ராதே கிருஷ்ணா 18-12-2013
எங்கே பிராமணன் ?
எங்கே பிராமணன் ?
Ravi Natarajan and Narasimman Nagarajan shared Viswa Viswanathan's photo.
- Ravi Natarajan shared Viswa Viswanathan's photo.அதம பட்சப் பரிகாரம்
பிராம்மணன் தன் கடமையாகிய வேத அத்யயனத்தையும், கர்மாநுஷ்டானத்தையும் கைவிட்டான். கடமையை விட்டான். அப்புறம் ஊரை விட்டான். கிராமங்களை விட்டுப் பட்டணத்துக்கு வந்தான். தனக்குறிய ஆசாரங்களை, அதன் வெளி அடையாளங்களை விட்டான். கிராப் வைத்துக் கொண்டான். ஃபுல்ஸுட் போட்டுக் கொண்டான். தனக்கு ஏற்பட்ட வேதப்படிப்பை விட்டு வெள்ளைக்காரர்களின் லௌகிகப் படிப்பில்போய் விழுந்தான். அவன் அவன் தருகிற உத்தியோகங்களில் போய் விழுந்தான். அதோடு, அவனுடைய நடை உடை பாவனை எல்லாவற்றையும் காபி அடித்தான். வழிவழியாக வேத ரிஷிகளிலிருந்து பாட்டன், அப்பன்வரை ரக்ஷித்து வந்த மகோந்நதமான தர்மத்தைக் காற்றிலே விட்டுவிட்டு, வெறும் பணத்தாசைக்காகவும் இந்திரிய சௌக்கியத்துக்காகவும், புதிய மேல் படிப்பு, மேல் நாட்டுப் படிப்பு, ஸயன்ஸ், உத்தியோகம், வாழ்க்கை முறை, கேளிக்கை இவற்றில் போய் விழுந்து விட்டான்.
சாஸ்திரங்கள் இவனுக்குப் பணத்தாசையே கூடாது. இவன் சொத்தே சேர்க்கக்கூடாது என்கின்றன. அதன் பிரகாரமே இவன் வாழ்க்கை நடத்தி, வேத சகாப்தத்தாலும் யக்ஞங்களாலும் லோக க்ஷேமத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்த வரையில், இவனிடம் மற்ற எல்லா ஜாதியாரும் குறைவில்லாத அன்பும் மரியாதையும் காட்டிவந்தனர். இவனையே உதாரணமாக, வழிகாட்டியாக, முன்மாதிரியாக வைத்துக் கொண்டார்கள்.
இப்போதிருக்கிற சமூக அமைப்பு முழுதும் மாறுகிறதோ, மாறவில்லையோ - அதை மாற்ற முடியுமோ, முடியாதோ - வேத ரக்ஷணத்தையே ஜீவனமாக வைத்துக் கொண்டிருக்கிற ஒரு கூட்டம் என்றைக்கும் இருந்து கொண்டிருக்கும் படியாக நாம் பண்ண வேண்டும். பிராம்மண ஜாதி என்று ஒன்று இருக்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. தனியாக இப்படி ஒரு ஜாதி சுயநலத்துக்காக இருந்து ஒன்றும் ஆகவேண்டாம். லோக க்ஷேமத்துக்காகத்தான் வேத சப்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. வேத சப்தங்கள் இருந்தால்தான் லோகம் முழுக்க க்ஷேமமாக இருக்கும் என்று நான் சொல்லுகிறேன். அதனால் இனிமேலாவது ஒரு பிராமணன்கூட வேதம் தெரியவில்லை என்று இருகக்கூடாது என்கிறேன். பிராம்மணர்கள் மறுபடி வைதிகத்துக்கு திரும்புவது ஒன்றுதான் இப்போது ஏற்பட்டிருக்கிற இத்தனை கோளாறுகளும் தீரிவதற்கு ஒரே பரிகாரம் என்கிறேன்.
குறைந்தபட்சமாகச் சொல்கிறேன். இப்போதுள்ள பிராமணர்களுக்கு இதற்கான தைரியமோ, தியாக புத்தியோ இல்லாவிட்டாலும், போனால் போகிறது. உங்களால் வேத அத்யயனத்துக்குத் திரும்ப முடியாவிட்டாலும், உங்கள் குழந்தைகளையாவது அதில் திரும்பியாக வேண்டும் என்கிறேன். அடுத்த தலைமுறையில் வேதம் தெரியாத பிராமணன் ஒருத்தன்கூட இருக்கவேகூடாது. அதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்கிறேன்.
லெனகிகத்தில் இத்தனை அசெனகரியப்பட்ட பின்னும், ஐயையோ, நம் குழந்தைகளை வெறும் வைதிகமாக்குவதா? என்ரு நீங்கள் நினைத்து, இப்போது நீங்கள் அநுபவிக்குற செனக்கியம் என்று நினைக்கப்படுகிற வாழ்க்கை முறையிலேயே உங்கள் சந்ததிகளும் இருக்க வேண்டும் என்று நினைத்தால், இன்னும் ஒரு படி இறங்கி வருகிறேன். உத்தியோகத்துக்காக தற்போதய படிப்பில் உங்கள் குழந்தைகளை விட்டு, அவர்களைப் பிற்பாடு வேதரக்ஷணமே ஜீவன் கர்மம் என்றில்லாமல், வேறு தொழிலில் விட்டால்கூடத் தொலைகிறது. இப்படிப் புதுமுறைப் படிப்புப் படிக்கிற காலத்திலேயே, எட்டு வயசுக்குள் உபநயனத்தைச் செய்து, அப்புறம் சுமார், பத்து வருஷம் தினமும் சாயங்காலம் ஒரு மணி வேத அத்யயனம் செய்வதற்கு ஏற்பாடு பண்ணுங்கள். இதையாவது பண்ணுங்கள் என்கிறேன். ஒவ்வொரு பிராமண வீட்டுக் குழந்தைக்கும் இந்த ஏற்பாடு செய்தாக வேண்டும். இப்படி வீட்டுக்கு ஒரு சி¬க்ஷ சொல்லி வைக்க இப்போது வாத்தியாரே கிடைக்க மாட்டார். அந்த லக்ஷணத்தில் நாம் இருக்கிறோம். இதனாலும் மற்ற பொருளாதார செனக்கியங்களை உத்தேசித்தும் பேட்டைக்குப் பேட்டை ஒரு பொது இடத்தில் எல்லாக் குழந்தைகளுக்கும் வேத வகுப்பு நடத்துங்கள். கூட்டுறவு அடிப்படையில் இப்படிச் செய்வதால் வசதியில்லாத ஏழை குழந்தைகளுக்கும்கூட வேத சி¬க்ஷ பெற செனகரியம் ஏற்படும். பத்து வருஷங்களில் சிறுகச் சிறுக இப்படிக் கற்பதால் மந்திர பாகம் நிறைய மனப்பாடமாவதோடு மட்டுமின்றி, பிரயோகத்திலும்கூட, அதாவது உபாகர்மா முதலிய வைதிக கர்மாக்களைத் தாங்களே செய்து கொண்டு
மற்றவர்களுக்கும் செய்விக்கிறதற்கும்கூடத் தேர்ச்சி உண்டாக்கிவிடும். இவ்வாறு பிரயோகத்தை ஏன் சேர்த்துக் சொல்கிறேன் என்றால் வைதிகச் சடங்குகளை அவரவர்களே செய்து கொள்ள முடியும் என்றால்தான் எதிர் காலத்தில் புரோஹிதர்கள் என்றே ஒரு தொழிற்காரர்கள் இல்லாவிட்டாலும்கூட சமாளித்துக் கொள்ள முடியும். புரோஹிதம் செய்வதே ஜீவனோபாயம் என்று வருங்காலத்தில் யாராவது பிள்ளைகளை விட்டுவைப்பார்களா என்று கேட்கிற நிலை வந்துவிட்டால், இந்த ஏற்பாடு அவசியமாகிறது. இப்படியாக வேத சப்தங்கள் லோகத்தில் என்றும் நிலைத்திருக்கும்படியாக செய்வதில் எல்லோரும் இதயப்பூர்வமாக முனைந்து நின்று காரியத்தில் இறங்க வேண்டும். இது இப்போதுள்ள ஜன சமூகம் முழுவதற்கும், பிராம்மண ஜாதிக்கு மட்டுமல்ல . சமஸ்த லோகத்திலும் உள்ள அத்தனை கோடி ஜீவராசிகளுக்கும் க்ஷேமம் உண்டாவதற்கான நீங்கள் செய்ய வேண்டிய கடமை. தெய்வத்தால் விதிக்கப்பட்ட கடமை. அது தெய்வீகமான கடமையும் ஆகும்
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.
இவை நான் சொல்லவில்லை
தெய்வத்தின் குரல் ( முதல் பாகம்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக