புதன், 4 டிசம்பர், 2013

வில்வத்தின் மகிமை

ராதே கிருஷ்ணா 04-12-2013



  • வில்வத்தின் மகிமை Vilvaththin Magimai வில்வம் மகாலட்சுமிக்கு உகந்த மரம். வில்வம் மகாலட்சுமியின் விருப்பத்துக்குகந்தது மட்டுமின்றி வில்வமரத்திலேயே மகாலட்சுமி குடி கொண்டிருக்கிறாள் என்கிறார்கள். திருவஹிந்திரபுரம் என்ற தலத்தில் மகாலட்சுமிக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது. லட்சுமிதேவியின் திருக்கரத்திலிருந்தே வில்வம் தோன்றியதாக வாமன புராணம் கூறுகின்றது. வில்வத்தினால் பூசித்தால் கொடிய வறுமை ஒழிந்து லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு செல்வ வளம் கொழிக்கும் என்ற ஸ்ரீசூக்தத்தில் கூறப்பட்டிருக்கிறது. பூவுலகில் ஒரு தடவை அவதாரம் செய்த லட்சுமி, மகாவிஷ்ணுவை மீண்டும் அடைவதற்காக வில்வ மரக்காட்டிலே தவமிருந்தாள் என காளிகா புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. புனித இலைகளில் வில்வ இலை சிவ சொரூபமாகும். வில்வ மரத்தில் உள்ள முட்கள் சக்தி சொரூபம். கிளைகள் வேதங்களாகும். வில்வ வேர் பதினோரு கோடி ருத்திரர்கள் ஆகும். சாத்தி வழிபட புதிய வில்வம் கிடைக்கவில்லை என்றால் முன்பு சாத்திய வில்வத்தையே மீண்டும் சாத்தலாம். இவ்வாறு ஒரு மாத காலம் வரை மட்டுமே செய்யலாம். சிவபெருமான் திரு உருவமாகவே கொண்டு வில்வத்தை பூசிக்கலாம். ஐந்து வில்வ இலைகளை எடுத்து திசைக்கு ஒன்று என நான்கு திசைகளிலும் நான்கை வைத்து நடுவிலே ஒரு வில்வத்தை வைத்து விட்டால் அது சிவபெருமான் திருவுருவத்தைக் குறிக்கும். அதனை வழிபட்டாலே சிவபெருமானை வழிபட்டதாக ஆகும். மாதப்பிறப்பு, சோமவாரம், அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய இந்த நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து எடுக்கக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக