திங்கள், 7 ஜனவரி, 2013

விவேகானந்தர் கருத்துக்கள்

ராதே கிருஷ்ணா 07-01-2013

விவேகானந்தர் கருத்துக்கள்

கருத்துக்கள்

வெற்றி வாழ்வின் ரகசியம்!
* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.* உண்மை எதற்கும் தலை வணங்கத் [...]
செயலில் அன்பிருக்கட்டும்!
* தாயும், தந்தையும் எப்போது மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்போது கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், பெற்றோர் பெருமை கொள்ளும் [...]
எல்லாரிடமும் அன்பு கொள்க!
* முதலில் ஒன்றைக் கேளுங்கள். பிறகு புரிந்து கொள்ளுங்கள். பின், எல்லா சஞ்சலங்களையும் விட்டு, புறஆதிக்கம் எதுவும் அணுகாதபடி மனதை [...]
நல்லகாலம் வருகிறது!
* சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.* ஒரு செயலின் பயனில் கருத்துச் [...]
இளமையிலேயே ஆன்மிகம்!
* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.* நாம் [...]
நீயா... இல்லை நானா?
* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். [...]
மின்னல் வேக மாற்றம்!
* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் [...]
தெய்வநிலைக்கு உயருங்கள்!
* மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு [...]
மனிதனும் மகான் ஆகலாம்!
* பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.* சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் [...]
லட்சியத்தை மாற்றாதீர்!
* இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் [...]




வெற்றி வாழ்வின் ரகசியம்!டிசம்பர் 27,2012
* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.
* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும்.
* எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.
* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.
* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான்.
* கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.
* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம்.
- விவேகானந்தர்
Bookmark and Share




மேலும் கருத்துக்கள்















செயலில் அன்பிருக்கட்டும்!டிசம்பர் 27,2012
* தாயும், தந்தையும் எப்போது மகிழ்ச்சி அடைகிறார்களோ, அப்போது கடவுளும் மகிழ்ச்சி அடைகிறார். அதனால், பெற்றோர் பெருமை கொள்ளும் விதத்தில் வாழுங்கள்.
* அறிவோடு ஒன்றிவிடும்போது தான் பிழைகளைப் போக்க முடியும். இந்த முடிவை அறிவியலும் ஏற்றுக் கொள்கிறது.
* தன்னைத் தானே வெறுக்கத் தொடங்கும் மனிதனுக்கு, அழிவுக்கான வாசல்கள் திறக்கப்பட்டு விட்டதாகப் பொருள்.
* அன்பின் மூலமாகச் செய்யப்படும் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை கொண்டு வந்தே தீரும்.
* தன்னிடத்தில் ஒன்றை இழுத்துக் கொள்ளும் சக்தியைப்போல, அதை விலக்கும் சக்தியும் மனதிற்கு உண்டு. அதனால் வேண்டியதை ஏற்கவும், வேண்டாதவற்றை தள்ளவும் செய்யுங்கள்.
* கருணையே இனிமையான சொர்க்கம். மக்கள் அனைவரும் கருணை நிறைந்தவர்களாக மாறினால் பூமியே சொர்க்கமாகி விடும்.
* ஒன்றைப் பெற்றுக் கொள்பவனுக்குப் பெருமைஇல்லை. கொடுப்பவன் தான் பேறு பெற்றவனாகிறான்.
விவேகானந்தர்
Bookmark and Share




எல்லாரிடமும் அன்பு கொள்க!டிசம்பர் 27,2012
* முதலில் ஒன்றைக் கேளுங்கள். பிறகு புரிந்து கொள்ளுங்கள். பின், எல்லா சஞ்சலங்களையும் விட்டு, புறஆதிக்கம் எதுவும் அணுகாதபடி மனதை மூடி வையுங்கள். அப்போது உள்ளத்திற்குள் உண்மை என்னும் பிரகாசம் ஒளிர்வதை உணர்வீர்கள்.
* பயமும், நிறைவேறாத ஆசைகளுமே எல்லாத் துன்பங்களுக்கும் காரணம். தனக்கு மரணமில்லை என்பதை அறியும்போது தான் இந்த பய உணர்வு நம்மை விட்டு அகலும்.
* மனிதன் கைம்மாறு கிடைக்கும் இடத்தில் மட்டுமே அன்பு காட்டுகிறான். எல்லாரிடமும் அன்பு காட்டுவதே முறையானது.
* ஆன்மிக நெறியில் பக்குவப்பட்ட மனிதர்கள் கைம்மாறு கருதாமல் அன்பை வெளிப்படுத்துவர். அவர்கள் கடவுளின் அருளைப் பெறும் தகுதியைப் பெறுகிறார்கள்.
* பற்றற்ற மனப்பான்மையை நீங்கள் பெற்றுவிட்டால் உங்களை நன்மையோ, தீமையோ எதுவும் நெருங்க முடியாது. சுயநலமே நன்மை, தீமை என்ற வேறுபாட்டை உருவாக்குகிறது.
- விவேகானந்தர்
Bookmark and Share





நல்லகாலம் வருகிறது!டிசம்பர் 27,2012
* சூழ்நிலைக்குத் தக்கபடி வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றிக்கான ரகசியம்.
* ஒரு செயலின் பயனில் கருத்துச் செலுத்தும் அதே அளவிற்கு அதைச் செய்யும் முறையிலும் கவனம் செலுத்துவது அவசியம்.
* தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட போராடி மாள்வதே மேலானது. நீ ஒருபோதும் அழக்கூடாது.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதற்காக உன்னை அர்ப்பணித்துக் கொள். பொறுமையுடன் விடாமுயற்சி செய்தால் உனக்கு ஆதரவான நல்ல காலம் நிச்சயம் வரும்.
* சுயநலத்துடன் வாழாமல், "நான் அல்லேன் நீயே' என்னும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். எல்லா நன்மைகளுக்கும், ஒழுக்கங்களுக்கும் இதுவே அடிப்படை பண்பு.
* உன்னால் எல்லாருக்கும் சேவை செய்ய முடியும். அதுவும் கடவுளின் குழந்தைகளுக்குத் தொண்டு செய்யும் பாக்கியம் உனக்கு கிடைத்திருக்கிறது.
- விவேகானந்தர்.
Bookmark and Share





இளமையிலேயே ஆன்மிகம்!ஜனவரி 02,2013
* நாம் நல்ல, தீய எண்ணங்களின் உரிமையாளர்களாக இருக்கிறோம். நல்ல எண்ணங்களின் கருவிகளாக செயல்பட்டால் தூய்மை பெறுவோம்.
* நாம் இருக்கும் நிலைமைக்கு நாமே பொறுப்பாளிகள். நாம் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறோமோ, அதை நம்மாலேயே உருவாக்கிக் கொள்ள முடியும்.
* புது மலர்களே இறைவனின் பாதங்களில் இடுவதற்கு தகுதி பெற்றவை. அதுபோல வலிமை, வளமை, அறிவுக்கூர்மை கொண்ட இளமைக்காலத்திலேயே இறைவனை அறிய முயலுங்கள்.
* ஒழுக்கம், மனவலிமை, விரிந்த அறிவு, தன்னம்பிக்கை இவற்றையெல்லாம் குழந்தைகளுக்கு வழங்குவதாக கல்வி அமைய வேண்டும்.
* மேலை நாட்டு அறிவியல் நுட்பத்தோடு வேதாந்த கருத்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் முழுமை பெற முடியும்.
* லட்சியமில்லாதவன் இருட்டான பாதையில் தடுமாறி சென்று கொண்டிருப்பான். எனவே, குறிக்கோளை ஏற்று வாழ்வு நடத்துங்கள்.
- விவேகானந்தர்
Bookmark and Share






நீயா... இல்லை நானா?ஜனவரி 02,2013
* ஒரு கருத்தை எடுத்துக் கொண்டு அதை ஒட்டியே வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றிய சிந்தனையில் மூழ்கி கனவு காணுங்கள். உடலின் ஒவ்வொரு அணுவிலும் அந்த கருத்தே நிறைந்திருக்கட்டும். வெற்றிக்கு இது தான் வழி.
* உலகிற்கு நன்மை செய்தால், நமக்கு நாமே தான் நன்மை செய்து கொள்கிறோம்.
* கடவுள் ஒவ்வொரு உயிரிலும் குடி கொண்டிருக்கிறார் என்ற உண்மையை அனைவரும் உணர வேண்டும்.
* "நான் அல்ல.. நீயே' என்ற மனப்பான்மையே, எல்லா நன்மைக்கும் அடிப்படை. சுயநலத்தை உதறி விட்டு பொதுநலனுக்காக வாழ்வை அர்ப்பணியுங்கள்.
* தேவையற்ற விஷயங்களிலும், வீண்வதந்திகளிலும் மனதை அலட்டிக் கொள்வதால் நம் ஆற்றல் சிதறி வீணாகிறது. எப்போதும் ஆக்கப்பூர்வமான பணிகளில் மட்டும் ஈடுபடுங்கள்.
* ஏழைகளிடம், சிவனைக் காண்பவனே உண்மையில் சிவனை வழிபடுகிறான். மற்றவர்கள் வழிபாட்டின் ஆரம்ப நிலையிலேயே இருக்கிறார்கள்.
- விவேகானந்தர்
Bookmark and Share






மின்னல் வேக மாற்றம்!ஜனவரி 02,2013
* ஆன்மிக வாழ்வில் பேரின்பம் கிடைக்காமல் போனால் அதற்காகப் புலனின்ப வாழ்வில் திருப்தி கொள்ளக்கூடாது. இது அமுதம் கிடைக்காவிட்டால்சாக்கடைநீரை நாடிச் செல்வதற்கு சமம்.
* மாபெரும் வீரனே! உறக்கம் உனக்குப் பொருந்தாது. துணிவுடன் எழுந்து நில்.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைப்பது உனக்கு பொருந்தாது. "நான் ஒரு வெற்றி வீரன்' என்று எப்போதும் உனக்குள்ளேயே சொல்லிக்கொள். மின்னல் வேகத்தில் உனக்குள் புதிய மாற்றம் ஏற்படுவதைக் காண்பாய்.
* கீழ்த்தரமான தந்திர முறைகளால் இந்த உலகத்தில் மகத்தான காரியம் எதையும் சாதித்துவிட முடியாது.
* அதிர்ஷ்டதேவதை உனக்கு அருள்புரியட்டும் அல்லது புரியாமல் போகட்டும். ஆனால் நீ, உண்மை என்னும் பாதையில் இருந்து அணுவளவும் பிறழ்ந்து போகாமல் இருப்பதில் கவனமாக இரு.
* வாழ்வில் எந்த அளவுக்கு உயர நினைக்கிறாயோ, அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளையும் நீ கடந்தாக வேண்டும்.
- விவேகானந்தர்
Bookmark and Share





தெய்வநிலைக்கு உயருங்கள்!ஜனவரி 02,2013
1
* மற்றவர்களுக்கு நன்மை ஏற்படுமானால் நரகத்திற்குக் கூட செல்வதற்குத் தயாராய் இருங்கள். மரணம் வருவது உறுதியாக இருக்கும்போது ஒரு நல்ல காரியத்திற்காக உயிரை விடுவது மேல்.
* உலகில் நல்லவர்கள் பெரிய தியாகங்களைச் செய்கிறார்கள். அதன் விளைவாக வரும் நன்மைகளை மனிதகுலம் முழுவதும் அனுபவிக்கிறது.
* உலகவாழ்வில் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ய வேண்டாம். வெற்றியோ தோல்வியோ போராடுங்கள்.
* பாமரன் பண்புள்ளவனாகவும், பண்புள்ளவன் தெய்வமாகவும் உயரவேண்டும். இதுவே ஆன்மிகத்தின் பயன்.
* தெய்வீகத்தன்மை இல்லாமல் பெறும் மிதமிஞ்சிய அறிவும், ஆற்றலும் மனிதர்களை மிருகங்களாக்கி கீழ்நிலைக்குத் தள்ளிவிடும்.
* சுயநலம், சுயநலமின்மை இந்த இரண்டையும் தவிர கடவுளுக்கும் சாத்தானுக்கும் வேறுஎந்தவிதமான வேறுபாடும் கிடையாது.
- விவேகானந்தர்
Bookmark and Share





மனிதனும் மகான் ஆகலாம்!ஜனவரி 02,2013
* பிறருக்காகச் செய்கின்ற சேவையால், நம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ள முடியும்.
* சுயநலத்தால் சுகம் கிடைக்கும் என்று மனிதன் முட்டாள்தனமாக நினைக்கிறான். உண்மையில், தன்னலத்தை ஒழிப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது.
* நம்மை நாமே பெரிதாக எண்ணிக் கொண்டு அகந்தை கொள்வது கூடாது. சாதாரணமானவர்களாக நம்மை கருதும் போது தான், நம்மிடம் கருணையும், பணிவும், நல்ல சிந்தனையும் வெளிப்படத் தொடங்கும்.
* விவசாயி மடையைத் திறந்து விட்டால் புவியீர்ப்பு விசையால் நீர் தானாக பள்ளத்தைநோக்கிப் பாய்வது போல எல்லா ஆற்றல்களும் மனிதனுக்கு இயல்பிலேயே இருக்கின்றன. ஆன்மிகத்தின் உதவியால் தடைகளைப் போக்கி நாம் நிறை நிலையை அடைய வேண்டும்.
* ஆன்மிகத்தின் உதவியால் தீயவர்கள் கூட மகானாக முடியும். வாழ்வில் தடைகளைப் போக்கினால் போதும். நம் இயல்பான குணமாகிய நிறை நிலையின் வாசல்கள் தானாகவே திறந்து விடும்.
- விவேகானந்தர்
Bookmark and Share








லட்சியத்தை மாற்றாதீர்!ஜனவரி 02,2013
* இந்த உலகம் இறைவனுக்குச் சொந்தமானது. உலகப்பொருட்களில் எல்லாம் அவரே இருக்கிறார். இந்த கோணத்தில் பார்க்கத் தொடங்கிவிட்டால் நம் மனம் உயர்வு பெறும்.
* ஒரு லட்சியத்தை ஏற்றுக் கொண்டபின் அதைவிடப் புதுமையான ஒன்றைக் கண்டதும் பழையதைப் புறக்கணிப்பது அல்லது விட்டுவிடுவது உங்கள் ஆற்றலை சிதறடித்து விடும்.
* இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்பவர்கள் ஒருபோதும் வெற்றி பெற முடியாது. கணநேரம் இன்பமாக ஏதோ கிடைக்கலாம். ஆனால், அத்துடன் எல்லாம் முடிந்து விடும்.
* ஆன்மிகத்தைப் புறக்கணித்து விட்டு, மேலைநாட்டு நாகரிகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினால், மூன்றே தலைமுறைகளில் நம் பண்பாடு அழிந்து விடும்.
* ஒரு லட்சியத்தை எடுத்துக் கொண்டு அதைப் பற்றியே கனவு காணுங்கள். அதைச் சுற்றியே உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு அடியையும் எடுத்து வையுங்கள்.
- விவேகானந்தர்
Bookmark and Share









































































































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக