வேண்டாமா...? என்கிறான்!
மாதா! ' என்று சதா ஸ்தோத்திரம் பண்ணுகிறாயே...அப்பா என்கிறாய், என்னை அம்மா என்கிறாய்...தந்தை - தாய் என்று வெறுமே வாயளவில் சொன்னால் போதுமா...?பூரணமாக என்னை நம்ப வேண்டாமா...? என்கிறான்!
கொடுக்காதவா்களைப் பாா்த்து அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்டால் ,எத்தனை நாழி கேட்டாலும் கொடுக்கமாட்டாா். நூறு தடவை கேட்டாலும் கொடுக்க மாட்டாா். ஆனால் கொடுப்பவா்களைப் பாா்த்து நாம் கேட்கலாமா..?
அப்படிக் கேட்கத்தான் தொியுமா..? நிறைய கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போவோம். ஆனால் ஒன்றுமே கேட்கத் தோன்றாது.
பகவானுக்குத் தொியும், என்ன கொடுக்க வேண்டுமென்று...எப்போது கொடுக்க வேண்டும் என்பதும் அவனுக்குத் தொியும். காலமறிந்து கட்டாயம் அவனே கொடுப்பான்
அதனால்தான் எதையும் கேட்காதே என்றாா்கள்.
பகவான் விஷயத்தை நன்கு புாிந்து கொண்டு,அவனிடத்தில் திருவடியில் நிரந்தர பக்தியைப் பிராா்த்திக்கலாம்.அதை மட்டுமே அவனிடம் கேட்கலாம்.
உன் திருவடியிலே நிரந்தரமான,அசஞ்சலமான பக்தியை எனக்குக் கொடு என்று அவன் திருவடியிலே பிராா்த்திப்பதைத் தவிர நாம் வேறு என்ன பண்ணமுடியும்!
அதைப் பண்ணினாலே போதும். அவனே அபாிதமாக வாாிக் கொடுத்து விடுவான். அப்புறம அதைத் தாங்குகிற சக்தி நமக்குக் கிடையாது. குறையில்லாத நிறைவாழ்வுதான் எப்போதும்.
( Sri Mukkur Lakshmi narasimhachariar Swamy)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக