சனி, 11 மே, 2013

சோதனைக் கூடமா தமிழகம்?

ராதே கிருஷ்ணா 11-05-2013

சோதனைக் கூடமா தமிழகம்? 

Nagarajan Narasimhan shared Dr. G Nammalvar, Organic Agriculturist'sphoto.
சோதனைக் கூடமா தமிழகம்? 
நன்றி : புதியதலைமுறை புலனாய்வு
பதிவு செய்த நாள் -
ஏப்ரல் 23, 2013 at 9:35:17 AM

சர்வாதிகாரி ஹிட்லரின் சிறைக் கொட்டடியில் மருந்து சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்ட யூதர்கள் தாங்கள் எதிரிகளின் கையில் சிக்கியிருக்கிறோம் என்பதை அறிந்திருந்தனர். ஆனால் அப்பாவித் தமிழர்களோ தாங்கள் சோதனை எலிகளாக ஆக்கப்படுகிறோம் என்பதை அறியாமலே அந்தச் சோதனைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

தமிழகம் முழுவதும் பல சோதனைக்கூடங்கள் ரகசியமாக, மக்களை சோதனை எலிகளாக பயன்படுத்தி வருகின்றன.

தமிழகத்தில், மனிதர்களிடம் மருந்து சோதனையில் ஈடுபடும் சோதனைக் கூடங்களின் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்பதை அறிய முயன்றது புதியதலைமுறை. அதற்காக புதிய தலைமுறை செய்திக் குழு அந்நிறுவனங்கள் மேற்கொள்ளும் சோதனைகளை ரகசியமாக கண்காணித்தது.

அந்த ரகசிய புலனாய்வில், கிளினிக்கல் டிரயலுக்கான (Clinical Trail) எந்த நெறிமுறைகளும் அங்கு பின்பற்றப்படுவதில்லை என்ற அதிர்ச்சித் தகவல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சட்டப்படி பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் எதையும் கடைபிடிக்காமல் லோட்டஸ் லேப்பில் கிளினிக்கல் டிரயல்கள் நடந்து வருகின்றன என்பதை உறுதி செய்வதற்காக, ரகசியக் கேமராக்களுடன் புதிய தலைமுறை செய்திக் குழுவினர் லோட்டஸ் லேப் மேற்கொள்ளும் மருந்து சோதனைக்கான பரிசோதனையில் கலந்துகொண்டனர்.

குறி வைக்கப்படும் இளைஞர்கள்: 19 முதல் 24 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் அதிக அளவில் அங்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரைப் பற்றிய விவரங்களை குறிப்பெடுத்த பின் அமர வைக்கப்பட்டனர். இறுதியாக அந்த பரிசோதனைக்கூடத்தின் பிரதிநிதி ஒவ்வொருவரையும் அழைத்து, மேற்கொள்ள உள்ள சோதனை குறித்து தெரிவிக்கத் தொடங்கினார்.

அப்படி அவர் பேசுவது ரகசியமாக கேமராவில் பதிவு செய்யப்பட்டது. சோதனை செய்யவுள்ள மருந்தைப் பற்றியோ, அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியோ ஏதுவும் கூறவில்லை மாறாக எவ்வளவு ரத்தம் எடுக்கப்படும் எனவும் அதற்காக எவ்வளவு பணம் கொடுக்ப்படும் என்பதைத்தான் அந்த பிரதிநிதி தெரிவித்தார்.

கிளினிக்கல் டிரயலில் கடைபிடிக்கவேண்டிய நெறிமுறைகள் பின்பற்றாதது குறித்தும், பணம் கொடுத்து ஏழை எளிய மாணவர்களையும் இளைஞர்களையும் இதில் ஈடுபடுத்துவது குறித்தும் விளக்கம் பெற லோட்டஸ் லேப் நிர்வாகத்தை தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர்கள் புதிய தலைமுறை செய்திக் குழுவைச் சந்திக்க மறுத்துவிட்டனர்.

பின் மின்னஞ்சல் வாயிலாக அவர்களிடம் கேள்விகளை முன்வைக்கப்பட்டது. ஆனால் சுமார் ஒருமாதம் பொறுத்திருந்த பின்னும் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. பின் மீண்டும் ஒரு முறை நேரடியாக அவர்களைச் சந்திக்க முயன்று அந்த நிகழ்வும் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

செய்தியாளரை உள்ளே அனுமதிக்காமல் வெளியிலேயே அமரச் சொல்லிவிட்டு அந்த பரிசோதனைக்கூடத்தின் மேலாளர் கனேஷ்பிரபு மற்றும் மருத்துவர் சுந்தரவடிவேல் ஆகிய இருவரும் வெளியே வந்து பேசினர். அவர்களிடம் முன்வைக்கப்பட்ட எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். அங்கு கிளினிக்கல் டிரயல் சோதனைகள் நடைபெறுகிறதா என்பதைக்கூட தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

அவர்கள் தரப்பு விளக்கங்களை பதிவு செய்ய பல முறை முயற்சி செய்தும் அவர்கள் மறுத்துவிட்டனர். நிர்வாகிகளின் முரண்பாடான பேச்சும், பரிசோதனைக் கூடத்தின் முன் பெயர் பலகை இல்லாததும் அங்கு சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதை உறுதிபடுத்தும்படியாகவே உள்ளது.

பணத்தைக் காட்டி பரிசோதனை: இதுபோலவே தாம்பரம் சேலையூரில் உள்ள மைக்ரோ தெரஃபிக் ரிசர்ச் லேப் என்ற சோதனைக் கூடத்திலும் சட்டவிதிகளுக்கு மாறாக இதுபோன்ற சோதனைகள் நடைபெறுவதாக இந்த நிறுவனம் மேற்கொண்ட சோதனையில் பங்கேற்ற கல்லூரி மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரிலிருந்து பிழைப்பு தேடி சென்னைக்கு வந்து ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்த இளைஞர் ஒருவர் சில மாதங்களுக்கு முன்பு அவசர பணத் தேவை ஏற்படவே தனது நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்டுள்ளார்.

உடலில் உள்ள ரத்தத்தை பரிசோதனைக்காக வழங்கினால் பணம் கிடைக்கும் எனக்கூறி அதற்கான தரகரிடம் அவரை அவரது நண்பர் அறிமுகப்படுத்தியுள்ளார். இடைத்தரகரின் வழிகாட்டுதலின்படி சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்னன் சாலையில் உள்ள லோட்டஸ் லேப் என்ற பரிசோதனைக் கூடத்திற்கு அவர் சென்றுள்ளார்.

அந்த பரிசோதனைக் கூடத்தில் அவரின் உடலில் சோதனை மருந்து செலுத்தப்பட்டு விளைவுகள் சோதிக்கப்பட்டுள்ளது. அதாவது கிளினிக்கல் டிரயல் செய்யப்பட்டுள்ளது. இந்திய மருந்து கட்டுப்பாடு மற்றும் அழகு சாதனச் சட்டப்படி கிளினிக்கல் டிரயல் செய்யும் போது கடை பிடிக்க வேண்டிய நெறிகள் எதுவும் இவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கடைபிடிக்கப்படவில்லை.

இந்த சோதனையின் போது இவருக்கு வழங்கப்பட்ட மருந்தால் ஏற்பட்ட பக்க விளைவுகளின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு பின்னர் குணப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த சோதனையில் இவரோடு சேர்த்து 70க்கும் அதிமானோர் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

கவனிக்குமா அரசு? பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களை குறிவைத்து நடத்தப்படும் இதுபோன்ற சோதானைகளைத் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான், மனிதர்களிடம் மருந்துக்கான சோதனை சட்டங்களை கடுமையாக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

இருந்தபோதும் இதுபோன்ற சம்பவங்கள் மக்கள் மீது அரசு எவ்வகை அக்கறை கெண்டுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன.

வளர்ந்த நாடுகளில் பயன்படுத்தப்படும் மருந்துகளை இந்தியா போன்ற வளரும் நாடுகளில் உள்ள மக்கள் மீது சோதனை செய்து அம்மக்களை பரிசோதனை எலியாக்கி பலமடங்கு லாபமடைகின்றன பன்னாட்டு நிறுவனங்கள். இதனை அரசு உடனடியாக தடுத்து நிறுத்தாவிட்டால் இவரைப்பபோன்ற அப்பாவிகள் பாதிக்கப்படுவது தொடர்கதையாக தான் இருக்கும்.

தமிழகத்தில் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் சட்டவிரோதமான மருந்து சோதனைகள் நடைபெற்று வருகிறது.

சென்னையில் நடைபெற்றுவரும் நெறியற்ற, முறையற்ற கிளினிக்கல் டிரயல் சோதனைகளைப் பற்றி சமூக அக்கறையுடன் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது புதியதலைமுறை.

காணொளி:
http://puthiyathalaimurai.tv/video-gallery?video=2611

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக