வெள்ளி, 29 ஜனவரி, 2016

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

ராதே கிருஷ்ணா 30-01-2016வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.

கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.

4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.

அதற்கு என் நிழலே போதும்!

5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம்.

அதுதான் என்னை மனிதனாக்கியது.

7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.

அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.

திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

10. முழுமையான மனிதர்கள் இருவர்.

ஒருவர் இன்னும் பிறக்கவில்லை.

மற்றவர் இறந்துவிட்டார்.

11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

12. எல்லோரையும் நேசிப்பது சிரமம்.

ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.

14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை.

ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

15. இவர்கள் ஏன் இப்படி..?

என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.

16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்.

17. ஆயிரம் முறை சிந்தியுங்கள்.

ஒருமுறை முடிவெடுங்கள்.

18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது.

பயத்தை உதறி எறிவோம்

19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன்
விவாதிப்பது சிறப்பாகும்.

20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.

24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.

25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும்.

அப்போது தான் முன்னேற முடியும்.

26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்து கிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.

28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை.

சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்

32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
********
#ஸ்ரீ
பண புழக்கம் அதிகரிக்க

பணம் சேர தாந்த்ரீக பரிகாரங்கள் !!

1. பணவசியம் ஏற்பட, பணப்புழக்கம் அதிகரிக்க பணப்பெட்டியில் பச்சை துணியில் சிறிது பட்சை கற்பூரம்,ஏலக்காய்,சிறிது சோம்பு மூன்றையும் சேர்த்து முடிச்சு கட்டி வைக்கவும். பணப்புழக்கம் அதிகரிப்பதை தாங்களே காணலாம்.ஒன்றொன்றும் சிறிதளவு போதுமானது

2. ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மாளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது

3. 27 மிளகுகளை ஒரு புதிய வெள்ளை துணியில் கட்டி அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி கால பைரவருக்கு விளக்கேற்றிவர நாம் நினைத்தது நடக்கும் இழந்த அனைத்தும் திரும்ப வரும். வளர்பிறை / தேய்பிறை அஷ்டமியில் செய்தால் உடனடி பலன்.

4. உங்களது வீட்டில் அல்லது பணிபுரியும் இடத்தில் அல்லது உங்களது தொழிற்சாலையில் ஒரு சிறு சந்தன மரப்பெட்டியை வாங்கி வைக்க வேண்டும்.அந்தப் பெட்டிக்குள் வில்வம்,துளசி,வன்னி,ஆல இலை,வெற்றிலை,மஞ்சள்,குங்குமம்,மல்லிகை,தாமரை போன்றவற்றைப் பூஜித்து வைக்க வேண்டும்.இதில் பணத்தை வைத்தெடுக்கும் பழக்கத்தை நாம் கொண்டு வரவேண்டும்.வெள்ளிக்கிழமைகளில் வாரம் அல்லது மாதம் ஒரு வெள்ளிக்கிழமை முழுக்கவும் நாம் சம்பாதிக்கும் பணத்தை வைத்திருக்கவேண்டும்.மறுநாள்,அந்தப்பணத்தை மற்ற காரியங்களுக்குப் பயன்படுத்திட வேண்டும்.
இப்படி அடிக்கடி செய்தால்,நமது பணம்நியாயமாகவும், நல்ல விதமாகவும் நம்மை வந்தடையும்; நம்மிடம் சேரும்.பயனுள்ள வகையில் மட்டுமே செலவழியும்.

நடுத்தர மற்றும் பாமரக்குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சந்தன மரப்பெட்டிக்குப் பதிலாக கருப்புப் புள்ளி இல்லாத புது மண்பானை, சுரைக்குடுவை,தேக்கு மரப்பெட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை வாங்கி மேற்கூறியவாறு பயன்படுத்தலாம்.
இதன்மூலம்,நமது பணம் மது,காமம்,புகை,ஆடம்பரம், கேளிக்கை போன்ற வீண் விரையமாகாமல் தற்காத்துக்கொள்ளலாம்

5. சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும். இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.

6. தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்
கடமைகளைத் துவக்க வேண்டும். அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர்
இளநீர் அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே
பதிவாகிவிடும்.

7. கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.

8. பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.

9. தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்..ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும்.

10 நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.

11. வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

12. காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும். மூக்குத்தியும் மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.

13. கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.

14. கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும் நீல வெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை. தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை.

15. புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள், பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித்தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
16. வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது. பணம், முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால், வாங்கியவர் வளமடைவார்.

கார்த்திகை • , மகம், உத்திரம், சித்திரை, மூலம், ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

17. வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.

18. அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.

19. செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.

20. 7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.

21. வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.

22. ஆரஞ்சு மரத்தில் வேறை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.

23. படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்

http://athmajyothish.blogspot.in/2015/11/blog-post_246.html

வடக்கே தலை வையாதே வாசலுக்கு கால்நீட்டாதே ஏன் ?
சைவத் தமிழர் பழக்க வழக்கங்களில் கடைப்பிடிக்கப்படும் சில சம்பிரதாயங்களும் அவற்றிற்கான விளக்கங்களும்:

வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பதன் உண்மை பொருள் என்ன தெரியுமா ? வாசலைப் பார்த்து கால் நீட்டக்கூடாது என்பதற்கும் நம் இல்லத்தின் சுபிட்சத்திற்க்கும் சம்பந்தம் உண்டு , இதை பற்றித் தெரிந்து கொள்வோம் ;

1. வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூடாது என்பார்கள் – காரணம் என்ன?

இதை பற்றி அறிய, நாம் முதலில் காந்தம் (Magnet) பற்றியும் அதன் இயல்பு பற்றியும் அறிந்திருக்க வேண்டும்.
காந்தம், உலோகப் (இரும்பு (Iron) செப்பு போன்ற) பொருட்களையும், காந்த தன்மை கொண்ட பொருட்களையும் தன் வசம் இழுக்கும் வல்லமை கொண்டது என்பது நாம் சிறு வயதில் பாடசாலைகளில் செய்த ஆராய்ச்சியின் (Experiments) மூலம் அறிந்து கொண்டவைகளாகும்.
காந்ததிற்கு இரண்டு துருவங்கள் (Poles) உண்டு – வட துருவம் (North Pole) மற்றும் தென் துருவம் (South Pole). காந்தங்கள் இரண்டின் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலகி கொள்ளும் (தள்ளும்)(Like Poles repel each other), எதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்கும் (இழுக்கும்)(Unlike poles attract each other) தன்மைகளைக் கொண்டதாகும்.
எனவே, நாம் ஆய்வு கூடத்தில் (Laboratory) ஆய்வு முடிந்த பின் எதிர் துருவங்களை ஒன்றாக வைப்போம். அப்போது தான் அதன் காந்த ஈர்ப்பு தன்மை அப்படியே இருக்கும். ஒரே துருவங்களை ஒன்றாக வைத்தால் அதன் காந்த ஈர்ப்பு தன்மை சிதைந்துவிடும். மேலும், இயல்பாக இருக்கும் காந்தம் (Natural Magnets) தன்னுடன் இருக்கும் இரும்பு துண்டுகளை சிறு சிறு காந்த துண்டுகளாக மாற்றும் தன்மை கொண்டது.

பூமி எப்படி காந்தம் ஆனது?

சூரியனின் வெப்பத்தால் பூமியின் கிழக்கு பகுதி சூடாகிறது. அப்போது பூமியின் மேற்கு பகுதி குளிர்ந்து இருக்கிறது. இதனால் வலிமையான, நிலையான, வெப்பமான மின்னோட்டம் கிழக்கு திசையில் இருந்து மேற்கு திசைக்கு சூரியனால் உருவாக்கப்படுகிறது. எனவே மின்னோட்டத்தின் திசைக்கு வலப்புறம் இருக்கும் வடக்கு திசை, நேர் மின்னோட்டதையும் (Positive Current), இடதுபுறம் இருக்கும் தெற்கு திசை, எதிர் மின்னோட்டதையும் (Negative Current) பெறுகிறது. இதனால் பூமி ஒரு பெரிய காந்தம் ஆகிறது. அத்துடன் பூமி தன்னைத்தானே சுற்றுவதனாலும் காந்த சக்தியைப் பெறுகின்றது.

மனிதன் எப்படி காந்தப் பொருள் ஆனான்?

மனித உடலில் ஓடும் ரத்தம் வெள்ளை அணு, சிவப்பு அணு மற்றும் பல ரசாயன பொருட்களை கொண்டது. இதில் சிவப்பு அணுவில் இரும்பு சத்து உள்ளது. இந்த சிவப்பு அணுவின் காரணமாக மனிதன் பூமியின் ஈர்ப்பு தன்மைக்கு உள்ளாகிறான்.

எப்படி தூங்க வேண்டும்?
பூமிக்கு இரண்டு துருவங்கள் உண்டு. வட துருவம் நேர் மின்னோட்டம் உடையது. தென் துருவம் எதிர் மின்னோட்டம் உடையது. இந்த மின்னோட்டம் வடக்கில் இருந்து தெற்கிற்கும், தெற்கில் இருந்து வடக்கிற்கும் செல்லும். அதே போல் மனிதனின் தலை நேர் மின்னோட்டம் கொண்டது. கால் எதிர் மின்னோட்டம் கொண்டது.
நாம் தெற்கு பக்கம் தலை வைத்து, வடக்கு பக்கம் கால் நீட்டி படுக்கும் போது, பூமியின் நேர் மின்னோட்டம் மனிதனின் எதிர் மின்னோட்டத்துடன் இருக்கும். காந்தத்தின் இயல்புப்படி மின்னோட்டம் சிராக இருக்கும்.
இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதனை மாற்றி செய்யும் போது, நாம் பகல் முழுவதும் உட்கார்ந்து, நடந்து மற்றும் பல வேலைகள் செய்து சேர்த்து வைத்த சக்தி சீர்குலைந்துவிடும்.
எனவே தெற்கில் தலை வைத்து படுப்பது உத்தமம்.

2. வாசலுக்கு கால் நீட்டக் கூடாதது. ஏன்?

வீட்டு வாசல் புனிதமானது. அதனால்தான் வீட்டு வாசல் முற்றத்தில் கோலம் போடுகிறார்கள். வாசலில் மாவிலை கட்டி புனிதப்படுத்துகிறார்கள்.
வீட்டு வாசல் அசுத்தமாகவும், கவனிப்பாரற்றும் இருக்குமாயின் வீட்டில் மகிழ்ச்சியையும், மங்களத்தையும் தரவல்ல சீதேவி வீட்டினுள் புக மாட்டாள் என்பது சைவத் தமிழர் பண்பாட்டில் வந்த கூற்று.
வீடும், அதன் வாசலும் எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் சீதேவி வீட்டில் குடி கொள்வாள்.
சீதேவி வரும் வாசலை (பாதை) நோக்கி கால் நீட்டினால் சீதேவி தன் வருகையை வீட்டார் விரும்பவில்லை என கருதி சீதேவி திரும்பிச் சென்று விடுவாள் என்பதனால்தான் வீட்டு வாசலுக்கு நேராகக் கால் நீட்டக் கூடாது என்றார்கள். வீட்டிற்னுள் சீதேவி வராவிட்டால் மூதேவி குடி கொள்வாள் என்பது ஐதீகம். மூதேவி வீட்டினுள் குடிகொண்டால் மகிழ்ச்சி குன்றும். துன்பம் பெருகும்.
வீட்டு வாசலில் மாவிலை கட்டுவதால் புனிதமாகின்றது. மாவிலையை தேவர்கள் ஆக ஆவகணம் செய்வது சைவவ மரபு. இங்கே தேவர்கள் தம்மை வரவேற்க காத்திருக்கிறார்கள் என்பதன் அடையாளமாகவே வாசலில் மாவிலை கட்டப்பெறுகின்றது. மாவிலை கட்டும் போது மிகவும் அவதானம் தேவை. மாவிலையை முன்பக்கம் வளைது தொங்க விடுவது தேவர்கள் தலை வணங்கி வரவேற்பதாகவும், மாவிலையை பின்பக்கம் வளைத்து தொங்க விடுவது தேவர்கள் சீதேவியின் வரவை விரும்பவில்லை என கருதுவதாக பொருள் பெறும் என சைவ நூல்கள் விளக்கமளித்துள்ளன.

http://www.swasthiktv.com/index.php/music-culture/item/830-2016-01-05-09-33-11


1 கருத்து: