புதன், 11 டிசம்பர், 2013

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு

ராதே கிருஷ்ணா 11-12-2013



tamilkey · 155,237 like this
Yesterday at 9:59am · 
  • தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு

    ------------------------------ ------------------------------ ------------------


    தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலுக்குச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட் டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜ ராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட் டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழி பாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத்திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத் தியவன் ராஜ ராஜன். தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளி வந்துள்ளன.

    ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப் படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப் பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படை யில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது. இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜ ராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்துகொள் வது அவசியம்… பெரிய கோயில் அளவு கோல்: எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்க மாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்றுஅழைக்கப்பட்டது.

    ஒரு முழ மே இருவிரல் நீட்டித்து பதி னாறு விரல் அகலத்து, ஆறு விரல் உசரத்து பீடம், ஒரு விர லோடு ஒரு தோரை உசரத்து பதுமம் என்ற திருமேனி பற்றிய குறிப்பை காணலாம். தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத் தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அள வாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப் படையில் விமான த்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதா வது சுமாராக 59.40 மீட்டர். சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள். இதைப்போன்று 15 மடங்கு உயரமான 180 அலகுகள், அதாவது 59.40 மீட்டர் என்ப தே கோபுரத்தின் திட்டமிடப்பட்ட உயரம். கருவ றையின் இரு தளங்களிலும் விமா னத்தின் பதின்மூன்று மாடி களும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிட த்தக்கது. அலகு களின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சது ரம்.

    கருவறையின் உட்சுவரும், வெளி ச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும். பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமான த்தின் அடிப்பகுதி (உபானா) 90 அலகு கள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள் (36 மீ ஷ் 36 மீ) பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடி கிறது. சரியான அளவுகள் தெரியவில்லை. இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகு கள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 80 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திற னைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்றுதோன்றுகிறது.

    சுமார் 1.2 மீ ஷ் 1.2 மீ சதுரத்தில் 0.6 மீ ஷ் 0.6 ஷ் 0.6 மீ அளவு கற்களை ஒவ் வொரு அடுக்கிலும் நான்கு கற் கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின் றன என்பதைக் கவனித்த பின் னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண் டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும். பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு: 180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறு கள் மட்டுமே பரிசீலிக்கலாம்.

    கரு வறையின் உட்சுவருக்கும், வெளி ச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப் பாதை உள்ள து. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணை க்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத் ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ ஷ் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட் டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும். பதின்மூன்றாவது மாடியின் மேல் எண் பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன் றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகா ரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதி களாகப் பிரித்துள்ளனர். அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலி ருந்து 5- வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6- வது மாடி யிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக் கும் அதன் உயரத்து க்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமை க்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது. சாரங்களின் அமைப்பு: கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் – ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப் பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் – சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்ட ப்பட்ட உறுதி யான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப் பப்பட்டன.


    மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற் பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந் தது என்பது குறிப்பிட்டத்தக்கது. இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமா னம் கட்டுவதற்குச்சற ்று மாறுபட்ட சாரம் தேவைப்பட் டது. இது அமைப்பில் சீனா வின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சார த்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட் ட சாய்வுப் பாதையின் இறுதி கட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தி ன் சுவர்கள் இணைக்கப்பட்டி ருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது.

    இது மட்டு மன்றி இந்த அரண் சுவர்களுக் கு நிறைய கற்களும் தேவை ப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட் டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமி ருக்கிறது. இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம் (நஇஅஊஊஞகஈ) அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப் பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் (யஉதபஐஇஅக டஞநப), நேர்ச்சட்டங்கள் (தமசசஉதந), குறுக்குச் சட்டங்கள் (ஆத அஇஉந) அனைத்தும் முட்டுப் பொருத் துகள் (இஅதடஉசபதவ ஒஞஐசபந) மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத் தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத் தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள உதவின. அரண் மதில் உட்சுவரிலிருந்த ு மேடைக ளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இம்முறையில் எளிதாக விருந்தது. மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    பலகோடி நூறாண்டு வாழ வேண்டும் நம் தஞ்சை கோயில் ! ! !

1 கருத்து:

  1. This temple was in fact build with the help of sidders. They know how to make the stone into a paste without distorting its basic quality being a stone. Then these paste being used to mould the required pattern. Carrying the paste to any higher level is not so difficult.

    பதிலளிநீக்கு