செவ்வாய், 3 டிசம்பர், 2013

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை

ராதே கிருஷ்ணா 04-12-2013

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை

கால் ஆணிக்கு உரிய சிகிச்சை: கால் ஆணி ஏற்பட்ட உடனேயே பூண்டை நசுக்கி அதன் சாறை காலில் ஆணி இருக் கும் இடங்களில் தடவி வரவும். இரவுப் பொழுதில் பூண்டை நசுக்கி காலில் வைத்து துணியால் கட்டுப்போட்டுவிட்டு காலையில் எடுத்துவிடலாம். இதுபோல் ஒரு வாரம் செய்து வந்தால் கால் ஆணி நிவாரணம் கிடைக்கும். மேலும், மல்லிகைச் செடியின் இலையை இடித்து அதன் சாறை எடுத்து பாதத்தில் பற்று போடுங்கள். கால் ஆணி மேலும் பரவாமலும், இருந்த இடம் தெரியாமலும் போகும். மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாய் அரைத்து, கால் ஆணிகள் மீது அடைபோல் கனமாக வைத்து மேலே ஒரு வெற்றிலையை வைத்து, துணியினால் இறுகக் கட்டி விட வேண்டும். படுக்கும் முன்பு இதை செய்ய வேண்டும். தொடர்ந்து 21 நாட்கள் வரை இவ்விதம் செய்தால் கால் ஆணி இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். அம்மான் பச்சரி இலையை கிள்ளி அதன் பாலை கால் ஆணி இருக்கும் இடங்களில் தினமும் 3 முறை தடவி வரவும். கால் ஆணிகள் அனைத்தும் மறையும். அத்திக்காயை எடுத்து நன்றாக அரைத்து வடிகட்டி அதன் சாறை கால் ஆணி மீது தடவி வந்தால் கால் ஆணி குறையும். கால் மிருதுவாகும். சித்திரமூலம் (இதை கொடிவேலி என்றும் சொல்வார்கள். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைச்சு தூங்கப்போகும் முன்னால் கால் ஆணி மேல பூசி வந்தால்.. மூன்று நாளில் குணம் கிடைக்கும். இந்த வைத்தியம் செய்யும்போது சிலருக்கு அந்த இடத்தில் புண் உண்டாகும். அப்படி வந்தால்... ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து குழைச்சு, புண் வந்த இடத்தில் பூசினால் புண் ஆறி விடும். கால் ஆணியும் காணாமல் போகும் இஞ்சிச் சாற்றுடன் சிறிதளவு நீர்த்த சுண்ணாம்பைக் கலந்து கால் ஆணிக்கு மருந்தாக போட்டு வந்தால் கால் ஆணி நீங்கி விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக