புதன், 30 நவம்பர், 2016

சில தகவல்கள்

ராதே கிருஷ்ணா 01-12-2016


சில தகவல்கள்



நேற்று மதியம் ஒரு விதண்டாவாதி என்னிடம் இராமாயணத்தில் ஒரு விஷயம் புரியவில்லை ஒரு பெண்பிள்ளை போர்களத்தில் சாரதியாக தான் ஓட்டிய தேர் அச்சாணி உடைந்து போச்சு என்றதும் தன் ஆள்காட்டி விரலை அச்சாணியாக வைத்து தேர் ஓட்டினாராம் கொஞ்சமும் நம்பும் படியாக இல்லையே எப்படி சார் என்றார்?
அவருக்கு கூறிய விளக்கம்.
ஐயா மகாபாரத்த்தில் ஒரு முறை அர்சுனன் இந்திரசபை சென்றபோது அங்கு நாட்டியம் ஆடியபெண்களை கண்டு தானும் நாட்டியம் கற்க எத்தனிக்க அதில் ஒரு நாள் ரம்பை அவனுக்கு நாட்டியம் கற்று கொடுத்தார் கொடுத்தபின் தன்னை திருமணம் செயது கொள்ள வேண்ட அர்சுனன் அவளிடம் எனக்கு நாட்டியம் கற்றுக்கொடுத்த குரு தாய்க்கு சமம் என்று மணம் செய்ய மறுக்க ரம்பை தன்னை மணம் செய்ய மறுத்த அர்சுனனை அலியாகும் படி சாபம் அளிக்க பயந்து போன இந்திரன் அர்சுன்னிடம் அர்சுனா ரம்பையின் சாபம் உனக்கு உடனே பலிக்காது ஆனால் ஒருவருடம் நீ அலியாகதான் இருக்க வேண்டியதிருக்கும் நீ அதை
எப்போது விரும்புகிறாயோ அப்போது எடுத்துக்கொள்ளலாம் என கூற அவர் அதை பாண்டவர்களின் அக்ஞாதவாசத்தில் பயன்படுத்தி கொண்டார் என்பது தெரியுமா என்றேன் படித்திருக்கிறேன் என்றார்
அது போல இராமாயணம் என்பது கடல் அதை மேலோட்டமாக படித்தால் இப்படி சந்தேகம் வரும்.
இராமாயணத்தில் எல்லா நிகழ்வுகளும் எல்லா பாத்திரங்களுக்கும் மிகுந்த தொடர்பும் உண்டு அவைகள் உண்மைகளை மட்டுமே உரைப்பவை,
இராமாயண மகாபாரத காலத்தில் வாழ்ந்த தபஸ்விகள், மகான்கள் ஏதாவது சாபம் கொடுத்தாலும், அது நன்மையிலேயே முடியும்.
நீர் சொலவது
தேவாசுர யுத்தத்தின் போது, தசரதர் ரதத்தில் இருந்த கடையாணி முறிந்து விட அந்த ரதத்தை சாரதியாக கைகேயிதான் ஓட்டி வந்தாள் அவள் உடனே, கடையாணிக்கு பதிலாக, தன் ஆள்காட்டி விரலையே, கடையாணியாக உபயோகித்து, ரதத்தை ஓட்டினாள்
அதை கண்டு சந்தோஷமடைந்து கைகேயிக்கு இரண்டு வரங்கள் தருவதாகச் சொன்னார் தசரதர்.
அந்த இரண்டு வரங்களையும் உடனே வாங்கிக் கொள்ளாமல், பிறகு தேவையான போது வாங்கிக் கொள்வதாக சொல்லி, அதை, “ரிசர்வில்’ வைத்து, ராம பட்டாபிஷேகத்தின் போது பெற்றுக் கொண்டாள் கைகேயி; இது, ராமாயணக் கதை. இதை தானே என்றதும் ஆம் என்றார்
அதாவது ரதத்தின் கடையாணிக்கு பதிலாக ஒரு பெண்ணின் ஆள்காட்டி விரலை கடையாணியாக பயன்படுத்த முடியுமா? என்றால், முடியும்!. ஏனெனில், அந்த விரல் மட்டும் இரும்பு விரலாக இருந்தது.
எதனால் என்றால்
ஒரு சமயம் மாமன்னர் தசரதரின் அரண்மனையில் துர்வாசர் தங்கியிருந்த போது, ஒரு சம்பவம் உமக்கு துர்வாசருக்கு அடிக்கடி கோபம் வரும் சாபம் கொடுத்து விடுவார் என்பதை படித்து தெரிந்திருப்பீர் துர்வாசர் இப்படி கோபம் கொண்டு சாபம் கொடுப்பது வழக்கம் ஏனென்றால் துர்வாசரிடம் ஒரு வரம் இருந்தது அவர் யாருக்காவது சாபமிட்டால் அவரது தவம் கூடுதலாகுமாம். அதனால், அவர் எப்போதுமே யாரையாவது சாபமிடுவதே வழக்கம்.
தசரதருடைய அரண்மனையில் துர்வாசர் தங்கிவிட்டுப் புறப்பட்டு போகும் போது, பக்கத்திலுள்ள தோழிகளிடம், “அதோ போகிறாரே, அவர்தான் துர்வாசர்…’ என்று, தன் ஆள்காட்டி விரலால் காண்பித்தாள் கைகேயி. இதை பார்த்த துர்வாசர் தன்னை கைகேகி அவமான படுத்தியதாக நிணைத்து என்னை அவமானபடுத்த நீண்ட “அந்த ஆள் காட்டி விரல் இரும்பாகப் போகட்டும்…’ என்று சாபம் கொடுத்தார். கைகேயின் ஆள்காட்டி விரல் மட்டும் இரும்பாக மாறியது. ஆனால், அதுவே நன்மையாக முடிந்தது.
தசரதரின் ரதத்திலிருந்த கடையாணி ஒடிந்த போது, தன் இரும்பாலான ஆள்காட்டி விரலையே கடையாணியாக பயன்படுத்தி ரதத்தை ஓட்டினாள் கைகேயி. சந்தோஷப்பட்டு, இரண்டு வரங்களை தருவதாக சொன்னார் தசரதன்.
அதை உடனே பெற்றுக் கொள்ளாமல், ராம பட்டாபிஷேக ஏற்பாடுகள் நடந்த போது, அந்த வரங்களை கேட்டு, “ராமன், 14 வருஷம் காட்டுக்குப் போக வேண்டும், பரதன், பட்டாபிஷேகம் செய்து நாட்டை ஆள வேண்டும்…’ என்று கேட்டாள் கைகேயி.
துர்வாசர் கொடுத்த சாபம், கைகேயின் விரல் இரும்பாகட்டும் என்பது. அந்த சாபம், தசரதர் வந்த ரதத்தின் கடையாணிக்கு பதிலாக, கைகேயினுடைய இரும்பு விரல் பயன்பட்டது.
இராமாயணத்தை ஆழ்ந்து படித்தால் இந்த உண்மை புரிந்திருக்கும் என்றேன் அவர் புரிந்தமாதிரியும் அதே நேரம் புரியாதமாதிரியும் சென்றார்.
ஜெய் ஶ்ரீராம்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக