திங்கள், 14 செப்டம்பர், 2015

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன்

ராதே கிருஷ்ணா 14-09-2015





புரந்தரதாசருக்கு 24x7 இறைவனின் சிந்தனையில், அவன் புகழைப் பாடி, அவன் சரிதங்களை பரப்புவதிலேயே கழிந்தது.
நினைவில் இருக்கும்போது கோயில்களில் புரந்தரவிட்டலனை தரிசிப்பார். தூங்கும்போது கனவிலும் அவனே வருவான்.
கனவிலுமா? ஆமாம். அதுவும் எப்படி? நெற்றியில் நாமம்; காது, கை, கால்களில் நகைகள், கலகல என்னும் கொலுசு சத்தம் -
இவற்றுடன் அந்த திம்மய்யன் வந்து காட்சியளித்தானாம்.
வாயுதேவர், பிரம்மாதி தேவர்கள் அனைவரும் அந்த பரம்பொருளுக்கு சேவை செய்ய வரிசையாக நிற்கும் காட்சியும் தெரிந்ததாம்.
இதை அருமையாக வர்ணிக்கும் இந்த புகழ்பெற்ற பாடலை கேட்டு ரசியுங்கள்.
ஏனு ஹேளலி தங்கி திம்மய்யனா பாதவனு கண்டே
கனசு கண்டேனே மனதல்லி களவளகொந்தேனே (ஏனு)
என்ன சொல்வேன் தங்கையே, திம்மய்யனின் பாதங்களை கண்டேன்
கனவு கண்டேனே மனதினில் கலவரம் கொண்டேனே (ஏனு)
ஹொன்ன கடகவனிட்டு திம்மய்ய தா கொள்வ நாமவனிட்டு
அந்துகே பலுக எனுதா என்ன முந்தே பந்து நிந்திதனல்லே (ஏனு)
தங்க வளையல் அணிந்து திம்மய்யன் அவன் பளிச்சிடும் நாமத்துடன்
காலில் கொலுசு அணிந்து என் முன்னே வந்து நின்றானே (ஏனு)
மகர குண்டலவனிட்டு திம்மய்ய தா கஸ்தூரி திலகவனிட்டு
கெஜ்ஜே கலுக எனுதா ஸ்வாமியு பந்து நிந்திதனல்லே (ஏனு)
காதில் தோடுடனே திம்மய்யன் அவன் நெற்றியில் திலகமிட்டு
கொலுசு சத்தத்துடனே ஸ்வாமி வந்து நின்றானே (ஏனு)
முத்தின பல்லக்கி யதிகளு ஹொத்து நிந்திதனல்லே
சத்ர சாமரதிந்தா ரங்கய்யன உத்சவ மூருத்திய (ஏனு)
முத்தால் வேய்ந்த பல்லக்கை யதிகள் (மத்வ ஆச்சார்யர்கள்) தூக்கி நின்றனரே
குடை விசிறியுடனே ரங்கய்யனின் உத்சவ மூர்த்தியை (தூக்கி நின்றனரே) (ஏனு)
தாமர கமலதல்லி கிருஷ்ணய்ய தா பந்து நிந்திதனல்லே
வாயு பொம்மாதிகளு ரங்கய்யன சேவேய மாடுவரே (ஏனு)
தாமரை மலரினிலே கிருஷ்ணய்யன் அவன் வந்து நின்றானே
வாயு, பிரம்மாதி தேவர்கள் ரங்கய்யனின் சேவையை செய்கின்றனரே (ஏனு)
நவரத்ன கெட்டிசித ஸ்வாமி என்ன ஹ்ருதய மண்டபதல்லி
சர்வாபரணதிந்த புரந்தர விட்டலன கூடிதனே (ஏனு)
நவரத்தினங்களால் கட்டப்பட்ட என் இதயக்கோவிலில்
நகைகளால் அலங்காரம் செய்யப்பட்ட புரந்தரவிட்டலன் வந்து நின்றானே (ஏனு)

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் 2
அதனால்தான் அவருக்கு 'சர்வாசு நிலையஹ’ எனும் திருநாமம் உண்டானது.
'இந்த உலக உயிர்கள் அனைத்துக்கும் இருப்பிடமாகத் திகழ்பவன்’ என்று இதற்குப் பொருள்.
உலகத்து மனிதர்கள் அனைவருக்கும் புகலிடமாக, அடைக்கலம் தருபவனாக இருப்பவன்தானே, மிகப் பெரியவன்! அப்படியெனில், பகவான் சொன்னதில் தவறென்ன இருக்கிறது?
இப்படித்தான்... கீதையின் 16-வது அத்தியாயத்தில், அசுரர்களையும் தேவர்களையும் பிரித்துப் பகுத்து எடுத்துரைக்கிறார் அர்ஜுனனிடம்!
இதையெல்லாம் கேட்ட அர்ஜுனனுக்கு சின்னதாக ஒரு பயம், பதற்றம், குழப்பம்! 'அசுரர்களையும் தேவர்களையும் பற்றிச் சொல்கிறானே கண்ணன்..
. நம்மை இவன் அசுரனாக நினைக்கிறானா, அல்லது தேவர்களில் ஒருவனாக மதிக்கிறானா? என்று தவித்தான்; மருகினான்.
கண்ணனிடம் மெள்ள, 'அசுரர்கள் என்பவர் யார்? தேவர்கள் என்பவர் யார்? ஒற்றை வரியில் தெளிவாகச் சொல்லேன், கண்ணா! என்று கேட்டான்.
உடனே கண்ணபிரான், 'சாஸ்திரங்களையும் அதன் விதிமுறைகளையும் யாரெல்லாம் அத்துமீறுகிறார்களோ அவர்கள் அசுரர்கள்.
அந்த சாஸ்திரத்தையும் அதன் விதிமுறைகளையும் போற்றி, அதன்படி யாரெல்லாம் வாழ்கிறார்களோ, அவர்கள் தேவர்கள்! என்றார்.
உடனே அர்ஜுனன், 'சரி கண்ணா, நான் யார்? என்று கேட்டான். 'இதிலென்ன சந்தேகம்? உன்னிடம் எத்தனை முறை 'நான் பெரியவன்..
. நான் பெரியவன்... என்று என்னைச் சொல்லிக்கொண்டே இருந்தேன்.
அதையெல்லாம் பொருட்படுத்தாமல், என் நல்லுரைகளைக் கேட்டுக்கொண்டிருந்த நீ, தேவர்களில் ஒருவன் தான்!
என்று சொல்லிப் பூரித்தார் கண்ணபிரான்.
இதில் வியந்தும் நெகிழ்ந்தும் போனான் அர்ஜுனன்.

சங்கீத மும்மூர்த்திகளின் ஒருவரும் சிறந்த ஸ்ரீவித்யா உபசகருமான திரு. முத்துஸ்வாமி தீக்ஷ்தரும் லக்ஷ்மியின் மீது லலிதா ராகத்தில் "ஹிரண்மயிம்" என்ற கீர்த்தனத்தை இயற்றியுள்ளார்.
லலிதா ராகமும் வசந்தா ராகமும் இரட்டைபிறவி சகோதரிகள் ஒரே ஒரு ஸ்வரம்தான் ப என்கிற பஞ்சமம்தான் கிடையாது லலிதாவில்.
ஒருசமயம் தீக்ஷ்தரை அவ்ர் மனைவி தனக்கு செல்வம் வேண்டும் என்பதாற்காக தஞ்சை மன்னரைப் புகழ்ந்து அவர் மீது கீர்த்தனை இயற்றிப் பாடி
செல்வத்தைக் கேளுங்கள் என்று கேட்டாளாம். அதற்கு அவர்
மறுத்து மனிதரைப் பாடமாட்டேன் என்று கூறி லக்ஷ்மியின் மீது இந்தக் கீர்த்தனையை பாடினார்
ராகம்: லலிதா தாளம்: ரூபகம்
பல்லவி
ஹிரண்மயிம் லக்ஷ்மீம் சதா பஜாமி
ஹீன மானவ ஆஸ்ரியம் த்வஜாமி-----(ஹிரண்மயீம்)
அனுபல்லவி
கிரதர சம்பிரதாயம் க்ஷிராம்புதி தனயாம்
ஹரிவத்ஸ்தலாலயாம் ஹரிணீம் கரனகிஸலயாம்
கரகமலத்ருத குவலயாம் மரகத மணிமய நிலயாம்------(ஹிரண்மயீம்)
சரணம்
ஸ்வேத தீபவாஸிணீம் ஸ்ரீகமலாம்பிகாம் பராம்
பூதபவ்ய விலாசணீம் பூசுர பூஜிதாம் வராம்
மாதராம் அப்ஜமாலினீம்
மாணிக்ய ஆபரணாதராம்
சங்கீத வாத்ய விநோதினீம்
கிரிஜாம் தாம் இந்திராம்
சீதகிரண நிபவதனாம்
ஸ்ருதசிந்தாமணி சதனாம் பீடவஸனாம்
குருகுஹ மாதுலகாந்தாம் லலிதாம்---- (ஹிரண்மயீம்)
ஹிரண்யவர்ணாம் ஹரிணீம் என்று தொடங்கும் ஸ்ரீசூக்தத்திலிருந்து முதல் அடியை எடுத்து தொடங்குகிறார்.
பல்லவி
தங்கமயமான வண்ணத்துடன் ஜொலிக்கும் லக்ஷ்மியைத்தான் நான் பாடுவேன் மற்றபடி ஒருபொழுதும் நான் மனிதர்களை பாடமாட்டேன்
அனுபல்லவி
அழிவில்லாத செல்வத்தைத் தருபவளும்
பாற்கடல் பெற்று எடுத்தவளும்
மஹாவிஷ்ணுவின் மார்பில் எப்பொழுதும்
கோவில் கொண்டு இருப்பவளும்
இளம் தளிரைப் போன்ற தனது செம்பஞ்சு சரணங்களை உடையவளும்
தனது கையினில் எப்பொழுதும் இருக்கும் தாமரையினால் அந்த பூவுக்கு அழகு சேர்ப்பவளும் இடுப்பில் மரகத மணி பச்சை ஒட்யாணத்தால்
அலங்கரித்துக்கொண்டுஇருப்பவளுமானலக்ஷ்மியை மட்டும் தான்
நான் எப்பொழுதும் பாடுவேன்
சரணம்
வெண்மை ஓளிவிடும் தீபத்தில் வசிப்பவளும்
பூலோகத்தில் ஸ்ரீகமலாம்பிகையாக உருவெடுத்தவளும்
சகலபூதங்களும் அமைதியாக அவளிடத்தில் உறைபவளாகவும்
தேவர்களாலும் மனிதர்களாலும் பூஜிக்கப் பெற்று வரம் தருபவளாகவும்
உலகுக்கே தாயாக விளங்குபவளாகவும் தாமரைப் பூவில் அமர்ந்தவளும்
மாணிக்கம்,வைரம், முதலான நவரத்தினங்களால் அலங்கரித்துக் கொண்டு இருப்பவளும்
சங்கீதத்தையும் வேறு வேறு வத்யங்களயும் கேட்டு சந்தோஷிப்பவளாகவும்
சந்திரனனின் குளிர்ந்த கிரணங்களைப் போன்ற முகமுடையவளும்
அழகிய சிந்தாமணி மண்டபத்தில் இருக்கும் ரத்னபீடத்தில் அமர்ந்திருப்பவளும்
குருகுஹனான முருகனுக்கு மாமனான மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு உரியவளும் லலிதாதேவியுமான மஹாலக்ஷ்மியைத்தவிர வேறு யாரையும் பாடமாட்டேன்

கோவர்த்தன கிரியைப் பூஜித்தல் 2
கிருஷ்ணர் மேலும் கூறினார்: "சுவர்க்க லோகத்தின் ஆளுனர் பதவியில் இருப்பதால் கர்வம் கொண்டிருந்த இந்திரனுக்கு பாடம் கற்பிப்பதற்காக,
இந்திரனுக்கு செய்யும் யாகத்தை நிறுத்தி, கோவர்த்தன கிரிக்கான பூஜையை மேற்கொள்ள வேண்டும்.
நாம் விருந்தாவனத்தில் வாழ்வதில் திருப்தி காண்கிறோம்.
நமது உறவு குறிப்பாக கோவர்த்தன கிரியுடனும் விருந்தாவனத்துடனும் ஏற்பட்டது.
நமது ஊரிலுள்ள பிராமணர்களையும் கோவர்த்தன கிரியையும்
திருப்திப் படுத்துவதற்கான யாகத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்". எனப் பணிவாகக் கேட்டுக் கொண்டார்.
இறுதியில் நந்தமகாராஜா கிருஷ்ணரின் ஆலோசனையை ஏற்றுக்கொண்டு யாகத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்தார்.

அன்று முதல் இன்றுவரை ஒக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் கோவர்த்தன பூசை நடத்தப்பட்டு வருகிறது.
விருந்தாவனத்திலும், மற்ற இடங்களிலும், உலகெங்கிலும் உள்ள இஸ்கான் ஆலயங்களிலும்
உணவு பெருமளவில் தயாரிக்கப்பட்டு பிரசாதமாக மக்களுக்கு வினியோகிக்கப் படுகிறது.
நந்தமகாராஜாவும் ஏனைய ஆயர்களும் கோவர்த்தன பூசையை நிறைவேற்றி, மலையை வலம் வந்தார்கள்.
இந்த மரபையொட்டி இப்போதும் விருந்தாவனத்தில் இந்தப் பூஜை தினத்தன்று நன்றாக உடையுடுத்து,
தம் பசுக்களுடன் கோவர்த்தன மலைக்குச் சென்று, பூஜையை நிறைவேற்றி மலையை வலம் வருகிறார்கள்.
கிருஷ்ணரின் ஆலோசனைப்படி கற்றறிந்த அந்தணர்களை வரவழைத்து வேதம் ஓதச் செய்து,
கோவர்த்தன பூசையை நடத்திப் பிரசாதம் வழங்கினார்கள்.
விருந்தாவன வாசிகள் ஒன்றுகூடி, பசுக்களை அலங்கரித்து, அவற்றிற்குப் புல் கொடுத்தார்கள். பசுக்களுடன் கோவர்த்தன கிரியை வலம் வந்தார்கள்.




கோவர்த்தன கிரியைப் பூஜித்தல் 1
விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள்.
இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது.
இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார்.
நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார்.
யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார்.
ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு நந்தமகாராஜா கூறினார்: "இச்சடங்கு பரம்பரை பரம்பரையாகச் செய்யப்பட்டு வருகிறது.
மழை இந்திரனின் கருணையால் ஏற்படுவதாலும், மேகங்கள் அவரது பிரதிநிதிகள் ஆகையினாலும்,
தண்ணீர் நமது வாழ்வுக்கு மிக முக்கியமானதாலும், மழையில்லாமல் நாம் பயிரிடவோ, தானியங்களை விளைவிக்கவோ இயலாது.
மழை பெய்யாவிட்டால் நாம் வாழ முடியாது. எனவேதான், இந்த யாகம் செய்யப்படுகிறது", என்று நந்தமகாராஜா கூறினார்.
இதைக் கேட்டபின் கிருஷ்ணர் பேசிய விதம் இந்திரனை மிகுந்த கோபத்துக்கு உள்ளாக்கியது.
யாகத்தை நடத்த வேண்டாமென கிருஷ்ணர் விவாதித்தார். அதற்காக அவர் கூறிய காரணங்கள் இரண்டு.
முதலாவதாக பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது போல், இகவுலக நலன்களுக்காக தேவர்களை வழிபடத் தேவையில்லை.
தேவர்களை வழிபட்டுப் பெறப்படும் நன்மைகள் தற்காலிகமானவை.
இரண்டாவதாக, தேவர்களை வழிபடுவதால் கிடைக்கும் தற்காலிகமான நன்மைகளும் முழுமுதற்கடவுளால் வழங்கப்படுபவை.
அவரின் அனுமதியின்றி யாரும் யாருக்கும் எந்த நன்மையும் வழங்க இயலாது.


கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் 4
'சபையில் மானபங்கப்படுத்திய வேளையில், திரௌபதிக்குத் துணையாக அருகில் இல்லாது போய் விட்டேனே...' என அர்ஜுனனிடம் வருந்தினானாம்.
அதனால் என்ன... திரௌபதி கண்ணீரும் கதறலுமாக 'கோவிந்தா’எனக் குரல் கொடுத்ததும்,
உலகின் எந்த மூலையில் இருந்தெல்லாமோ சட்டென்று சரம்சரமாக, புடவை புடவையாக அங்கே கொண்டுவந்து, அவளின் மானத்தைக் காத்தருளிவிட்டானே கண்ணன்?
அப்படியிருக்க... அவன் எதற்காகக் கவலைப்படவேண்டும்?
அதுதான் ஸ்ரீகிருஷ்ணனின் மகோன்னதம்.
அருளை அள்ளிக் கொடுப்பதில் அகமகிழ்பவன் அவன். ஒரு துளசி, ஒரு பூ, ஒரு பழம்... ஸ்ரீகண்ணனைத் திருப்திப்படுத்த,
அவனது பேரருளைப் பெற, இவை மட்டுமே போதும்.
நமக்கு அருள்மழை பொழிந்துவிடுவான், அந்த அழகுக் கண்ணன். ஆனால்,
ஒரேயொரு விஷயத்தில் மட்டும் அவனுக்குத் திருப்தியே வராதாம்! அது என்ன விஷயம்?
அதாவது, நாம் என்ன கொடுத்தாலும், அதில் நிறைவு பெற்றுவிடுகிற ஸ்ரீகிருஷ்ணன்,
நமக்குத் தருகிறபோது மட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் நிறைவடையவே மாட்டான்.
உள்ளன்புடன் அவனைச் சரணடைந்து விட்டால், அவர்களுக்கு 'இன்னும் கொடுப்போம்
, இன்னும் கொடுப்போம்’என்று கொடுத்துக்கொண்டே இருக்கிற தயாளன் அவன்!
இதனால்தான், அவனை 'அனலஹா’ எனும் திருநாமத்தைச் சொல்லிப் போற்றச் சொல்கின்றனர், பெரியோர்.
அனல் என்றால் அக்னி. அக்னிக்கு நிகரானவன் ஸ்ரீகண்ண பரமாத்மா! அதாவது, எரிகின்ற நெருப்பில் எதைப் போட்டாலும், 'ஹா’ என வாய்பிளந்து,
அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும்;
எண்ணெய், வஸ்திரம், நெய் என எதைச் சேர்த்தாலும் இன்னும் இன்னும் கனன்று எரியும்.
'பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பக்தர்களுக்கு அருள்கிற விஷயத்தில், போதும் என்கிற மனம் இல்லாத அக்னியைப் போல் இருக்கிறார்’ என்பதாலேயே இந்தத் திருநாமம்!
கண்ணனுக்கு தாசனாக இருந்தால், நமக்குத் தேவையானவற்றைத் தந்தருளி மகிழ்கிற, அந்த மகிழ்ச்சியில் திருப்திப்படுகிற மாணிக்கம் அவன்!
அவனுக்கு அடிமையாக இருங்கள்; ஆனந்தத்தில் உங்களை மூழ்கடிப்பான், அந்த மாயக்கண்ணன்!



கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன்

'நீங்களே கதி என்று ஒருவரிடம் சொல்வதும், அவருக்கு அடியவராக இருப்பதும் தவறு. அதேபோல், 'நானே பெரியவன்’ என்று சொல்வது அகங்காரம்;
ஆகவே, அதுவும் தவறு'' என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், அல்லவா?
ஆனால், இறைவனுக்கு இதெல்லாம் பொருந்தாது.
தன்னை 'அடியேன்’ என்று சொல்லிக்கொண்டே அனைவரிடமும் பழகி,
எல்லோரையும் மதித்து வாழ்ந்தவர் யார் தெரியுமா? ஸ்ரீராமச்சந்திர பிரபுதான் அவர்.
தன்னை அவதாரமாக அவர் ஒருபோதும் காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும், எங்கும் தன்னை 'அடியேன்’ என்றுதான் சொல்லிக் கொண்டார்.
விஸ்வாமித்திரரிடம் 'அடியேன்’ என்றுதான் பணிந்தார்.
பரத்வாஜ முனிவரைப் பார்த்ததும், 'அடியேன்’ என்று சொல்லித்தான் நமஸ்கரித்தார்.
வசிஷ்டரைச் சந்தித்ததும், 'அடியேன்’ எனப் பரவசப்பட்டு வணங்கினார்.
அவ்வளவு ஏன்..? சமுத்திரராஜனிடம்கூட அப்படி 'அடியேன்’ என்று சொல்லித்தானே வழிவிடும்படி மூன்று நாட்கள் வேண்டினார்.
ஆனாலும் சமுத்திரராஜன், கடலைக் கடப்பதற்கு வழிவிடவில்லை.
பிறகுதான் ஸ்ரீராமன், 'என்னுடைய வில்லையும் அம்பையும் எடுத்து வாருங்கள்.
இந்தக் கடலை அப்படியே வற்றச் செய்கிறேன். அப்படி வற்றினால்தான், வானரங்கள் கடலைக் கடக்க, வழி கிடைக்கும்’என்றாரே, பார்க்கலாம்!
ஆக... எவருக்கு, எப்போது, எதனால் அடிமையாக, தாசனாக, அடியவனாக இருக்கவேண்டுமோ,
அப்போதெல்லாம் அப்படி இருப்பதே சிறப்பு என்பதை வாழ்ந்து காட்டிய அவதார புருஷன் ஸ்ரீராமபிரான்.
சரி... 'நானே பெரியவன்’ என்று பறைசாற்றிய பகவான் யார் தெரியுமா? அவர்... ஸ்ரீகிருஷ்ணரைத் தவிர, வேறு யாராக இருக்க முடியும்?
கீதையில், பல இடங்களில், 'நானே பெரியவன்’ என்று அர்ஜுனனுக்கு அருளியுள்ளார் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. எதற்கெடுத்தாலும்,
எங்கே தீங்கு நேர்ந்தாலும், 'சங்கை ஊதிவிடுவேன்; சக்கரத்தை ஏவி விடுவேன்’ என்பது போல்,
தயாராக, துடிப்புடனும் விழிப்புடனும் அஞ்சாநெஞ்சனாக, 'நானே பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னவர், ஸ்ரீகிருஷ்ணன்.




கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் 3
ஒருநாள் மாலையில், தன் கூந்தலைத் தோகைபோல் விரித்து, நெய் தடவிக்கொண்டிருந்தாளாம் திரௌபதி.
அவளின் அந்தத் தலைவிரிகோலத்தைக் காணச் சகிக்காத ஸ்ரீகிருஷ்ணன், 'ம்... சீக்கிரம், சீக்கிரம்’ என்று விரட்டி,
அவளை உடனே தலைவாரிக் கொள்ளச் செய்தானாம்.
நல்லதொரு பொழுதில், அவள் சிறிது நேரத்துக்குத் தன் கூந்தலை முடிந்துகொள்ளாமல் இருந்ததையே
காணப் பிடிக்காத கருணையாளனான கண்ணபிரான்,
'துரியோதன - துச்சாதன ரத்தத்தைத் தடவிக் கொள்ளும் வரை, என் கூந்தலை முடிய மாட்டேன்’ என்று அவள் சபதமிட்டபோது,
பேசாமல் இருப்பானா, என்ன? அதைத் தாங்கமுடியாதவனாக, வெகுண்டு எழுந்து அவன் நிகழ்த்தியதே மகாபாரத யுத்தம்!
'அடியேன்’ என்று ஸ்ரீராமனாகவும், 'நான் பெரியவன்’என்று ஸ்ரீகிருஷ்ணனாகவும் அவதரித்து,
உலகுக்கு எப்படியெல்லாம் உணர்த்தியிருக்கிறார் பாருங்கள், பகவான்!
'அடியேன்’ எனப் பணிந்தது ஸ்ரீராமரின் காலம். 'சக்கரத்தை எடுப்பேன்’ என வியூகத்துக்குத் தயாராக இருந்தது ஸ்ரீகிருஷ்ணனின் காலம். துவாபர யுகத்தின் மாறுபாடு அது!
சரி... 'நான் பெரியவன்’ என மார்தட்டிச் சொன்னாலும், கண்ணன் அப்படியே இறுமாப்பும் கர்வமுமாகவே இருந்துவிட்டானா என்ன?
தன் அத்தனை பெருமைகளையும் தூக்கிப் போட்டுவிட்டு, தன் அத்தனை சக்திகளையும் உள்ளுக்குள் வைத்துக்கொண்டு,
அர்ஜுனனுக்கு சாரதியாக, அவனுடைய கால்கள் தன் தோளில் படும்படி தேரோட்டினானே,
அவனை விடவா 'அடியேன்’ என்று சொல்வதற்கு ஒருவர் வேண்டும்?!
எதற்கும் கலங்காத அந்த மாயக் கண்ணனும் ஒரே ஒரு விஷயத்துக்காகத் தவித்து மருகினானாம். எப்போது தெரியுமா?






































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக