சனி, 4 ஆகஸ்ட், 2018

ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தம்

Radhe Krishna 05-08-2018


Radhe Krishna 05-08-2018





Inline image

ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்ய பிரபந்தம்



PREVIOUS







ஆனிரை மேய்க்கநீ போதி, அருமருந் தாவ தறியாய்
கானகம் எல்லாம் திரிந்துஉன் கரிய திருமேனி வாட*
பானையிற் பாலைப் பருகிப் பற்றாதார் எல்லாம் சிரிப்ப*
தேனில் இனிய பிரானே ! செண்பகப் பூச்சூட்ட வாராய்.
(பெரியாழ்வார் திருமொழி - 2.7.1)
பாசுர எண்: 2733
திருவாய்மொழி : 10
உலகம் உண்ட பெருவாயா ! உலப்பில் கீர்த்தி யம்மானே !
நிலவும் சுடர்சூ ழொளிமூர்த்தி ! நெடியாய் அடியே னாருயிரே !*
திலதம் உலகுக் காய்நின்ற திருவேங் கடத்தெம் பெருமானே !*
குலதொல் லடியேன் உனபாதம் கூடு மாறு கூறாயே.
(திருவாய்மொழி - 6.10.1)
அருளியவர்: குலசேகர ஆழ்வார்
திவ்ய தேசம்: திருக்கண்ணபுரம்
பாசுர எண்: 719
பெருமாள் திருமொழி : 8
மன்னுபுகழ்க் கௌசலைதன் மணிவியிறு வாய்த்தவனே !
தென்னிலங்கைக் கோன்முடிகள் சிந்துவித்தாய் ! செம்பொன்சேர்
கன்னிநன்மா மதிள்புடைசூழ் கண்ணபுரத்தென் கருமணியே !
என்னுடைய இன்னமுதே ! இராகவனே ! தாலேலோ.
(பெருமாள் திருமொழி - 8.1)
அருளியவர்: பெரியாழ்வார்
திவ்ய தேசம்: திருக்கூடல் (மதுரை)
*அடியோ மோடும்நின் னோடும் பிரிவின்றி
ஆயிரம் பல்லாண்டு!
வடிவாய் நின்வல மார்பினில் வாழ்கின்ற
மங்கையும் பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறை யும்சுட
ராழியும் பல்லாண்டு !
படைப்போர் புக்கு முழங்கும்அப் பாஞ்ச
சன்னியமும் பல்லாண்டே.
(திருப்பல்லாண்டு - 2)
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண் ணா!உன்
சேவடி செவ்வி திருக் காப்பு .
(திருப்பல்லாண்டு - 1)
அருளியவர்: திருவரங்கத்தமுதனார்
திவ்ய தேசம்: பொது
பூமன்னு மாது பொருந்திய மார்பன்* புகழ்மலிந்த
பாமன்னு மாறன் அடிபணிந் துய்ந்தவன்* பல்கலையோர்
தாம்மன்ன வந்த இராமா நுசன்சர ணாரவிந்தம்
நாம்மன்னி வாழ* நெஞ்சே! சொல்லு வோமவன் நாமங்களே.
(இராமானுச நூற்றந்தாதி - 1)
நடந்தகால்கள் நொந்தவோ? நடுங்கஞால மேனமாய்
இடந்தமெய் குலுங்கவோ ? இலங்குமால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவி ரிக்கரைக் குடந்தையுள்*
கிடந்தவா றெழுந்திருந்து பேசு,வாழி கேசனே !
(திருச்சந்த விருத்தம் - 61)
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில்* -- நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தனா வான்.

(நான்முகன் திருவந்தாதி - 36)
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது
பாசுர எண்: 2137
திருவாய்மொழி : 6
பரிவதி லீசனைப் பாடி
விரிவது மேவ லுறுவீர் !
பிரிவகை யின்றிநன் னீர்தூய்
புரிவது வும்புகை பூவே.

(திருவாய்மொழி 1.6.1)
அருளியவர்: நம்மாழ்வார்
திவ்ய தேசம்: பொது
பாசுர எண்: 2159
திருவாய்மொழி : 8
ஓடும் புள்ளேறி* சூடும் தண்டுழாய்
நீடு நின்றவை* ஆடும் அம்மானே !
(திருவாய்மொழி - 1.8.1)

DIVYAPRABANDHAM

Glory to Sriman Narayana !
www.divyaprabandham.org is a non-commercial website that intends to inculcate bhakthi or devotion towards Sriman Narayana and His devotees. The website imbibes the spirit of glorious sages like Bhagavath Sri Ramanuja, who proclaimed the Narayana mantra to the entire world, and the spirit of recent time saints like Shri Ramakrishna Paramahamsa who suggested bhakthi (or) devotion as the easiest means for this age for realizing God. Please note that though the website promotes Divya Prabandham, the website is not tied to any particular organization (or) caste (or) religious sect. The website is meant for all the devotees of the Lord and has no bias towards any particular caste/religion/sect.
Glory to Azhvars ! Glory to Sri Ramanuja !
Glory to Shri Ramakrishna Paramahamsa !

முகுந்தமாலா - 8(1)


चिन्तयामि हरिमेव सन्ततं मन्दमन्द हसिताननाम्बुजम् |
नन्दगोप-तनयं परात्परं नारदादि-मुनिबृन्द वन्दितम् || 8 ||
(मुकुन्दमाला - 8)


சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம் மந்த மந்த ஹசிதாநநாம்புஜம் |
நந்தகோப தநயம் பராத்பரம் நாரதாதி முனி ப்ருந்த வந்திதம் ||
(முகுந்தமாலா - 8)
[பொருள்]
மனதைக் கவரும் அழகான புன்முறுவல் பூக்கும் தாமரைத் திருமுகத்தானும், நந்தகோபரின் திருமகனும், எல்லோரையும் விட உயர்ந்தவனும், நாரதர் முதலான முனிவர்களால் நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே எப்பொழுதும் சிந்தித்திருக்கிறேன்.
அஹம்நான்
மந்த மந்த ஹசிதபுன்முறுவல் பூக்கும்
ஆநநாம்புஜம்தாமரைத் திருமுகத்தானும்
நந்தகோப தநயம்நந்தகோபரின் திருமகனும்
பராத்பரம்மேன்மை பொருந்திய அனைவரிலும் மேம்பட்டவன் (எல்லோரையும் விட உயர்ந்தவனும்)
நாரதாதி முனிப்ருந்த வந்திதம்நாரதர் முதலான முனிவர்களால் வணங்கப்படுபவனுமான
ஹரிமேவ (ஹரிம் ஏவ)ஸ்ரீ மஹாவிஷ்ணுவையே
ஸந்ததம்எப்பொழுதும்
சிந்தயாமிசிந்தித்திருக்கிறேன்

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள்(2)

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.
எண்ஆழ்வார்அம்சம்அவதார ஸ்தலம்
1பொய்கை ஆழ்வார்பாஞ்சசன்னியம் (சங்கு)பொற்றாமரைக் குளம், திருவெஃகா
2பூதத்தாழ்வார்கௌமோதகம் (கதை)
திருக்கடல்மல்லை,(மகாபலிபுரம்)
3பேயாழ்வார்நாந்தகம்(வாள்)ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர்
4திருமழிசை ஆழ்வார்ஆழி (சக்கரத்தாழ்வார்)திருமழிசை
5நம்மாழ்வார்சேனை முதலியார்திருக்குருகூர்
6மதுரகவி ஆழ்வார்நித்யஸூரி குமுதர்திருக்கோளூர்
7பெரியாழ்வார்கருடாழ்வார்ஸ்ரீ வில்லிபுத்தூர்
8ஆண்டாள்பூமாதேவிஸ்ரீ வில்லிபுத்தூர்
9குலசேகர ஆழ்வார்கௌஸ்துபம்திருவஞ்சிக்களம்
10தொண்டரடிப்பொடி ஆழ்வார்வைஜயந்தி (வனமாலை)திருமண்டங்குடி
11திருப்பாணாழ்வார்ஸ்ரீவத்ஸம்உறையூர்
12திருமங்கை ஆழ்வார்சார்ங்கம் (வில்)திருக்குறையலூர் (திருவாலி)
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல்

ஆழ்வார்கள் அவதார தினங்கள்(3)

ஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.
எண்ஆழ்வார்மாதம்நக்ஷத்திரம்
1பொய்கை ஆழ்வார்ஐப்பசிதிருவோணம்
2பூதத்தாழ்வார்ஐப்பசிஅவிட்டம்
3பேயாழ்வார்ஐப்பசிசதயம்
4திருமழிசை ஆழ்வார்தைமகம்
5நம்மாழ்வார்வைகாசிவிசாகம்
6மதுரகவி ஆழ்வார்சித்திரைசித்திரை
7பெரியாழ்வார்ஆனிசுவாதி
8ஆண்டாள்ஆடிபூரம்
9குலசேகர ஆழ்வார்மாசிபுணர்பூசம்
10தொண்டரடிப்பொடி ஆழ்வார்மார்கழிகேட்டை
11திருப்பாணாழ்வார்கார்த்திகைரோகிணி
12திருமங்கை ஆழ்வார்கார்த்திகைகார்த்திகை

நாலாயிரம் - சில குறிப்புகள்(5)

ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத்தில் உள்ள பல்வேறு பிரபந்தங்களின் பெயர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு. (நன்றி: திருவேங்கடத்தான் திருமன்றம் ட்ரஸ்ட்)
Sl Numவகை/காரணம்பிரபந்தம்
1ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவைதிருப்பல்லாண்டு அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுத்தாம்பு
2அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவைமுதல் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி
3ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றதுநான்முகன் திருவந்தாதி
4பாடியவர்களாற் பெயர் பெற்றவைபெரியாழ்வார் திருமொழி நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி
5அளவால் பெயர் பெற்றவைபெரிய திருமொழி திருவெழுகூற்றிருக்கை
6பாவாற் பெயர் பெற்றவைதிருவாசிரியம் திருச்சந்த விருத்தம் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம்
7செயலாற் பெயர் பெற்றவைதிருப்பாவை திருப்பள்ளியெழுச்சி
8தன்மையால் பெயர் பெற்றவைதிருவிருத்தம் சிறிய திருமடல் பெரிய திருமடல் திருமாலை
9சிறப்பால் பெயர் பெற்றதுதிருவாய்மொழி

கம்ப ராமாயணம் - கடவுள் வாழ்த்து(6)

உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்,
நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் - அவர்
தலைவர்; அன்னவர்க்கே சரண் நாங்களே. 1

சிற்குணத்தர் தெரிவு அரு நல் நிலை
எற்கு உணர்த்த அரிது; எண்ணிய மூன்றினுள்
முற் குணத்தவரே முதலோர்; அவர்
நற்குணக் கடல் ஆடுதல் நன்றுஅரோ. 2
ஆதி, அந்தம், அரி என, யாவையும்
ஓதினார், அலகு இல்லன, உள்ளன,
வேதம் என்பன - மெய்ந் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றிலர்-பற்று இலார். 3

Birth and early life

Thondaradippodi Alvar was born in a small village by name Thirumandangudi Chola region in Prabhava year, Margazhi month, Krishna chaturthi, Tuesday in Kettai (Jyestha) Nakshatram (star). His father ‘Veda Visaradhar’ belonged to "Kudumi Sozhiyap Brahmanar" community also called as "Vipra" people, whose routine work is to praise about Sri Vishnu. On the 12th day after his birth, he was named as "Vipra Narayanar". From an early age, bhakti towards Sri Vishnu was taught to him. He grew up with a well rounded personality. It is said that in spite of being good and beautiful and dedicated to Sri Vishnu bhakti, he had no conceit and treated all the aged persons and persons who are younger to him in the same way and gave proper respect to them.
As per Hindu legend, he was under the influence of a prostitute, whose mother stole all the money of Vipra Narayanan. When he was need of money, Vishnu came in his rescue and showered gold in him.[11] He became a staunch devotee of Ranganatha of Sriranganathaswamy temple. He constructed a big Nandhavanam (flower park) in Srirangam, where various beautiful and fragrance flower plants are grown. He worshipped all the bhaktas of Sri Vishnu and put the podi (Small tiny dust particles), which is found under the feet of them in his head and sang songs in praise of Sri Ranganathar. From then, he was called as "Thondaradipodi Alwar".

Literary works

He composed Tirumaalai comprising 45 verses and Tiruppalli Ezuchi comprising 10 verses. The verses of Tirupalli Ezhuchi are sung for waking up Rangantha, with the verses beginning with "votary bearing the dust of the god's feet". All his verses are in praise of Ranganatha, the presiding deity of the Srirangam Ranganathaswamy temple. Thondaradipodi vehemently opposes the caste system prevalent during his times and mentions that the ultimate way to reach Vishnu is through service to him and his devotees. He believed that Ranganatha is none other than Krishna himself and he has captured his soul.[15] He uses the phrase "Prospering indolents" in his 38th verse meaning the devotees of Vishnu who left their corporal body in earth, but merged their soul to god. His verse starting with "Pachaimamalai pol meni" is the most popular verse and commonly chanted in all Vishnu temples during day-to-day worship and during festivals. The verses of Tirupalli Ezhuchi was first sung in the Srirangam temple and the azhwar gives Ranganatha a wake-up call describing how the inmates of earth come here to watch Ranganatha rise at dawn.



ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமானுஜாய நம:

திருமாலை தனியன்

திருவங்கப்பெருமாளரையர் அருளிச்செய்தது

 மற்றொன்றும் வேண்டா மனமே. மதிளரங்கர்,
கற்றினம் மேய்த்த கழலிணைக்கீழ்,- உற்ற
திருமாலை பாடும்சீர்த் தொண்டரடிப்பொடியெம்
பெருமானை, எப்பொழுதும் பேசு.
 



ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை


872காவலிற் புலனை வைத்துக்
கலிதனைக் கடக்கப் பாய்ந்து,
நாவலிட் டுழிதரு கின்றோம் 
நமன்தமர் தலைகள் மீதே,
மூவுல குண்டு மிழ்ந்த 
முதல்வ.நின் நாமம் கற்ற,
ஆவலிப் புடைமை கண்டாய் 
அரங்கமா நகரு ளானே.
1

873பச்சைமா மலைபோல் மேனி
பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா. அமர ரேறே. 
ஆயர்தம் கொழுந்தே. என்னும்,
இச்சுவை தவிர யான்போய் 
இந்திர லோக மாளும்,
அச்சுவை பெறினும் வேண்டேன் 
அரங்கமா நகரு ளானே.
2

874வேதநூல் பிராயம் நூறு
மனிசர்தாம் புகுவ ரேலும்,
பாதியு முறங்கிப் போகும் 
நின்றதில் பதினை யாண்டு,
பேதைபா லகன தாகும் 
பிணிபசி மூப்புத் துன்பம்,
ஆதலால் பிறவி வேண்டேன் 
அரங்கமா நகரு ளானே.
3

875மொய்த்தவல் வினையுள் நின்று
மூன்றெழுத் துடைய பேரால்,
கத்திர பந்து மன்றே 
பராங்கதி கண்டு கொண்டான்,
இத்தனை யடிய ரானார்க் 
கிரங்கும்நம் மரங்க னாய
பித்தனைப் பெற்று மந்தோ. 
பிறவியுள் பிணங்கு மாறே.
4

876பெண்டிரால் சுகங்க ளுய்ப்பான்
பெரியதோ ரிடும்பை பூண்டு
உண்டிராக் கிடக்கும் போது 
உடலுக்கே கரைந்து நைந்து,
தண்டுழாய் மாலை மார்பன் 
தமர்களாய்ப் பாடி யாடி,
தொண்டுபூண் டமுத முண்ணாத் 
தொழும்பர்சோ றுகக்கு மாறே.
5

877மறம்சுவர் மதிளெ டுத்து
மறுமைக்கே வெறுமை பூண்டு,
புறம்சுவ ரோட்டை மாடம் 
புரளும்போ தறிய மாட்டீர்,
அறம்சுவ ராகி நின்ற 
அரங்கனார்க் காட்செய் யாதே,
புறம்சுவர் கோலஞ் செய்து 
புள்கவ்வக் கிடக்கின் றீரே.
6

878புலையற மாகி நின்ற
புத்தொடு சமண மெல்லாம்,
கலையறக் கற்ற மாந்தர் 
காண்பரோ கேட்ப ரோதாம்,
தலையறுப் புண்டும் சாவேன் 
சத்தியங் காண்மின் ஐயா,
சிலையினா லிலங்கை செற்ற 
தேவனே தேவ னாவான்.
7

879வெறுப்பொடு சமணர் முண்டர்
விதியில்சாக் கியர்கள், நின்பால்
பொறுப்பரி யனகள் பேசில் 
போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் 
கூடுமேல் தலையை ஆங்கே,
அறுப்பதே கருமங் கண்டாய் 
அரங்கமா நகரு ளானே.
8

880மற்றுமோர் தெய்வ முண்டே
மதியிலா மானி டங்காள்,
உற்றபோ தன்றி நீங்கள் 
ஒருவனென் றுணர மாட்டீர்,
அற்றமே லொன்ற றீயீர் 
அவனல்லால் தெய்வ மில்லை,
கற்றினம் மேய்த்த வெந்தை 
கழலிணை பணிமி னீரே.
9

881நாட்டினான் தெய்வ மெங்கும்
நல்லதோ ரருள்தன் னாலே,
காட்டினான் திருவ ரங்கம் 
உய்பவர்க் குய்யும் வண்ணம்,
கேட்டிரே நம்பி மீர்காள். 
கெருடவா கனனும் நிற்க,
சேட்டைதன் மடிய கத்துச் 
செல்வம்பார்த் திருக்கின் றீரே.
10

882ஒருவில்லா லோங்கு முந்நீர்
அனைத்துல கங்க ளுய்ய,
செருவிலே யரக்கர் கோனைச் 
செற்றநம் சேவ கனார்,
மருவிய பெரிய கோயில் 
மதிள்திரு வரங்க மென்னா,
கருவிலே திருவி லாதீர். 
காலத்தைக் கழிக்கின் றீரே.
11

883நமனும்முற் கலனும் பேச
நரகில்நின் றார்கள் கேட்க,
நரகமே சுவர்க்க மாகும் 
நாமங்க ளுடைய நம்பி,
அவனதூ ரரங்க மென்னாது 
அயர்த்துவீழ்ந் தளிய மாந்தர்,
கவலையுள் படுகின் றாரென் 
றதனுக்கே கவல்கின் றேனே.
12

884எறியுநீர் வெறிகொள் வேலை
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெறிகொள்பூந் துளவ மாலை 
விண்ணவர் கோனை யேத்த,
அறிவிலா மனித ரெல்லாம் 
அரங்கமென் றழைப்ப ராகில்,
பொறியில்வாழ் நரக மெல்லாம் 
புல்லெழுந் தொழியு மன்றே?
13

885வண்டின முரலும் சோலை
மயிலினம் ஆலும் சோலை,
கொண்டல்மீ தணவும் சோலை 
குயிலினம் கூவும் சோலை,
அண்டர்கோ னமரும் சோலை 
அணிதிரு வரங்க மென்னா,
மிண்டர்பாய்ந் துண்ணும் சோற்றை 
விலக்கிநாய்க் கிடுமி னீரே.
14

886மெய்யர்க்கே மெய்ய னாகும்
விதியிலா வென்னைப் போல,
பொய்யர்க்கே பொய்ய னாகும் 
புட்கொடி யுடைய கோமான்,
உய்யப்போ முணர்வி னார்கட் 
கொருவனென் றுணர்ந்த பின்னை,
ஐயப்பா டறுத்துத் தோன்றும் 
அழகனூ ரரங்க மன்றே?
15

887சூதனாய்க் கள்வ னாகித்
தூர்த்தரோ டிசைந்த காலம்,
மாதரார் கயற்க ணென்னும் 
வலையுள்பட் டழுந்து வேனை,
போதரே யென்று சொல்லிப் 
புந்தியில் புகுந்து, தன்பால்
ஆதரம் பெருக வைத்த 
அழகனூ ரரங்க மன்றே?
16

888விரும்பிநின் றேத்த மாட்டேன்
விதியிலேன் மதியொன் றில்லை,
இரும்புபோல் வலிய நெஞ்சம் 
இறையிறை யுருகும் வண்ணம்
சுரும்பமர் சோலை சூழ்ந்த 
அரங்கமா கோயில் கொண்ட,
கரும்பினைக் கண்டு கொண்டேன் 
கண்ணிணை களிக்கு மாறே.
17

889இனிதிரைத் திவலை மோத
எறியும்தண் பரவை மீதே,
தனிகிடந் தரசு செய்யும் 
தாமரைக் கண்ண னெம்மான்,
கனியிருந் தனைய செவ்வாய்க் 
கண்ணணைக் கண்ட கண்கள்,
பனியரும் புதிரு மாலோ 
எஞ்செய்கேன் பாவி யேனே.
18

890குடதிசை முடியை வைத்துக்
குணதிசை பாதம் நீட்டி,
வடதிசை பின்பு காட்டித் 
தென்திசை யிலங்கை நோக்கி,
கடல்நிறக் கடவு ளெந்தை 
அரவணைத் துயிலு மாகண்டு,
உடலெனக் குருகு மாலோ 
எஞ்செய்கே னுலகத் தீரே.
19

891பாயுநீ ரரங்கந் தன்னுள்
பாம்பணைப் பள்ளி கொண்ட,
மாயனார் திருநன் மார்பும் 
மரகத வுருவும் தோளும்,
தூய தாமரைக் கண்களும் 
துவரிதழ் பவள வாயும்,
ஆயசீர் முடியும் தேசும் 
அடியரோர்க் ககல லாமே?
20

892பணிவினால் மனம தொன்றிப்
பவளவா யரங்க னார்க்கு,
துணிவினால் வாழ மாட்டாத் 
தொல்லைநெஞ் சே.நீ சொல்லாய்,
அணியனார் செம்பொ னாய 
அருவரை யனைய கோயில்,
மணியனார் கிடந்த வாற்றை 
மனத்தினால் நினைக்க லாமே?
21

893பேசிற்றே பேச லல்லால்
பெருமையொன் றுணர லாகாது,
ஆசற்றார் தங்கட் கல்லால் 
அறியலா வானு மல்லன்,
மாசற்றார் மனத்து ளானை 
வணங்கிநா மிருப்ப தல்லால்,
பேசத்தா னாவ துண்டோ ? 
பேதைநெஞ் சே.நீ சொல்லாய்.
22

894கங்கயிற் புனித மாய
காவிரி நடுவு பாட்டு,
பொங்குநீர் பரந்து பாயும் 
பூம்பொழி லரங்கந் தன்னுள்,
எங்கள்மா லிறைவ னீசன் 
கிடந்ததோர் கிடக்கை கண்டும்,
எங்ஙனம் மறந்து வாழ்கேன் 
ஏழையே னேழை யேனே.
23

895வெள்ளநீர் பரந்து பாயும்
விரிபொழி லரங்கந் தன்னுள்,
கள்ளனார் கிடந்த வாறும் 
கமலநன் முகமும் கண்டு
உள்ளமே. வலியை போலும் 
ஒருவனென் றுணர மாட்டாய்,
கள்ளமே காதல் செய்துன் 
கள்ளத்தே கழிக்கின் றாயே.
24

896குளித்துமூன் றனலை யோம்பும்
குறிகொளந் தணமை தன்னை,
ஒளித்திட்டே னென்க ணில்லை 
நின்கணும் பத்த னல்லேன்,
களிப்பதென் கொண்டு நம்பீ. 
கடல்வண்ணா. கதறு கின்றேன்,
அளித்தெனக் கருள்செய் கண்டாய் 
அரங்கமா நகரு ளானே.
25

897போதெல்லாம் போது கொண்டுன்
பொன்னடி புனைய மாட்டேன்,
தீதிலா மொழிகள் கொண்டுன் 
திருக்குணம் செப்ப மாட்டேன்,
காதலால் நெஞ்ச மன்பு 
கலந்திலே னதுதன் னாலே,
ஏதிலே னரங்கர்க்கு எல்லே. 
எஞ்செய்வான் தோன்றி னேனே.
26

898குரங்குகள் மலையை தூக்கக்
குளித்துத்தாம் புரண்டிட் டோ டி,
தரங்கநீ ரடைக்க லுற்ற 
சலமிலா அணிலம் போலேன்,
மரங்கள்போல் வலிய நெஞ்சம் 
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்,
அரங்கனார்க் காட்செய் யாதே 
அளியத்தே னயர்க்கின் றேனே.
27

899உம்பரா லறிய லாகா
ஒளியுளார் ஆனைக் காகி,
செம்புலா லுண்டு வாழும் 
முதலைமேல் சீறி வந்தார்,
நம்பர மாய துண்டே? 
நாய்களோம் சிறுமை யோரா,
எம்பிராற் காட்செய் யாதே 
எஞ்செய்வான் தோன்றி னேனே.
28

900ஊரிலேன் காணி யில்லை
உறவுமற் றொருவ ரில்லை,
பாரில்நின் பாத மூலம் 
பற்றிலேன் பரம மூர்த்தி,
காரொளி வண்ண னே.(என்
கண்ணனே. கதறு கின்றேன்,
ஆருளர்க் களைக் ணம்மா. 
அரங்கமா நகரு ளானே.
29

901மனத்திலோர் தூய்மை யில்லை
வாயிலோ ரிஞ்சொ லில்லை,
சினத்தினால் செற்றம் நோக்கித் 
தீவிளி விளிவன் வாளா,
புனத்துழாய் மாலை யானே. 
பொன்னிசூழ் திருவ ரங்கா,
எனக்கினிக் கதியென் சொல்லாய் 
என்னையா ளுடைய கோவே.
30

902தவத்துளார் தம்மி லல்லேன்
தனம்படத் தாரி லல்லேன்,
உவர்த்தநீர் போல வென்றன் 
உற்றவர்க் கொன்று மல்லேன்,
துவர்த்தசெவ் வாயி னார்க்கே 
துவக்கறத் துரிச னானேன்,
அவத்தமே பிறவி தந்தாய் 
அரங்கமா நகரு ளானே.
31

903ஆர்த்துவண் டலம்பும் சோலை
அணிதிரு வரங்கந் தன்னுள்,
கார்த்திர ளனைய மேனிக் 
கண்ணனே. உன்னைக் காணும்,
மார்க்கமொ றறிய மாட்டா 
மனிசரில் துரிச னாய,
மூர்க்கனேன் வந்து நின்றேன், 
மூர்க்கனேன் மூர்க்க னேனே.
32

904மெய்யெல்லாம் போக விட்டு
விரிகுழ லாரில் பட்டு,
பொய்யெலாம் பொதிந்து கொண்ட 
போட்கனேன் வந்து நின்றேன்,
ஐயனே. அரங்க னே.உன் 
அருளென்னு மாசை தன்னால்,
பொய்யனேன் வந்து நின்றேன் 
பொய்யனேன் பொய்ய னேனே.
33

905உள்ளத்தே யுறையும் மாலை
உள்ளுவா னுணர்வொன் றில்லா,
கள்ளத்தேன் நானும் தொண்டாய்த் 
தொண்டுக்கே கோலம் பூண்டேன்,
உள்ளுவா ருள்ளிற் றெல்லாம் 
உடனிருந் தறிதி யென்று,
வெள்கிப்போ யென்னுள் ளேநான் 
விலவறச் சிரித்திட் டேனே.
34

906தாவியன் றுலக மெல்லாம்
தலைவிளாக் கொண்ட எந்தாய்,
சேவியே னுன்னை யல்லால் 
சிக்கெனச் செங்கண் மாலே,
ஆவியே.அமுதே என்றன் 
ஆருயி ரனைய எந்தாய்,
பாவியே னுன்னை யல்லால் 
பாவியேன் பாவி யேனே.
35

907மழைக்கன்று வரைமு னேந்தும்
மைந்தனே.மதுர வாறே,
உழைக்கன்றே போல நோக்கம் 
உடையவர் வலையுள் பட்டு,
உழைக்கின்றேற் கென்னை நோக்கா 
தொழிவதே,உன்னை யன்றே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி. 
அரங்கமா நகரு ளானே.
36

908தெளிவிலாக் கலங்கல் நீர்சூழ்
திருவரங்கங் கத்துள் ளோங்கும்,
ஒளியுளார் தாமே யன்றே 
தந்தையும் தாயு மாவார்,
எளியதோ ரருளு மன்றே 
எந்திறத் தெம்பி ரானார்,
அளியன்நம் பையல் என்னார் 
அம்மவோ கொடிய வாறே.
37

909மேம்பொருள் போக விட்டு
மெய்ம்மையை மிகவு ணர்ந்து,
ஆம்பரி சறிந்து கொண்டு 
ஐம்புல னகத்த டக்கி,
காம்புறத் தலைசி ரைத்துன் 
கடைத்தலை யிருந்து,வாழும்
சோம்பரை உகத்தி போலும் 
சூழ்புனல் அரங்கத் தானே.
38

910அடிமையில் குடிமை யில்லா
அயல்சதுப் பேதி மாரில்,
குடிமையில் கடைமை பட்ட 
குக்கரில் பிறப்ப ரேலும்,
முடியினில் துளபம் வைத்தாய். 
மொய்கழற் கன்பு செய்யும்,
அடியரை யுகத்தி போலும் 
அரங்கமா நகரு ளானே.
39

911திருமறு மார்வ.நின்னைச்
சிந்தையுள் திகழ வைத்து,
மருவிய மனத்த ராகில் 
மாநிலத் துயிர்க ளெல்லாம்,
வெருவரக் கொன்று சுட்டிட் 
டீட்டிய வினைய ரேலும்,
அருவினைப் பயன துய்யார் 
அரங்கமா நகரு ளானே.
40

912வானுளா ரறிய லாகா
வானவா. என்ப ராகில்,
தேனுலாந் துளப மாலைச் 
சென்னியாய். என்ப ராகில்,
ஊனமா யினகள் செய்யும் 
ஊனகா ரகர்க ளேலும்,
போனகம் செய்த சேடம் 
தருவரேல் புனித மன்றே?
41

913பழுதிலா வொழுக லாற்றுப்
பலசதுப் பேதி மார்கள்,
இழிகுலத் தவர்க ளேலும் 
எம்மடி யார்க ளாகில்,
தொழுமினீர் கொடுமின் கொள்மின். 
என்றுநின் னோடு மொக்க,
வழிபட வருளி னாய்போன்ம் 
மதிள்திரு வரங்கத் தானே.
42

913அமரவோ ரங்க மாறும்
வேதமோர் நான்கு மோதி,
தமர்களில் தலைவ ராய 
சாதியந் தணர்க ளேலும்,
நுமர்களைப் பழிப்ப ராகில் 
நொடிப்பதோ ரளவில், ஆங்கே
அவர்கள்தாம் புலையர் போலும் 
அரங்கமா நகரு ளானே.
43

915பெண்ணுலாம் சடையி னானும்
பிரமனு முன்னைக் காண்பான்,
எண்ணிலா வூழி யூழி 
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து 
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ 
களைகணாக் கருது மாறே.
44

916வளவெழும் தவள மாட
மதுரைமா நகரந் தன்னுள்,
கவளமால் யானை கொன்ற 
கண்ணனை அரங்க மாலை,
துவளத்தொண் டாய தொல்சீர்த் 
தொண்டர டிப்பொ டிசொல்,
இளையபுன் கவிதை யேலும் 
எம்பிறார் கினிய வாறே.
45


தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருவடிகளே சரணம்.





தேட‌ல் தொட‌ர்பான தகவ‌ல்க‌ள்:
ஸ்ரீ தொண்டரடிப்பொடியாழ்வார் அருளிச்செய்த திருமாலை - Naalaayira Divya Prabandham - நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் - Vaishnava Literature's - வைணவ இலக்கியங்கள் - Religion Literature's - சமய  இலக்கியங்கள் - அரங்கமா, ராகில், தன்னுள், போலும், காட்செய், மெல்லாம், மாட்டேன், நின்றேன், சொல்லாய், செய்யும், திருமாலை, கோயில், ரேலும், ளேலும், கண்டாய், கின்றேன், கொண்டுன், எஞ்செய்வான், உள்ளுவா, கொண்டு, லரங்கந், யல்லால், னுன்னை, எந்தாய், தோன்றி, லல்லேன், கண்ணனே, கொன்று, மூர்க்கனேன், பொய்யனேன், பாயும், மூர்த்தி, தன்னால், ஒளியுளார், வாழும், யில்லை, விட்டு, நெஞ்சம், அரங்கனார்க், மாட்டீர், மாந்தர், ஒருவனென், வண்ணம், பூண்டு, வேண்டேன், கற்றினம், மேய்த்த, வைத்துக், செங்கண், மருவிய, மதிள்திரு, னாகும், யென்று, தாமரைக், கிடந்த, அணிதிரு, ளெல்லாம், மென்னா, கழிக்கின், மாநிலத், துயிர்க, பரந்து


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக