வீரப்பனார் திறமைகள் !
வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்; அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்; தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத் தெரியும்;கன்னி வைத்து விலங்குகளைப் பிடிக்கும் நுட்பங்கள் தெரிந்தவர்; பள்ளி பக்கமே போகாதவர் என்றாலும், தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; விலங்குகள் பறவைகள் நடமாட்டத்தை வைத்தே வேற்றுமனிதர் நடமாட்டத்தையும், காலநிலையையும் கணித்துவிடுவார்; சமையல் தெரியும்; நீச்சலிலும் வல்லவர்; மீன்பிடித்தல், மரமேறுதல், மலையேறுதல், திசையறிதல், எல்லாம் அத்துப்படி; ஒரு நாளைக்கு குறைந்தது 20கிமீ நகர்ந்து கொண்டேயிருப்பவர்; 3000சகிமீ காட்டில் தனியரசு செலுத்தியவர்; வெடிகுண்டு, கையெறி குண்டு, கண்ணிவெடி எல்லாம் செய்யத்தெரிந்தவர்; படைவியூகங்கள் வகுப்பது, படை நகர்வு, உளவு பார்ப்பது, மாறுவேடம் தரித்தல், நேரடி மோதல், தாக்குதல் தொடுப்பது, ஆயுதக் கொள்ளை என ஒரு படைத்தலைவருக்கான அத்தனை குணங்களும் அமையப்பெற்றவர்.
மூலிகை கண்டறிதல், மருந்து தயாரித்தல், பேச்சுத்திறமை, கமுக்கமான பணப் பரிமாற்றம், காட்டுவேளாண்மை, பொருள் கடத்தல், கமுக்கமான தகவல் தொடர்பு என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருந்தவர்; இத்தகைய திறமைகள் இருந்ததால்தான் அவரால் 32வருடங்கள், இரு மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை, மத்திய ரிசர்வு படை,உள்நாட்டு வான்கண்கானிப்பு, காட்டுக் கொள்ளையர்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் அனைவரையும் எதிர்த்து புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை ஆளமுடிந்தது;
1990களிலேயே வீரப்பனார் பற்றித் தகவல் தருவோருக்கு நாற்பத்தி நூறாயிரம்(40லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது; கர்நாடக அரசு வீரப்பனாரோடு போராட 70கோடி செலவளித்துள்ளது; தமிழகம் 40கோடி செலவளித்துள்ளது; இரு மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 காவல் மற்றும் வனத்துறையினரை ஈடுபடுத்தி வந்தது; இத்தனைக்கும் வீரப்பனாரிடம் எப்போதும் 150பேருக்கு மேல் இருந்ததில்லை.
வீரப்பனாரின் கூட்டாளிகள் நால்வர் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தூக்கில்போடப்படவுள்ளனர்; இது தமிழர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள பல செய்திகளில் ஒன்று; வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பல நூறு மக்களை கொன்று கற்பழித்து கொடுமைப்படுத்திய அதிரடிப்படையும் அதன் அதிகாரிகளும் பணமும் பதவியும் பெற்று சுகமாக வாழ்கின்றனர்; 1993ல் வீரப்பனார் கன்னிவெடி வைத்து வெறியாட்டம் போட்டுவந்த அதிரடிப் படையின் தமிழக,கர்நாடக காவலர்கள் 22பேரைக் கொன்ற வழக்கில் மேற்கண்ட நால்வர் தண்டனை பெற்றுள்ளனர்; (ஆனால் 1994ல் ஜூன் 11 சின்னாம்பதி என்ற சிற்றூரை ஆயுதமுனையில் சுற்றிவளைத்து அந்த ஊரிலிருந்த அத்தனை இளம்பெண்களையும் கூட்டமாக கற்பழித்த அதிரடிப்படையினர் மீதான விசாரணை என்னவானது என்று யாருக்கும் கவலையில்லை; அவர்களெல்லாம் சுகபோகமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர் ;இதில் பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் நூறுபேரை வீரப்பனார் தம்மோடு காட்டுக்குள் வைத்து கண்ணும் கருத்துமாகப் பாதுகாத்தார்.
— withVinoth Gv.வீரப்பனாருக்கு ஒயிலாட்டம் ஆடத்தெரியும்; நாடகங்கள், தெருக்கூத்துகளில் நடித்துள்ளார்; திரைப்படத்துறையில் கூட ஒருமுறை முயற்சி செய்தார்; அதிரடி வேட்டைக்காரனாக இருந்தவர்; எந்த ஒரு மனிதர் போலவும் விலங்கு போலவும் குரலெழுப்பத் தெரியும்; தியானம், சில யோகாசனங்கள் செய்வார்; மரக்கட்டைகளை நுட்பமாக செதுக்கி உருவங்களும் செதுக்குவார்; குறிதவாமல் துல்லியமாக சுடத் தெரியும்;கன்னி வைத்து விலங்குகளைப் பிடிக்கும் நுட்பங்கள் தெரிந்தவர்; பள்ளி பக்கமே போகாதவர் என்றாலும், தமிழ் எழுதப் படிக்கக் கற்றுக்கொண்டார்; விலங்குகள் பறவைகள் நடமாட்டத்தை வைத்தே வேற்றுமனிதர் நடமாட்டத்தையும், காலநிலையையும் கணித்துவிடுவார்; சமையல் தெரியும்; நீச்சலிலும் வல்லவர்; மீன்பிடித்தல், மரமேறுதல், மலையேறுதல், திசையறிதல், எல்லாம் அத்துப்படி; ஒரு நாளைக்கு குறைந்தது 20கிமீ நகர்ந்து கொண்டேயிருப்பவர்; 3000சகிமீ காட்டில் தனியரசு செலுத்தியவர்; வெடிகுண்டு, கையெறி குண்டு, கண்ணிவெடி எல்லாம் செய்யத்தெரிந்தவர்; படைவியூகங்கள் வகுப்பது, படை நகர்வு, உளவு பார்ப்பது, மாறுவேடம் தரித்தல், நேரடி மோதல், தாக்குதல் தொடுப்பது, ஆயுதக் கொள்ளை என ஒரு படைத்தலைவருக்கான அத்தனை குணங்களும் அமையப்பெற்றவர்.
மூலிகை கண்டறிதல், மருந்து தயாரித்தல், பேச்சுத்திறமை, கமுக்கமான பணப் பரிமாற்றம், காட்டுவேளாண்மை, பொருள் கடத்தல், கமுக்கமான தகவல் தொடர்பு என அனைத்தையும் விரல்நுனியில் வைத்திருந்தவர்; இத்தகைய திறமைகள் இருந்ததால்தான் அவரால் 32வருடங்கள், இரு மாநிலக் காவல்துறை மற்றும் வனத்துறை, மத்திய ரிசர்வு படை,உள்நாட்டு வான்கண்கானிப்பு, காட்டுக் கொள்ளையர்கள், அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள் அனைவரையும் எதிர்த்து புலிகள் ஆண்ட வன்னி அளவு பெரிய காட்டை ஆளமுடிந்தது;
1990களிலேயே வீரப்பனார் பற்றித் தகவல் தருவோருக்கு நாற்பத்தி நூறாயிரம்(40லட்சம்) பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது; கர்நாடக அரசு வீரப்பனாரோடு போராட 70கோடி செலவளித்துள்ளது; தமிழகம் 40கோடி செலவளித்துள்ளது; இரு மாநிலங்களும் சேர்ந்து கிட்டத்தட்ட 15,000 காவல் மற்றும் வனத்துறையினரை ஈடுபடுத்தி வந்தது; இத்தனைக்கும் வீரப்பனாரிடம் எப்போதும் 150பேருக்கு மேல் இருந்ததில்லை.
வீரப்பனாரின் கூட்டாளிகள் நால்வர் கர்நாடகாவில் பெல்காம் சிறையில் தூக்கில்போடப்படவுள்ளனர்; இது தமிழர்களுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டுள்ள பல செய்திகளில் ஒன்று; வீரப்பனைத் தேடுகிறோம் என்ற பெயரில் பல நூறு மக்களை கொன்று கற்பழித்து கொடுமைப்படுத்திய அதிரடிப்படையும் அதன் அதிகாரிகளும் பணமும் பதவியும் பெற்று சுகமாக வாழ்கின்றனர்; 1993ல் வீரப்பனார் கன்னிவெடி வைத்து வெறியாட்டம் போட்டுவந்த அதிரடிப் படையின் தமிழக,கர்நாடக காவலர்கள் 22பேரைக் கொன்ற வழக்கில் மேற்கண்ட நால்வர் தண்டனை பெற்றுள்ளனர்; (ஆனால் 1994ல் ஜூன் 11 சின்னாம்பதி என்ற சிற்றூரை ஆயுதமுனையில் சுற்றிவளைத்து அந்த ஊரிலிருந்த அத்தனை இளம்பெண்களையும் கூட்டமாக கற்பழித்த அதிரடிப்படையினர் மீதான விசாரணை என்னவானது என்று யாருக்கும் கவலையில்லை; அவர்களெல்லாம் சுகபோகமாக சுற்றிக்கொண்டிருக்கின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக